Untitled Document
November 7, 2026 [GMT]
 
தேசிய மாவீரர் நாள் யேர்மனி வூப்பெற்றால் – 2021! Top News
[Monday 2021-11-29 09:00]

யேர்மனியில் மாவீரர்நாள் 2021 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் திட்டமிட்டது போன்று ஐந்து இடங்களில் எழுச்சியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக மத்திய மாநிலம் Schwelm நகரில் அனைத்து முன்பணிகளும் நிறைவு செய்து, ஆயத்தப்படுத்தல்களில் இருந்த இறுதி நேரத்தில் கொரோனா என்னும் கொடிய கிருமியின் தாக்க அதிகரிப்பினால் அந் நகரத்து சுகாதார திணைக்கழகத்தினரால் நிறுத்தப்பட்டிருந்தது.


அரசபாளையத்தில் மாவீரர் நாள் - 2021! Top News
[Monday 2021-11-29 08:00]

தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளையத்தில் மாவீரர் நாள்அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர். தமிழீழ விடுதலையை நெஞ்சில் ஏந்தி களமாடிய வீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றி மாவீரர்களின் ஈகங்கள், வீர களமுனைச் செய்திகள், ஈழ வரலாற்றில் தமிழினத்தின் எழுச்சிகள் பற்றி விரிவான உரை ஆற்றி, மாண்ட விடுதலை வீரர்களை தமிழர்களின் நெஞ்சில் படமாகச் செதுக்கினர்.


வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து!
[Friday 2021-11-19 20:00]

கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கைக் கண்டித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இரவு, பகல் பாராது வெயிலிலும், மழையிலும், பனியிலும் வாடி, கடும் அடக்குமுறையையும், அரச வன்முறையையும் எதிர்கொண்டு நாட்டின் நலனுக்காகத் தன்னலமின்றி அயராது போராடிய வேளாண் பெருங்குடி மக்களின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே இதனைக் கருதுகிறேன். 700 க்கும் மேலான விவசாயிகளின் உயிரீகத்தாலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளினாலும் அளப்பெரும் போராட்டத்தினாலுமே இந்நாட்டின் வேளாண்மையை வணிகமாக்கிடும் இக்கொடும் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என்பது மறுக்கவியலா பேருண்மையாகும்.


சிறப்பாக நடைபெற்று முடிந்த பொதுக்கூட்டம்: வன்னிச்சங்கம் -கனடா! Top News
[Tuesday 2021-11-16 16:00]

கனடா வன்னிச் சங்கத்தின் (V united care for kids Inc)ன் வருடாந்தப் பொதுக்கூட்டம் 30-10-2021 அன்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட அறக்கட்டளை அமைப்பு என்பதனால் கடந்த பல மாதங்களாக இயக்குனர்சபைக் கூட்டங்களில், எவ்வாறு சிறப்பாக பொதுக்கூட்டத்தை நடத்தி முடிப்பது என்பது விரிவாக ஆராயப்பட்டு அதற்கமைவாக இக்கூட்டமானது நடைபெற்றது.


யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Monday 2021-11-08 10:00]

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 14ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனி போகும் நகரத்தில் இன்று நினைவுகூரப்பட்டது. இன் நிகழ்வில் போகும் நகரமக்களும் அன் நகரத்தின் அருகில் உள்ள மக்களும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.


கோத்தாவை முற்றுகையிட்ட புலம்பெயர் தமிழர்கள்! Top News
[Wednesday 2021-11-03 19:00]

ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பாக பிரமாண்டமான அனைத்துலக மாநாட்டை மையப்படுத்தி சிறிலங்காவில் தமிழினத்தின் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதிகோரி மீண்டும் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன்மூலம், தமிழனத்தின் மீது நடத்தப்பட்ட இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குரிய குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்வினைகள் தணியப்போவதில்லை என்ற தீவிரமான செய்தி வழங்கப்பட்டுள்ளது.


மீண்டும் தொடங்கும் "விழித்தெழு தமிழா" மாதாந்த இணையவழிக் கருத்தாடல்! Top News
[Monday 2021-11-01 08:00]

தமிழீழத் தாயகத்தில் சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பு, தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, கலாச்சாரம், பாரம்பரிய திரிவுபடுத்தல் போன்ற கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வினை உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அவற்றிற்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கு பன்னாட்டு இராசதந்திரத் தளங்களில் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய காத்திரமான செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கோடும் "விழுத்தெழு தமிழா" எனும் தலைப்பில் இவ் வருட ஆரம்பத்தில் இருந்து மாதாந்தாந்த இணையவழிக் கருத்தாடலினை ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற (ECOSOC) ABC Tamil Oli அமைப்பு நடாத்திவருகின்றது.


01/11/2021 Scotland ல் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்! Top News
[Saturday 2021-10-30 21:00]

தமிழினப் படுகொலையாளியின் Scotland நாட்டு வருகையினை கண்டித்தும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐரோப்பிய ஆலோசனை அவை (France, Strasbourg ) முன்றலில் கவனயீர்பு போராட்டம் 29/10/2021 நடைபெற்றது.


இணுவில் பொது நூலக கனடா நிவாரண பணி! Top News
[Tuesday 2021-10-26 16:00]

இணுவில் பொது நூலக கனடா அமைப்புக்குழுவின் ஆதரவில் இவ் வருடத்தின் இறுதி நிவாரணபணி நேற்றையதினம் இடம்பெற்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதாரதிற்கான பாதுகாப்புகருதி கட்டம்கட்டமாக உதவிகள் வழங்கபடுகின்றது இவ் உதவிக்கு உதவிய அனைவருக்கும் இணுவில் பொது நூலகம் இணுவில் மற்றும் கனடா தனது நன்றியை தெரிவித்துகொள்கிறது.


ஆஸ்திரேலியா அருகே மூழ்கிய அகதிகள் படகு: வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கப்பல்கள், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருந்துயரம்! Top News
[Saturday 2021-10-23 11:00]

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் முயற்சியில் ‘தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள்’ கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தியை கேட்ட கணத்தை தன்னால் எண்ணிப் பார்க்க கூட முடியவில்லை என்கிறார் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஈராக்கியரான அலி சோபி மஹதி.


யாழ் பொதுநூலகத்தில் எங்கட புத்தகங்கள் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பம்! Top News
[Friday 2021-10-22 23:00]

இன்று வெள்ளிக்கிழமை 22.10.2021 காலை எங்கட புத்தகங்கள் கண்காட்சியும் விற்பனையும் யாழ் பொது நூலகத்தில் (பொது நூலகத்தின் பின்பக்க நுழைவாயிலில் - சிற்றுண்டிச் சாலை பக்கமாக) ஆரம்பமாகியது. இக் கண்காட்சியில் ஈழத்து எழுத்தாளர்களின் பல்வேறு புத்தகங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு சிறுகதை தொகுதியையும் அங்கு பெற்றுக்கொள்ளலாம்.


ஸ்காபாரோ நிலக்கீழ் தொடரி வழித்தட நீட்டிப்பு! Top News
[Friday 2021-10-22 20:00]

இத்திட்டத்தின் மூலம், இதன் கட்டுமான காலத்தில் ஆண்டுதோறும் 3000 வரையான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், இது முடிவடைந்த பின்னர் ஸ்காபரோ பகுதியிலிருந்து நகரத்தின் பிற பகுதிகளுக்கு வேலைக்கும் பள்ளிகளுக்கும் செல்வோருக்கு இலகுவான போக்குவரத்தினையும் வழங்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையில் முதல்முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்! Top News
[Thursday 2021-10-21 18:00]

நாட்டில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் 31 வயதுடைய பெண்ணொருவரே இன்று அதிகாலை 12.16 க்கும் 12.18 க்கும் இடைப்பட்ட கால இடைவெளியில் சிசேரியன் முறை மூலம் மூன்று பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். தாயும், குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலையில் மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் திரான் டயஸ் கூறுயுள்ளார்.


யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு! Top News
[Tuesday 2021-10-12 16:00]

யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன. தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


கனடா Majestic City Shopping Mall வர்த்தகர்கள் சமூக உதவி Top News
[Sunday 2021-10-10 17:00]

கனடாவில் தமிழர்கள் அதிகள் வசிக்கும் பகுதியாகிய ஸ்கேர்பரோ பகுதியில் அமைந்துள்ள (Majestic City Shopping Mall) தமிழர் வர்த்தக நண்பர்கள் பலரு இணைந்து தாயகத்தில் நோய்த்தொற்று காரணமாக முடங்கு நிலைக்கு உள்ளாகியிருந்த பகுதிகளில் ஒன்றான கண்டி கலாகா பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவுப்பொதிகளை வழங்கியுள்ளனர்.


ஊரக உள்ளாட்சித் தேர்தல் - சீமான் பரப்புரை - செய்யூர் - சித்தாமூர்! Top News Top News
[Thursday 2021-10-07 19:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.


சிறுவர் நலனை மையப்படுத்தியே பிரதேச அபிவிருத்தி - சிறுவர் தின உறுதிப்பிரமானத்தில் தவிசாளர் நிரோஷ்! Top News
[Friday 2021-10-01 19:00]

சிறுவர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முன்னுரிமையளித்தே பிரதேசத்தின் அபிவிருத்தியினைத்திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இன்று (ஓக்டோபர் 01) காலை சபையின் அபிவிருத்தியினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான சபைக் கூட்டம் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுவர் தினம் ஆகையினால் சிறுவர் தொடர்பான விடயம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது.


கனடாவில் சிறந்த வர்த்தக வெற்றியாளர் CAMSONICS SECURITY ரஜீவ் செபராசா! Top News
[Friday 2021-10-01 16:00]

கனடாவில் சிறந்த வர்த்தக நிறுவனங்களை தரப்படுத்தும் நிறுவனமான CANADIAN BUSINESS REVIEW BOARD என்;னும் அமைப்பு 'CAMSONICS SECURITY SYSTEM INC' நிறுவன அதிபரும் முன்னாள் ஆசிரியருமான ரஜீவ் செபராசா அவர்களை சிறந்த வர்த்தக வெற்றியாளர் என கெளரவித்துள்ளது.


கனடாவில் தமிழ் பெண்களது காதல் திருமணம்! அம்மி மித்து, அருந்ததி பார்த்து அனைவரும் போற்ற நடந்ததுது Top News
[Tuesday 2021-09-28 18:00]

இந்து திருமணச் சடங்குகளுடன் இரண்டு பெண்கள் திருமணம் முடித்துக்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்களும் தமது சுற்றத்தார் முன்னிலையில், அம்மி மித்து, அருந்ததி பார்த்து, தாலிகட்டிக்கொண்ட அந்தக் காட்சி ஊடகங்களில் வெளியாகி சாதகமாகவும், எதிரானதுமான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றது.


டோரன்டோவில் உணர்வெளிச்சியுடன் தீயாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு: Top News
[Monday 2021-09-27 17:00]

கனடாவில் டோரன்டோ - மார்க்கம் ஸ்டீல் சந்திப்பில் உள்ள பூங்காவில் தீயாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மிகவு உணவெளிச்சியுடன் நேற்றயதினம் 26-09-2021 அன்று இடம்பெற்றது . இந்தநிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வினை கனடா தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை தமிழருக்கு என்று புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா? - தவிசாளர் நிரோஷ் கேள்வி! Top News
[Sunday 2021-09-26 22:00]

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இது தான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார்.


ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்! Top News
[Wednesday 2021-09-22 18:00]

48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது. குறிப்பாக சிங்களப் பேரினவாத அரசினால் மெற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சி ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.


தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா - சார்புருக்கன் 19.09.2021! Top News
[Wednesday 2021-09-22 18:00]

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான விழாகள் முறையே (04.09.2021) பீலபெல்ட்,(05.09.2021)ஆன்ஸ்பேர்க், (11.09.2021)நெற்றெற்றால், (18.09.2021) ஸ்ருட்காட் நடைபெற்றதைத் தொடர்ந்து, தென்மேற்கு மாநிலத்திற்கான விழா 19.09.2021அன்று சார்புருக்கன் அரங்கிலே காலை 10:00மணிக்குத் தியாக தீபம் திலீபனின் நினைவுப் பகிர்வுடனான அவரது ஒலிவடிவிலான உரையை அடுத்து மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது.


சவுதி தேசிய தினத்தை முன்னிட்டு இந்தியர்கள் நடத்திய இரத்ததான முகாம் Top News
[Sunday 2021-09-19 08:00]

சவுதி அரேபியாவில் செப்டம்பர் 23 ம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய தினம் கொண்டாடப்படும். ஓட்ட பந்தயம், வாண வேடிக்கை, விமான சாகசங்கள், கார் மற்றும் பைக் பந்தயங்கள், கால்பந்து போட்டி என வாரம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். கடுகு முதல் விமானம் வரை விற்பனை செய்யும் சவுதி அரேபியாவிலுள்ள முன்னணி வணிக நிறுவனங்கள் அனைத்தும் அதிரடி தள்ளுபடிகளை அறிவிப்பது வழக்கம்.


17ம் நாளாக (18/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நாவினை அண்மிக்கின்றது! Top News
[Sunday 2021-09-19 08:00]

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவினுடைய 4ம் நாள் தொடர் உண்ணா நோன்பின் 34ம் ஆண்டு நினைவில் நிற்கின்றோம். இன்னும் விடுதலைப் பசியோடு காத்திருக்கும் திலீபன் அண்ணா போன்ற பல மாவீரர்களின் வேணவா நிறைவேற இன்றோடு 17ம் நாளாக 18/09/2021 தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும்.


மரம் தங்கசாமி நினைவு நாள்! Top News
[Thursday 2021-09-16 18:00]

காவேரி கூக்குரல் மூலம் 2.37 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள் மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 2.37 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.


13ம் நாளாக (14/09/2021) தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு பிரெஞ்சு தொலைக்காட்சி முக்கியத்துவம்! Top News
[Wednesday 2021-09-15 20:00]

தமிழீழ விடுதலை காணும் வரை ஓயாத விடுத்லைப்போராட்டத்தில் எம் தமிழீழ மக்களின் எழுச்சியும் பங்களிப்பும் அளப்பரியன. 2009ம் ஆண்டு சிங்களப் பேரினவாத அரசால் கொடூரத்தனமாக நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ சுதந்திர தேசமே எமக்கான தீர்வு என பறைசாற்றிக்கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஆலோசனை அவையில் முக்கிய கலந்துரையாடல் ஊடாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை பிரான்சு வலியுறுத்த வேண்டும் என மனித நேய செயற்பாட்டாளர்களால் எடுத்துரைக்கப் பட்டது.


12ம் நாளாக (13/09/2021) 3ம் தலைமுறை முறையின் பங்களிப்போடு ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது! Top News
[Wednesday 2021-09-15 08:00]

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை ஊடறுத்து பிரான்சில் மனித நேய ஈருறுளிப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.


10ம் நாளாக 11/09/2021 தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயணம் யேர்மனி நாட்டினை கடந்து பிரான்சு நாட்டின் ஊடாக பயணித்துக்கொண்டு இருக்கின்றது! Top News
[Wednesday 2021-09-15 08:00]

12 வருட காலமாக சர்வதேசத்தின் மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசு தான் மேற்கொண்ட தமிழின அழிப்பில் இருந்து தன்னை பாதுகாத்து நியாயப் படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் தமது வாழிட நாடுகளில் தொடர் அறவழிப்போராட்டங்களை அயராது தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி நடத்திக்கொண்டு கொண்டு இருக்கின்றார்கள்.


தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – ஆன்ஸ்பேர்க்: 5.9.2021! Top News
[Friday 2021-09-10 11:00]

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் வடமாநிலத்திற்கான விழா பீலபெல்ட் அரங்கிலே(04.09.2021) நடைபெற்றதைத் தொடர்ந்து, வடமத்திய மாநிலத்திற்கான விழா 05.09.2021அன்று காலை 10:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து செல்லும் காலமானபோதும் தொடர்ந்தும் துடிப்போடு செயலாற்றும் கழகமாகத் தமிழ்க் கல்விக் கழகம் இந்த ஆண்டும் தன்னைப் பதிவு செய்து வருகின்றமை சிறப்பாகும்.

 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா