Untitled Document
May 21, 2024 [GMT]
பதினொரு வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்!
[Thursday 2018-12-20 17:00]

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பிணியான 11 வயது சிறுமிக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 5,00,000 இந்திய ரூபாய் செலுத்த வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதார்கவுண்டர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கைது செய்த பொலிஸார்!
[Thursday 2018-12-20 17:00]

நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று (புதன்கிழமை) பூட்டு போட்ட நிலையில், இன்று அதனை உடைக்க முற்பட்ட விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை தமிழ்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று காலை 11 மணியளவில் அங்கு சென்ற நடிகர் விஷால், பூட்டை உடைத்து உள்ளே செல்ல முற்பட்டார். இதனால் அங்கு பொலிஸாருக்கும், விஷாலுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.


பொற்கோவில் படம் பாதிக்கப்பட்ட தரை விரிப்பு ஆன்லைனில் விற்பனை - சீக்கியர்கள் எதிர்ப்பு.
[Thursday 2018-12-20 09:00]

பிரபல ஆன்-லைன் விற்பனை நிறுவனம் அமேசான். இந்த நிறுவனம் மூலம், விற்பனை செய்யப்பட்ட தரை விரிப்புகளில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.


விவசாய கடன் தள்ளுபடி பற்றி ராகுல் காந்தி கருத்து - பிரதமரை தூக்கத்தில் இருந்து எழ வைப்போம்.
[Thursday 2018-12-20 09:00]

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் சமீபத்தில் பதவி ஏற்றன. அடுத்த சில மணி நேரங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அறிவித்தனர். அதுபோல், நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.


விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா? - போலீஸ் ஐ.ஜி. பதில்.
[Thursday 2018-12-20 09:00]

தமிழகத்தை சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார். இவருக்கு சொந்தமான ஆசிரமம் கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், ஆசிரமத்தில் வைத்து பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010-ம் ஆண்டு நித்யானந்தா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ராமநகர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.


தொழில் போட்டி: - கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு
[Wednesday 2018-12-19 17:00]

பிரசாதத்தில் மோனோக்ரோடோபோஸ் (monocrotophos) மற்றும் ஆர்கனோபாஸ்பேட் (organophosphate) என்ற இரு ரசாயனப் பொருள்கள் கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவை விளைநிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்தில் கலக்கப்படுபவை. மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.


தனது ஜோடியை கத்தியால் வெட்டி துடி துடிக்க கொன்றவரை பழிவாங்கிய பாம்பு!
[Wednesday 2018-12-19 17:00]

தமிழகத்தில் தன் ஜோடி பாம்பை கத்தியால் வெட்டி துடிதுடிக்க கொன்றவரை அடுத்த அரை மணி நேரத்தில் பாம்பு பழிவாங்கிய சம்பவம் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தின் வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுசீலா. இருவரும் பிளாஸ்டிக் பொருட்களை இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்து வந்தனர். வேலையில்லாத சமயத்தில், மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வது வழக்கம்.


3 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் நாடு திரும்பிய இளைஞர்!
[Wednesday 2018-12-19 17:00]

காதலியை காண பாகிஸ்தான் நாட்டில் சென்ற இந்தியாவின் மராட்டிய மாநில இளைஞர் 3 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த ஹமித் அன்ஸாரி என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு அத்துமீறி நாட்டுக்குள் நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.


பெண் பிரச்சனை காரணமாக வாலிபர் கழுத்து அறுத்து கொலை!
[Wednesday 2018-12-19 17:00]

திருப்பூர் மாவட்டத்தில் பெண் பிரச்சனை காரணமாக வாலிபரை அவரது உறவினர் கொலை செய்தது குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். முருகன்(வயது 20). திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் ஆறுமுகம்(26). இவர்கள் இருவரும் திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம்நகரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.


முகேஷ் அம்பானி மகள் திருமணத்தில் வழங்கப்பட்ட உணவு வகைகள் என்ன தெரியுமா?
[Wednesday 2018-12-19 17:00]

முகேஷ் அம்பானி மகள் திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் திருமணம் பிரம்மாண்டமான முறையில் மும்பையில் நடைபெற்றது.


எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீரென ஜெயலலிதா சிலை திறப்பு - தஞ்சையில் நள்ளிரவில் நடத்தப்பட்டதால் பரபரப்பு.
[Wednesday 2018-12-19 09:00]

கடந்த 1995-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 8-வது உலக தமிழ் மாநாடு தஞ்சையில் நடத்தப்பட்டது. அப்போது தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 8 அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை புதிதாக நிறுவப்பட்டது. அந்த சிலையை மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிலையில் அந்த சிலை அருகே பீடம் கட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர். சிலையின் பீடம் மோசமான நிலையில் இருப்பதால் புதிய பீடத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட உள்ளதாக அ.தி. மு.க.வினர் தெரிவித்தனர்.


ஜெயலலிதா சிகிச்சை செலவு ரூ.6.86 கோடி தான் - விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிக்கை தாக்கல்.

[Wednesday 2018-12-19 09:00]

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதாவின் மருத்துவ மற்றும் சிகிச்சை தொடர்பான விவரங்கள் அடங்கிய 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விரிவான மருத்துவ அறிக்கையை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்கனவே தாக்கல் செய்தது. இந்தநிலையில், 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக் கான கட்டண விவரங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.


இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி - கைதிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை.
[Wednesday 2018-12-19 09:00]

இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆஷிக், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்வர், பைசல் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.


நான் பிரதமராக இருந்தபோது ஊடகங்களிடம் பேச அஞ்சியதில்லை - மன்மோகன் சிங்.
[Wednesday 2018-12-19 09:00]

காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை


பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான இந்தியருக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு.
[Tuesday 2018-12-18 21:00]

மும்பை நகரை சேர்ந்தவர் ஹமித் நிஹால் அன்சாரி(33). சமூக வலைத்தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டு பெண்ணை காதலித்துவந்த அன்சாரி ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் அடைக்கப்பட்டார். இந்தியாவுக்கு உளவு பார்ப்பதற்காக உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக அன்சாரி மீது பெஷாவர் நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


தங்கையை காதலித்ததால் குத்தி கொன்றேன் - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்.
[Tuesday 2018-12-18 21:00]

திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் முருகன் (20). இவர் திருப்பூர் மாஸ்கோ நகரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாஸ்கோ நகரில் ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதியில் முருகன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.


10 மாதமாக கோவிலில் இயங்கி வரும் பள்ளி - வகுப்பறைகள் இடிக்கப்பட்டதால் மாணவர்கள் தவிப்பு.
[Tuesday 2018-12-18 21:00]

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மோடிகுப்பம் ஊராட்சி மத்தேட்டிபல்லி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் ஓலை வேய்ந்த கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளிக்கு 1967-ம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பராமரிப்பின்றி பழுதடைந்து விட்டது. எனவே புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


அனைத்து இந்தியர்களின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை.
[Tuesday 2018-12-18 21:00]

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம், சங்லி மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளரின் உறவினர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக ராமதாஸ் அத்வாலே இன்று இங்கு வந்திருந்தார்.


காங்கிரஸ் எதிர்ப்பு -
[Tuesday 2018-12-18 09:00]

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி


சென்னையில் நைஜீரிய வாலிபரை 10 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களுடன் போலீசார் வளைத்து பிடித்தனர்.
[Tuesday 2018-12-18 09:00]

சென்னை போரூர் அருகே மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் கடந்த 14-ந் தேதி போதை பொருள் விற்கப்படுவதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாறுவேடத்தில் சென்ற தனிப்படை போலீசார், அங்கு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த மதுரவாயலைச் சேர்ந்த குமரேசன் (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 22 கிராம்


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மீண்டும் போராட்டம் தீவிரம் - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!..
[Tuesday 2018-12-18 09:00]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையொட்டி ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைகளுக்கு பிறகே மனு கொடுக்க வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.


மனைவியின் அழகை வர்ணித்த டிரைவரை அடித்து கொன்ற நண்பர் கைது.
[Tuesday 2018-12-18 08:00]

ஊட்டி அருகில் உள்ள இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது27). தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந் தேதி தனது நண்பரான பாரதி (வயது33) உடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். மது அருந்தி பேசிக்கொண்டிருந்தபோது பாரதி, உன் மனைவி மிகவும் அழகானவர்.


திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
[Monday 2018-12-17 22:00]

இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூக அங்கீகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர் தங்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், பிற உரிமைகளை பாதுகாக்கவும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.யான திருச்சி சிவா கடந்த 2-8-2016 அன்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.


ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவு: 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
[Monday 2018-12-17 22:00]

2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்து எவ்வளவு 500, 2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்பது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கறுப்பு பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார்.


தொகுப்பாளினி தற்கொலை செய்து கொண்ட வழக்கு: - அவருடன் பணியாற்றிய ஆண் தொகுப்பாளர் கைது.
[Monday 2018-12-17 17:00]

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொகுப்பாளினி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில், அவருடன் பணியாற்றிய ஆண் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர், நொய்டாவில் உள்ள குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து ராதிகா கவுசிக்(25) என்ற தொகுப்பாளினி மரணமடைந்தார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர், செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்தார்.


இறந்து போன மகளின் நினைவாக கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்த பாடகி சித்ரா!
[Monday 2018-12-17 17:00]

பிரபல பின்னணி பாடகி சித்ரா இறந்துபோன தனது ஆசை மகளின் நினைவாக கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார் பாடகி சித்ரா, தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 25,000 பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்துள்ளார்,


இணையதள உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி!
[Monday 2018-12-17 17:00]

இந்தியாவில் கணவரை கொலை செய்த மனைவி இணையதள உதவியுடன் கொலைக்கான திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜட். இவர் மனைவி அனிந்திதா, தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த வாரம் ராஜட், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அனிந்திதா பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.


இந்தியாவின் முதன்மை செல்வந்தரான முகேஷ் அம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்!
[Monday 2018-12-17 17:00]

இந்தியாவின் முதன்மை செல்வந்தரான முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ஒரே ஒரு மகளான இஷா அம்பானிக்கும் தொழிலதிபரான ஆனந்த் பிராமல் என்பவருக்கும் மாராட்டிய மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஆண்டலியா இல்லத்தில் வைத்து இந்த திருமண விழா நடைபெற்றுள்ளது.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா