Untitled Document
May 1, 2024 [GMT]
பிரித்தானியாவில் அமலுக்கு வரவிருக்கும் கடுமையான 3 அடுக்கு கட்டுப்பாடுகள்!
[Thursday 2020-11-26 16:00]
பிரித்தானியாவில் அமல்படுத்தவிருக்கும் கடுமையான 3 அடுக்கு கட்டுப்பாடுகளால் நாடுமுழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் மிக கடுமையான கட்டுப்பாடுகளின் வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் லிவர்பூல் மற்றும் லண்டன் கடுமையான கட்டுப்பாடுகளை தவிர்க்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் அமல்படுத்தவிருக்கும் கடுமையான 3 அடுக்கு கட்டுப்பாடுகளால் நாடுமுழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் மிக கடுமையான கட்டுப்பாடுகளின் வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் லிவர்பூல் மற்றும் லண்டன் கடுமையான கட்டுப்பாடுகளை தவிர்க்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  

டிசம்பர் 2ம் தேதி தேசிய ஊரடங்கு முடிவடைந்த பின்னர், பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் எந்த அடுக்குக்கு அமல்படுத்தப்படும் என்பதை சுகாதார செயலாளர் தீர்மானிக்க உள்ளார்.

பிரித்தானியாவில் முன் அமலிபடுத்தப்பட்ட 3 அடுக்கு கட்டுப்பாட்டை விட புதிய 3 அடுக்கு கட்டுப்பாடு மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது, அதாவது கூடுதலான பகுதிகளில 3வது அடுக்கு கட்டுப்பாடு அமல்படுத்துப்படுமாம்.

வைரஸின் பரவலைக் குறைப்பதில் முன்னேற்றம் காணும் பகுதிகள் கிறிஸ்மஸுக்கு முன்பே ஒரு அடுக்குக்கு கீழே நகர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

லிவர்பூலில் 3வது அடுக்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாங்கள் அடைந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும் என லிவர்பூல் நகர மேயரான Steve Rotheram கூறினார்.

அதே போல் தலைநகர் லண்டன் 2ம் அடுக்கு கட்டுப்பாடுகள் கீழ் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக தலைநகரை 3ம் அடுக்கு கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது லண்டனின் பொருளாதாரத்திற்கு பேரழிவு என்று நகர மேயர் சாதிக் கான் கூறினார்.

நாட்டின் பெரும்பான்மையானவர்கள் 2 மற்றும் 3 அடுக்கு கட்டுப்பாடுகளின் வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது கிறிஸ்துமஸ் வரை மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இருப்பார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



இஸ்ரேலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கலாம்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி!
[Wednesday 2024-05-01 16:00]

ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவதை எதிர்த்து, நிகராகுவா என்னும் மத்திய அமெரிக்க நாடு, ஐ.நா சபையின் ஒரு அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஜேர்மனி, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவது, 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறும் செயலாகும் என நிகராகுவா குற்றம் சாட்டியிருந்தது.



லண்டனில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!
[Wednesday 2024-05-01 16:00]

பிரித்தானியாவில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லண்டனில் இந்திய வம்சாவளியினரான 25 வயதான சாகில் சர்மா தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.



சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்: 19 பேர் பலி!
[Wednesday 2024-05-01 16:00]

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
[Wednesday 2024-05-01 16:00]

கனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது. நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது.



காசாவில் அமெரிக்காவின் மிதக்கும் தளம்!
[Wednesday 2024-05-01 07:00]

அமெரிக்க இராணுவம் காசா உதவிக்காக மிதக்கும் தளத்தை கட்டமைத்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய தரைகடலில் மிதக்கும் தளத்தை கட்டுவதைக் காட்டும் படங்களை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இது காசா கடற்கரைக்கு அவசர உதவிப் பொருட்களை விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



லண்டன் ஹெயினால்ட் பகுதியில் நடந்த தாக்குதல்: வெளியான தாக்குதல்தாரி புகைப்படம்!
[Wednesday 2024-05-01 07:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் வாள் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் இன்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹெயினால்ட் டியூப் நிலையம் (Hainault Tube station) அருகே வாள் ஏந்திய 36 வயது நபர் பொதுமக்களை தாக்கியதாக காவல்துறைக்கு காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது.



கனடாவில் மாயமான நபர் ஏரியில் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 07:00]

கனடாவில் காணாமல் போன நபரின் உடல் சென்ட் ஜார்ஜ் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ பிராந்திய காவல்துறை (OPP) செவெர்ன் டவுன்ஷிபில்(Severn Township) பகுதியில் உள்ள சென்ட் ஜார்ஜ் ஏரியில்(Lake St. George) காணாமல் போன ஒரு மனிதரின் உடலை மீட்டுள்ளது.



பக்கவிளைவுகளை ஏற்படுத்திய கோவிஷீல்டு தடுப்பூசி: ஒப்புக்கொண்ட நிறுவனம்!
[Tuesday 2024-04-30 18:00]

தங்கள் நிறுவனத் தயாரிப்பான கோவிட் தடுப்பூசியால் அபூர்வமாக பக்கள் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உண்மைதான் என முதன்முறையாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவத்துவங்கிய நிலையில், அதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் பல தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கின.



வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல்!
[Tuesday 2024-04-30 18:00]

தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பது எளிதில் வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.



பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்!
[Tuesday 2024-04-30 18:00]

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள Kersal Dale அருகே கீழ் முதுகு, தொடை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் cellophane தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.



கனடாவில் சர்வதேச மாணவர்கள் இனி 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி!
[Tuesday 2024-04-30 18:00]

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி செய்வதற்கான என மாறிவிடுகிறது என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.



பிடியாணை வழங்க சென்றபோது துப்பாக்கிச்சூடு: 3 பொலிஸார் மரணம்!
[Tuesday 2024-04-30 06:00]

அமெரிக்காவில் பிடியாணை வழங்க சென்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட கரோலினாவின் Charlotte பகுதியில் உள்ள நபர் ஒருவர், துப்பாக்கி வைத்திருந்ததற்காக பொலிஸார் பிடியாணை வழங்க சென்றனர்.



உக்ரைனுக்கு சென்ற முதல் பிரித்தானிய அரச குடும்ப நபரான டச்சஸ் ஆஃப் எடின்பர்க்!
[Tuesday 2024-04-30 06:00]

டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் உக்ரைனுக்கு சென்றதன் மூலம், ரஷ்ய படையெடுப்புக்கு பின் அங்கு சென்ற முதல் அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஆனார். அரச குடும்பத்தைச் சேர்ந்த டச்சஸ் ஆஃப் எடின்பர்க் சோஃபி ஹெலன் (Sophie Helen) உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.



பிரித்தானியாவில் கைதான முதியவர்: சிக்கிய 58,000 சிறுவர்களின் மோசமான புகைப்படங்கள்!
[Tuesday 2024-04-30 06:00]

பிரித்தானியாவில் சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தின் Surreyயில் வசித்து வந்த Mundy என்ற முதியவர், தேசிய முகமை குற்றவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.



புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம் எழுப்பத் திட்டமிடும் ஜேர்மனி!
[Monday 2024-04-29 18:00]

சில நாடுகள் புலம்பெயர்ந்தோரை எப்படி நாட்டை விட்டு வெளியேற்றலாம் என தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்காக நினைவுச்சின்னம் எழுப்பத் திட்டமிட்டுவருகிறது ஜேர்மன் தலைநகரம். இந்த திட்டத்தை முன்வைத்துள்ளவரே ஜேர்மனி பிரிந்திருந்த காலகட்டத்தில், வேலைக்காக ஜேர்மனிக்கு வந்த முதல் தலைமுறையினரின் மகள்தான். அவரது பெயர் Sevim Aydin. பெர்லின் செனேட்டில் உறுப்பினராக உள்ள Sevim Aydin, Social Democrat கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.



கனடாவில் வேகமாக பரவி வரும் வைரஸ்!
[Monday 2024-04-29 18:00]

கனடாவில் நோரோ வைரஸ் என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இது குறித்து அறிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிக வேகமாக நோய்த் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



ஈராக்கில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு தடை!
[Monday 2024-04-29 18:00]

ஈராக் அரசு இயற்றிய புதிய சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணங்களை தடை செய்கிறது. அதன்படி, ஈராக் அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ஓரின சேர்க்கையாளர்களை திருமணம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.



கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு குறித்து எச்சரிக்கை!
[Monday 2024-04-29 18:00]

கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



ஜேர்மனியில் 2 உக்ரைனியர்களுக்கு நிகழ்ந்த பரிதாபம்!
[Monday 2024-04-29 06:00]

ஜேர்மனியில் இரண்டு உக்ரேனியர்கள் கத்திக் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ஜேர்மனிய கிராமமான முர்னாவில்(Murnau) உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் சனிக்கிழமை மாலை இரண்டு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர்.



"குடியேறிகளை திருப்பி அனுப்புவோம்" - அயர்லாந்தின் சூடான திட்டம் பரிசீலனை!
[Monday 2024-04-29 06:00]

ருவாண்டா மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, நாட்டிற்குள் நுழையும் குடியேறிகளை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பும் அவசர சட்டத்தை அயர்லாந்து பரிசீலித்து வருகிறது. பிரித்தானிய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதாவிற்கு பதிலளிக்கும் வகையில், வடக்கு அயர்லாந்தின் வழியாக வரும் அடைக்கலம் தேடுபவர்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப அவசர சட்டத்தை அயர்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா