Untitled Document
April 27, 2024 [GMT]
 
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் 6து வருட தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல்ப் பெரு விழா: Top News
[Sunday 2016-01-17 19:00]

தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மகரத்திருநாளாக தமிழர்களால தமிழீழம்,தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.


தரணியெங்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்! - ஆலயங்களில் விசேட வழிபாடுகள் Top News
[Friday 2016-01-15 19:00]

தரணி எங்கும் வாழும் தமிழர்களால் இன்று தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே மக்கள் உற்சாகத்துடன் பொங்கல் பொங்கி அயலவர்கள், சுற்றத்தினருடன் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் வெடிகள் கொளுத்தியும் மகிழ்ந்தனர். தைப்பொங்கல் தினமான இன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. அவற்றிலும் மக்கள் கலந்து கொண்டனர்.


மலையக தோட்டங்களில் தை பொங்கல் கொண்டாட்டமும் ராமர் பஜனையும்: Top News
[Friday 2016-01-15 13:00]

தை திருநாளாம் தை பொங்கல் இன்று (15) உலகளாவிய ரிதியில் இந்துமக்கள் கொண்டி வரும் வேலையில் பெருந்தோட்ட மக்களும் அதில் இணைந்து கொள்கின்றார்கள். மலையகத்தில் காணப்படும் அனைத்து தோட்ட ஆலயங்களிலும் இன்று விஷேட பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது. அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டத்தில் தை பொங்களும் ராமர் பஜனையை முன்னிட்டு ராமர் தேர் பவனியும் நடைபெற்றது. இதில் பெரும் திறலான பக்த்தர்கள் கலந்துக் கொணட்டதுடன் ராமர் பக்த்தர்கள் ராமர் பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.


யேர்மனியின் நூர்பேர்க் நகரில் நடைபெற்ற புத்தாண்டுக்கலைவிழா:
[Tuesday 2016-01-12 19:00]

யேர்மனியின் நூர்பேர்க் நகரில் கடந்த 09.01.2016 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது . இதில் விடுதலை கானங்களுடன், இசைக்கச்சேரி,விடுதலை நடனங்கள், திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள் சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை,நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள் பலரும் ,பல்லினமக்கள் , கலாச்சார ஒன்றியப்பொறுப்பாளர்கள் விருந்தினர்களாக வருகைதந்து எமது இனத்தின் விடுதலை-.சுதந்திரம்- பெறவேண்டும் என்றும் அத்தோடு தமிழ் இளையோர்களின் செயற்பாட்டை கண்டுவியந்து வாழ்த்திச் சென்றனர். அத்தோடு இவ் நிகழ்வின் ஊடாக தாயக மக்களின் நலனுக்காக சிறிய நன்கொடையும் பெற்றெடுக்கப்பட்டது.


தாயக உறவுகளை வலுப்படுத்த தொடரும் வாழ்வாதார உதவிகள்! Top News
[Friday 2016-01-08 19:00]

தமிழின அழிப்பு கொடிய போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளை வலுப்படுத்த யேர்மனியில் இயங்கும் Help for Smile அமைப்பு பல்வேறான உதவித்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. அந்தவகையில், அவசர நிவாரண உதவிகள் , சுயதொழில் செய்வதுக்கான உதவித்திட்டம் , சிறுவர்களுக்கான உதவித்திட்டம் என பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.


பாட நூல்கள் வழங்கும் தேசிய நிகழ்வு! Top News
[Wednesday 2016-01-06 19:00]

2016 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான பாட நூல்கள் வழங்கும் தேசிய நிகழ்வு கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கனடா உறங்கா விழிகள் அமைப்பினால் கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு: Top News
[Tuesday 2016-01-05 19:00]

கனடாவில் இருந்து இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உறங்காவிழிகள் அமைப்பின் அனுசரணையுடன் அறிவொளி கல்வி வளர்ச்சிக் கழக மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கல்வி நிலைய ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் மாணவர்களது ஆளுமைகளை வெளிப்படுத்தும் நூல்வெளியீடு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச கல்விச் சேவையை வழங்கி வரும் அறிவொளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலம் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர் நூல் வெளியீடும், கலைநிகழ்வுகளும் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய கணேசன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (03-01-2016) இடம்பெற்றது.


தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்க IDEAL ISAI INC. நிறுவனம் உதயம்! Top News
[Monday 2016-01-04 08:00]

கனடா ரொறண்டோ பெரும்பாகப் பகுதியிலுள்ள தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் இசைக் கலையினை வளர்க்கும் வகையில் முன்னணிக் கலைஞர்கள் ஒன்று கூடி IDEAL ISAI INC. என்ற நிறுவனத்தினை உருவாக்கி உள்ளனர். இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று ஞாயிறு (03-01-2016) பிற்பகல் ஸ்காபுறோவிலுள்ள துஊ டீயஙெரநவ ர்யடட மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஊடக வியலாளர் மகாநாட்டில் பத்திரிகைகள் தொலைக் காட்சிகள்இ இணையத்தளங்கள் வானொலிகள் ஆகியவற்றினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ கையளிப்பு: Top News
[Sunday 2016-01-03 22:00]

யாழ். கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ (அரடவiஅநனயை pசழதநஉவழச) வழங்கும் நிகழ்வு நேற்று (02.01.2016) இடம்பெற்றது. வைத்தியக்கலாநிதி சுதாகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு பல்லூடக எறியீ இனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.


'ஊடகவியலாளர்களின் நட்பினால் தான் நான் இன்று உயிருடன் உள்ளேன்" - பத்திரிகையாளர் மாநாட்டில் கலைஞர் ஜெயபாலன் வேண்டுகோள். Top News
[Friday 2016-01-01 00:00]

'ஊடகவியலாளர்களின் நட்பினால் தான் நான் இன்று உயிருடன் உள்ளேன். பிரச்சனையான கால கட்டத்தின் போது அவர்கள் எனக்காக குரல் கொடுத்தார்கள். எழுபதாம் ஆண்டு காலத்தில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 1971ம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்ட போது சகல பல்கலைக் கழகங்களினதும் மாணவ கழகத் தலை வர்களும் தமக்கிடையே தொடர்புகளை வைத்திருந்தனர். நாம் செய்த முதற் பணி யாழ் பல்க லைக் கழகத்தில் இருந்த சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி யது தான். அதே போன்று கொழும்பு பல்கலைக் கழகத்தில் இருந்த தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மாணவர் கள் பாதுகாப்பு வழங்கினார்கள். 1956,58,77ம் ஆண்டுகளில் இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் அதிகள வில் கொன்றழிக்கப் பட்டார்கள். 1980ம் ஆண்டு தமிழர்களுக்கு சர்வதேச தொடர்புகள் ஏற்பட்டன. அதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு காரணமாகும். 1983 இனக் கலவரத்தின் போது தமிழ் நாடு கொதித்து எழுந்தது. இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் நாட்டு தமிழர்களுடன் மிக நெருக்கமாகப் பழகி வருவது வரவேற்கத் தக்கது."


சுழிபுரத்தில் மீன் சந்தையை திறந்து வைத்தார் அனந்தி! Top News
[Thursday 2015-12-31 18:00]

வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 27.693 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை இன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 25.456 மில்லியன் ரூபாய் புறநெகும மூலமும், 5 இலட்சத்து 87 ஆயிரத்து 150 ரூபாய் மக்களின் பங்களிப்புடனும் மிகுதி 1.65 மில்லியன் ரூபாய் சபை நிதியிலும் இந்தக் சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.


தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு! Top News Top News
[Wednesday 2015-12-30 23:00]

சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலைக்கு வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமர் அவர்களுக்கு கோரிக்கை மனுவொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. ஏலவே கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களையும், தபால் அட்டைப் பரப்புரையொன்றினையும் மேற்கொண்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பின் ஓர் அங்கமாக இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கோரிக்கை மனுவிi நா. தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திடம் முறையாக டிச 29 திங்கட்கிழமை கையளித்துள்ளனர்.


கொழும்பில் சிறப்பாக நடந்த ஹீலர் பாஸ்கரின் செவி வழி தொடுகை சிகிச்சை பயிற்சி முகாம்! Top News
[Wednesday 2015-12-30 00:00]

இலங்கை வந்து உள்ள உலக பிரசித்தி வாய்ந்த செவி வழி தொடுகை சிகிச்சை நிபுணர் ஹீலர் பாஸ்கர் கடந்த வாரம் கொழும்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தினார். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற இச்சிகிச்சை முகாமில் நூற்றுக் கணக்கான நோயாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இம்முகாம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதே போல எதிர்வரும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் துர்க்கா மணி மண்டபத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகின்றார் ஹீலர் பாஸ்கர். ஆர்வலர்கள் 0773023492 என்கிற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறிய முடியும்.


கனடிய தமிழர் தேசிய அவையின் 7ம் கட்ட தாய்த் தமிழ் நாடு வெள்ள நிவாரணப் பணி: Top News
[Monday 2015-12-28 22:00]

7ம் கட்டமாக தமிழ் நாட்டு வெள்ள அனர்த்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதி திராவிட, இஸ்லாமிய மக்களை அதிகமாக கொண்ட ஆலம்பூர் மாவட்டத்தில் கனடிய தமிழர் தேசிய அவையினர் தமது பணிகளை டிசெம்பெர் மாதம் 26ம் திகதி காலை 11 மணியிலிருந்து மாலை 1 மணி வரை மேற்கொண்டிருந்தனர். 1130 குடும்பங்களுக்கு அம்மக்களின் தேவையைத் தெரிந்து படுப்பதற்குரிய பாய், போர்வை உட்பட அரிசி பொதியும் வழங்கப்பட்டது. இவ்விசேட நிகழ்வில் கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினரும், தமிழ் ஊடக பேச்சாளரான தேவா சபாபதியும் மற்றும் பழ நெடுமாறன் ஐயா, ம. நடராஜன் ஐயா, கவிஞ்சர் காசி ஆனந்தன், மணியரசன், ஓவியர் வீர சந்தானம், வணிக சங்கத் தலைவர் வெள்ளையன், தயாரிப்பாளர் மணிவண்ணன், கவிஞ்சர் சிநேகன், இயக்குனர் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இன்நிகழ்விற்கு தமிழகத்திலிருந்து 10 ற்கும் அதிகமான ஊடகங்கள் வருகை தந்திருந்தனர்.

Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா