Untitled Document
November 7, 2026 [GMT]
 
8ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது! Top News
[Friday 2021-09-10 11:00]

09/09/2021 காலை பசுத்தோன் , பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது. இன்றைய பயணத்தில் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வராக அங்கம் வகிக்கும் யேசி அரேன்சு அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனையும் தமிழர்களுடைய வரலாற்று பூர்வீகம நிலம் தமிழீழமே என்றும் எமக்கான நிரந்த்ர தீர்வாக தமிழீழத் தேசத்தின் சுதந்திரமே அமையும் என்று வலியுறுத்தப்பட்டது.


6ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்! Top News
[Friday 2021-09-10 11:00]

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 07/09/2021 தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி வாவ்ர் நாமூர் மற்றும் வன்சு மாநகர சபையில் தமிழர்களுடைய கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.


7ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்! Top News
[Friday 2021-09-10 11:00]

08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து பசுத்தொன் மாநகரசபை முதல்வராகவும் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் அங்கம் வகிப்பவருமான மதிப்பிற்குரிய புனுவா லுட்சன் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.


5 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியம் (புருசல் பெல்சியம்) முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தோடு தொடர்கின்றது! Top News
[Tuesday 2021-09-07 16:00]

நேற்று 06/09/2021 காலை அன்வேர்ப்பன் மாநகரத்தில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழ மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் இருந்து பெரும் எழுச்சியோடு மனித நேய ஈருருளிப்பயணம் புருசல் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி ஆரம்பமானது.


தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – பீலபெல்ட், 4.9.2021! Top News
[Tuesday 2021-09-07 16:00]

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் முதலாவது 04.09.2021அன்று காலை 09:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து செல்லும் காலமானபோதும் தொடர்ந்தும் துடிப்போடு செயலாற்றும் கழகமாகத் தமிழ்க் கல்விக் கழகம் இந்த ஆண்டும் தன்னைப் பதிவு செய்தமை சிறப்பாகும்.


2ம் நாளாக (03.09.2021) பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இருந்து ஆரம்பித்தது! Top News
[Sunday 2021-09-05 15:00]

கடந்த 02/09/2021 அன்று பிரித்தானியாவில் பெரும் மக்கள் எழுச்சியோடு தமிழீழத்தின் விடுதலை வேண்டியும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் பல கட்டமாக அரசியல் சந்திப்புக்களினை மேற்கொண்டவாறு இன்று காலை 03/09/2021 நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தொடர்ந்தது.


3ம் நாளாக (04/09/2021) பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் 270Km கடந்து நெதர்லாந்து நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது! Top News
[Sunday 2021-09-05 15:00]

2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது. அந்தவகையில் 23 ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் கடந்த 02.09.2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து இன்று 04.09.2021 நெதர்லாந்தின் ஊடாக பயணித்து பெல்சியம் நாட்டின் எல்லையினை அண்மித்துக்கொண்டு இருக்கின்றது.


ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு! Top News
[Friday 2021-09-03 20:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 03-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் தொகுதித் தலைவர்-செயலாளர்களும் பங்கேற்றனர்.


தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவுவிழா: நெற்றெற்றால் - 28.8.2021! Top News
[Monday 2021-08-30 20:00]

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முத்தகவை (30) நிறைவு விழா கொரேனா பெருந்தொற்றுக் கரணியமாக ஏற்பட்ட இடையூறின் விளைவாகக் கடந்த ஆண்டிலே நிறைவுறாத மத்திய மாநிலத்துக்கான விழா 28.08.2021அன்று காலை 09:00 – 14:30 வரை பகுதி ஒன்று மற்றும் 15:00 – 21:00 மணிவரை பகுதி இரண்டாகத் திட்டமிடப்பட்டு நெற்றெற்றால் அரங்கிலே 9:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.


தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பம் : பிரித்தானியா (02.09.2021) - ஐக்கிய நாடுகள் அவை சுவிசு! Top News
[Sunday 2021-08-29 18:00]

சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தியபடி எதிர்வரும் 02.09.2021 அன்று பிரித்தானியாவின் பிரதமர் இல்லத்தில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பித்து 20.09.2021 அன்று ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்) நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஒருமித்த குரலாக தமிழர்களின் வேணவாவினை பறைசாற்ற இருக்கின்றது.


யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்! Top News
[Sunday 2021-08-15 22:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.


ஆறாத ரணங்கள்: செஞ்சோலைப் படுகொலை - நிலவன்! Top News
[Saturday 2021-08-14 20:00]

இனப்படுகொலை யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச அரசினால் தமிழர் தாயக நிலப்பரப்பில் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், பாடசாலைகள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த சிறுவர்கள், பொது மக்களை ஈவிரக்கம் இன்றி இலக்குவைத்து, விமானத் தாக்குதல்களினாலும், கிளைமோர்த் தாக்குதல்களின் மூலமும், தரை மற்றும் கடல்வழித் தாக்குதல்களினாலும் பெருமளவான சிறுவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். வன்னியில் செஞ்சோலைச் சிறுவர் காப்பகம் மீது சிங்கள விமானப்படையினர் வீசிய குண்டுகளால் கொத்துக் கொத்தாக மாணவர்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டனர். இலங்கை விமானப்படைகள் தமிழர் தாயகத்தின் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் எண்ணுக்கணக்கற்றவை.


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பொதுக் குழாய்க் கிணறு திறந்து வைப்பு! Top News
[Friday 2021-08-13 18:00]

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR)பணிப்பாளரும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் உப தலைவருமான திரு.விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பூமணி அம்மா அறக்கட்டளையினரால் குடிநீருக்கான குழாய் பொதுக் கிணறு திறந்து வைக்கப்பட்டது.


உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது! Top News
[Wednesday 2021-08-11 20:00]

08/11/2021 இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால், உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கும் மற்றும் இல்லத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் முதலாம் கட்ட covid-19 தடுப்பூசி போடப்பட்டது.


யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா! Top News
[Tuesday 2021-07-27 06:00]

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவு விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம், சுல்ஸ்பாக் தமிழாலயம், கொம்பூர்க் தமிழாலயம் ஆகிய நான்கு தமிழாலயங்களும் தமது 30ஆவது அகவை நிறைவு விழாவினையும் கொன்ஸ் தமிழாலயம் தனது 15ஆவது அகவை நிறைவு விழாவினையும் ஒரே மேடையில் நடாத்திய காட்சி அவர்களின் ஒற்றுமையின் பலத்தைப் பறைசாற்றி நின்றது.


1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் - யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள்! Top News
[Monday 2021-07-26 16:00]

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.


மலையகத்தில் புளொட் பிரித்தானிய கிளை கொவிட்-19 நிவாரண உதவி! Top News
[Saturday 2021-07-24 06:00]

மலையகத்தில் கொவிட்19 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் பிரித்தானிய கிளையினரின் நிதியுதவியில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் ஊடாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி! Top News
[Tuesday 2021-07-20 06:00]

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.


உலர் உணவு பொருட்கள் மற்றும் 350 பேருக்கு சமைத்த உணவு பார்சல்களும் வழங்கி வைப்பு! Top News
[Tuesday 2021-07-20 06:00]

நெடுந்தீவில் 28 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் 350 பேருக்கு சமைத்த உணவு பார்சல்களும் வழங்கி வைப்பு. தீவகம் நெடுந்தீவில் உதவி வழங்குவதற்காக,


மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி- 2021 யேர்மனியின் தென், தென்மேற்கு மாநிலங்கள்! Top News
[Tuesday 2021-07-13 08:00]

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் உப அமைப்பான தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் தமிழாலய மாணவர்களையும் அதனூடாக அந்த நகரத்தில் உள்ள வீரர்களையும் இணைத்து வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கொரோனா விசக்கிரிமியின் பரவல் காரணமாக சென்ற வருடம் தடைப்பட்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமே.


தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 - யேர்மனி! Top News
[Tuesday 2021-07-06 21:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 இன் முதல் நிகழ்வு 03.07.2021 அன்று மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம் கரணியமாக இம்முறை தென் மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள கணிசமான தமிழாலயங்களின் பங்கேற்புடன் 9:00 மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன.


வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவை மற்றும் ஆலயங்களின் இடர்காலப பணி! Top News
[Friday 2021-06-18 21:00]

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொரோணா இடர்காலத்தே வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவை மற்றும் வவுனியா வவுனியா வைரவ புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம் நெளுக்குளம் முருகன் கோவில் கோவில்குளம் விஷ்ணு கோவில் ஆகிய ஆலயங்கள் வவுனியாவில் பல்வேறு கிராமங்களை தேடி சென்று மக்களுக்கான உலர் உணவு சேவைகளை வழங்குகின்றது.


யேர்மன் டுசில்டோப் நகரில் இடம்பெற்ற மாணவர் எழுச்சிநாள் - 2021! Top News
[Tuesday 2021-06-08 20:00]

சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட அடக்குமுறைக்கொதிராகவும் தரப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து தமிழ் மாணவர்களினதும் இளையோர்களினதும் தாயகச்சிந்தனைக்கான வழிகாட்டியாக இருந்த பொன்.சிவகுமாரன் அவர்களின் 47வது நினைவு நாள் இன்று டுசில்டோப் நகரில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது.


எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்! Top News Top News
[Thursday 2021-05-27 20:00]

தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, 'சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்' , 'இந்தியப் பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்', 'தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்' ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.


தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
[Thursday 2021-05-27 20:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா பரவல் காரணமாக அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றில் பணிபுரிந்த இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் வருமானமின்றித் தவித்து வருவதும், தனியார் பள்ளிகள் முழுவதுமாகக் கைவிட்ட நிலையில் தமிழக அரசும் அவர்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் மிகுந்த வேதனையைத் தருகிறது.


தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்களுக்கு துணை நிற்கும் ஈஷா! Top News
[Sunday 2021-05-23 19:00]

சென்னை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி போன்றவற்றை ஈஷா வழங்கி வருகிறது. கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த சவாலான சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க ஈஷா முடிவு செய்தது.


மலேசியாவில் கடல் பகுதியில் வெளிநாட்டினர் கைது!
[Friday 2021-05-21 21:00]

மலேசியாவின் Labua கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மேற்கொண்ட பிலிப்பைன்சை சேர்ந்த 16 குடியேறிகளை மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கைது செய்துள்ளது. Ops Pagar எனும் நடவடிக்கையின் கீழ் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் எவ்வித முறையான பயண ஆவணங்களும் இல்லை என சோதனையில் தெரிய வந்துள்ளது.


யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் -2021! Top News
[Thursday 2021-05-20 19:00]

18. 5.2021 செவ்வாய்க்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் இலங்கை அரசினால் தமிழீழ மக்களின் மீது நடாத்தப்பட்ட 2009 மே 18 தமிழின அழிப்பின் உச்ச நாள் நினைவு கூரப்பட்டது. உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சத்தின் உச்சக்கட்டத்திலும் யேர்மனி ஸ்ருட்காட் நகரத்திலும் அதன் அயல் நகரங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து எம் மக்களுக்கு நிகழ்ந்த இனவழிப்பின் உச்சத்தை உலகத்திற்கு எடுத்தியம்பினர்.


முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது! Top News
[Thursday 2021-05-20 19:00]

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் மாநில அவை(Landtag) முன்றலில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்விலே பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சிங்கள பௌத்த பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும்,தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களிற்கும் சுடர்வணக்கம் மலர்வணக்கம் செய்தனர்.


தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் - மெல்பேர்ன், ஒஸ்ரேலியா - மே 18- 2021! Top News
[Thursday 2021-05-20 19:00]

முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தலும் தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் 18-05-2021 செவ்வாய்க்கிழமையன்று ஒஸ்ரேலியா மெல்பேர்ண்நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. வன்ரெனா கங்கேரியன் சமூகநிலையமண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் செல்வன் பவித்திரன் சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாதப்படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்கள் நினைவாக முதன்மைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா