Untitled Document
November 6, 2026 [GMT]
 
மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த், கன்பரா 2020 மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்! Top News
[Tuesday 2020-11-24 07:00]

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நவம்பர் 27ம் திகதி தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றன. இந்தவகையில் ஓஸ்ரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில், ஒஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் பேர்வுட் கிழக்கு மைதானம், பேர்வுட் ஹவே, பேர்வுட் கிழக்கு (BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – 3151) எனும் இடத்தில் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணி முதல் இரவு 8மணி வரை தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.


மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை! Top News Top News
[Monday 2020-11-23 07:00]

தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஆகுதியாகிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் கையில் எடுத்துள்ளனர். பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, கனடா, ஒஸ்றேலியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே என புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர், உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரத்தினை இணைவழிமூலம் தொடங்கினர்.நொவெம்பர் 21-27 ஆகிய நாட்கள் மாவீரர் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.


தடையினை நீக்க தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள்! Top News
[Sunday 2020-11-22 08:00]

விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினருக்கு புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


கனேடிய தமிழர்களின் புது முயற்சி! Top News
[Friday 2020-11-20 08:00]

நல்ல முயற்சி பாராட்டுக்கள் வரவேற்கத்தக்க விடயம். தமிழ் தேசிய சின்னங்கள் அனைத்தும் தமிழர் முகங்களை அலங்கரிப்பது மாவீரர் வார காலப்பகுதியில் சந்தோஷத்துக்கு உரியதே. ஆனாலும் பலரது கருத்தும் அவாவும் யாதெனில் இவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இலாபத்தில் இருந்து அல்லது ஒரு பொருளுக்கு ஒரு டாலர் வீதம் சேகரிக்கப்பட்டு தாயகத்தில் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த மாவீரர் குடும்பங்களுக்கு அல்லது ஊனமுற்ற போராளிகளுக்கு அவர்களது பொருளாதார வாழ்வாதார முன்னேற்றத்திற்கு மனம் நல்கி செலவு செய்யப்படுமாயின் கனடாவில் இப்பொருட்களை விற்பனை செய்வோர் பாராட்டுக்குரியவர்கலாவர்.


மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Thursday 2020-11-19 20:00]

தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்று கூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.


வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிய கனடா வாழ் குப்பிளான் உறவுகள்! Top News
[Sunday 2020-11-15 21:00]

யாழ்பாணம் குப்பிளானை பூர்வீகமாகவும் கனடாவை வசிப்பிடமாக கொண்ட அமரர் பறுவதம் குமாரசாமி (முன்னாள் ஆசிரியர் - குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி) அவர்களின் 31 ஆவது நினைவு நாளில் அவரது பிள்ளைகளால் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களுக்கு உலர் உணவுப்பொதிகள் கடந்த 10.11.2020 செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ”ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை நிராகரிப்பு! Top News
[Wednesday 2020-11-11 08:00]

பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய திருவிழாவாகவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் விளங்கும் மஹாசிவராத்திரி தினத்தை ஈஷா கடந்த 25 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசின் சட்டதிட்ட விதிகளை பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமும் இன்றி இவ்விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்விழாவில் ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.


யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Tuesday 2020-11-10 08:00]

02.11.2007ஆம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் குண்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய ஆரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 07.11.2020 அன்று சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.


"பாட்டு பாடவா" பாடல் நல்ல வரவேற்பினை இசை ரசிகர்களிடம் பெற்று கொண்டிருக்கின்றது! Top News Top News
[Friday 2020-11-06 08:00]

புகழ் பெற்ற "பாட்டு பாடவா" பாடலை வித்தியாசமான முறையில் கனடிய இசைகலைஞர்களையும் இணைத்து மின்னல் மியூசிக் செந்தில் குமரன் பாடி YouTube இணையதளத்தில் வெளியிட்டது நல்ல வரவேற்பினை இசை ரசிகர்களிடம் பெற்று கொண்டிருக்கின்றது. பழைய பாடல்களை புது வடிவம் கொடுத்து வழங்குவது மூலம் இன்றைய சந்ததியினரையும் உள்வாங்குவது தான் இவரது நோக்கம் என்பது பாடல் எடுத்த விதத்தில் தெரிகிறது.


சர்வதேச சமூகமும் ஈழத்தமிழரின் நீதிக்கான போராட்டமும்!! பேருரை ஆய்வும்!! Top News
[Tuesday 2020-11-03 07:00]

சமூக நலன் விரும்பிகள் - தமிழ் இன உணர்வாளர்கள் -ஊடகத்துறையினர்- தமிழ்த் தேசிய புலம்பெயர் தேச செயல்பாட்டாளர்கள் - தமிழ் அமைப்புகளது பிரதிநிதிகள் - தமிழ் மனிதவுரிமை செயல்பாட்டாளர்கள் - தமிழ் கல்விமான்கள் - மாணவர்கள் - தமிழ் கலை கலாச்சார ஆசிரியர்கள் - பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளும் காலத்தின் தேவை கருதிய இணையவழி உரைகள்.


தலைவர் பிரபாகரன் பிறந்தநாளுக்குள் எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிடுவோம்: சீமான்! Top News Top News
[Tuesday 2020-11-03 07:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழீழ அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று 02-11-2020 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் நடைபெற்றது. சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சுடரேற்றி மலர்வணக்கம், வீரவணக்கம் செலுத்தினார். மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.


'இனிய நந்தவனம்' சஞ்சிகையின் கனடா சிறப்பிதழ் வெளியீடு - Nov 1, 2020: சீரடி பாபா அரங்கத்தில் சிறப்புற இடம் பெற்றது! Top News
[Monday 2020-11-02 12:00]

நேற்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற தமிழ்நாடு 'இனிய நந்தவனம்' சஞ்சிகையின் 'கனடா சிறப்பிதழ்-3' இனது அறிமுக வைபவத்தின்போது பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த வைபவம் ஸகாபுறோ நகரில் எக்ளிங்கடன்-மிட்லன்ட் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள சீரடி சாயிபாபா ஆலயத்தில் திரு. நரேந்திரா- திருமதி சசிகலா நரேந்திரா தம்பதியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


கோறளைப்பற்று மத்தியில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி! Top News
[Sunday 2020-11-01 21:00]

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை பகுதியை சேர்ந்த மூவரும் பிறைந்துரைச்சேனை பகுதியை சேர்ந்த ஒருவர் மாவடிச்சேனை பகுதியை சேர்ந்த ஒருவரும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.


தமிழர் சமூக நிலைய அமைவிடத்துக்கு ரொறன்ரோ மாநகர சபை அங்கீகாரம்!
[Saturday 2020-10-31 07:00]

தமிழர் சமூக நிலைய அமைவிடத்துக்கு ரொறன்ரோ மாநகர சபை அங்கீகாரம் தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைக்கும் எமது முயற்சிகளுக்கு நீங்கள் வழங்கிவரும் ஆதரவுக்கு முதற்கண் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது செயற்பாடுகளின் இற்றைய விபரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். 311 STAINES ROAD / ஸ்ரெயின்ஸ் வீதி முகவரியில் உள்ள நிலத்தை உத்தேச தமிழ்ச் சமூக மைய அமைவிடமாக ரொறன்ரோ மாநகர சபை அங்கீகரித்துள்ள செய்தியை தமிழ்ச் சமூக மைய வழிப்படுத்து குழு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது.


கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு நோய் பரவலால் அவசர கூட்டம்: வாழைச்சேனை! Top News
[Friday 2020-10-30 08:00]

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளமை நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையில் அவசர ஒன்று கூடல் இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற அவசர ஒன்றுகூடலில் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


வாழைச்சேனை சுகாதார பிரிவில் 16 உத்தியோகத்தர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை! Top News
[Friday 2020-10-30 08:00]

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சென்ற இடங்களுக்கு சென்றவர்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் டீ.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.


யேர்மனி: தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பு! Top News
[Wednesday 2020-10-28 08:00]

யேர்மனியில் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 30 ஆவது அகவை நிறைவு விழா 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை ஸ்ருட்காட் நகரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பும் நடைபெற்றது. அதே மண்டபத்தில் முதல்நாள் 24.10.2020 சனிக்கிழமை யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நடைபெற்றது.


பனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் - வலி கிழக்கில் பனம் விதை நடுகையில் தவிசாளர்! Top News
[Sunday 2020-10-25 20:00]

எமது மக்களின் வாழ்வியலில் பனை வளம் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. அவ் வகையில் பனை வளத்தினைக் காக்கும் அதேவேளை மீள் உருவாக்கம் செய்யம் பொறுப்பினை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்;. பிரதேசத்தில் பயன்பாடின்றிக் காணப்படும் நிலங்களில் பனை விதைகளை நடும் செயற்றிட்டத்தினை நேற்று சனிக்கிழமை முதற்கட்டமாக (24) ஆரம்பித்து வைத்து கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மனநல சேவைக்கும், சில பழக்கங்களுக்கு அடிமையானோருக்குமான சேவைக்கும் ஒன்ராறியோ அரசு மேலதிகமாக 176 மில்லியனை முதலீடு செய்கிறது!
[Thursday 2020-10-22 08:00]

கொவிட்-19 நோய்த்தொற்றானது மானிலமெங்குமுள்ள பலருக்கும் குடும்பங்களுக்கும், குறிப்பாக மனநல பாதிப்புக்குள்ளானோர், சில பழக்கங்களுக்கு அடிமையானோர் போன்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது. அதனாற்றான், இக் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் மக்களைக் கவனித்துக்கொள்வதற்கும், மனநல ஆரோக்கியம் மற்றும் சில பழக்க சூழ்நிலைக்கு ஆளானோர் போன்றவர்களுக்கான ஆதரவளித்தலுக்கும் வருடாந்தம் 176 மில்லியன் டொலர்களை அரசு வழங்குகிறது.


அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் தனது மருத்துவமனைகளில் கோவிட்-19 க்கு பிந்தைய தொடர் சிகிச்சை மையங்களை ஏற்படுத்துகிறது! Top News
[Tuesday 2020-10-20 18:00]

கோவிட் – 19 தொற்றில் இருந்து மீண்ட, ஆனால் தொடர்ச்சியான விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு திறம்பட்ட முறையில் சிகிச்சை வழங்க இந்த சிறப்புக் கிளினிக்குகள் உதவும் சென்னை, அக்டோபர் 20 2020: அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் தனது மருத்துவமனை வலையமைப்பு முழுவதும் கோவிட் தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சைக்கான கிளினிக்குகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது. கோவிட் தொற்றுக்குப் பிந்தைய இந்த கிளினிக்குகள் கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த ஆனால் நோய்த்தொற்றால் ஏற்படும் நடுத்தர மற்றும் நீண்டகால விளைவுகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களது சிக்கல்களை இந்த சிகிச்சை மையங்கள் தீர்க்கும்.


இசை குயில் சுசீலா அம்மாவின் வாழ்த்தை பெற்ற சாம்பவி! Top News Top News
[Saturday 2020-10-17 18:00]

மியூசிக் செந்தில் குமரனின் சமீபத்திய வெளியீடான "சொன்னது நீதானா" பாடலை பார்த்து விட்டு, அந்த பாடலை திரைப்படத்தில் பாடிய - இந்திய சினிமா உலகில் அதிகபட்சமான பாடல்களை பாடி கின்னஸ் பட்டியலில் இடம் பெற்று பல தேசிய விருதுகளை வென்ற, திருமதி சுசீலா அம்மையார் அந்த பாடலை பாடிய எங்கள் கனடிய பாடகி சாம்பவியை வாழ்த்தியது அவருக்கு கிடைத்த பாக்கியம்.


"உலகத்தமிழர் பாராளுமன்றம் ஒரு தேவையற்ற அமைப்பாகவே பார்க்கப்படுகிறது" - தலைவர் செல்வகுமார்! Top News
[Thursday 2020-10-15 18:00]

ஊடக நண்பர்கள் சந்திப்பில் செல்வகுமார் அவர்கள் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஐநாவில் நாங்கள் பேச மாட்டோம் என்ற விடயத்தை பதிவு செய்தார்.தமிழர்களை பொறுத்த வரையில் எமது மிக முக்கிய பிரச்சினையாக இனப்படுகொலைக்கு நீதி கோரி நமது மக்கள் இருக்கின்ற வேளையில் உலகத்தமிழர் பாராளுமன்றம் எமக்கு உதவாத நிலையில் இது தேவையற்ற ஒரு அமைப்பாகவே பார்க்கப்படுகிறது.


யேர்மனி எசன் நகரமத்தியில் நடைபெற்ற முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Sunday 2020-10-11 19:00]

யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. எசன் நகரத்தின் அயல் நகரங்கள் கொரோனா விசக்கிருமியின் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்களுக்கு கிடைத்த அந்நகரத்தின் அனுமதியைப் பயன்படுத்தியவாறு அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் நடாத்தப்பட்டது.மக்கள் தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்தியபடி முதற் பெண் மாவீரருக்கு மாவீரர்கள்; வணக்கப் பாடலுடன் எசன் நகரத்தின் மத்தியில் தங்கள் இதயவணக்கத்தை மலர் தூவி சுடர் ஏற்றி வெளிப்படுத்தினார்கள்.


மார்க்கம் தொர்ன்ஹில் தொகுதியில் ஒண்டாரியோ பாடசாலை வாரியங்களுக்கு 60,000 முகக்கவசங்கள் அன்பளிப்பு! Top News
[Thursday 2020-10-08 21:00]

அக்டோபர் 6, 2020 அன்று மார்க்கம் தொர்ன்ஹில் தொகுதியில் Kuo Hua Trading Company Ltd. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Lisa Chunk அவர்களினால் 60,000 முக கவசங்கள் ஒண்டாரியோவிலுள்ள பாடசாலை வாரியங்களுக்கு நாகொடையாக வழங்கப்பட்ட்து. இந்நிகழ்வில் மார்க்கம் தொர்ன்ஹில் மாகாண பாராளமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி,மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce மற்றும் , டொராண்டோவின் தாய்பே(Taipei) பொருளாதார மற்றும் கலாச்சார அலுவலகத்தின் இயக்குநர்நாயகம் Y.M.Hsu ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க் - 3.10.2020! Top News
[Tuesday 2020-10-06 08:00]

03.10.2020 ஆன்ஸ்பேர்க் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழாவை யேர்மனியில் உள்ள வடமத்திய மாநிலங்களில் அமைந்துள்ள தமிழாலயங்கள் இணைந்து சிறப்பாகக் கொண்டாடின. 10.30 மணியளவில் திட்டமிட்டவாறு தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா ஆரம்பமாகியது. ஆன்ஸ்பேர்க் நகரின் சுகாதார மையத்தின் ஆலோசனைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் அமைவாக தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் எல்லாவகையான பாதுகாப்புகளும் செய்யப்பட்டது.


பிரான்ஸ் வாழ் தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் உறையவைத்த நான்கு குழந்தைகளின் படுகொலை?.. Top News
[Sunday 2020-10-04 19:00]

பிரான்சில் சனிக்கிழமை 03/10/2020 ஒரே குடும்ப வன்முறை காரணமாக. இலங்கையர்கள் நான்கு சிறுவர் ஒரு பெண் என 5 பேர் பலி. மேலும் ஐவர் படு காயம்..!!! இலங்கை யாழ்ப்பானம் சண்டிலிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த அண்ணன் தங்கை என இரு குடும்பமே இந்த தாக்குதலால் பாதிப்படைந்துள்ளது. பிரான்சில் Noisy-le-Sec என்ற நகரில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் சாவடைந்துள்ளனர். Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் பயங்கரமான இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீதியில் அமைந்துள்ள மதுச்சாலை ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்த தமிழ் குழந்தை ஒருவர் அங்கிருந்தவர்களிடம் உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளான்.


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "உறவுகளுக்கு கை கொடுப்போம்" சுவிஸ் கிளை உதவி! Top News
[Sunday 2020-10-04 08:00]

சிறீலங்கா அரசு மற்றும் அதன் துணை ஆயுதக் குழுக்களின் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "உறவுகளுக்கு கை கொடுப்போம்" சுவிஸ் கிளையால் 50 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


தமிழ் திரையுலகை திரும்பி பார்க்கவைத்த டொரோண்டோ தமிழ் திரைப்படவிழா 2020! Top News
[Saturday 2020-10-03 08:00]

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இம்மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருந்த நிலையில், COVID-19 காரணமாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறப்பாக Sep 11 - 13 நடைபெற்று விருதுகளும் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டிருந்தன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன.


திலீபன் அண்ணாவின் 33ம் நினைவில் லண்டனில் இளையோர்களால் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு உணவு வங்கிக்கு கொடுக்கப்பட்டது! Top News
[Saturday 2020-10-03 08:00]

27ம் திகதி ஞாயிறு காலை, தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் இலண்டனின் 3 வெவ்வேறு இடங்களில் உணவுப் பொருட்களை சேர்ப்பதற்காக கூடினர். இது லெப்டினன் கேணல் திலீபன் அண்ணாவை நினைவில் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வு ஆகும். தியாக தீபம் திலீபன் அண்ணா தமிழீழத்தின் விடியலுக்காகவும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர். அவர் தனது கொள்கையை அகிம்சை வழியில் வெளிப்படுத்தும் பொருட்டு தன்னையே வருத்திக்கொண்டார்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 1.16 லட்சம் மரங்களை நடும் விவசாயிகள்! Top News
[Saturday 2020-10-03 07:00]

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் 285 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அனைத்து மரக்கன்றுகளையும் அவர்கள் ஒரு வாரத்திற்குள் தங்கள் நிலங்களில் நடவு செய்துவிடுவார்கள். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம்சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா