Untitled Document
April 26, 2024 [GMT]
கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்த சுவிஸ் அரசாங்கம்!
[Tuesday 2021-11-09 08:00]

சுவிட்சர்லாந்து அரசாங்கம் இந்தியாவில் கோவிட்-19க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட Covaxin தடுப்பூசியை அதிகாரப்பூர்வாமாக அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து பயணம் செய்வதற்கான சரியான தடுப்பூசியாக பாரத் பயோடெக்கின் கோவாக்சினை சுவிட்சர்லாந்து அரசு அங்கீகரித்துள்ளது.


பிஞ்சு குழந்தையை பெட்டிக்குள் வைத்து சுவற்றில் சமாதி கட்டிய அமெரிக்க தம்பதி!
[Tuesday 2021-11-09 08:00]

அமெரிக்காவில், 25 வயது பெண் ஒருவர், தனது 5 மாத குழந்தையை வீட்டின் சுவற்றில் வைத்து சமாதி கட்டி, அதே வீட்டில் 8 மாதங்கள் மற்ற 3 பிள்ளைகள் மற்றும் காதலனுடன் வாழ்ந்துவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச்ச சேர்ந்தவர் 25 வயதான கைலி வில்ட் (Kylie Wilt). அவர் தனது காதலன் 27 வயது ஆலன் ஹோலிஸ் (Alan Hollis) மற்றும் 5 மாத குழந்தை உட்பட மொத்தம் 4 பிள்ளைகளுடன் வசித்துவந்துள்ளனர்.


பிரித்தானியாவில் பயங்கரம்: சக நண்பனை 70 முறை கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்!
[Tuesday 2021-11-09 08:00]

பிரித்தானியாவில் 12 வயது சிறுவனை 70 முறை கத்தியால் குத்தி கொலை செய்து, தலையை துண்டிக்க முயற்சித்த 15 வயது சிறுவனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. நண்பனையே கொடூரமாக கொலை செய்த இந்த சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


காருக்குள் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை: பேரதிர்ச்சியில் பிரித்தானிய தாயார்!
[Monday 2021-11-08 16:00]

வெளிநாட்டில் தன் மகனுடன் வாழ்ந்து வந்த ஒரு பிரித்தானியப் பெண், கணவனுடன் அனுப்பி வைத்த குழந்தை வீடு திரும்பாததால், பொலிசில் புகாரளித்திருந்தார். ஃபேஷன் உலகில் பிரபலமானவரான Phoebe Arnold என்னும் பிரித்தானியப் பெண் ஒருவரும், பிரபல டிசைனரான Clemens Weisshaar (40) என்னும் ஜேர்மானியரான அவரது கணவரும் கடந்த ஜூலையில் பிரிந்த நிலையில், Clemens நீண்ட நாட்களாக தன் மகனான Tasso (3)ஐப் பார்க்காமலே இருந்திருக்கிறார். கணவனும் மனைவியும் போர்ச்சுகல்லில் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.


ஈராக் பிரதமர் மீதான தாக்குதல்: பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!
[Monday 2021-11-08 16:00]

ஈராக் நாட்டின் பிரதமர் மீது நடத்தப்பட்ட ரகசிய தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்தபா அல் கமிதி என்பவர் உள்துறை தலைவராக இருந்த பொழுதே அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு எல்லையை திறக்கும் அமெரிக்கா!
[Monday 2021-11-08 16:00]

20 மாதங்களுக்கு பிறகு உலக வல்லரசு நாடான அமெரிக்கா, இன்று முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு அதன் எல்லைகளை திறந்துள்ளது. எனினும், பெரும்பாலான வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடுப்பூசி போட்டதற்கான ஆவணம் முக்கிய தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜேர்மனியில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு!
[Monday 2021-11-08 16:00]

ஜேர்மனியில் ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதைக் காட்டும் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிட்டது. ஜேர்மனியில் கொரோனா தொற்று பரவல் துவங்கியதிலிருந்து இந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது இப்போதுதான்.


திருமணம் தொடர்பில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த ஐக்கிய அரபு அமீரக அரசு!
[Monday 2021-11-08 16:00]

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு சட்டங்களில் மாற்றங்களை அறிமுகம் செய்தது. இதில் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுகள், மது அருந்துதல், மற்றும் கௌரவக் கொலைகள் வழக்கில் பல்வேறு விதிகளை ரத்துசெய்தல் உட்பட பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 25.05 கோடியாக உயர்வு!
[Monday 2021-11-08 08:00]

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.


தீவிர ராணுவ பயிற்சி: அமெரிக்காவுக்கும் அழுத்தம் கொடுக்கும் வடகொரியா!
[Monday 2021-11-08 08:00]

வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு இணக்கமானதாக இல்லை. அமெரிக்காவும், தென்கொரியாவும் தன் மீது விரோதக்கொள்கையை பின்பற்றி வருவதாக வடகொரியா நம்புகிறது. இதை அவ்விருநாடுகளும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அழுத்தம் தந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது.


மெக்சிகோவில் பயங்கரம்: சுங்கச்சாவடி மீது மோதிய சரக்கு வாகனம்: 19 பேர் பலி!
[Monday 2021-11-08 08:00]

மெக்சிகோவின் நகர் பகுதியை பியூப்லா மாநிலத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனத்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அருகில் இருந்த சுங்கச்சாவடியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.


சுவிஸ் மருத்துவமனையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
[Sunday 2021-11-07 17:00]

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவி ஒருவர் HIV சோதனைக்கும் உட்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்ன் மாநிலத்தில் Emmental Burgdorf மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை 15 வயது மாணவி ஒருவர் தமது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.


உலக தலைவர்களை எச்சரித்த பில் கேட்ஸ்!
[Sunday 2021-11-07 17:00]

வருங்காலத்தில் பெரியம்மை காய்ச்சலை ஒரு உயிரியல் ஆயுதமாக, பரபரப்பான விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் பயன்படுத்தக் கூடும் என்று கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். பயங்கரவாதிகளின் பெரியம்மை காய்ச்சல் தாக்குதலை எதிர்கொள்ள உலக தலைவர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவும் கனடாவாழ் சீக்கியர்கள்?
[Sunday 2021-11-07 17:00]

கனடாவில் வாழும் சீக்கியர்கள் மூலமாக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வருகிறதா என்று அறிய என்.ஐ.ஏ. ஐ.ஜி. தலைமையிலான குழுவினர், கனடா சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இந்தியாவில் நீதிக்கான சீக்கிய அமைப்பு, காலிஸ்தான் ஆதரவு பாபர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, காலிஸ்தான் புலிப்படை போன்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.


சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு தண்டனை: அவர் செய்த குற்றம் என்ன?
[Sunday 2021-11-07 17:00]

போதை பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழருக்கு விதித்த துாக்கு தண்டனை சட்டப்படி நிறைவேற்றப்படும்' என, சிங்கப்பூர் அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது. நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவர் மலேஷிய குடியுரிமை பெற்றவர். இவர் 2009ல் சிங்கப்பூருக்கு 'ஹெராயின்' என்ற போதை பொருளை 42 கிராம் அளவில் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.


கனடாவில் ஆராதனைக்கு சென்ற 40 பேருக்கு கொரோனா பாதிப்பு!
[Sunday 2021-11-07 17:00]

பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்ட் பகுதி தேவாலயம் ஒன்றில் ஆராதனைக்கு சென்றவர்கள் 40 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிவந்துள்ளது. இதில் 11 பேர்கள் நோய்ப்பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுவிஸில் பரபரப்பு: ரகசிய கடிதங்களை அனுப்பி பொலிஸாரை எச்சரித்த பெண்!
[Sunday 2021-11-07 08:00]

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தனது சகோதரன் குறித்து ரகசியமாக கடிதங்களை அனுப்பி பொலிஸாரை எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Bremgarten மாகாணத்தில், Aargau canton-ல் உள்ள Hägglingen பகுதியில் உள்ள குடியிருப்பில் பரபரப்பான சூழல் நிலவியது.


பிரான்சில் சுகாதார நுழைவுச்சீட்டின் தேவை காலம் நீட்டிப்பு!
[Sunday 2021-11-07 08:00]

பிரெஞ்சு அரசு ஹெல்த் பாஸ் தேவையை 2022 நடுப்பகுதி வரை நீட்டித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் பிரான்சுக்கு வரும் பயணிகள் அனைவரும், பார்கள், உணவகங்கள், ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல உட்புற இடங்களுக்கு அணுக அனுமதிக்கப்படுவதற்கு ஹெல்த் பாஸ் வைத்திருக்க வேண்டிய தேவை ஜூலை 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானியாவில் சிறுமி மாயமான வழக்கில் நீடிக்கும் மர்மம்!
[Sunday 2021-11-07 08:00]

பிரித்தானியாவில் 14 வயது பள்ளி சிறுமி ஒருவர் கடந்த 3 நாட்களாக காணாமல் போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் லெய்செஸ்டர்ஷையரில் உள்ள ஏர்ல் ஷில்டனில், கடந்த நவம்பர் 3-ஆம் திகதி இரவு மெக்கென்சி டெய்லர் (McKenzie Taylor) எனும் 14 வயது சிறுமி மாயமானார். இது குறித்த தகவல் தெரியவந்ததையடுத்து, கடந்த மூன்று நாட்களாக பள்ளி மாணவியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கனேடிய மாகாணத்தின் முடிவால் கொந்தளித்த மக்கள்!
[Saturday 2021-11-06 16:00]

ஒன்ராறியோ அரசாங்கம், மாகாணத்தின் pit bull தடை தொடர்பான விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. ஒன்ராறியோவில் தடை செய்யப்பட்ட pit bull வகை நாய் இனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் தற்போது கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


மேற்கு ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட கோர விபத்து: 90 பேர் உடல் கருகி பலி!
[Saturday 2021-11-06 16:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி கிட்டதட்ட 90 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகர் Freetown-ல் எரிபொருள் டேங்கர் லொறி மற்றொரு லொறி மீது மோதியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.


ஒன்ராறியோவில் பெண்களை தொடர்ந்து அச்சுறுத்தும் இந்திய இளைஞர்: போலீசார் எச்சரிக்கை!
[Saturday 2021-11-06 16:00]

ஒன்ராறியோவின் லண்டனில் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொதுமக்களை பொலிசார் எச்சரித்துள்ளனர். லண்டன் பொலிசார் பொதுமக்களின் நலன் கருதி 22 வயதான சரண்ஜீத் சிங் என்ற இந்திய இளைஞரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பலியாகும் புலம்பெயர்ந்தோர்: கண்டுகொள்ளாத பிரான்ஸ் - கடுங்கோபத்தில் உள்துறை அலுவலர்கள்!
[Saturday 2021-11-06 16:00]

கடந்த பத்து நாட்களில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் ஏழு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தும், பிரான்ஸ் எதையும் குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ள பிரித்தானிய உள்துறை அலுவலர்கள், தங்கள் கோபத்தை கடுமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.


கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 2,535 பேர் பாதிப்பு - 17 பேர் பலி!
[Saturday 2021-11-06 16:00]

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,535பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 27ஆயிரத்து 686பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 132பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவிட் உயிரிழப்பை தடுக்கும் மாத்திரை: ஃபைஸா் நிறுவனம் அசத்தல்!
[Saturday 2021-11-06 08:00]

கரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது:


பேராபத்தில் வடகொரியா: கிம் ஜாங் அன் போட்டுள்ள அதிரடி உத்தரவு!
[Saturday 2021-11-06 08:00]

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டுகளை சோதித்து வந்துள்ளது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது.


கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர்!
[Saturday 2021-11-06 08:00]

பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் ஜோன் ஹோர்கனுக்கு (John Horgan) புற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோன் ஹோர்கனுக்கு (John Horgan) புற்று நோய் ஏற்பட்டமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


திரைப்பட பாணியில் சுவிஸில் நடந்த கொள்ளை சம்பவம்!
[Saturday 2021-11-06 08:00]

சுவிட்சர்லாந்தில் கொள்ளை கும்பல் ஒன்று கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பணயக் கைதிகளாக பிடித்து தங்கத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஹாலிவுட் அதிரடித் திரைப்படத்திற்கு இணையான இந்த சம்பவம், புதன்கிழமை மாலை, பிரெஞ்சு எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடக்கு சுவிஸ் மாகாணமான ஜூராவில் உள்ள Basscourt-ல் நடந்துள்ளது.

Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா