Untitled Document
August 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை பீரிஸே குழப்பினார்! - ராஜித சேனாரத்ன
[Thursday 2017-01-12 09:00]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில், அப்போதைய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது தேவைக்காக சில யோசனைகளை முன்வைத்ததால் எல்லாம் குழப்பியடிக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில், அப்போதைய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது தேவைக்காக சில யோசனைகளை முன்வைத்ததால் எல்லாம் குழப்பியடிக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

  

தமது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வுத்திட்டத்தை ஒத்த அரசியலமைப்பே தற்போது உருவாக்கப்படுகின்றதென்றும், அன்று தமது தீர்வுத்திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர் என்றும் அண்மையில் சந்திரிகா குறிப்பிட்டிருந்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது சந்திரிகாவின் இக் கூற்று தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குக்கு பதிலளிக்கும் போதே ராஜித மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

சந்திரிகாவின் பதவிக்காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கும் வகையிலான யோசனையையும் பீரிஸ் முன்வைத்ததாகவும் அதற்கே ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் ராஜித மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, சமஷ்டிக்கு அப்பால் செல்லும் வகையிலான தீர்வுத் திட்டமே சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்டதென குறிப்பிட்ட ராஜித, அதுவும் சோவியத் ஒன்றியம் போன்று ஒற்றை ஆட்சி முறையாகவே இருந்ததென்றும் அதற்கு சர்வதேச சமூகமும் இணங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தற்போது கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்திற்கும் சந்திரிகாவின் தீர்வுத்திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டென ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.comஅகதிகளை திருப்பி அனுப்புவதற்காக கப்பல் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு திட்டம்!
[Wednesday 2017-08-16 18:00]

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.நெடுந்தீவு குதிரைகளின் மரணம் - வனஜீனராசிகள் திணைக்களம் மீது ஐங்கரநேசன் குற்றச்சாட்டு! Top News
[Wednesday 2017-08-16 18:00]

நெடுந்தீவில் உள்ள குதிரை இனங்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்! - ஐ.நா, வெளிநாட்டு தூதரகங்களுக்கு சம்பந்தன் கடிதம்
[Wednesday 2017-08-16 18:00]

தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனக் கோரி ஐ.நா பொதுச்செயலாளர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.இரண்டரை மணிநேர கேள்விகளுக்கு சிராந்தி கொடுத்த ஒரே பதில்!
[Wednesday 2017-08-16 18:00]

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்றே பதிலளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தாஜூதீன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும், சிராந்தி ராஜபக்சவின் கீழ் இருந்த சிரிரிய சவிய அறக்கட்டளைக்கு சொந்தமான டிபென்டர் வாகனம் தொடர்பான விசாரணைக்கு நேற்றுக்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு சிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.யால பூங்காவில் சிறுத்தையைப் பந்தாடிய பன்றிகள்! - குட்டிகளை காப்பாற்ற நடந்த பாசப் போராட்டம் Top News
[Wednesday 2017-08-16 18:00]

சிறுத்தையிடம் சிக்கிக் கொண்ட பன்றி குட்டியின் உயிரை காப்பாற்றுவதற்காக, பன்றி கூட்டம் ஒன்று சிறுத்தையுடன் போராடியுள்ளதை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் படம்பிடித்துள்ளார். யால தேசிய பூங்காவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுத்தையின் வாயில் சிக்கிய பன்றிக் குட்டியை மீட்க பன்றிக் கூட்டம், சிறுத்தையைத் தாக்கி விரட்டியுள்ளது.148 மில்லியன் ரூபா கொடுத்தால் காணிகள் விடுவிப்பு!
[Wednesday 2017-08-16 18:00]

புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வழங்குவதாக கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்த பின்னர் முல்லைத்தீவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.யோஷித ராஜபக்சவிடம் இன்று விசாரணை! Top News
[Wednesday 2017-08-16 18:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ரக்பி வீரர் தாஜுதீன் படுகொலை தொடர்பிலேயே இன்றைய தினம் யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரது தாயாரான ஷிரந்தி ராஜபக்ச, நேற்று குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார் 3 மணித்தியாலம் 30 நிமிடங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.விசேட நீதிமன்றத்தை அமைக்க அரசியலமைப்பில் இடமில்லை! - விஜயதாஸ ராஜபக்ச
[Wednesday 2017-08-16 18:00]

விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் ட்ரயல் அட் பார் முறையில் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மக்களை தவறான பாதையில் வழி நடத்துகிறார் முதலமைச்சர்! - சிவமோகன் எம்.பி குற்றச்சாட்டு
[Wednesday 2017-08-16 18:00]

தமிழருக்குரிய பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கின் முதலமைச்சர் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணையுமாறு விடுத்த கோரிக்கையை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் கடுமையாக கண்டித்துள்ளார்.யோகேஸ்வரன் எம்.பியின் உருவபொம்மையை எரித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்! Top News
[Wednesday 2017-08-16 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் உருவபொம்மையை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை முறாவோடை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பில் தவறான கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அப் பகுதி மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.சாவகச்சேரி விபத்தில் முதியவர் படுகாயம்!
[Wednesday 2017-08-16 18:00]

சாவகச்சேரி வடக்கு சோலையம்மன் கோவிலுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்தார். அல்லாரை வடக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் இராசேந்திரம் (வயது-69) என்பவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலையில் வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முதியவரை எதிரே வந்த வான் மோதியதில் அவர் காயமடைந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அக்கரை சுற்றுலா கடற்கரை விவகாரம் - நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் வாக்குறுதி!
[Wednesday 2017-08-16 18:00]

தொண்டைமானாறு- அக்கரை சுற்றுலா கடற்கரை விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகள் நால்வர் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினர். முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது பிரச்சினை தொடர்பாக இரு பகுதியினரும் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருப்பதாகவும், இதுதொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் பொலிஸ்! -சூசகமாக குற்றம்சாட்டிய முதலமைச்சர்
[Wednesday 2017-08-16 07:00]

குற்றவாளிகளுக்கு ஆதரவாக பொலிஸார் செயற்படுகின்றனர் என்று மக்கள் கருதுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான கலந்துரையாடலொன்று முதலமைச்சர் தலைமையில் நேற்று அவரது அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.யாழ். வன்முறை சம்பவங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை! - மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க
[Wednesday 2017-08-16 07:00]

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க நிகழ்வில் உரையாற்றினார்.ட்ரம்பைச் சந்திக்கும் ஆவலில் ஜனாதிபதி!
[Wednesday 2017-08-16 07:00]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச்சபை கூட்டத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். செப்டம்பர் 12 முதல் 25 வரை நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி 19ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சருக்கு சவால் விடும் டெனீஸ்வரன்!
[Wednesday 2017-08-16 07:00]

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக செயற்படப் போகின்றாரா? அல்லது ஆளுநரின் காலில் மண்டியிடப் போகின்றாரா? என்று வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இலங்கையின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அக்கறை!
[Wednesday 2017-08-16 07:00]

இலங்கையின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். பல்லின சமூகத்தில் அனைத்துப் பிரஜைகளுக்கும் சமத்துவம், பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை என்பவற்றுடன் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்களுக்குள்ள உரிமைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறினார்.கிளிநொச்சியில் திடீரென அதிகரித்த நுளம்புகள்! - 815 பேருக்கு டெங்கு
[Wednesday 2017-08-16 07:00]

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் திடீரென அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர்.வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார் டெனீஸ்வரன்! - சிறீகாந்தா
[Wednesday 2017-08-16 07:00]

அமைச்சர் டெனீஸ்வரனுக்கு எதிராக எமது கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த விவகாரத்தை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர் தவற விட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று இரவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-ரோஹித்த ராஜபக்ஷவிடம் 6 மணிநேரம் விசாரணை!
[Wednesday 2017-08-16 07:00]

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜராகிய ரோஹித்த ராஜபக்ஷவிடம் சுமார் 6 மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. சீனாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரிட் செட் 1 என்னும் செயற்கைக் கோள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய 320 மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா