Untitled Document
November 7, 2026 [GMT]
 
குர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் தோழமை! Top News
[Sunday 2021-01-24 07:00]

துருக்கியில் உள்ள குர்திஸ்தான் அரசியல் கைதிகளுக்கான விடுதலையை வலியுறுத்தி கடந்த நாட்களாக பேர்லினில் தொடர்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. துருக்கியில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்துடன் ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்த பேர்லின் மாநகரின் மத்தியில் ஒரு வாரமாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்று வந்தது.


நிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம் யார்? ஏதற்காக வெட்டுகின்றீர்கள்? தவிசாளர் நேரில் கேள்வி! Top News
[Saturday 2021-01-23 08:00]

புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்கள் சென்றமையை அடுத்து பிசுபிசுத்துள்ளது.


சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை! Top News
[Saturday 2021-01-23 08:00]

இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாட்டு அரசு நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஐயனார் ஆலயத்தை சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது சிங்களப்பேரினவாதத்தின் கொடுஞ்செயல்: சீமான் கண்டனம்! Top News
[Wednesday 2021-01-20 21:00]

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட குருந்தூர்மலை, குமுளமுனை உள்ளிட்ட தமிழர்களின் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் புராதான பௌத்த விகார்கள் இருந்ததெனக் கூறி, அதனைத் தொல்பொருள் ஆய்வு செய்ய முயலுவதாய்ப் பொய்யுரைத்து தமிழர்களின் வழிபாட்டுத்தலங்களை இராணுவத்தின் உதவியுடன் இடித்துத் தகர்க்கும் சிங்களப் பேரினவாத அரசின் கொடுஞ்செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது.


பாதிரி கிராமத்தில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா! Top News
[Sunday 2021-01-17 21:00]

வந்தவாசி. ஜன.16. பாதிரி ஊராட்சி மன்றம் மற்றும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கமும் இணைந்து தைத்திருநாள் பொங்கல் கலை இலக்கிய விழா வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள காந்தித் திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை வகித்தார். பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் வெ.அரிகிருஷ்ணன் வரவேற்றார்.


முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு தொடர்பாக தனது கவலையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்த யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர்! Top News
[Sunday 2021-01-17 21:00]

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டத்தை தொடர்ந்து யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கும் மற்றும் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , செயற்குழு அங்கத்தவர்களுக்கும்,மனிதவுரிமை அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் ஊடாகவும், தொலைபேசி உரையாடல்கள் ஊடாகவும் இவ் விடையத்தை கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.


முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு: ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்! Top News
[Wednesday 2021-01-13 21:00]

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஐ.நா (ஐக்கிய நாடுகள் அவை) முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இப் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் தமிழர் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


கனடாவில் 4000 ற்கும் அதிகமான வாகனங்களில் பேரணியாக கலந்து கொண்டு தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கெதிரான பாரிய எதிர்ப்பினை வெளியிட்டனர்! Top News
[Tuesday 2021-01-12 20:00]

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இலங்கை அரசு 08-01-2021 வெள்ளிக் கிழமையன்று அழித்ததை கண்டித்தும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்கும் முகமாகவும் இவ் வாகன எதிர்ப்பு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


யேர்மன் தலைநகரில் சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்! Top News
[Tuesday 2021-01-12 20:00]

யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இளையோர்கள் சமூக வலைத்தளங்களில் தாயக நிலைமையை வெளிக்கொண்டுவந்தார்கள்.


நாம் தமிழர் மகளிர் பாசறை கொண்டாடிய பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்த சீமான்! Top News Top News
[Tuesday 2021-01-12 20:00]

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உலகத் தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுத்த பொங்கல் விழா 12-01-2021 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்.


தாயகம் - தமிழகம் - புலம் ஒன்றுபட்ட ஒலித்த நீதிக்கான கண்டனக்குரல்கள் ! பொதுமக்கள் மகிழ்ச்சி ! Top News
[Tuesday 2021-01-12 20:00]

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழர் தாயகம் - தமிழகம் - புலம் என மூன்று தளங்களில் இருந்து ஒன்றிணைந்து நீதிக்காக குரல் எழுப்பும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளமை பொதுமக்களுக்கு நம்பிக்கையினையும் மகிழ்ச்சினையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தாயகத்தில் இடம்பெற்றிருந்த கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், இணையவழி இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு கண்டன நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுக்காக நிதி திரட்டும் தன்னார்வலர்கள் - 21 நாளில் 1950 கி.மீ சைக்கிளில் பயணம்! Top News
[Monday 2021-01-11 21:00]

சென்னையைச் சேர்ந்த திரு.ஐயப்பன் மற்றும் திரு.பலி என்ற இரண்டு தன்னார்வலர்கள் ஈஷா வித்யா பள்ளியில் கிராமப்புற ஏழை குழந்தைகள் கல்வி பயில்வதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் 21 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 24-ம் தேதி சென்னையில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய அவர்கள், திருத்தணி, வாணியம்பாடி, தர்மபுரி, கரூர், பெரம்பலூர், கடலூர், கும்பகோணம், அறந்தாங்கி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, மதுரை, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்கள் வழியாக நாளை (ஜனவரி 12) கோவை வந்தடைகின்றனர்.


தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயணம் 46 வது மனித உரிமைகள் கூட்டத்தொடரினை நோக்கி பயணிக்கின்றது! Top News
[Sunday 2021-01-10 20:00]

2009 ம் ஆண்டு எம் மண்ணில் கொத்துக்குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும் முகமாகStrasbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை, பாராளுமன்றம் முன்றலில் இருந்து Paris நாடாளுமன்றம் வரை பெரும் எழுச்சியாக தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம் 46வது உரிமைகள் கூட்டத்தொடரினை நோக்கி பயணிக்கின்றது.


புத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல்! Top News
[Sunday 2021-01-10 07:00]

மனித இனம் கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் இந்த தருணத்தில்இ இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கை தரும் வகையில் நாளை நமதே என்று முழங்கியிருக்கிறார்கள் கனடாவை சேர்ந்த செந்தில் குமரனின் மின்னல் இசை குழு.


3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப்பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது! Top News
[Thursday 2021-01-07 20:00]

தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினைநோக்கி மனித நேய ஈருருளிப்பயணம் விரைந்துகொண்டிருக்கின்றது. நேற்றைய தினம் 06.01.2021 , Bar le Duc மாநகர சபையில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என்பதனையும் அவற்றினை பிரான்சு வெளிவிவகாரத்துறை அமைச்சும் , அரச அதிபரும் வலியுறுத்த வேண்டும்என்பதனை முன்மொழிந்து முதல்வரிடம் எமது விடுதலைப்பயணத்தினை எடுத்துக்கூறி கோரிக்கைகள் அடங்கிய மனுகையளிக்கப்பட்டது.


கனேடிய தமிழ் சமூகத்தின் மீதான அச்சமே சுரேன் ராகவன் எம்.பியின் கருத்து: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Wednesday 2021-01-06 20:00]

சிங்கள தேசத்தின் அச்சத்தை சுரேன் ராகவன் எம்.பி சிறிலங்கா பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. கனடா, ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தமிழினப்படுகொலையினை மையப்படுத்திய கல்விவார சட்டமூலம் இலங்கையின் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறதென சிறிலங்காவிள் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


பிரான்சில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 2ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Strasbourg - Paris 2021! Top News
[Wednesday 2021-01-06 20:00]

04.01.2021 அன்று Strasbourg மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை , ஐரோப்பியபாராளுமன்றத்தின் முன் ஆரம்பித்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தும் மனிதநேய ஈருருளிப்பயணம் இரண்டாம் நாளாக 230Km தொலைவு கடந்து 05.01.2021 அன்று Lérouville மாநகரசபையினை வந்தடைந்தது.


தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ஸ்ராஸ்பூர்க் நகரிலிருந்து பரிஸ் நகர் வரை மனிதநேய ஈருருளிப் பயணம்! Top News Top News
[Sunday 2021-01-03 20:00]

எதிர்வரும் 46 ஆவது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க வைப்பது காலத்தின் தேவையாகும். தமிழ் இனவழிப்பிற்கான அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் நடைபெறவுள்ளது.


வவுனியாவிலிருந்து காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்கள், மார்ச் மாதத்தில் நான்கு முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்த சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் கோரி மின் அஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டது! Top News Top News
[Friday 2021-01-01 22:00]

முதலில் காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்களாகியா நாங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி , அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் தமிழர்கள் நீண்ட காலமாக நாங்கள் விரும்பியதைப் பெறும் ஆண்டாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.


தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு நம்மாழ்வாரை நினைவு கூர்ந்த விவசாயிகள்! Top News
[Thursday 2020-12-31 13:00]

இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்து மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது பாடுப்பட்டவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அவரது மறைவு தமிழகத்துக்கு ஒரு பேரிழப்பாகும். இருப்பினும், அவர் விட்டு சென்ற பணியை ஈஷா விவசாய இயக்கம் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து தீவிரமாக செயலாற்றி வருகிறது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் 2015-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மாதந்தோறும் இயற்கை விவசாய களப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.


கடும் பணியிலும் மட்டு மகளுக்காக 15 கிலோமீட்டர் ஓடிய கனடிய பெருமகன்! Top News
[Saturday 2020-12-26 10:00]

Oakville வாசியான திரு Steve Camacho என்ற கனடிய பெருமகன் மட்டு மாவட்டத்தில் உள்ள தாந்தாமலை கிராமத்தில் கடும் இதய வருத்தத்தில் உயிருக்கு போராடும் திருமதி கேதீஸ்வரி ரவிச்சந்திரன் (நான்கு பிள்ளைகளின் தாயார்) அவர்களின் இதய சத்திர சிகிச்சைக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு நத்தார் தினத்தில் 15 கிலோமீட்டர் ஓடி முடித்துள்ளார்.


தாயக சேவைகளுக்கு வாரி வழங்கும் குவாலிட்டி பேக்கரி உரிமையாளர் பிரான்சிஸ்! Top News
[Friday 2020-12-25 16:00]

டொரோண்டோ கனடாவில் தமிழர் மத்தியில் குவாலிட்டி வெதுப்பகம் தரத்துக்கும் ருசிக்கும் பிரபலம் வாய்ந்தது. அதன் உரிமையாளர்களான திரு திருமதி பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை அவர்கள் சில்லாலையை சேர்ந்தவர்கள். பலகாலமாக தாயக மக்களின் சேவைகளுக்கு தயங்காமல் வாரி வழங்கும் நல்லுள்ளம் படைத்தவர்கள்.


ஆடக் கிடைத்த வாய்பிற்காக, ஆடை கழற்றத் தயார்...??? Top News Top News
[Wednesday 2020-12-23 08:00]

"இதுவும் கடந்து போகும்… எல்லாம் மறந்துபோகும்..." என்ற ஒரு இயலாமை மரபை, தமிழர்கள் தமது நிரந்தர அடையாளங்களில் ஒன்றாகவே வரித்துக்கொண்டிருக்கிறார்களோ ? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.


தமிழீழத்தை நேசித்த ஐயா அப்துல் ஜாபர் எம்மை விட்டு பிரிந்தார்! Top News
[Wednesday 2020-12-23 08:00]

அழகு தமிழில் தனித்துவமான பாணியில் துடுப்பாட்டப் போட்டிகளை நேர்முக வர்ணனை செய்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் காலமானார். 2002 இல் வன்னி ஊடகவியலாளர் மாநாட்டுக்குச் சென்று, மாநாட்டுக்குப் பின்னான தனது அனுபவங்களை ‘அழைத்தார் பிரபாகரன்’ எனும் நூலாக்கியிருந்தார்.


உலகப் புகழ் தமிழ்ப் பேச்சாளர் முனைவர் பர்வின் சுல்தானாவின் உரை! Top News
[Tuesday 2020-12-22 22:00]

ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக முனைவர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்புரை இடம்பெறவுள்ளது. உலகப்புகழ் பெற்ற தமிழ்ப் பேச்சாளர் முனைவர் பர்வின் சுல்தானா அவர்கள், “தமிழ் என்பதே அறம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்ச்சி டிசம்பர் 27, 2020 ஆம் நாள் முப 11:00 முதல் பிப 12:30 வரை முகநூலூடாக இடம்பெறவுள்ளது.


வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்! Top News Top News
[Monday 2020-12-21 08:00]

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி - உழவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-12-2020 அன்று மாலை 04 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.


ஈஷா சார்பில் நெல்லையில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி - விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு! Top News
[Monday 2020-12-21 08:00]

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா, செட்டிக்குறிச்சி கிராமத்தில் உள்ள வேதா இயற்கை விவசாய பண்ணையில் இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (டிசம்பர் 20) அன்று சிறப்பாக நடைபெற்றது.


பிரான்சு நாடாளுமன்றம் முன் காலத்தின் தேவை கருதி நடத்தப்பட்ட கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக்கையளிப்பும்! Top News
[Sunday 2020-12-20 08:00]

ஐக்கிய நாடுகள் அவையின்46ஆவது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில், சிங்கள பேரினவாத அரசிற்குக் கால நீடிப்பு கொடுப்பதற்கான சதி வேலைகளில் விலை போன தமிழ் தரப்புக்கள் ஈடுபட்டுள்ளதை தடுத்து நிறுத்தவும் சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரான்சு நாட்டின் உதவியை கோரியும் இக்கட்டான காலகட்டத்திலும் பிரான்சு அரசின் அனுமதியுடன் 18/12/2020 அன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை ஒன்றுகூடல் நடைபெற்றது.


வளம் கொழிக்கும் கத்தார்..!
[Sunday 2020-12-20 08:00]

வெறும் 11571 பரப்பளவை கொண்ட மத்திய கிழக்கில் உள்ள மிகச்சிறிய ஒரு நாடுதான் கத்தார். சொல்லப்போனால் இலங்கையை விடவும் 5 மடங்கு சிறியது. கால் வாசி இலங்கை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இச்சிறிய நாடு இன்று உலகில் மிகச்சிறந்த ஒரு நாடாக மாற்றப்பெற்றிருக்கின்றது என்றால் நாமெல்லாம் கொஞ்சம் ஆச்சரியப்படத்தான் வேண்டும். 28.3 இலட்சம் அளவில் மக்களை கொண்ட கத்தாரில் கத்தாரிகள் எனப்படும் சொந்த நாட்டவர்கள் வெறும் 10.5% வீதத்தினரே.


எதிர்ப்பை மீறி அகதிகளை இடமாற்றிய ஆஸ்திரேலிய அரசு! Top News
[Friday 2020-12-18 08:00]

பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவுகளில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 அகதிகள் வேறு ஹோட்டலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் அகதிகள் நல ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கும் போராட்டத்துக்கும் மத்தியில் நடந்துள்ளது.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா