Untitled Document
November 5, 2026 [GMT]
 
இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி: பிரதமர் வி.உருத்திரகுமாரன்! Top News Top News
[Thursday 2020-10-01 21:00]

அரசியல் இராஜதந்திர வழியில் தற்போது முன்னகர்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்ட நிலையில், தியாகதீபம் திலீபன் மக்கள் எழுச்சியின் குறியீடாக இருப்பதோடு, இன்றைய தலைமுறைக்கு இரண்டு செய்திகளை அவனுடைய நினைவு அறைகூவியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் 33ம் நினைவேந்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்! Top News
[Thursday 2020-10-01 21:00]

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம்சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு பிறகு தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்க்கும் ஆர்வம் பெருமளவு அதிகரித்துள்ளது.


பழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா - சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு சேவை! Top News
[Wednesday 2020-09-30 07:00]

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் வாழும் குழந்தைகள் பள்ளி படிப்பில் தொடங்கி கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலையில் சேரும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஈஷா அறக்கட்டளை செய்து கொடுக்கிறது. மலைவாழ் பழங்குடியின மக்கள் பொருளாதாரம் உட்பட பல விதங்களில் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றனர். போக்குவரத்து வசதி கூட இல்லாத தொலைதூர கிராமங்களில் வாழும் அவர்கள் கூலி வேலை செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.


ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் போராட்டம்! Top News
[Monday 2020-09-28 17:00]

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா? மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்ää நாம் ஹர்த்தாளை எதிர்க்கின்றோம் நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம் தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர்.


யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா - பீலபெல்ட்! Top News
[Monday 2020-09-28 08:00]

33 ஆண்டுகளானாலும் முடிவில்லாத நினைவோடு முகங்களை மூடியவாறு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கையில் மலர்களுடனும் தீபத்துடனும் அணிவகுத்து வரிசையாக நிற்க, தியாகதீபம் திலீபனின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, அவரின் இறுதி நாட்களை நினைவுபடுத்தும் பாடல்கள் ஒலிக்க, உணர்வோடு வணக்க நிகழ்வு ஆரம்பித்தது. 26.09.2020 பீலபெல்ட் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழாவை வடமாநிலத்தில் அமைந்துள்ள தமிழாலயங்கள் இணைந்து சிறப்பாகக் கொண்டாடின.


வவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Sunday 2020-09-27 17:00]

ராஜபக்சேக்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தமிழர் தேசம் மறுபடியும் ஒரு கெடுபிடிப் போரை எதிர்கொண்டு நிற்கின்றது. தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைக்கு அச்சுறுத்தலும் சவாலும் விடுக்கப்படும் சூழலிலும், வவுனியாவில் 1317 நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், 2020.09.26 சனிக்கிழமை அன்று தமது போராட்ட பந்தலில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மலர் தூவி மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலித்து வீரவணக்கம் செலுத்தி உள்ளனர்.


ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன்! 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு! Top News Top News
[Sunday 2020-09-27 07:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 26-09-2020 சனிக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, ஈகைச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார். உடன் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


திருமா அறிக்கை: எஸ்பிபி மறைவு: அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருமிதம்! Top News
[Friday 2020-09-25 21:00]

இயல்மொழிக்கும் இசைமொழிக்கும் உயிர்ப்பூட்டும் உன்னத ஆளுமை கொண்ட திரைஇசை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன். கடந்த 51நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர் எப்படியும் மீண்டெழுவார் என நம்பிக்கையோடு காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இன்று காலமாகிவிட்டார்.


பசியோடு இருந்த திலீபனின் 10 ஆவது நாள் யேர்மனி கம்பூர்க் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது! Top News
[Friday 2020-09-25 07:00]

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாவது நாளான இன்று இந் நிகழ்வு யேர்மனி கம்பூர்க் நகரமத்தியில் இளையவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் கம்பூர்க் வாழ் தமிழ் மக்களும் யேர்மனிய மக்களும் தியாக தீபத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றினார்கள்.


யேர்மனியில் நடைபெற்ற தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகள்! Top News
[Thursday 2020-09-24 20:00]

யேர்மனியில் நடைபெற்ற தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகள். த்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் தமிழ்த்திறன் போட்டியின் 2019ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப்போட்டி கோவிட்19 என்ற கொடியநோய்த் தொற்றினால் பெப்ரவரிமாதம் நடைபெறாது பிற்போடப்பட்டது அனைவரும் அறிந்ததே.


கனடாவில் புகழ்பூத்த யோர்க் பல்கலைகழகம் மார்க்ஹம் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பம்! Top News
[Thursday 2020-09-24 20:00]

யோர்க் பல்கலைகழகம் மார்க்ஹம் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் செப்டம்பர் 22ம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைகபடுள்ளது. யோர்க் பிராந்தியத்தில் ஒன்ட்டாரியோ அரசாங்கத்தின் பொது உதவி பெறுகின்ற முதல் பல்கலைகழக வளாகமாக இது அமைகிறது. இந்த வைபவத்தில் பங்கேற்ற மார்க்ஹம் தொர்ந்ஹில் மாகாண பாராளமன்ற உறுப்பினர்திருலோகன் கணபதி இது பற்றி கருத்து தெரிவிக்கையில்: “ நான் கவுன்சிலர் ஆக பணிபுரிந்த காலத்திலிருந்து இந்த திட்டத்துக்காக ஈடுபட்டு வந்திருக்கிறேன், இப்புதிய வளாகத்தின் கட்டுமான பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்படுவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.


தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் - 21.09.2020! Top News
[Wednesday 2020-09-23 08:00]

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனிவா ஐ.நா.முன்றலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அணிதிரண்ட நூற்றுக்கணக்கான மக்கள். பிற்பகல் 14:30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் ஒருமணி நேரமாக தமிழ் உறவுகள் நீதி கேட்டு உரத்தகுரலில் உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.


யேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் ஆறாவது நாள் உண்ணாநோன்பு நினைவலைகள்! Top News
[Wednesday 2020-09-23 08:00]

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஆறுவது நாள் உண்ணாநோன்பின் நினைவலைகள் யேர்மனியின் முக்கிய நகரமாகிய வூப்பெற்றால் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. தியாக தீபத்தின் ஆறாவது நாள் என்பது அவருடன் இருந்த மக்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கிய நாள், தண்ணீர் கூட அருந்தாத ஆறாவது நாள் அவரின் உடல் தளர்ந்து நா வரண்டு தமிழீழ தாகம் கண்ணொளி வளியாக அத்திடலில் விடுதலைத் தாகத்துடன் இருந்தவர்களை உரம் ஏற்றிய நாள்.


மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி வீதியில் இறங்கிய பெற்றோர்! Top News
[Saturday 2020-09-19 08:00]

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி ஓட்டமாவடி 01 ஹ{தா பள்ளிவாயல் வீதியினை விஸ்தரித்து மாணவர்களுக்கு ஏற்படும் உயிராபத்துக்களை தடுக்க கோரி பெற்றோர்களால் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் மாணவர்களை விபத்தில் தள்ளாதீர் ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வாருங்கள் பிரதேச செயலாளரே தவிசாளரே மாணவர்களின் உயிரை காப்பாற்றுங்கள் மாணவர்களின் உயிர்களை பாதுகாக்க ஹ{தா பள்ளிவாயல் வீதியினை அகலமாக்கி தாருங்கள் என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் பெற்றோர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


பாடசாலை சொத்துக்கள் மற்றும் ஆசிரியரை தாக்க முற்பட்டமைப்பு எதிர்ப்பு போராட்டம்! Top News
[Saturday 2020-09-19 08:00]

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர் பிரதி அதிபரை தாக்க முற்பட்டமைக்கும் பாடசாலை சொத்துக்களை சேதப்படுத்தியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களால் பாடசாலை நுழைவாயினை மூடி இன்று புதன்கிழமை காலை கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தரம் 2இல் கல்வி பயிலும் மாணவர்கள் இடைவேளையின் போது விளையாடிய சமயத்தில் இரண்டு மாணவர்கள் மோதியதில் ஒரு மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


ஈழ தமிழர்களுக்கான நீதி வேண்டி கனேடியர்களின் நெடுநடைப் பயணம்: Top News
[Thursday 2020-09-17 23:00]

நான்கு கனேடிய தமிழர்கள் நீண்ட நெடுந்தூரம் நீதிக்கான நடை பயணத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்காக Auguest 31, 2020 இல் Brampton நகரில் இருந்து ஒட்டாவா நோக்கி ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஆதரவாக September 7 ஆம் நாள் Montreal இலிருந்து மூன்று தமிழ் கனேடியர்கள் ஒட்டாவா நோக்கி தமது நடை பயணத்தை தொடங்கினர். கடினமான பாதையில் கால்கள் வீங்க பாதங்கள் வேக அவர்களின் நீதிக்கான நடை பயணம் தொடர்ந்தது. மக்களின் ஆதரவு வழி நெடுக இருந்தது. கனேடிய பூர்வீக குடிமக்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.


சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற சைவமும் தமிழும் போட்டி நிகழ்வு! Top News
[Tuesday 2020-09-15 09:00]

முழுமுதற் கடவுள் 'ஞானலிங்கேச்சுரர்" சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிட முடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும். இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக் கொண்டு சைவ நெறிக் கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோற்றம் பெற்றது. பெருங்கடலில் சேரும் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்தை நடுவமாகக்கொண்டு பணிசெய்கிறது.


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எமது கோரிக்கை மற்றும் தீர்மானங்கள்! Top News
[Thursday 2020-09-10 16:00]

காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் குறித்து தமிழ் அரசியல் தலைவர்களுக்கு சில பொறுப்பு உள்ளது. நேற்று 09.09.2020 புதன் கிழமை நாங்கள் எங்கள் பொதுக் கூட்டத்தை நடத்த இங்கு கூடினோம். எங்கள் கூட்டத்தில், எங்கள் புதிய உத்தியோகஸ்தர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் பின்வரும் உத்தியோகஸ்தர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்:


கனடாவில் வசித்து வரும் செல்வன்.சங்கீத் உமாபதி மட்டகளப்பு உன்னிச்சை மக்களுக்கு 8 வது பொது கிணறு அமைத்து கொடுத்துள்ளார்! Top News
[Tuesday 2020-09-08 20:00]

உசனை சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய முன்னாள் கிராமசேவை அதிகாரி திரு.பெரியார் ராஜரத்தினம் அவர்களின் நினைவாக .அவரின் பேரன் செல்வன்.சங்கீத் உமாபதி (கனடா ) அவர்கள் . மட்டகளப்பு மக்களுக்கு குடிதண்ணீர் வசதியை கொடுத்துள்ளார்.


அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் றொட்டடாம் மாநகரை வந்தடைந்தது! Top News
[Saturday 2020-09-05 16:00]

ஐக்கிய நாடுகள்அவையின் மனித உரிமைகள் ஆலோசனையகத்தின் 45 ஆவது கூட்டத் தொடரை நோக்கி, தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 20வது தடவையாக நேற்று 04/09/2020 நெதர்லாந்தில் டென்காக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது.தமிழின அழிப்பிற்கு நீதி கோரி முக்கிய அரசியல் சந்திப்புக்கள் நெதர்லாந்து வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சின்,அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற உயரதிகாரிகளுடன் மேற்கொண்டு மனு கையளிக்கப்பட்டது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில்ஆரம்பித்த ஈருருளிப் பயணம் றொட்டடாம் மாநகரை வந்தடைந்தது.


வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிறம்ரன் நகரில் இருந்து ஆரம்பித்த நெடும் நடைபயணம் இரண்டாம் நாள் இன்று ஏஜாக்ஸ் நகரை வந்தடைந்தது! Top News
[Wednesday 2020-09-02 08:00]

நமது உறவுகளுக்கு நீதி கிட்டாமல் நாங்கள் ஓயப்போவது இல்லை என்பதை இந்த கூட்டம் எடுத்துச் சொல்கிறது. -ஒன்ராரியோ நாடாளுமன்ற உறுப்பினர் விஜே தணிகாசலம் (ஏஜாக்ஸ், ஒன்ராரியோ) வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிறம்ரன் நகரில் இருந்து தலைநகர் ஒட்டாவாவை இலக்கு வைத்து இடம் பெறும் நெடும் நடைபயணம் இரண்டாம் நாள் இன்று ஏஜாக்ஸ் நகரை வந்தடைந்தது. ஏஜாக்ஸ் நகரில் தமிழ்த்தாய் மன்றம் நெடும்பயணம் செல்லும் குழுவுக்கு வரவேற்பு வழங்கியது. 200 அதிகமான மக்களும் ஊடகங்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


வரலாற்றில் பெருந்தவறு..! - மாய மானாக மறைந்துபோன பிரம்டன் தமிழ் ஒன்றியமும் அதன் பிரதிநிதிகளும்?.. Top News
[Tuesday 2020-09-01 21:00]

யாரை யார் தான் நோவது?? - 30/08/20 அன்று காலை பிராம்டன் நகரசபை முன்றலில் இருந்து 430 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள கனடா தலைநகர் ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி தமிழ் இன உணர்வாளர்களது நடைபவனி ஆரம்பமானது. பிராம்டன் நகர பிதா மதிப்புமிகு திரு - பற்றிக்பிரவுன் அவர்கள் ஆசிச் செய்தி வழங்கி தமிழ் மக்கள் மீதான தனது விசுவாசத்தை காண்பித்தார். !! ஆனால் பிரம்டன் தமிழ் ஒன்றியம் தலைமறைவு..! பொது மக்கள் கடுமையான விமர்சனம்.


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Monday 2020-08-31 21:00]

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தினை முன்னிட்டு லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது லண்டன் நகரில் அமைந்துள்ள என்ற இடத்தில் நேற்று (30.08.2020) மதியம் 1.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரை இடம்பெற்றது


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் களுதாவளை மக்கள் சந்திப்பு! Top News
[Sunday 2020-08-30 17:00]

28 Aug 2020 அன்று கட்சியின் களுதாவளை பிரதேச இணைப்பாளர் திசைவீரசிங்கம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. பிற்பகல் 3.00 மணியளவில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா அவர்களின் தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, குறித்த பிரதேச மக்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு அன்றாட பிரச்சினைகளையும் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டினர். மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை கேட்டறிந்த மாவட்ட அமைப்பாளர் , இப்பிரச்சினைகளை கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று விரைந்து தீர்வுகளை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.


ஒண்டாரியோ முதல்வர் Doug Ford தமிழ் ஊடகவியலாளர்கள் சந்திப்பு! Top News
[Thursday 2020-08-20 08:00]

தமிழின அழிப்பு தொடர்பான Bill 104 தனி நபர் சட்ட வரைபான Tamil Genocide Education Week Act ஐ சட்டமாக்கும் 3ம் வாசிப்பு விரைவில் கொண்டுவரப்படும் எனவும் அதற்கான முழுமையான ஒத்துழைப்பை தான் வழங்குவேன் என ஒண்டாரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். 18-08-2020 அன்றுகாலை Scarborough Rouge Park மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துகொண்ட ஒண்டாரியோ முதல்வர், தமிழின அழிப்பு தொடர்பான தமிழின அழிப்பு தொடர்பான Bill 104 தனி நபர் சட்ட வரைபு குறித்து சரியான நேரம் அமையும் போது கனேடிய பதில் பிரதமர் கிறிஸ்டியா பிரீலாண்டுடனும் பேசுவுள்ளதாக குறிபிட்டுள்ளார்.


கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்பிய எம்.எல்.ஏ., கருணாஸ் மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்டோர்க்கு நன்றி! Top News
[Monday 2020-08-17 18:00]

கொரோனா தொற்றால் குணமடைந்து 16.08.2020 இன்று வீடு திரும்பும் எம்.எல்.ஏ., கருணாஸ் அவர்கள் மருத்துவர், செவிலியர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட அனைவர்க்கும் தமது நன்றியை கூறியுள்ளார். மேலும் அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது : திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் சேது. கருணாஸ் ஆகிய நான் எனது தொகுதி மேம்பாட்டு பணிகளிலும், கொரோனா விழிப்புணர்வு மற்றும் நிவாரண பணிகளில் கலந்து கொண்டுதன் விளைவால் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.


1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை - யேர்மனி! Top News
[Monday 2020-07-27 09:00]

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 37 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.


கனடா புன்னகை அமைப்பினரினால் வவுனியாவில் உதவித் திட்டம்! Top News
[Saturday 2020-06-20 08:00]

கனடா புன்னகை அமைப்பினரினால் வவுனியாவில் உள்ள சிதம்பர நகரில் வசிக்கும் இருபது குடும்பத்தினருக்கு சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.13.06.2020 சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு இந்த உதவி வழங்கும் நிகழ்வு கனடா புன்னகை அமைப்பின் வவுனியா இணைப்பாளர் திரு.ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் - யேர்மனி! Top News
[Sunday 2020-06-07 10:00]

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள். அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள்.


உணர்வுபூர்வமாக சிவகுமாரனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! Top News
[Sunday 2020-06-07 10:00]

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலை வளாகத்தில் இடம்பெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா