Untitled Document
November 7, 2026 [GMT]
 
ஸ்கந்தபுரம் சமுர்த்தி வங்கியின் கணணி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு! Top News
[Friday 2020-12-18 08:00]

ஸ்கந்தபுரம் சமுர்த்தி வங்கியின் கணணி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு (16.12.2020) அன்று நடைபெற்றது. கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி மாதுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலாளரும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக மாவட்ட பணிப்பாளருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.


சிரியா போர் முதல் ஆஸ்திரேலிய சிறை வரை: அன்று அகதி, இன்று கனடிய ராப் பாடகர்!
[Tuesday 2020-12-15 21:00]

அலி கஹர்ஸா, பத்தாண்டு முன்பு சிரியாவில் மகிழ்ச்சியாக வளர்ந்த கொண்டிருந்த குழந்தை. இன்று அவர் MC AK என்ற பெயரில் கனடிய ராப் பாடகராக அறியப்படுகிறார். இந்த இடைப்பட்ட பத்தாண்டுகளில் நடந்தது என்ன? அவர் கனடா வந்தது எப்படி? என்பதற்கு முழு முதல் காரணம் ‘சிரியாவில் ஏற்பட்ட போர் சூழல்.’


மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்!.. Top News
[Tuesday 2020-12-15 21:00]

மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தவர்கள் அனைவரும் மௌன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். கடந்த 10.12.2020 அன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலரின் உத்தியோக தங்குமிட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றிருந்தது.


சர்வதேச பிரநிதிகளின் பங்கெடுப்புடன் கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை! Top News Top News
[Sunday 2020-12-13 22:00]

கொசோவா நாட்டு துணை அதிபர் Haki Abazi, ஆர்மேனிய அரசவைத் துணைத்தவைர் Van Krikorian ஆகியோரது சிறப்புரைகளுடன் அரசவை அமர்வு சிறப்புடன் இடம்பெற்றது. தற்போது கொரோனா வைரஸ் பெருற்தொற்று காரணமாக நேரடி அரசவை அமர்வினை மேற்கொள்ள முடியாத நிலையில், இணையவழி அரசவை அமர்வாககடந்த டிசெம்பர் 5ம்,6ம் ஆகிய இருநாட்கள் இடம்பெற்றிருந்தது.மாதம் தோறும் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக கூடுகின்ற அரசவையானது, வருடத்தில் இரு தடவைகள் நேரடி அரசவை அமர்வுகளை கொண்டதாகவுள்ளது.


கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம்! Top News
[Friday 2020-12-11 21:00]

கோவிட் -19 தடுப்பூசி விநியோக பணிக்குழுவில் ஒன்பது உறுப்பினர்களை நியமிப்பதாக ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் கனடிய பாதுகாப்புப் படைத் தலைவரான ஜெனரல் ரிக் ஹில்லியர் தலைமையிலான இப்பணிக்குழு, கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம், பராமரிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு போன்ற செயற்பாடுகளை மேற்பார்வையிடும்.


தமிழர் தாயக சங்கத்தின் மனித உரிமை பிரகடன செய்தி! Top News
[Friday 2020-12-11 21:00]

சிறீலங்கா அரசு மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுக்களினால் நிகழ்த்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட உறவுகள், தமது உறவுகளுக்கு நீதி கேட்டு வவுனியாவில் 1392 நாட்கள் கடந்தும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது! Top News
[Friday 2020-12-11 08:00]

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடுசெய்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் மதிக்கப்படாத நாட்டிலிருந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தின் பின்னுள்ள அரசியல்வாதிகள் மக்களை மடையராக்க எத்தனிக்கின்றனர் - ஆர்ப்பாட்டக்காரர் முன் தவிசாளர் நிரோஷ்! Top News
[Friday 2020-12-11 07:00]

அபிவிருத்தியைத் தடுப்பது எனதோ அல்லது பிரதேச சபையினதோ நோக்கம் கிடையாது. மாறாக அபிவிருத்தியை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஒழுங்கு படுத்துவதே எமது நோக்கம். இந் நிலையில் மக்களை மடையர் ஆக்காதீர்கள். அரசியலுக்காக மலினப்படுத்தாதீர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.


இலங்கை ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து வெளியான அதிர்ச்சி பின்னணி!
[Monday 2020-12-07 17:00]

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் திகதி இலங்கையில் இருக்கும் செயின்ட் ஆன்டனி தேவாலயத்தில் முதல் தற்கொலைத் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் ஷாங்கிரி லா ஹோட்டலிலும், மூன்றாவதாக அடுத்த சில மணி நேரங்களிலே மூன்று தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன.


நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவை உணர்வெழுச்சியுடன் தொடங்கியது! Top News Top News
[Sunday 2020-12-06 13:00]

கொசோவோ, ஆர்மேனியா நாட்டு உயர்மட்டத் தலைவர்களின் சிறப்புரையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. வருடத்தில் இரு தடவைகள் நேரடி அரசவை அமர்வுகளைக் கொண்ட அரசவை அமர்வானது, கொரோனா வைரஸ் பெருற்தொற்று காரணமாக கூட முடியாத நிலையில், இணையவழி சிறப்பு அரசவை அமர்வாக இரண்டு நாட்களுக்கு இடம்பெறுகின்றது.


வாதரவத்தையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு! Top News
[Saturday 2020-12-05 19:00]

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வாதரவத்தை J/280 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பல மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அக்காச்சி எழுச்சி கிராம மக்கள் மற்றும் வாதரவத்தை, வீரவாணி பகுதிகளை சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் .


தமிழில் குடமுழுக்கு செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு, வீரத்தமிழர் முன்னணிக்குக் கிடைத்த வெற்றி!
[Friday 2020-12-04 22:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கரூர் ஆநிலையப்பர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணி தொடுத்த வழக்கில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் இனி கண்டிப்பாகத் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்டு மதுரை உயர் நீதிமன்றக்கிளை தீர்ப்பு வழங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.


கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு உதவி: ஒன்ராறியோ அரசாங்கம்! Top News
[Friday 2020-12-04 22:00]

கோவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் ஒன்ராறியோவில் வாழும் குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய கல்விக்கான மேலதிக செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் ஒன்ராறியோ அரசாங்கம் மீண்டும் மொத்தமாக 380 மில்லின் டொலர்கள் நிதியை வழங்கியுள்ளது. இன்று முதல், ஒன்ராறியோவில் வசிக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு உதவி வழங்கவென ஏற்படுத்தப்பட்டுள்ள (Support for Learners Web Page) இணையத்தளத்தினூடாக தமது விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். ஜனவரி 15, 2021 வரையும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.


இடரில் மக்களின் முறைப்பாடுகளுக்கு வினைத்திறனாகச் செயற்பட்டுள்ளோம் - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்! Top News
[Friday 2020-12-04 08:00]

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகளை சீர்செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை விரைவாக ஈடுபட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எம்மிடம் கிடைக்கப்பெற்ற மற்றும் அவதானிக்கப்பட்ட முறைப்பாடுகள் விடயத்தில் எமது சபை கிடைக்கின்ற வளங்களைக்கொண்டு செயற்றிறனாகப் பணியாற்றியுள்ளது.


இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் வெடித்துள்ள போராட்டம்! Top News
[Thursday 2020-12-03 17:00]

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் 8ஆவது நாளாக எட்டியது. இதனையடுத்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அரசபாளயத்தில் மாவீரர் நாள் அஞ்சலி-2020! Top News
[Monday 2020-11-30 22:00]

தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளயத்தில் மாவீரர் நாள்அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர் தமிழீழ விடுதலையை நெஞ்சில் ஏந்தி களமாடிய வீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றி புதுக்கோட்டை பாவாணன் அவர்கள் மாவீரர்களின் ஈகங்கள், வீரகளமுனைச் செய்திகள், ஈழவரலாற்றில் தமிழினத்தின் எழுச்சிகள் பற்றி விரிவான உரை ஆற்றி, மாண்ட விடுதலை வீரர்களை தமிழர்களின் நெஞ்சில் படமாகச் செதுக்கினார்.


குர்து அகதியை சிறைப்படுத்தியிருக்கும் ஆஸ்திரேலிய அரசு: தற்காப்பு கலையை சொல்லித்தரும் ஆஸ்திரேலிய சிறுவன்! Top News
[Monday 2020-11-30 22:00]

ஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள குர்து- ஈரானிய அகதியான மோஸ், Taekwondo தற்காப்பு கலையின் மூலமாக ஆஸ்திரேலிய சிறுவனான கேலமுடன் அற்புதமான நட்பைக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் Taekwondo உடையுடன் காணொலி அழைப்பின் மூலம் அகதியான மோஸ்க்கு வகுப்பெடுக்கிறார் சிறுவனான கேலம்.


வவுனியா கோவில்குளம் செபர்த்தியார் கோவில் வீதி தார் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்! Top News
[Monday 2020-11-30 08:00]

வவுனியா நகரசபைக்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தெகிலுப்பை குளம் பிரதான வீதியின் உள்ளக வீதியான செபர்த்தியார் கோவில் வீதியானது தார் வீதியாக செப்பனிடும் பணிகள் இன்று ஆரமபமாகின.


தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 - யேர்மனி ஸ்ருற்காட்! Top News
[Sunday 2020-11-29 21:00]

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 யேர்மனியில் ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுவதும் கொரோனா கிருமியின் அச்சுறுத்தலால் அவதிப்படும் நிலையில் யேர்மனியில் இத்தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் யேர்மனிய அரசினால் விடுக்கப்பட்டிருக்கும் கொரோனாச் சட்ட விதிகளுக்கு அமைவாக ஆறு இடங்களிலும் மக்கள் அணிதிரண்டு மாவீரத் தெய்வங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி தங்கள் இதய வணக்கத்தைத் செலுத்தினர்.


சிங்கப்பூரில் 10ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்! Top News
[Sunday 2020-11-29 21:00]

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்தி கொண்டாடியது.


வீடுகள் தோறும் மாவீரர் இல்லங்கள் : உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற இணைவழி மாவீரர் நாள்! Top News Top News
[Sunday 2020-11-29 08:00]

வீடுகள் தோறும் மாவீரர் நினைவுகள் நிறைந்ததான உணர்வெழுச்சியோடு, உலகத்தமிழர்களின் இணையவழி தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல புலம்பெயர் தேசங்களில் பெருந்திரளாக ஒன்றுமுடியாத சூழல் ஒருபுறமும், கொரோனாவை விட கொடியதாக தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளினை முன்னெடுக்க முடியாத சிங்கள அரச தடைகள் மறுபுறமும் காணப்பட்டிருந்தன.


ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் 2020! Top News
[Sunday 2020-11-29 08:00]

கோவிட் 19 இன் தாக்கத்தினால் பிரான்சு நாட்டின் அரச தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டு மக்கள் உள்ளிருப்பினைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த ஆபத்தான சூழலில் மக்களைப் பாதுகாக்கும் வகையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் யாவும் மக்கள் தம் வீடுகளில் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பேர்த்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020! Top News
[Sunday 2020-11-29 07:00]

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த்தில் மாவீரர் நாள் நிகழ்வு 27-11-2020 அன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கோவிட் 19 பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவித்தல்களுடன் மாவீரர் நாள் பிரதான நிகழ்வுகளை திரு. நிமலகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒலிபரப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து மாலை 07.05க்கு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.


குயின்ஸ்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020! Top News
[Sunday 2020-11-29 07:00]

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் பதிவுகள்.


மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை! Top News Top News
[Sunday 2020-11-29 07:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று சென்னை, போரூரிலுள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன மீட்சியுரை நிகழ்த்தினார்.


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மண்டியிட்டு பிரார்த்தித்தனர்! Top News
[Friday 2020-11-27 20:00]

வவுனியாவில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், அவர்களின் போராட்ட பந்தலில் மண்டியிட்டு பிரர்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.


கோவிட் - 19 விரைவுப் பரிசோதனை & கொவிட்-19 நோய்த்தொற்றினை எதிர்கொள்வதற்கென மேலதிக மருத்துவ படுக்கைகள்! Top News
[Friday 2020-11-27 20:00]

கோவிட்-19 நோய்த்தொற்று அதிகமாய் பரவும் இடங்கள், கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் விரைவான பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விரைவுப் பரிசோதனை நடவடிக்கையானது மருத்துவத்துறையின் முன்னணிக் களப் பணியாளர்களைப் பாதுகாக்க உதவுதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அங்கு வருகை தருபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையிடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றோரையும் விரைவாக பரிசோதனை செய்ய உதவும்.


வவுனியாவில் தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு! Top News
[Friday 2020-11-27 20:00]

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2020ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.


வன்னிவிளாங்குளம் - அடக்குமுறைக்குள்ளும் மாவீரர் நாளை நினைவு கூர்ந்தது தமிழினம்! Top News
[Friday 2020-11-27 20:00]

தமிழீழ மாவீரர் நாள் இன்றைய தினம் தாயகம் மற்றும் தமிழகம்/புலம்பெயர் தேசம் எங்கெனும் நினைவு கூரப்படுகின்ற வேளையில் வடக்கு கிழக்கில் இராணுவ அடக்கு முறைக்குள் தமிழ் மக்கள் தமது இல்லங்களில் நினைவேந்தல்களின் மூலம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


கார்த்திகை 26 இல், களமாடும் தாய்மார்களுக்கு உதவி! Top News
[Friday 2020-11-27 08:00]

தமிழீழம் வவுனியா மாவட்டத்தில் தொய்வுறாமல் 1378 நாட்கள் கடந்தும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இன்று 26.11.2020 வியாழன் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா