Untitled Document
April 29, 2024 [GMT]
கொரோனாவை எதிர்த்து போராட ரூ.3 லட்சம் கோடி - அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
[Sunday 2020-03-15 08:00]

உலக அளவில் கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே பதறுகிற அளவுக்கு, அது உயிர்க்கொல்லியாக அமைந்துள்ளது. உலகளவில் இந்த வைரஸ் நோய், 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோயின் மையப்புள்ளியாக இப்போது ஐரோப்பா மாறி உள்ளது. இந்தநிலையில், வல்லரசு நாடான அமெரிக்காவையும் இந்த வைரஸ் நோய் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது. அந்த நாட்டில் உள்ள 50 மாகாணங்களில் 46 மாகாணங்கள், கொரோனா வைரசின் ஆதிக்கப்பிடியில் சிக்கி திணறுகின்றன. 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் நோய் தொற்றியுள்ளது. 47 பேர் இங்கு பலியாகி இருக்கிறார்கள். இங்கிலாந்து தவிர்த்து பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து யாரும் அமெரிக்காவில் நுழைய முடியாதபடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும். இது நேற்று முன்தினம் இரவு அமலுக்கு வந்துள்ளது.

உலக அளவில் கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே பதறுகிற அளவுக்கு, அது உயிர்க்கொல்லியாக அமைந்துள்ளது. உலகளவில் இந்த வைரஸ் நோய், 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோயின் மையப்புள்ளியாக இப்போது ஐரோப்பா மாறி உள்ளது. இந்தநிலையில், வல்லரசு நாடான அமெரிக்காவையும் இந்த வைரஸ் நோய் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது. அந்த நாட்டில் உள்ள 50 மாகாணங்களில் 46 மாகாணங்கள், கொரோனா வைரசின் ஆதிக்கப்பிடியில் சிக்கி திணறுகின்றன. 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் நோய் தொற்றியுள்ளது. 47 பேர் இங்கு பலியாகி இருக்கிறார்கள். இங்கிலாந்து தவிர்த்து பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து யாரும் அமெரிக்காவில் நுழைய முடியாதபடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும். இது நேற்று முன்தினம் இரவு அமலுக்கு வந்துள்ளது.

  

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ரோஸ் பூங்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் தேசிய நெருக்கடி நிலையை அமல்படுத்தி உள்ளதாக அறிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “மத்திய அரசின் முழு அதிகாரத்தையும் கட்டவிழ்த்து விட நான் தேசிய நெருக்கடி நிலையை இன்று (நேற்று முன்தினம்) அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்” என குறிப்பிட்டார். ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தேசிய நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என்பது அமெரிக்காவில் ஒரு அபூர்வமான நிகழ்வு ஆகும்.

அமெரிக்காவில் தேசிய அவசர நிலையை அறிவித்திருப்பதனால் என்ன பலன் என்று கேட்டால்-

* கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை எதிர்த்து நின்று போராடுவதற்கு 50 பில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் கோடி) பயன்படுத்தலாம்.

* மத்திய நெருக்கடி நிலை மேலாண்மை முகமையானது, மாகாணம் மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகங்களுக்கு உதவவும், பிரச்சினைக்கான தீர்வு காண மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* நெருக்கடி கால செயல்பாட்டு மையங்கள், மாகாணங்கள் தோறும் அமைக்கப்படுகின்றன. பொதுமக்களின் தேவையை சந்திக்கிற வகையில், ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் அவசர தயார் நிலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* சுகாதாரம் மற்றும் மனித சேவைகளின் செயலாளருக்கு பரந்த புதிய அதிகாரம் வழங்கப்படுகிறது. டாக்டர்கள், ஆஸ்பத்திரிகள், சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் நோயாளிகளின் நலன் காக்க செயல்பட தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவதையொட்டி, அங்கு பல்வேறு சலுகைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படடுள்ளன. மத்திய அரசு நிறுவனங்கள், மாணவர்களுக்கு வழங்கிய அனைத்து கல்வி கடன்களுக்குமான வட்டியை ஜனாதிபதி டிரம்ப் தள்ளுபடி செய்துள்ளார். அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்து கொள்வதற்கும், இந்த வைரஸ் நோய் தாக்கிய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதற்கும் வகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. செனட் சபையும் இதற்கு ஒப்புதல் வழங்கியவுடன், ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டவுடன் சட்டமாகி விடும்.

கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், உலகம் முழுவதும் உள்ள சுவாமி நாராயண் கோவில்களை மூடுவதற்கும், வழக்கமான செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பயணியர் கப்பல் சேவையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி இருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு லூசியானா மாகாணத்தில் அடுத்த மாதம் 4-ந்தேதி நடைபெற இருந்த கட்சி தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது.

* உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான போரை அறிவிக்குமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

* சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 3,189 ஆகவும், பாதித்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 824 ஆகவும் அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,266 ஆகவும், பாதித்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 660 ஆகவும் உயர்ந்துள்ளது.

* ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,500 பேருக்கு இந்த வைரஸ் நோய் பாதித்து இருப்பது உறுதியானது. இதன்மூலம் அங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5,753 ஆனது.

* மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானை இந்த வைரஸ் நோய் அதிகமாக தொற்றியுள்ளது. இந்த வைரசுக்கு அங்கு மேலும் 97 பேர் பலியாகி உள்ளனர். இதன்காரணமாக அங்கு இந்த நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் தாக்கியோரின் எண்ணிக்கையும் 12 ஆயிரத்து 729 ஆக அதிகரித்து இருக்கிறது.

* சவுதி அரேபியா தனது நாட்டுக்கு வழக்கமாக வருகிற அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் 2 வார கால தடையை அதிரடியாக விதித்துள்ளது.

* கொலம்பியாவில் இந்த வைரஸ் நோய் 16 பேருக்கு தொற்றியுள்ள நிலையில், வெனிசூலாவுடனான எல்லையை அந்த நாடு மூடி உள்ளது.

* அனைத்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் தனது அண்டை நாடான வெனிசூலாவில் இருந்தும் வருகிற விமானங்களுக்கு வெனிசூலா தடை விதித்துள்ளது.

* ரஷிய நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

* ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் நோய் மேலும் 3 பேருக்கு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், இந்த நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

* மனைவி சோபிக்கு, கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், தனது நாட்டினர் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்துள்ளார்.

* இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளை சேர்ந்தவர்கள் கம்போடியா வர 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தென்கொரியாவில் மேலும் புதிதாக 107 பேரை இந்த வைரஸ் நோய் பாதித்துள்ளது. இதனால் அங்கு இந்த நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 8,086 ஆக உயர்ந்துள்ளது.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் மேலும் 34 பேருக்கு இந்த வைரஸ் நோய் தொற்றிக்கொண்டுள்ளதால், இதன் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 98 ஆகி உள்ளது.

* இந்தோனேசியாவில் 27 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் பாதித்துள்ளது. அங்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 96 ஆனது.

* ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் மேலும் 23 பேருக்கு பரவி உள்ளதால், இதன் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஜேர்மனியில் 2 உக்ரைனியர்களுக்கு நிகழ்ந்த பரிதாபம்!
[Monday 2024-04-29 06:00]

ஜேர்மனியில் இரண்டு உக்ரேனியர்கள் கத்திக் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ஜேர்மனிய கிராமமான முர்னாவில்(Murnau) உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் சனிக்கிழமை மாலை இரண்டு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர்.



"குடியேறிகளை திருப்பி அனுப்புவோம்" - அயர்லாந்தின் சூடான திட்டம் பரிசீலனை!
[Monday 2024-04-29 06:00]

ருவாண்டா மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, நாட்டிற்குள் நுழையும் குடியேறிகளை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பும் அவசர சட்டத்தை அயர்லாந்து பரிசீலித்து வருகிறது. பிரித்தானிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதாவிற்கு பதிலளிக்கும் வகையில், வடக்கு அயர்லாந்தின் வழியாக வரும் அடைக்கலம் தேடுபவர்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப அவசர சட்டத்தை அயர்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.



2024 இல் புதிய சவால்: பிரித்தானியாவுக்குள் 7000+ குடியேற்றோர் வருகை!
[Monday 2024-04-29 06:00]

2024 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்குள் சிறிய படகில் குடியேறியோர் வருகை எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், சிறிய படகு மூலம் UK க்கு வரும் குடியேறியோரின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.



ஈராக் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக்கொலை!
[Sunday 2024-04-28 18:00]

ஈராக்கில் பெண் டிக்டோக் பிரபலம் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராக் நாட்டில் குஃப்ரான் மஹ்தி சவாதி எனும் பெண் டிக்டோக்கில் பிரபலமானவர். ''ஓம் பஹத்'' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்ட இவர், நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீடியோக்களை டிக்டோக்கில் பதிவேற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.



பிரித்தானியாவில் வெளிநாட்டு இளைஞருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
[Sunday 2024-04-28 18:00]

பிரித்தானியாவில் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்ற சில மணி நேரத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 26ம் திகதி குறித்த சாலை விபத்து நடந்துள்ளது. 27 வயதான ஷரோன் ஆபிரகாம் Eastbourne பகுதியில் சாலையை கடக்கும் 75 வயது Andrew Forrest மீது மோதிவிட்டு, சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.



முதலீடு செய்யத் தயங்கும் கனடியர்கள்!
[Sunday 2024-04-28 18:00]

கனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது.



உலகளவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண்!
[Sunday 2024-04-28 18:00]

உலகளவில் அர்ஜென்டினாவில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் அழகி போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார். உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி (மிஸ் யூனிவர்ஸ்) நடந்து வருகிறது.



டைட்டானிக்கில் மூழ்கிய கோடீஸ்வரரின் தங்க பாக்கெட் கடிகாரம்: ஏலத்தில் எத்தனை கோடிக்கு போச்சு தெரியுமா?
[Sunday 2024-04-28 08:00]

டைட்டானிக் கப்பலின் கடைசி பயணத்தில் பயணித்த கோடீஸ்வரரின் பாக்கெட் கடிகாரம் £1.2 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றை நினைவுபடுத்தும் வகையிலான, தங்க பாக்கெட் கடிகாரம்(gold pocket watch) ஏலத்தில் பிரமிக்க வைக்கும் £1.175 மில்லியன் (₹1.4 கோடி) என்ற தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.



ருவாண்டா திட்டம் சட்டவிரோத குடியேறிகளுக்கு தடுப்பாக உள்ளது: பிரதமர் ரிஷி சுனக்!
[Sunday 2024-04-28 08:00]

பிரித்தானிய பிரதமர் ருவாண்டா திட்டம் குடியேற்ற தேடுபவர்களை தடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், குடியேற்ற தேடுபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டம் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். குடியேற்ற தேடுபவர்கள் சட்டவிரோதமாக ஐக்கிய ராஜ்ஜியத்திற்குள் நுழைய விரும்புகிறார்கள் என்றும், அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுனக் வாதிடுகிறார்.



ஆங்கிலேய கால்வாயில் சிக்கிய புலம்பெயர்ந்தவர்கள்: காவல் படையினர் நடவடிக்கை!
[Sunday 2024-04-28 08:00]

ஆங்கில கால்வாயில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களை கடலோர காவல் படை காப்பாற்றியுள்ளனர். இன்று நடைபெற்ற ஒரு மீட்பு நடவடிக்கையில், ஆங்கில கால்வாயில் சிறு படகில் சிக்கியிருந்த குடியேற்ற நபர்களை கடலோர காவல்படை மீட்டுள்ளது. இந்த சம்பவம் கென்ட்டின் டீல் கடற்கரைக்கு அப்பால், குட்வின் சாண்ட்ஸ்(Goodwin Sands) அருகே நடந்துள்ளது.



இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்யும் பிரிட்டன் அரண்மனை!
[Saturday 2024-04-27 18:00]

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடிய நிலையில் எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார்.



ஜார்ஜ் பிளாயிட் மரணத்தைப் போல மற்ருமொருவர் உயிரிழப்பு!
[Saturday 2024-04-27 18:00]

அமெரிக்காவில், 2020-ஆம் ஆண்டு, காவலர் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில், ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தது இனவெறிக்கு எதிராக பெரியளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது.



பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுபார்த்த இருவர் அதிரடி கைது!
[Saturday 2024-04-27 18:00]

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கேஷ் தனது நண்பர் 32 வயதான கிறிஸ்டோபர் பெர்ரியுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.



கனடிய விமானத்தில் தலையங்கியினால் ஏற்பட்ட சர்ச்சை!
[Saturday 2024-04-27 18:00]

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பயணம் செய்த பழங்குடியின தலைவி ஒருவரது தலையங்கியினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விமானத்தில் வைத்து விமானப் பணியாளர்கள் குறித்த தலையங்கியை அகற்றியுள்ளனர். பழங்குடியின சமூகத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் இவ்வாறு தலையங்கி அணிவது வழமையானதாகும்.



மத்திய கிழக்கில் பரவும் பதட்டம்!
[Saturday 2024-04-27 06:00]

மத்திய கிழக்கில் மோதல் பரவுவதை தடுப்பதில் சீனா பங்கு வகிக்க முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு ராஜதந்திர உறவுகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.



மன்னர் சார்லஸ் தொடர்பில் அரண்மனை வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
[Saturday 2024-04-27 06:00]

மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பொது வாழ்க்கைக்குத் திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் அடுத்த வாரம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.



உலகின் கடைசி உணவு ஆதாரம்: சுவல்பார்டு தீவிலுள்ள உலக விதை வங்கியில் என்ன இருக்கு?
[Saturday 2024-04-27 06:00]

நார்வே நாட்டின் வடக்கே, ஆர்டிக் வட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள சுவல்பார்டு தீவு, உலகின் விதைப் பெட்டகம் என்று அழைக்கப்படுகிறது. பூமியில் உள்ள பல்வேறு வகையான பயிர்களின் விதைகளை பாதுகாப்பதற்காக, 2008-ம் ஆண்டு சுவல்பார்டு தீவில் உலக விதை வங்கி (Svalbard Global Seed Vault) நிறுவப்பட்டது. சுவல்பார்டு தீவுகள், 12 ஆம் நூற்றாண்டில் வைக்கிங் கடற்பயணிகளால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில், டச்சு மற்றும் ஆங்கில வேட்டையாடுபவர்கள் திமிங்கல வேட்டைக்காக இங்கு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில், டென்மார்க் தீவுகளின் மீது அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.



சீனாவின் நட்பை பெற போட்டிபோடும் அமெரிக்கா, ரஷ்யா!
[Friday 2024-04-26 18:00]

அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது என்பார்கள். அப்படித்தான் உலக நாடுகளும் நடந்துகொள்கின்றன. உக்ரைன் ரஷ்ய போர் துவங்கியதைத் தொடர்ந்து சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகவே நிற்க, அல்லது, வேறு வகையில் கூறினால், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு கண்டனம் தெரிவிக்காமலே இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவோ, கடந்த சில மாதங்களாக சீனாவுடன் நட்பு பாராட்ட விளைவதைக் கவனிக்கமுடிகிறது.



அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி கைது!
[Friday 2024-04-26 18:00]

அமெரிக்கப் பல்கலை ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் அமைந்துள்ள Princeton பல்கலையில் பயிலும் அச்சிந்த்யா சிவலிங்கம் என்னும் மாணவி, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.



வெளிநாடொன்றில் 56 குழந்தைகள் உள்பட 223 பேரை சுட்டுகொன்ற ராணுவத்தினர்!
[Friday 2024-04-26 18:00]

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா