Untitled Document
May 15, 2024 [GMT]
இயக்கச்சியில் கோர விபத்து - மூவர் பலி!
[Tuesday 2019-01-08 18:00]

பளை - இயக்கச்சிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாக தெரிய வருகிறது. முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்களே மரணமடைந்தனர்.


வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனைச் சந்தித்தார் சம்பந்தன்! Top News
[Tuesday 2019-01-08 18:00]

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்ட பின்னர், இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். இந்தச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனும் கலந்து கொண்டார்.


அலோசியசுக்கு பிணை வழங்க முடியுமாயின், அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது?
[Tuesday 2019-01-08 18:00]

மனைவி பிள்ளைகளை பிரிந்து 11 மாதம் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியசிற்கு பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.


மட்டக்களப்பில் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து பௌத்த பிக்கு அட்டகாசம்!
[Tuesday 2019-01-08 18:00]

மட்டக்களப்பில் உள்ள ஒளிப்பட ஸ்டூடியோ ஒன்றிற்குள் இன்று காலை நுழைந்த காவியுடை அணிந்த பௌத்த பிக்கு ஒருவர், அங்கு தொழில் புரியும் ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளார். ஸ்டூடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குழந்தை ஒன்றின் படத்தை காட்டி இது யாருடையது, இது எனது சிறிய வயது படம், இதை ஏன் நீங்கள் காட்சிப்படுத்த வேண்டும், இதற்கு விலை 125 ரூபாயா என கேள்விகளை எழுப்பியுள்ளார்.


போர்க்குற்ற விசாரணை உள்நாட்டிலேயே நடக்கும்!
[Tuesday 2019-01-08 18:00]

போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக இருந்தால் உள்நாட்டிலே இடம்பெறும். இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் போவதாக எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சர் அஜித் பி,பெரேரா தெரிவித்தார்.


லசந்தவின் 10 ஆண்டு நினைவு நாள்! Top News
[Tuesday 2019-01-08 18:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 10 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


வெள்ளிக்கிழமை வெளியாகிறது ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி?
[Tuesday 2019-01-08 18:00]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான வர்த்தமானி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று கூறப்படுகிறது.


பண்டாவின் கொள்கைகளை விற்றுத் தின்னும் கொலைகாரர்கள் - சந்திரிகா சீற்றம்!
[Tuesday 2019-01-08 18:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரும் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் பெயரையும் கொள்கைகளையும் விற்று உண்ணும் திருடர்களும் கொலைகாரர்களும் நாட்டில் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


மஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் - சபாநாயகர் அறிவிப்பு!
[Tuesday 2019-01-08 18:00]

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகரின் இத்தீர்மானத்தை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் ஏற்கனவே நியமித்திருந்தார். இந்நியமனம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தோற்றம் பெற்றதையடுத்து இது குறித்து தெரிவுக்குழு அமைத்து ஆராயுமாறு கோரப்பட்டது.


இராஜதந்திர சிறப்புரிமையை மீறிவிட்டார் தயான்!
[Tuesday 2019-01-08 18:00]

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக அரசியல் பேச்சாளராக கடமையாற்றுவதால், அவர் நாடாளுமன்ற சிறப்புச் சலுகைகள் மற்றும் தூதுவர் பதவி தொடர்பான ஒப்ப​ந்தத்தையும் மீறியுள்ளார் என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.


இபோச சாரதியை விளாசிய மினி பஸ் நடத்துனர்!
[Tuesday 2019-01-08 18:00]

இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி மீது தனியார் பஸ் நடத்துனர் நடத்திய தாக்குதலில், சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். ஆலடி சந்தியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுமி மரணம்!
[Tuesday 2019-01-08 18:00]

கிளிநொச்சி - மலையாளபுரம் கிராமத்தில் நேற்று மாலை 11 வயது சிறுமி ஒருவர், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார். புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது, சிறுமி தவறி வீழந்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


மஹிந்த, கோத்தாவை சிறைக்குள் தள்ள முயற்சி!
[Tuesday 2019-01-08 08:00]

எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு சதியொன்று இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 'எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் சிறைப்படுத்துவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மடுவில் நிதி வசூலித்த சிங்களவர்கள் நையப்புடைப்பு! Top News
[Tuesday 2019-01-08 08:00]
மன்னார் - மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் தமிழ் மக்களின் வீடுகளிற்கு சென்று பணம் வசூலித்த அனுராதபுரத்தைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் நால்வரை நேற்று அப்பகுதி மக்கள் பிடித்து, நையப்புடைத்தனர்.


சம்பூரில் போரை தொடங்க வைத்தது நாங்களே!
[Tuesday 2019-01-08 08:00]

சம்பூர் யுத்தத்தை ஆரம்பிக்குமாறு, மஹிந்தவுக்கு நாங்களே அழுத்தம் கொடுத்தோம் என்று பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் முன்னெடுக்கப்பட்ட கால்வாய் வேலைத்திட்டத்தால், வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


வடக்கு தனிப்பட்ட பகுதியல்ல என்கிறார் புதிய ஆளுநர்!
[Tuesday 2019-01-08 08:00]

அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யப் போவதாக வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வடக்கின் ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், கருத்து வெளியிட்டுள்ள அவர்,


மன்னாரில் பதற்றத்தை ஏற்படுத்தும் சிவசேனையின் சுவரொட்டிகள்! Top News
[Tuesday 2019-01-08 08:00]

மன்னார் நகரின் மத்திய பகுதியில் மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில், சிவசேனை அமைப்பினால், ஒட்டப்பட்டுள்ள மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான சுவரொட்டிகளால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் நகரங்களில் மன்னார் முக்கியமானது. இங்கு ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


நீதிமன்றில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் - மீண்டும் கைது!
[Tuesday 2019-01-08 08:00]

யாழ். நீதிமன்றிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைதுசெய்திருந்தனர். குறித்த நபரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.


கண்டியில் பற்றியெரியும் ஐந்து மாடிக் கட்டடம்!
[Tuesday 2019-01-08 08:00]

கண்டி, யட்டிநுவர பகுதியில ஐந்து மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று இன்று காலை தீடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அக்கட்டடத்தில் இருந்த மக்களை பாதுகாப்பாக பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


ஹிஸ்புல்லாவுக்குப் பதில் சாந்த பண்டார!
[Tuesday 2019-01-08 08:00]

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இன்று முக்கிய அறிவிப்பு!
[Tuesday 2019-01-08 08:00]

2019ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தல‍ைமையில் இடம்பெறவுள்ளது. இன்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானம் சபாநாயகரினால் அறிவிக்கப்படவுள்ளது, எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.


வடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்! Top News
[Monday 2019-01-07 18:00]

வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடந்த நிகழ்வில் அவர் வடக்கு மாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


விரிவுபடுத்தப்பட்ட புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள்! Top News
[Monday 2019-01-07 18:00]

மன்னார்- சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி வளாகம் விரிவுபடுத்தப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இன்று புதைகுழி வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்றன.


சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் - விசாரணை ஆரம்பம்!
[Monday 2019-01-07 18:00]

வெளிநாட்டு வர்த்தகர் சிலருடன் இலங்கைக்கு வந்த தனியார் விமானமொன்று உரிய அனுமதியை பெறாமல், நாட்டை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


ஜனாதிபதியை 'அங்கொடை'க்கு அனுப்பக் கோரும் மனு நிராகரிப்பு!
[Monday 2019-01-07 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அங்கொடை மனநல ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


திருகோணமலையில் தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து!
[Monday 2019-01-07 18:00]

திருகோணமலையில், சிங்கப்பூரின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பெருநகரத் திட்டம் (மெகாசிட்டி) தமிழ் மக்கள் குடிஅடர்த்தியை இல்லாதொழிக்கும் சதித்திட்டம் என்று திருகோணமலை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி.நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்), தெரிவித்துள்ளார். இந்த பெருநகரத்திட்டத்தை தடுப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இணைந்து குரலெழுப்ப வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


வடக்கு- கிழக்கு இணைக்கப்படாது!
[Monday 2019-01-07 18:00]

வடக்கு


நாமலைக் காப்பாற்ற முனையும் வாசுதேவ!
[Monday 2019-01-07 18:00]

ஜனாதிபதி உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்ட நாமல் குமாரவை விசாரணை செய்ய முற்படுவதில் சதித்திட்டங்கள் இருக்கலாம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா