Untitled Document
November 7, 2026 [GMT]
 
தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் ஐரோப்பிய பாராளுமன்று முன் கவனயீர்ப்பு - 18.05.2021! Top News
[Thursday 2021-05-20 19:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2021 செவ்வாய்க் கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்று முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் ஆர்மேனிய மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு எங்கள் கோரிக்கைக்கு வலுச்சேர்த்து இருந்தனர்.


மே 18-ல் கவனத்தைப்பெற்ற ஐ.நா பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் பேருரை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Thursday 2021-05-20 19:00]

தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதியின் அடமா டியங்கின் முள்ளிவாய்க்கால் பேருரை பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. செனகல் நாட்டைச் சேர்ந்தவரான சட்டநிபுணர் அடமா டியங்க், 2012ம் ஆண்டுஐ. நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீன் மூனினால் இனப்படுகொலை களைத் தடுப்பதற்கான விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தவர்.


வலி கிழக்கு பிரதேச சபையில் 12 நிபுட அகவணக்கத்துடன் உணர்வுபூர்வ அஞ்சலி! Top News
[Wednesday 2021-05-19 20:00]

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை ஈகைச் சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றன. சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அச் சமயத்தில் பிரசன்னமாகியிருந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அனுஸ்டிக்கப்பட்டது.


யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற மே 18 , 2021 வணக்க நிகழ்வு! Top News
[Wednesday 2021-05-19 20:00]

கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள். வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. பன்னிரெண்டு ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம். எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம். கொத்துக் கொத்தாய் குண்டுகள், செத்து செத்து விழுந்தனர் எம் சொந்தங்கள்.


யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி! Top News
[Monday 2021-05-17 21:00]

தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள Friedrichsplatz இல் இனவழிப்பின் சாட்சிகளாய் விளங்கும் ஆவணப்படங்களைக் காட்சிப்படுத்தியதோடு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.


யேர்மன் தலைநகர் பேர்லினில் தமிழின அழிப்பை பறைசாற்றும் அப்பிள் மரம்! Top News
[Monday 2021-05-17 21:00]

முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பில் மரம் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டுகள் போன்று இம்முறையும் பேர்லின் வாழ் தமிழ் உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள்.


முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு தினம் 18 மே 2021! Top News
[Thursday 2021-05-13 21:00]

பிரித்தானிய தமிழர் பேரவை (பி.த.பே) முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை உலகெங்கும் பரந்துள்ள சக புலம் பெயர் தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து இணையவழி ஊடாக 18 மே 2021 அன்று நடாத்துகிறது. உலக தலைவர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.


யேர்மனி ஒபகெளசனில் நடைபெற்ற மே1 உலகத் தொழிலாளர் நாள் நிகழ்வு! Top News
[Monday 2021-05-03 21:00]

உலகத் தொழிலாளர் நாளான மே1ல் யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தற்போது நிலவும் கொறோனா பேரிடர்கால நெருக்கடிகள் இருக்கும் போதிலும், சுகாதார நடைமுறை ஒழுங்கினைப் பேணியவாறு, நிகழ்வுகள் யாவும் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டன. யேர்மனியின் ஒபகெளசன் நகரில் நடைபெற்ற மே நாள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் மற்றும் பேரணியில் தாயக புலம்பெயர் உறவுகள், இடதுசாரிக் கட்சி, இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.


ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டின் அவமானச் சின்னம்! ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்பட வேண்டும்! - மே பதினேழு இயக்கம்! Top News
[Tuesday 2021-04-27 21:00]

கொரானா இரண்டாம் அலையில் வடஇந்தியாவில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை காரணம்காட்டி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சியை வேதாந்தா நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக இன்று (26-04-2021) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு தற்காலிகமாக ஆக்ஸிஜன் உற்பத்திக்கும் மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அங்கீகாரம் பெற்ற ஒரு சில கட்சிகளை மட்டும் அழைத்துப் பேசப்பட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவினை மே பதினேழு இயக்கம் முற்றிலுமாக நிராகரிக்கிறது.


பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம்! Top News Top News
[Saturday 2021-04-24 20:00]

தடை நீக்கத்திற்கான நடைப்பயணம் " WALK FOR LIFT THE BAN" எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக வரையிலான W2W ( wales to westminster ) மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (23-04-2021) தொடங்கியுள்ளது.


விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம்! Top News
[Thursday 2021-04-22 23:00]

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும் அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.


மத்தியரசின் தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்குகளை தாக்கல்! Top News
[Monday 2021-04-19 21:00]

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.


ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் - அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல். Top News
[Saturday 2021-04-17 07:00]

அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினருமாகிய ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய ராம்சி கிளர்க்கின் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை 'வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' என்று அமெரிக்க அரசு அறிவித்த போது, சட்டத்தரணி என்ற முறையில் ராம்சி கிளர்க் அவர்கள் அதனை எதிர்த்து விடுதலைப் புலிகள் சார்பில் வழக்காடியிருந்தவர்.


பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு - யேர்மன்! Top News
[Sunday 2021-04-11 08:00]

மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை ( Landtag )முன்றலில் நேற்றயதினம் 10.04.2021 நினைவு நிகழ்வு நடபெற்றது. நிகழ்வில், பொது ஈகைச்சுடரினை யேர்மன் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பங்குத்தந்தை நிரூபன் அவர்கள் ஏற்றிவைத்தார். முதன்மைச் சுடரினை பங்குத்தந்தை அல்பேர்ட் கோலன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து பேராயர் கலாநிதி இராயப்பு யோசேப் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மக்கள் சுடர், மற்றும் மலர்களால் வணக்கம் செலுத்தினர்.


நாடுகடத்துவதற்கு பதிலாக தங்குவதற்கான உரிமை! Top News
[Sunday 2021-04-11 08:00]

அகதிகள் உரிமைக்கான அமைப்பு முன்னெடுத்த “நாடுகடத்துவதற்கு பதிலாக தங்குவதற்கான உரிமை” என்ற பொருள்பட்ட போராட்டத்தில் பல்லின மக்களோடு இணைந்து, புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசிக்கும் தமிழீழத் தமிழர்களும் பங்கெடுத்து தமது பக்க நியாயத்தையும் கோரிக்கைகளையும் ஜேர்மனிய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வானது நேற்று மாலை ஜேர்மனிய நேரம் 16.00 மணிக்கு பாடன்வூட்டன்பேர்க் மாநிலத்தின் நகரங்களான ஸ்ருட்காட் மற்றும் பிரைபோக் ஆகிய நகர மையங்களில் கொரோனா பெருந்தொற்றுத் தாக்கத்தின் மத்தியிலும் நோய்த்தாக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றுள்ளது.


ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிப்பு, நிச்சயமற்ற நிலையில் ஈராக்கிய குடும்பம்!
[Saturday 2021-04-10 22:00]

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற மேல்முறையீடும் தோல்வியில் முடிந்துள்ளது. ஈராக்கிய அகதியான Fares Al Kilaby ஆஸ்திரேலியாவில் கடந்த 2013ம் ஆண்டு படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார். தனது தாய்நிலத்தை விட்டு மிகவும் மோசமான வன்முறை நிகழ்ந்த காலத்தில் அதிலும் ஐ.எஸ். வளர்ந்து வந்த காலத்தில் ஈராக்கிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.


இலங்கையிலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது! Top News
[Saturday 2021-04-10 20:00]

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு 'மூன்று சக்கர' வாகனங்களில் வந்தவர்களை சோதனையிட்டதில் அவர்கள் வெளிநாடு செல்லும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததாக இலங்கை கடற்படையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யேர்மன் தலைநகரில் நடைபெற்ற முன்னாள் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வணக்க நிகழ்வு! Top News
[Friday 2021-04-09 20:00]

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்த ஆயர் இராயப்பு அவர்களின் வணக்க நிகழ்வு நேற்றைய தினம் உணர்வுபூர்வமாக பேர்லின் நகரில் நடைபெற்றது. அதியுயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகையின் திருவுருவப் படத்திற்கு பேர்லின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பொறுப்பாளர் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு , தொடர்ந்து மக்களால் மலர் தூவி சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


ஸ்காபரோவில் தடுப்பூசி மையம்! Top News
[Friday 2021-04-09 20:00]

ஸ்காபரோவில் அதிக நோய்த்தொற்று ஆபாயத்தை எதிர்கொண்டுள்ள பகுதியில் மிகவும் பயனுள்ளதும் வெற்றிகரமானதுமான உடனடி தடுப்பூசி மையத்தினை அமைத்துள்ள ஸ்கார்பாரோ சுகாதார கட்டமைப்புக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அதன் சுகாதார நிபுணர்களுக்கும் எமது நன்றிகள். அத்துடன் தமிழ் மக்களுக்காக இந்த உடனடி சிகிச்சையை நடத்தும் ஸ்கார்பாரோ கொன்வென்ஷன் நிலையத்துக்கும் எமது பாராட்டுகள்.


உறவுச்சோலை 4ஆம் ஆண்டு நிறைவு விழா! Top News
[Monday 2021-04-05 17:00]

உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகம் எனும் எமது தொண்டு நிறுவனம், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என இலங்கையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டு 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம் இந்த நான்கு வருடத்தில் திருமணம், வாழ்வாதாரம் , சுயதொழில், வாய்ப்பு, கல்வி , மருத்துவம் என பல உதவித்திட்டங்களை செய்து முடித்திருக்கின்றது.


ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக டுசில்டோர்ப்பிலும் ஆர்ப்பாட்டம்! Top News
[Wednesday 2021-03-31 00:00]

யேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக யேர்மனியில் வாழும் தமிழ்மக்களை ஒன்றுதிரட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்களை நடாத்தி யேர்மனிய அரசிடம் நாடுகடத்தும் முடிவினைப் பரிசீலிக்கும்படி தமிழ் இளையோர் அமைப்பினரும் , ஈழத்தமிழ் மக்களவையினரும், தமிழ்ப் பெண்கள் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஈழத் தமிழ் உறவுகள் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக பேர்லினில் உள்ள உள்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு! Top News
[Tuesday 2021-03-30 23:00]

யேர்மனியில் ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் யேர்மனியின் தலைநகர் பேர்லினில் உள்ள உள்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் மற்றும் பல்லின மக்கள் கலந்துகொண்டு தமிழர்களை நாடுகடத்த வேண்டாம் என கோசங்கள் எழுப்பினர்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 1500 நாட்களை எட்டியது! Top News
[Monday 2021-03-29 22:00]

13 ஆவது திருத்தம் 5% பிரச்சினையை மடடும் தீர்க்க முடியும், ஆனால் 13 வது திருத்தம் தமிழர்களை சிங்களவர்களால் மேலும் பாதிக்கச் செய்யும். எங்களைப் பொருத்தவரை, இரண்டு மொழிகள் இருக்கும்போது, சமஷ்டி ஒரு நிரந்திர தீர்வாக இருக்க முடியாது . தமிழ் இனப்படுகொலையைத் தவிர்க்க, சமஷ்டிசிக்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வு நமக்குத் தேவை. இது கனேடிய மாதிரியான con -Fedral அல்லது பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான தமிழ் தாயகம் மாதிரியாக இருக்கலாம்.


யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021! Top News
[Monday 2021-03-29 16:00]

யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக இன்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம் போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக தமிழ்மக்களால் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது. கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்தபடி இருநூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கோசங்களை எழுப்பி தங்கள் வலியினை வெளிப்படுத்தினர்.


பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆயிரம் கண்ணாடி வழங்கும் திட்டம்! Top News
[Saturday 2021-03-27 22:00]

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆயிரம் கண்ணாடி வழங்கும் திட்டத்தின் நான்காவது கட்டமாக 25/3/2021 வியாழக்கிழமை தலைமன்னாரில் கண் பரிசோதித்து கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே இந்தத் திட்டத்தின்படி முதல்தடவையாக வேலணையில் 200 கண்ணாடிகளும், இரண்டாவது கட்டமாக கிளிநொச்சி உருத்திரபுரத்தில் 200 கண்ணாடிகளும், மூன்றாவது கட்டமாக பூமணி அம்மாவின் சொந்த கிராமமான சரவணையில் 200 கண்ணாடிகளும் வழங்கப்பட்டிருந்தன. நான்காவது கட்டமாக இன்று 250 கண்ணாடிகள் மூவின மக்களுக்கும் வழங்கப்பட்டது.


விபரம் கோரிய இராணுவத்தை எச்சரிக்கை செய்து அனுப்பிய தவிசாளர் நிரோஷ்!
[Friday 2021-03-26 23:00]

நிலாவரையில் வைத்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷின் விபரங்களைக்கோரிய இராணுவத்தினை அவர் எச்சரிக்கை செய்து அனுப்பினார். இன்று வெள்ளிக்கிழமை நிலாவரை பகுதியில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்ட முயற்சித்தனர்.


அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவு! Top News
[Friday 2021-03-26 23:00]

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று (மார்ச் 26) தங்களின் பேராதரவை வெளிப்படுத்தினர். அழிந்து வரும் தமிழக கோவில்களை பாதுகாக்கும் விதமாக கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். அவர் கோவில்களின் அவல நிலையை ஆதாரத்துடன் எடுத்து கூறும் விதமாக நம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிதைவுற்று கேட்பாரற்று கிடக்கும் கோவில்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் பதிவேற்றி வருகிறார்.


கனடாவில் பேராதரவுடன் அன்றும் இன்றும் என்றுமே தொடரும் மனித நேய சேவை! Top News
[Thursday 2021-03-25 22:00]

மின்னல் செந்தில் குமரன் பாடகனாகஇ ஈழத்தில் மனிதகுல சேவகனாக தொடர்ச்சியாக பல தசாப்தங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவரின் முயற்சினாலும் செயலாலும் தாயகத்தில் சாவின் விளிம்பில் இருந்து மீண்டு மறுபிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருப்போர் பலர். இப்படிப்பட்ட செயல் திறன் கொண்டவரை முடக்க ஒரு சில புல்லுருவிகள் முயற்சித்தாலும் எம் மக்கள் இவரை சரியாக அடையாளம் கண்டு கொண்டு இவரின் நிவாரண அமைப்பால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள்.


சொந்த மண்ணின் கதையை சொல்வேன் - பாடல்! Top News
[Wednesday 2021-03-24 22:00]

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! யாழ் வடமராட்சி கோவிற்கடவை ஆலயத் தேர் உற்சவத்தினை முன்னிட்டு "சொந்த மண்" பாடல் இன்று வெளியாகின்றது! குரல்: ஆருதி சூரியகுமார் | இசை: உதயன் விக்டர் Udayan Victor | வரிகள் : வசீகரன் | தயாரிப்பு : மாதினி சூரியகுமார் Mathiny Suriyakumar


சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டதேயன்றி, தமிழர்களின் நீதிக்கானதல்ல தீர்மான வரைவு: பிரதமர் விஉருத்திரகுமாரன்! Top News
[Tuesday 2021-03-16 08:00]

சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவ அவர் தெரிவித்துள்ளார்.

Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா