Untitled Document
June 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சி காணி விடுவிப்புக் கூட்டத்தில் மோதிக் கொண்ட அரச அதிகாரிகள்! Top News
[Friday 2017-04-21 08:00]

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று நடந்த கூட்டத்தின் பின்னர் வனவளத்திணைக்கள அதிகாரிக்கும் மாவட்டச் செயலாளருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று நடந்த கூட்டத்தின் பின்னர் வனவளத்திணைக்கள அதிகாரிக்கும் மாவட்டச் செயலாளருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.

  

கிளிநொச்சி வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வனவளத் திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரியை கடிந்து கொண்டார்.

அரச காணிகள் அனைத்தும் தங்களுடைய வனவளத்திணைக்களத்திற்குரிய காணி என்றும் அதில் எந்த பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும் தங்களின் அனுமதியை பெறவேண்டும் என்பதோடு, தங்களின் நடைமுறைக்கு அமைவாகவே செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வனவளத்திணைக்கள அதிகாரி கூறியிருந்தார்.

ஆனால் 1992 ஆம் ஆண்டு 58 இலக்க தத்துவ உரிமம் மாற்றம் சட்டத்திற்கு அமைவாக அரச காணிக்கான அதிகாரம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது அதன்படி செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது வனவளத் திணைக்களம் தடையாக இருக்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது

ஆனால் வனவளத் திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி 52001 சுற்று நிரூபத்திற்கு அமைவாக அனைத்து அரச காடுகளும், மற்றும் எதிர்காலத்தில் வனமாக மாறக் கூடிய நிலங்களும் வனவளத்திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அதன்படியே நாங்கள் செயற்படுகின்றோம். 2009 வன திருத்தப்பட்ட சட்டத்தின் படி காடு என்பது தனியே மரங்களை கொண்ட பிரதேசங்கள் மட்டுமல்ல காடு என்பதற்கு அச் சட்டத்தில் தனியான வரைவிலக்கனம் கொடுக்கப்பட்டுள்ளது எனவே நாங்களும் எங்களது சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே பணிகளை மேற்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த அதிகாரி மீது சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ. சுமந்திரன் மாவட்ட அரச அதிபருக்கு அறிவுறுத்தினார்.

  
   Bookmark and Share Seithy.com20 அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா!
[Monday 2017-06-26 08:00]

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 20 அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த வாரத்தில் அவுஸ்திரேலிய எல்லைக்காவல் படையினரால், அகதிகள் படகு ஒன்று இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.ஈழத்தை நீக்கியது இனஅழிப்பின் தொடர்ச்சியே! - சிறீதரன் எம்.பி விசனம் Top News
[Monday 2017-06-26 08:00]

2009 இல் இனப்படுகொலையொன்றை திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட அரசு போருக்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உலகம் அவதானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. சிறீதரன் தெரிவித்துள்ளார்.இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
[Monday 2017-06-26 08:00]

கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி 2.3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இம்மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு இரவில் சென்று அச்சுறுத்தும் நிதி நிறுவனங்கள்!
[Monday 2017-06-26 08:00]

கிளிநொச்சியில் கிளையைக் கொண்டிருக்காத நிதி நிறுவனம் ஒன்று வறிய மக்களுக்கு அதிகூடிய வட்டிக்கு கடன்களை வழங்கி விட்டு, அதனை அறவிடுவதற்கு வீடுகளுக்கு சென்று தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அச்சுறுத்திய சம்பவம், பரந்தன் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.ஒன்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டுவோம்! - சம்பந்தனின் ரம்ழான் வாழ்த்து
[Monday 2017-06-26 08:00]

தேசத்தின் நல்லுறவுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒன்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோமாக என்று, ரமழான் ​​வாழ்த்துச் செய்தியில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்! - எப்போது என்று தெரியாதாம்
[Monday 2017-06-26 08:00]

கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள்ளனர். வெகு விரைவில், கேப்பாப்புலவுக் காணிகள் விடுவிக்கப்படும். ஆனால், அது எப்போது எனும் காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்களை மூட அரசாங்கம் முடிவு!
[Monday 2017-06-26 08:00]

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், விரைவில் மூடப்படும் என்று, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். குறித்த இராஜதந்திர நிலையங்களின் பெறுபேறுகளையும், அந்நிலையங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதன் காரணங்களையும் அறிந்த பின்னர், இவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என, அவர் கூறினார்.நயினாதீவு உற்சவத்தை முன்னிட்டு விசேட பயண பாதுகாப்பு ஒழுங்கு!
[Monday 2017-06-26 08:00]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பு சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்களவாடி ஞானவைரவர் சனசமூக நிலையத்தினரால், இந்தக் கடற்பயணிகள் பாதுகாப்பு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.கடத்தப்பட்ட யுவதி விபத்தில் மரணமான சம்பவம்! - இருவர் கைது
[Monday 2017-06-26 08:00]

மட்டக்களப்பு- சந்திவெளியில் கடத்தப்பட்டபோது விபத்தில் சிக்கி யுவதி உயிரிழந்த சம்பவம், தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிரோஷன் பெர்னாண்டோ தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் பகிரப்படாது! -ஜயம்பதி விக்கிரமரத்ன
[Sunday 2017-06-25 19:00]

புதிய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு குறைந்தளவு அதிகாரப்பகிர்வே வழங்கப்படும். அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டானில் இன்று இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எனக்கு மக்கள் பலம் இல்லை என்றவர்களுக்குப் பாடம் புகட்டி விட்டீர்கள்! - முதலமைச்சர் அறிக்கை
[Sunday 2017-06-25 19:00]

நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில் 100 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் போராட்டங்கள்! Top News
[Sunday 2017-06-25 19:00]

தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, நடத்தப்படும் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 117ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது.சத்தியலிங்கம், டெனீஸ்வரனை விசாரிக்க புதிய குழு நியமனம்!
[Sunday 2017-06-25 19:00]

வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.பிரித்தானியாவில் தமிழ்ச் சிறுமியின் நடனம்! - கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரை Top News
[Sunday 2017-06-25 19:00]

இங்கிலாந்தில் இல்ஃபொர்ட், ரெட்பிரிட்ஜ் இல், ஆராதனா நாட்டியப் பள்ளியில் நடனம் பயிலும் பிரகதா என்ற தமிழ்ச்சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் லண்டன் பார்க்கிங் புறோட்வே அரங்கில் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக, ரெட்பிரிட்ஜ் மேயர் பாம்ரா மற்றும், ஈஸ்ட் ஹாம் அவை துணைத்தலைவர் போல் சத்திய நேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறுமியை வாழ்த்தினர்.தலைமன்னாரில் 135 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது! Top News
[Sunday 2017-06-25 19:00]

தலைமன்னார் - சுவாமித்தோட்டம் பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சாவுடன் பயணித்துக் கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, நடத்தப்பட்ட சோதனையின் போது, கெப் வாகனம் ஒன்றில் கஞ்சாவுடன் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கேப்பாப்பிலவில் யுவதியை கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற இராணுவச் சிப்பாயால் பரபரப்பு!
[Sunday 2017-06-25 19:00]

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் யுவதி ஒருவரை கட்டாயத் திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கேப்பாப்புலவில் மாதிரிக்கிராமத்தில் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கும் போது அந்த பகுதியில் உள்ள யுவதி ஒருவர் மீது குறித்த இராணுவ சிப்பாய்க்கு ஒரு தலைக் காதல் ஏற்பட்டுள்ளது.சிறிதரனின் இலச்சினையுடன் போலி கடிதம் - 16 பேஸ்புக் கணக்குகள், 10 இணையத்தளங்களுக்கு எதிராக முறைப்பாடு!
[Sunday 2017-06-25 19:00]

தனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையை மற்றும் நாடாளுமன்ற கடிதத் தலைப்பை மோசமான முறையில் பயன்படுத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் அறிவுறுத்தலுக்கமைவாக, பாரிய குற்றவியல் செயலின் கீழ் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜேர்மனி செல்கிறார் சம்பந்தன்!
[Sunday 2017-06-25 19:00]

ஜேர்­ம­னி­யின் அர­ச­மைப்­புத் தொடர்­பில் ஆராய்­வதற்காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் உள்­ளிட்ட 5 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், 5 நாள் பய­ண­மாக இன்று புறப்­பட்­டுச் செல்­ல­வுள்­ள­னர். இலங்கைக்கு அண்மையில் வந்திருந்த, ஜேர்மன் சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார்.மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர்! Top News
[Sunday 2017-06-25 19:00]

எந்நேரத்திலும் பாகிஸ்தான் உங்களுடன் துணைநிற்கும் என அந்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்.ஜெனரல் ரிஸ்வான் அக்தர் மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்நாட்டு படை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.இரத்ததானம் செய்ய யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்த பிக்குகள்! Top News
[Sunday 2017-06-25 19:00]

இரத்ததானம் வழங்குவதற்காக, பப்பிலியான பெளத்த விகாரையில் இருந்து 100 பிக்குகள் இன்று யாழ். போதான வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள இரத்த வங்கியில், இரத்தம் தட்டுப்பாடு நிலவுவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்தே, தாம் இரத்ததானம் வழங்குவதற்காக வந்ததாக, பிக்குகள் தெரிவித்தனர்.


Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா