Untitled Document
April 26, 2024 [GMT]
கொரோனா நெருக்கடியிலும் உலகளவில் இதற்கு செலவிடும் தொகை அதிகரிப்பு!
[Monday 2021-04-26 08:00]

கொரோனா நெருக்கடி இருந்தபோதிலும் கடந்த ஆண்டு உலகளாவிய இராணுவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்தன என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ல் மட்டும் உலக நாடுகள் மொத்தமாக இராணுவத்திற்காக 1981 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 2.6 சதவீதம் அதிகமாகும். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின்படி, கொரோனா நெருக்கடியால் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


ஓராண்டு கால தடைக்கு பின் அமெரிக்க பயணிகளை அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
[Monday 2021-04-26 08:00]

முழுமையான தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இந்த கோடையில் ஐரோப்பாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். நீண்ட ஓராண்டு கால தடைக்கு பின்னர் அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட அனுமதிக்கப்படுவார்கள்.


கோவிட்-19: சுவிஸ்ஸில் மூன்று மில்லியன் மக்கள் பாதிப்பு!
[Monday 2021-04-26 08:00]

சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பெரும்பாலானோருக்கு அது தெரிந்திருக்கவில்லை எனவும் அரசு தரப்பு மதிப்பிட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு சுவிஸ் மக்கள் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.


'ஊரடங்கு தளர்த்தப்படாது' - அறிவித்த பிரபல நாடு!
[Sunday 2021-04-25 17:00]

ஜேர்மனியில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜேர்மனியில் வார இறுதி நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 3வது அலையை கட்டுப்படுத்த வார இறுதியில் விதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவை என்று சமீபத்தில் கூறிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், அதிக தொற்று வீதங்களைக் கொண்ட பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார்.


ஜோ பைடன் நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த அமெரிக்க தமிழ் வம்சாவளி எம்.பி!
[Sunday 2021-04-25 17:00]

இந்தியாவுக்கு தடுப்பூசி அனுப்ப வேண்டும் என தமிழ் வம்சாவளி அமெரிக்க எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி ஜோ பைடன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 3.5 லட்சத்தை நெருங்கிவிட்டது.


பிரித்தானியாவில் அமெரிக்க கொடியை எரித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்!
[Sunday 2021-04-25 17:00]

பிரித்தானியாவில் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்ட ‘ஐரோப்பியன் சூப்பர் லீக்’ கால்பந்து தொடருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள், அமெரிக்க தேசிய எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் 18 அன்று, இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணிகள் உட்பட முக்கிய ஐரோப்பிய கிளப்புகள் ‘ஐரோப்பியன் சூப்பர் லீக்’ என்ற புதிய போட்டியை உருவாக்குவதாக அறிவித்தன.


கனடாவில் நடைபாதையில் கிடந்த இளைஞர் சடலம்!
[Sunday 2021-04-25 17:00]

கனடாவில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். லயோட்மின்ஸ்டர் நகரில் உள்ள நடைபாதையில் கடந்த 17ஆம் திகதி ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. பொலிசார் விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் டாக்சன் லிவி என தெரியவந்தது.


லண்டனில் வன்முறையாக மாறிய போராட்டம்: கொடூரமாக தாக்கப்பட்ட போலீசார்!
[Sunday 2021-04-25 17:00]

லண்டனில் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால், இதில் பொலிசார் பல படுகாயமடைந்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hyde Park அருகே, ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக்காரர்கள் வந்த போது, பொலிசார் அவர்களை கலைக்க முயன்றனர்.


பிரான்சில் பயங்கரம்: பெண் போலீஸ் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை!
[Sunday 2021-04-25 08:00]

பிரான்சில் கடந்த 2015-ம் ஆண்டு `சார்லி ஹெப்டோ’ என்கிற பத்திரிகை குறிப்பிட்ட ஒரு மதத்தின் தலைவரின் கேலிச்சித்திரத்தை பதிவிட்ட காரணத்துக்காக தாக்குதலுக்கு உள்ளானது. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி சார்லி ஹெப்டோ அலுவலகத்தில், 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஸ்பெயினில் வேண்டுமென்றே 22 பேருக்கு கொரோனாவை பரப்பிய கொடூரன்!
[Sunday 2021-04-25 08:00]

ஸ்பெயினில் கொரோனா பாதிப்புட்டன் வேண்டும் என்றே 22 பேர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். 40 வயதான அவர் இருமல் மற்றும் 40C க்கும் அதிகமான காய்ச்சல் இருந்தபோதிலும் தொடர்ந்து வேலை மற்றும் ஜிம்மிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.


ஈராக் மருத்துவமனையில் கோர விபத்து: கொத்தாய் பலியான அப்பாவி மக்கள்!
[Sunday 2021-04-25 08:00]

ஈராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உருளைகள் வெடித்ததில் பலர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்தாதில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை இரவு இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் உருளைகள் வெடித்ததால் அந்த மருத்துவமனை தீப்பிடித்து எரிந்துள்ளது.


லண்டனில் பட்டப்பகலில் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட பள்ளிச்சிறுவன்!
[Saturday 2021-04-24 16:00]

பிரித்தானியாவின் தலைநகரில் கத்தியால் குத்தப்பட்டு 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த சிறுவனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனின் Canning நகரில் இருக்கும் Zzetta pizzas கடைக்கு வெளியே நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 4 மணிக்கு 14 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு, பொலிசாரால் மீட்கப்பட்டு, அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.


சுவிஸ் ஏரி ஒன்றின்கீழ் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கல யுக கிராமம்!
[Saturday 2021-04-24 16:00]

சுவிஸ் ஏரி ஒன்றின்கீழ், வெண்கல யுக கிராமம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். Lucerne ஏரியின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த கிராமம், 3,000 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இயற்கைத் துறைமுகப்பகுதி ஒன்றில் குழாய்கள் பதிக்கும் பணியின்போது இந்த கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குடியிருப்பில் தனிமையில் இருந்த கனேடிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
[Saturday 2021-04-24 16:00]

கனடாவில் அடுக்குமாடி வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 25ஆம் திகதி நடந்துள்ளது. அங்குள்ள அடுக்குமாடி வீட்டில் பெண்ணொருவர் தனியாக இருந்தார்.


கோவிட்-19: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
[Saturday 2021-04-24 16:00]

கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதாநாம் பேசினார்.


ரொறொன்ரோவில் வெறுப்பு குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
[Saturday 2021-04-24 16:00]

ரொறொன்ரோவில் இதுவரை இல்லாத அளவு பதிவான வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020ஆண்டு வெறுப்பு குற்ற புள்ளிவிபர அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 139ஆக இருந்து 2020ஆம் ஆண்டு 210ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 14.62 கோடியை தாண்டியது!
[Saturday 2021-04-24 07:00]

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.


"இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்" - பிரதமர் போரிஸ்!
[Saturday 2021-04-24 07:00]

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்வால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.


ஜேர்மன் மக்களை கதிகலங்க வைத்த 64 வயது முதியவர்!
[Saturday 2021-04-24 07:00]

ஜேர்மனியின் Bühl பகுதியில் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவந்த 64 வயது நபருக்கு பிராந்திய நீதிமன்றம் ஒன்று சிறைத் தண்டனை விதித்துள்ளது. Bühl பகுதியில் அமைந்துள்ள தமது குடியிருப்புக்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை இந்த நபர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய்யுள்ளார்.


ஸ்பெயினில் தாயை 1000 துண்டுகளாக வெட்டி சாப்பிட்டு வந்த கொடூர மகன்!
[Friday 2021-04-23 16:00]

ஸ்பெயின் நாட்டில் பெற்ற தாயை கொலை செய்து ஆயிரம் துண்டுகளாக நறுக்கி நரமாமிசம் சாப்பிட்டுவந்த கொடூரனின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் உணவகத்தில் வேலை பார்த்துவந்த Alberto Sanchez Gomez (28), தனது தாய் Maria Soledad Gomez-ஐ (68) கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டியுள்ளார்.


ஜப்பானில் 35 பெண்களை காதலித்து ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த இளைஞன்!
[Friday 2021-04-23 16:00]

ஜப்பானில் 39 வயது மதிக்க நபர், 35 பெண்களை ஏமாற்றி அவர்களுடன் டேட்டிங் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், அவர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பானின் Kansai மாகாணத்தின் ஒரு நிலையான முகவரி இல்லாத, பகுதி நேர வேலை செய்து வரும் Takashi Miyagawa என்ற 35 வயது நபர், தன்னுடைய பிறந்த நாளை வேவ்வேறு நாட்களாக கூறி, 35 பெண்களை ஏமாற்றி டேட்டிங் வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.


கனடாவில் மாணவிகளின் அந்தரங்க உறுப்புகளை ரகசிய கமெரா மூலம் படம்பிடித்த ஆசிரியர்!
[Friday 2021-04-23 16:00]

கனடாவில் ஆசிரியர் ஒருவர் பேனாவில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கமெரா மூலம் மாணவிகளுக்குத் தெரியாமல் அவர்களது உடல் உறுப்புகளை படம்பிடித்துள்ளார். Ryan Jarvis என்னும் அந்த ஆங்கில ஆசிரியர், எப்போதும் மாணவிகளுடன் ஒட்டியபடி நிற்பதும், தேவையில்லாமல் பெரும்பாலான நேரத்தை மாணவிகளுடமே செல்வழிப்பதுமாக இருந்துள்ளார்.


அமெரிக்காவில் தாயுடன் சென்ற 7 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி: துடிதுடிக்க உயிரைவிட்ட பரிதாபம்!
[Friday 2021-04-23 16:00]

அமெரிக்காவில் தாயுடன் காரில் செல்லும் போது 7 வயது குழந்தை மர்மமான முறையில் கழுத்தில் குண்டு தாக்கி இறந்த சமப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினா மாநிலத்தில் உள்ள Hickory பகுதியில் புதன்கிழமை இரவு 11 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு கிடந்த Zakylen Greylen Harris என்ற 7 வயது குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.


கொவிட்-19: கனடாவில் ஒரே நாளில் 8,370 பேர் பாதிப்பு - 59 பேர் பலி!
[Friday 2021-04-23 16:00]

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 370பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22 ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11 இலட்சத்து 55 ஆயிரத்து 834 பேர் பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23 ஆயிரத்து 822 பேர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவில் மாமனாரை கரம்பிடித்த இளம்பெண்!
[Friday 2021-04-23 08:00]

அமெரிக்காவில் தன்னை விட 30 வயது அதிகமான மாமனாரை இளம்பெண் திருமணம் செய்து கொண்டு அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். எரிகா குயிகிள் (31) என்ற பெண் தனது 16வது வயதில் ஜெப் (60) என்பவரை சந்தித்தார். அதாவது ஜெப்பின் வளர்ப்பு மகனான ஜஸ்டினை தான் எரிகா திருமணம் செய்து கொண்டார்.


கொரோனா அச்சம்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதித்த கனடா!
[Friday 2021-04-23 08:00]

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்களை கனடா 30 நாட்களுக்கு தடை செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மக்கள் ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையால் பரிதவித்து வருகின்றனர்.


இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் ஏமாற்றி ஊதியம் வாங்கிய மருத்துவ ஊழியர்!
[Friday 2021-04-23 08:00]

இத்தாலியில் ஓர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக ஓர் ஊழியர் வேலைக்கு வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன. இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார் அந்த அரசு ஊழியர். 2005ம் ஆண்டு முதல் அவர் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார் என காவல் துறை கூறுகிறது.


பிரேசிலில் அழகிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி!
[Thursday 2021-04-22 16:00]

பிரேசிலில் இரண்டு லொரிகளுக்கிடையே கார் சிக்கி விபத்துக்குள்ளானதால், அதில் இருந்த அனைவருமே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரேசிலின் Santa Maria do Para-வில் உள்ள BR-316 மோட்டார் பாதையில் இரண்டு லொரிகளுக்கிடையே கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா