Untitled Document
May 6, 2024 [GMT]
மஹிந்த அரசு தெற்கை விட வடக்கிலேயே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டதாம்! - நாமல் கூறுகிறார்
[Wednesday 2018-07-11 18:00]

மஹிந்த ராஜபக்ஷ  அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலேயே  அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலேயே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.

  

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியமைத்தனர். வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் வெறும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றது. 30 வருட காலம் யுத்தம் இடம் பெற்ற வடக்கில் யுத்தத்திற்கான எவ்வித சுவடுகளும் காணப்பட கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெற்கினை விடய வடக்கிற்கே அதிகமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தார். ஆனால் தேசிய அரசாங்கம் 3வருட காலத்தில் எவ்வித அபிவிருத்திகளின் நிலைபேறான திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

வடக்கிற்கு அபிவிருத்திகளை மேற்கொள்வதாக மக்கள் தெரிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாக செயற்படுகின்றனர். அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்படுகின்றனர். அரசாங்கத்தின் குறைப்பாடுகளை இவர்கள் இதுவரை காலமும் சுட்டிக்காட்டவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். வடக்கிற்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு ஆதரவாகவே செயற்பட்டனர்.

வடக்கில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையே பிரதானமாக காணப்படுகின்றது. மறுபுறம் விவசாயத்துறை இன்று பௌதீக காரணிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் சரி தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எவ்வித அக்கறையும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கத்தில் பட்டதாரிகளுக்கு கல்வி தகைமைகளுக்க ஏற்ப தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாமல் சாதாரண நபர் போல் வறுமையின் காரணமாக கிடைத்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கிற்கு அரசியலமைப்பு மாத்திரமே தற்போதைய தீர்வு என்று எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து முறையற்ற விதமாக அரசியலை பயன்படுத்துவது பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்க இழைக்கப்படும் துரோகமாகவே காணப்படுகின்றது. வடக்கு மக்கள் அரசியல் தீர்வினை ஒரு போதும் கோரி நிற்கவில்லை என்று கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெளிப்படுத்தினர்.

தெற்கினை போன்று வடக்கிலும் இன்று குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றது. வடக்கில் போதை பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் அவர் குறிப்பிட்ட விதமே அரசியலமைப்பிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் முரணானது.

தெற்கில் இருந்து அரசியல்வாதிகளின் செல்வாக்குடனே வடக்கிற்கு போதைபொருட்கள் கைமாற்றப்படுகின்றது என்று இவர் குறிப்பிட்டமை தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி வடக்கின் அமைதியினை உறுதிப்படுத்த வேண்டும். 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இவ்வாறான பிரச்சினைகள் ஏதும் இடம் பெறவில்லை. ஆனால் இன்று தேசிய அரசாங்கத்தின் 3 வருட ஆட்சியில் வடக்கு மக்களின் வாழ்க்கை மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது.

ஆகவே நிலைபேறான அபிவிருத்தியை வடக்கிற்கு செயற்படுத்த வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் அவசியமானதாகவே காணப்படுகின்றது. மாகாண சபை தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் விரைவில் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டும். அப்போது மக்கள் தங்களது பதிலடியினை நன்கு வெளிப்படுத்துவார்கள்" . என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



யாழ்.சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முடிவு!
[Monday 2024-05-06 04:00]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.



சஜித்துக்கு தூது போனேனா?- கருணாகரம் மீது மனோ பாய்ச்சல்.
[Monday 2024-05-06 04:00]

“மனோ மூலம் தூது விடாது எம்மிடம் நேரடியாக சஜித் கூற வேண்டும்” என தமிழீழ விடுதலை இயக்க நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கூறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என மும்முரமாக செயற்படும் உங்களுக்கு எதற்காக சஜித் தூது விட வேண்டும் என எனக்கு தெரியவில்லை. பொது வேட்பாளர் தொடர்பில் உறுதியான முடிவை எடுங்கள். முதலில் அதை செய்யுங்கள். அப்புறம் புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது, தென்றல் விடு தூது என்பவைகளை பார்க்கலாம். சஜித்திடமும் பேசலாம்.



மா.க.ஈழவேந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி! Top News
[Monday 2024-05-06 04:00]

1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது.



கனடாவில் இன்று 'அறைகூவல்' - நீதிக்கான அழைப்பு!
[Monday 2024-05-06 04:00]

தமிழினப் படுகொலையை நினைவு கூர்வோம்.

திகதி: திங்கட்கிழமை, May 06, 2024

நேரம்: மாலை 7:00 மணி

முகவரி: 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON M1B 5K9



பசிலுக்கும் ரணிலுக்கும் இடையில் சுமுகமான பேச்சு!
[Monday 2024-05-06 04:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று முன்தினம் பிற்பகல் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.



மொட்டு பிரமுகருக்கு விரைவில் அமைச்சர் பதவி!
[Monday 2024-05-06 04:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரே இவ்வாறு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.



இலவச சுற்றுலா விசா- ஆராய நிபுணர் குழு.
[Monday 2024-05-06 04:00]

இலவச சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியுள்ளது.



பணத்துக்காக கட்சியை விஜயதாசவுக்கு விற்று விட்டார் மைத்திரி!
[Monday 2024-05-06 04:00]

பணத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக் கொடுத்து விட்டார். ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ என அவரால் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது என சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
[Monday 2024-05-06 04:00]

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டை இறக்குமதி!
[Monday 2024-05-06 04:00]

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி! Top News
[Sunday 2024-05-05 18:00]

யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிமேலும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தவும் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



சீன துணை அமைச்சர் பியகமவில் நடத்திய கருத்துக் கணிப்பு!
[Sunday 2024-05-05 18:00]

சீன துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதை நேரடியாக கண்டறியும் நோக்கில் கருத்துக்கணிப்பு ஒன்றை செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.



கோட்டா தொலைபேசியில் பேசியதை நிரூபிக்கத் தயார்! - பேராயர் அதிரடி.
[Sunday 2024-05-05 18:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டு என்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது என்னிடம் கூறியதை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



நாடு அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது!
[Sunday 2024-05-05 18:00]

கொழும்பில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது தினமும் இந்த நாடு ஒட்டுமொத்தமாக வௌிநாடுகளுக்கு விற்கப்பட்டு முழுமையாக மக்கள் அடிமையாகி விடுவார்கள் போல இருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.



தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கு பொதுக் கட்டமைப்பை உருவாக்க இணக்கம்!
[Sunday 2024-05-05 18:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.



தப்பியோடிய 9000 படையினர் பணிநீக்கம்!
[Sunday 2024-05-05 18:00]

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.



நாளை கபொத சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்!
[Sunday 2024-05-05 17:00]

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



தெல்லிப்பழையில் பெண்ணின் சடலம்! - மகனைக் காணவில்லை!
[Sunday 2024-05-05 17:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



இலங்கைக்கு சோனார் பொருத்தப்பட்ட கப்பலை வழங்குகிறது ஜப்பான்!
[Sunday 2024-05-05 17:00]

நாட்டின் கடல்சார் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில், ஏனைய கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, நீருக்கடியில் சோனார் பொருத்தப்பட்ட கப்பலை இலங்கைக்கு வழங்கும் திட்டத்தை ஜப்பான் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.



வலையில் சிக்கிய மண்டையோடும் எலும்புகளும்!
[Sunday 2024-05-05 17:00]

மட்டக்களப்பு -சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா