Untitled Document
November 7, 2026 [GMT]
 
லண்டனில் நடைபெற்று வரும் உணவுதவிர்ப்பு போராட்டதற்கு வலுச்சேர்க்க ஒன்றுதிரண்ட பிரித்தானிய தமிழர்கள்! Top News
[Monday 2021-03-15 16:00]

இன்றைய தினம் லண்டனில் ஐ நா மனிதவுரிமை சபையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க கூடிய பிரேரணைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் , அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் ஒரு மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெற்றது.


அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் போராட்டங்கள்! Top News
[Monday 2021-03-15 08:00]

அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் யேர்மன் தலைநகர் பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும்.


அரசியலிலும் பெண்கள் அதிகாரமிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் – சீமான் மகளிர் நாள் வாழ்த்து!
[Tuesday 2021-03-09 08:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகில் மானுடகுலம் தழைக்க உயிரும், உடலும், உருவமும் கொடுத்து நம்மையெல்லாம் உருவாக்குபவர்கள் பெண்கள்! பூமியில் பிறந்தநாள் முதல் தன் குருதியையே தாய்ப்பாலக்கி உணவளித்து நமையெல்லாம் நலமும், வளமும் பெறச்செய்து வளர்த்தெடுத்தவர்களும் பெண்கள்! தன்னலம் சிறிதுமின்றி, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, பெண்கள் செய்யும் அர்ப்பணிப்புமிக்க ஈகம் என்பது எதுவொன்றினாலும் ஈடுசெய்ய முடியாதது. அதனால்தான் ‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் கவிமணி தேசிய விநாயகம்.


மகளிர் தினத்தை முன்னிட்டு Germany Düsseldorf நகரத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலம்! Top News
[Sunday 2021-03-07 07:00]

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றுGermany Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இதில் பெண்கள் மட்டுமல்லாமல் பல ஆண்களும் பங்கெடுத்தனர். DGB Haus ற்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஊர்வலத்தின் தொடக்கத்தில் குர்திஸ் பெண்கள் சார்பாக ஒருவரும் தமிழ்ப்பெண்கள் சார்பாக ஒருவரும் உரையை ஆற்றி ஊர்வலத்தை தொடக்கி வைத்தனர்.


பேர்லினில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினம்! Top News
[Sunday 2021-03-07 07:00]

பன்னாட்டு பெண்கள் மத்தியில் ஈழத்து பெண்களின் வாழ்வுக்காக நீதி கோரல் -பேர்லினில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினம். மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான சமத்துவமும், அங்கீகாரமும் அவர்களுக்கு மட்டுமன்றி மொத்த மானுடத்திற்கே நன்மை பயக்கும் என்று சான்று பகரும் நாளே பன்னாட்டு பெண்கள் தினம்.


ஜெனிவாவை புரிந்துகொள்ளாத தமிழ் கட்சிகள் - சட்ட ஏற்பாடுகளும் இல்லை! Top News Top News
[Saturday 2021-03-06 08:00]

ஜெனிவாவை இன்னமும் தமிழ் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லையென தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ம.பொஸ்கோ தெரிவித்துள்ளார்.எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டமானது நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த வண்ணம் உள்ளது! Top News
[Sunday 2021-02-28 21:00]

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டமானது தற்பொழுது நள்ளிரவு தாண்டியும் சுழற்சி முறையில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பல அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் இளையோர் அமைப்புகள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலரும் வந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்! Top News
[Sunday 2021-02-28 21:00]

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நாம் போராடக் கடமைப்பட்டிருக்கின்றோம். 46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் பேரெழுச்சியோடு அறவழிப்போராட்டங்கள் தமிழர்களின் இலக்கு நோக்கி பலமுனைகளில் நகர்கின்றன.


27.2.2021 யேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்! Top News
[Sunday 2021-02-28 08:00]

ஐ.நாடுகள் சபையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான பரிந்துரையினை உறுப்பு நாடுகள் செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து யேர்மனியில் பரவலாக பல மாநிலங்களில் தொடர்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன.


யேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்! Top News
[Saturday 2021-02-27 21:00]

Germany Bonn நகரில் அபிவிருத்தி அமைச்சிற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மகஜர் கையளிப்பும். மத்திய மாநிலத்திலிருந்து தமிழ்மக்கள் ஒன்றுகூடி தமிழீழத்திற்கான நீதி கோரி தங்களது கோசங்களை எழுப்பியும் யேர்மன் மொழியில் உரைகளை ஆற்றியும் , பதாதைகளை தாங்கியும் தங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக்கூறியிருந்தனர்.


ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்! Top News
[Saturday 2021-02-27 21:00]

6ம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம். 2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழீழ மண் மீட்க அறவழிப்போராட்டம் பல வழிமுறைகளில் தொடர்கின்றன.


துபாயில் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக உலக சாதனை நிகழ்ச்சி! Top News
[Saturday 2021-02-27 09:00]

துபாயில் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கடந்த 22.02.2021 சனிக்கிழமை அன்று இனணய வழியாக, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும், அசிஸ்ட் வேர்ல்டு ரிக்காட்ஸ்ம் இணைந்து உலக சாதனை நிகழ்வை நடத்தியது.


"நீங்கள் எங்களுக்குத் துணையாக இருங்கள்! நாங்கள் உங்களுக்கு உயிராக இருப்போம்!" - சீமான் நெகிழ்ச்சி! Top News Top News
[Monday 2021-02-22 00:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் 18வது மாநில மாநாடு 20.02.2021 அன்று தென்காசி மாவட்டம், குற்றாலம் காசிமேஜர்புரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.


யாழில் நடைபெற்ற உலக தாய்மொழி தின நிகழ்வு! Top News
[Monday 2021-02-22 00:00]

‘இழப்பே இனி எம் பலமாய்’ எனும் தொனிப்பொருளில் உலக தாய்மொழி தின நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் தாய்மொழி தின நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றன.


13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது! Top News
[Sunday 2021-02-21 08:00]

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை வந்தடைந்தது. இன்று 20.02.2021 காலை தமிழீழ விடுதலைக்காக தம்மை அற்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் Swiss வாழ் தமிழ்மக்களின் பேரெழுச்சியுடன் இன்று Lausanne மாநகரில் நிறைவு பெற்றது. தமிழீழ விடுதலை எழுச்சியோடு எம் மக்கள் குமுகம் திரண்டு எழுந்து வரலாற்றுக்கடமையாற்ற தம்மைத்தாமே தயார் செய்கின்ற தருணம் இது.


11ம் நாளாக (18.02.2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டின் Basel மாநகரை வந்தடைந்தது! Top News
[Saturday 2021-02-20 07:00]

“தமிழீழத் தாகம் தணியாது எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது” என்ற உணர்வுபூர்வமான வரிகளைப் போன்று எந்த இடர்வரினும் எதற்கும் சோர்வடையாமல் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை கேட்டு எமது ஈருருளிப்பயணம் பல தடைகளைத் தாண்டி தொடர்கிறது. Colmar , France மாநகரில் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமான அகவணக்கம் செலுத்தப்பட்டு எமது தாரக மந்திரத்துடன் ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.


10ம் நாளாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 18.02.2021 சுவிஸ் நாட்டிற்குள் நுழையவிருக்கின்றது! Top News
[Thursday 2021-02-18 21:00]

இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது” என்னும் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு இணங்க எம் தமிழ் மக்களினால் தமிழீழ மீட்புக்காக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை காலத்தின் தேவைக்கேற்ப வடிவங்கள் மாற்றம் பெற்று இலட்சியத்தில் உறுதியாக பயணிக்கின்றது. அந்த வகையிலே 22ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 17.02.2021 Sélestat,Colmar மற்றும் Mulhouse மாநகரசபையில் எமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டு மனுக்களும் கையளிக்கப்பட்டது.


9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது! Top News
[Wednesday 2021-02-17 21:00]

நேற்று 16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தாயகத்திற்காக தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்கான அகவணக்கத்தோடு ஆரம்பமானது. அகவணக்கத்தில் Phalsbourg மாநகரசபை முதல்வரும் கலந்து கொண்டார். பின்னர் எமது கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மனித நேய ஈருருளிப்பயணம் Savren மாநகரசபையினை நோக்கி காவற்துறையின் வழித்துணையுடன் விரைந்தது.


6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் பிரான்ஸ் நாட்டினை வந்தடைந்தது! Top News
[Monday 2021-02-15 08:00]

கடந்த 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.


5 ம் நாளாக 12.02.2021 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது! Top News
[Saturday 2021-02-13 19:00]

21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்திவிட்டு சர்வதேசம் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தினூடாக சிங்களப்பேரினவாத அரசு தான் இழைத்த இனவழிப்பின் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துவிடலாம் என எண்ணுகின்றது.


இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கனேடிய அரசிடம் கோரும் கனேடியத் தமிழ் சமூகத்தின் முன்னெடுப்பு! Top News
[Saturday 2021-02-13 07:00]

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதனால் தமிழ் மக்கள் சார்ந்து குரல் கொடுப்பதற்கான தார்மீகக் கடமை கனடாவிற்கு இருக்கிறது என்பதை வலியுறுத்தியே இந்த வாகனப் பேரணி இடம்பெற இருக்கின்றது. ஐனவரி 27 அன்று வெளிவந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பரிந்துரைகளை இணைத்தலைமை நாடுகள் ஊடாகத் தீர்மானம் ஒன்றில் வரைவாக கொண்டுவருமாறு கனேடிய அரசை கனேடியத் தமிழர் சமூகம் வலியுறுத்தி நிற்கின்றது.


பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்! Top News
[Thursday 2021-02-11 09:00]

3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும்பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து புருஸ்ஸல்ஸ் மாநகரை நேற்று 10.02.2021 வந்தடைந்தது.


தொடர்ச்சியாக 09.02.2021 அன்று 2-ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது! Top News
[Wednesday 2021-02-10 21:00]

08.02.2021 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இருந்து ஆரம்பமான தமிழீழ விடுதலை போராட்டத்தின் இன்னோர் வடிவமாக இருக்கக்கூடிய மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்து மற்றும் பெல்சியம் நாட்டின் பொறுப்பாளர்களின் வாழிட நாட்டின் தேசியக்கொடிகள் கைமாற்றி பெல்சியம் நாட்டினை மனித நேய ஈருருளிப்பயணம் வந்தடைந்தது. மற்றும் வழி நெடுகிலும் பனிப்பொழிவு ,குளிர் காற்றின் மத்தியிலும் மாவீரர்கள் சுமந்த இலக்கினை நெஞ்சில் சுமந்து இலக்கு நோக்கி விரைந்தது.


பொத்துவில் முதல் பொலிகண்டி (P2P) அணிவகுப்புக்கு ஆதரவாக கனடாவின் டொரொண்டோ மற்றும் மொன்ரியல் ஆகிய இடங்களில் நடந்த வாகன ஆர்ப்பாட்ட பேரணி! Top News
[Monday 2021-02-08 21:00]

எஜக்ஸ், மார்க்கம்/ஸ்கார்பாரோ, பிராம்ப்டன், மற்றும் மிசிசாகா ஆகிய நகரங்களில் இருந்து ஒவ்வொரு நகரத்திலிருந்தும் வாகனங்கள், மதியம் 12 மணிக்கு எதிர்ப்பு பேரணிகளைத் தொடங்கி, பிற்பகல் 3.30 மணிக்கு குயின்ஸ் பூங்காவில் இணைந்தன. 24 மணி நேர குறுகிய அறிவிப்புடன், டொராண்டோ பகுதி மற்றும் மொன்ரியல் பகுதியில் நடந்த இந்த வாகன பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.


யாழ்.பல்கலைக்கழக மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு! Top News
[Sunday 2021-02-07 11:00]

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு! Top News
[Wednesday 2021-01-27 21:00]

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.


பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ஈழத் தமிழ் மாணவி: அதிபர் மக்ரோன் கூறிய தகவல்!
[Monday 2021-01-25 18:00]

அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிஸ் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவ்வாண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களை களையுங்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.” பல்கலைக்கழக மாணவர்களை நேற்று நேரில் சந்தித்த சமயம் அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு கூறி அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றார் என பாரிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.


எம்மக்களுக்காக பொங்கப்போகும் மனிதம்! Top News
[Monday 2021-01-25 06:00]

எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 30ஆம் திகதி டொரோண்டோ கனடா நேரம்காலை 10.30 மணிக்கு (இலங்கை நேரம் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு) அருமையான ஒரு இசை நகைச்சுவை நிகழ்ச்சி முகநூல் ஊடாகவும் - வலையொளி ஊடாகவும் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிகழ்வினை பலகாலமாக தாயகமக்களுக்கு நிவாரண உதவிகளை ஒருங்கமைத்துவரும் மின்னல் செந்தில்குமரன் அவர்கள் நடத்த உள்ளார்.


'தமிழ்முரசம் வானொலி சேவை' ஊடாக வாழ்வாதாரத்துக்கு உதவி! Top News
[Monday 2021-01-25 06:00]

சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், இரண்டு மகவுகளையும் தேடிக்கண்டறியும் வவுனியா தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய திருமதி அன்னலட்சுமிக்கு, நோர்வே புலம்பெயர் வாழ் தமிழ் உணர்வாளரால் 'ஒரு இலட்சம் ரூபாய்' நிதி வாழ்வாதாரத்துக்கும், அவரது பிள்ளைகளின் கல்விக்குமாக பகிர்ந்து வழங்கப்பட்டது.


மாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல் விருது! Top News
[Sunday 2021-01-24 08:00]

அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய விருதான, கென்டக்கி கர்னல் விருதானது நெதர்லாந்து நாட்டின் மாலதீவுகளுக்கான கௌரவ துணைநிலை துணைதூதராக செயலாற்றிய தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூஸைனிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி மாகாணத்தின் 63 வது கவர்னரான ஆண்டி பெஷியர் (Andy Beshear) இதற்கான அதிகாரப்பூர்வ விருதில் கையெழுத்திட்டுள்ளார்.

Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா