Untitled Document
April 28, 2024 [GMT]
அனுஷ்கா ஷர்மா - விராட் கோலிக்கு ஆண் குழந்தை: வெளியான அறிவிப்பு!
[Wednesday 2024-02-21 06:00]

நடிகை அனுஷ்கா ஷர்மா இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2021ல் பெண் குழந்தைப் பிறந்த நிலையில் அவருக்கு வாமிகா என பெயர் சூட்டினார்கள்.


மணிரத்தினம் படம் தான் வேணும்னு 3 படத்தை உதறித் தள்ளிய நடிகை!
[Tuesday 2024-02-20 18:00]

விசித்திரமான படங்களை எடுக்க கூடியவராகவும், எடுத்தால் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று மூக்கு மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு படத்தை எடுக்கக் கூடியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். அத்துடன் யாரென்று தெரியாதவர்கள் கூட மணிரத்தினம் படத்தில் நடித்தால் அவர்களுக்கு பேரும் புகழும் வந்துவிடும். அதனால் தான் மணிரத்தினம் இயக்கக் கூடிய படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தால் போதும் என்று பலரும் ஏங்கி வருகிறார்கள்.


புது அவதாரத்திற்கு அஸ்திவாரம் போட்ட ஜெயம் ரவி!
[Tuesday 2024-02-20 18:00]

ஜெயம் ரவி தற்போது படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோருடன் இவர் இணைந்து நடித்திருந்த சைரன் வெளியானது. அதை அடுத்து பிரதர், ஜீனி, தக் லைஃப் என இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. இந்நிலையில் புது அவதாரத்திற்கும் ஜெயம் ரவி தற்போது தயாராகி இருக்கிறார். அதாவது அண்ணன் வழியில் இயக்குனராகவும் இவர் திட்டமிட்டுள்ளார். இதை ஒரு பேட்டியில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி தற்போது இவருடைய கைவசம் 3 ஸ்கிரிப்டுகள் இருக்கிறதாம்.


பிரபல சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி கைது!
[Tuesday 2024-02-20 18:00]

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜெயலட்சுமி. இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.


யோகி பாபுவுக்காக வரிசை கட்டி காத்திருக்கும் 5 படங்கள்!
[Tuesday 2024-02-20 06:00]

நகைச்சுவை நடிகர் யோகி பாபு, இப்போ எங்கேயோ போய்விட்டார். இவருக்காக டாப் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் இப்போது வரிசை கட்டி காத்திருக்கிறது. முதலில் காமெடியனாகவும் அதன் பின் மண்டேலா, குரங்கு பொம்மை போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு ,இப்போது 5 படங்களில் அடுத்தடுத்த நடித்து தூங்க கூட முடியாமல் செம பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.


அதிகம் சம்பளம் வாங்கும் 5 நடிகைகள்!
[Tuesday 2024-02-20 06:00]

கொரோன காலகட்டத்தில் OTT-தளங்கள் அசுர வளர்ச்சியை அடைந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் OTT தளத்தில் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது OTT-யில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..


கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே விஜய் போடும் திட்டம்!
[Monday 2024-02-19 18:00]

2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.


நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை!
[Monday 2024-02-19 18:00]

சர்ச்சையாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டு நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்து பகிர்ந்திருந்தார்.


குடி போதையில் எல்லை மீறிய காஜல் அகர்வால்
[Monday 2024-02-19 18:00]

நடிகை காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு வெளி வந்த ஹோ கயா நாவில் நடித்து திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரை உலகில் தடம் பதித்தார். மேலும் இவர் தமிழ் திரையுலகில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்த பழனி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை.


விஜய் உடன் இருக்கும் நபர் யார் தெரியுமா?
[Monday 2024-02-19 06:00]

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். அவரது சம்பளமும் விண்ணைத்தொட்டிருக்கிறது. இந்த அளவுக்கு வளர அவர் கெரியரில் பல்வேறு வெற்றி தோல்விகளை சந்தித்து இருக்கிறார்.


நடிகை சீதாவை எச்சரித்த முன்னணி இயக்குனர்!
[Monday 2024-02-19 06:00]

தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகளில் சில நடிகைகளுக்கு மட்டுமே எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கும். ஏனெனில் அவர்கள் நடித்த படங்களில், நடித்த கேரக்டர்களில் மக்களின் மனங்களை வெகுவாக கவர்ந்திருப்பர். குறிப்பாக கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடிக்காத சில நடிகைகளை பெண்கள் மிகவும் விரும்புவர். அதே போல் ஆண்களும் அதுபோன்ற குடும்ப பாங்கான தோற்றத்தில் நடிக்கும் நடிகைகளை வெகுவாக ரசிப்பதுண்டு.


மலையாள சினிமாவை தூக்கி நிறுத்திய மம்முட்டியின் 7 ஹிட் படங்கள்!
[Sunday 2024-02-18 18:00]

அழகன்,மௌனம் சம்மதம், மணிரத்தினத்தின் தளபதி போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான மம்முட்டி தற்போது 70 வயதை கடந்த பின்பும் இளம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாகவும் தரமான கதைகளுடன் கூடிய படங்களில் நடித்து இன்றும் இளமை மாறாது வலம் வருகிறார் மம்முட்டி.


ஷங்கர் வீட்டில் நடக்க போகும் கல்யாணம்!
[Sunday 2024-02-18 18:00]

நம்ம ஊரு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் இந்தியன் 2 வருடகணக்காக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் விரைவில் படத்தை வெளியிடப் படகுழு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது.


நடிகர் செந்தில் போதைக்கு அடிமையானவரா?
[Sunday 2024-02-18 18:00]

நடிகர் செந்தில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச காமெடியனாக இருந்தவர். கவுண்டமணி செந்தில் கூட்டணியில் வந்த காமெடி காட்சிகள் தற்போதும் ரசிகர்கள் கொண்டாடும் நகைச்சுவையாக இருந்து வருகின்றன.


தளபதியின் முடிவு: அடுத்த விஜய் என கொண்டாடப்படும் எஸ்.கே!
[Sunday 2024-02-18 07:00]

தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த மாதம் வரையும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அவர் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு போட்டி போடுகிறார் என நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன, என்னுடைய இடமே எனக்கு வேண்டாம் என அரசியலுக்கு அடித்தளம் போட்டு விட்டார் விஜய். சினிமாவை விட்டு ஒதுங்க போவதாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார்.


இளம் வயதில் தங்கல் பட நடிகை மரணம்!
[Sunday 2024-02-18 07:00]

கடந்த 2016 -ம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத் மற்றும் பபிதா போகத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான படமாகும்.


விஜயகாந்த் மறைவுக்கு அஜித் வராததற்கு இதுதான் காரணம்!
[Saturday 2024-02-17 06:00]

அஜித் பொதுவாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பிரபலங்களின் இறப்புக்கு கண்டிப்பாக வந்துவிடுவார். அவர் வர முடியாத சூழ்நிலையில் இருந்தாலும் அஜித்தின் மனைவி ஷாலினி வந்து கலந்து கொள்வார். இந்நிலையில் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் இறந்த போது அஜித் தனது குடும்பத்துடன் துபாயில் இருந்தார்.


செல்வராகவனை மெய்மறக்க வைத்த படம்!
[Saturday 2024-02-17 06:00]

இயக்குனர் செல்வராகவன் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் மிரட்டி வருகிறார். அடுத்து அவர் புதுப்பேட்டை 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இருப்பதாக சமீபத்தில் அவரே தெரிவித்து இருந்தார். இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


காதலில் விழுந்த த்ரிஷா!
[Friday 2024-02-16 17:00]

நடிகை த்ரிஷா காதலில் விழுந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பல செய்திகள் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் என ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து வைத்துள்ளார். இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.


தமிழுக்கு வந்த 4 புதுவரவு நடிகைகள்!
[Friday 2024-02-16 17:00]

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்போது அஜித் உடனான ஆக்சன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகின்றனர். சீக்கிரம் இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஏகே 63 படத்தில் இணைய போகிறார்.


சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை!
[Friday 2024-02-16 17:00]

சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரிசாமி இயக்கத்தில் நடித்து கமல் தயாரிப்பில் எஸ்.கே. 21 படமும் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் எஸ்.கே. 23 படத்திலும் நடித்து வருகிறார்.


கஷ்டப்பட்டு நடித்தும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் 5 நடிகர்கள்!
[Friday 2024-02-16 06:00]

சினிமாவில் நல்ல நடிப்பு திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் சில நடிகர்கள் இருக்கின்றனர். அதாவது சினிமாவில் திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அதிர்ஷ்டமும் முக்கியம். அவ்வாறு பல திறமைகள் வளர்த்துக் கொண்டும் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் தற்போது வரை போராடும் 5 நடிகர்களை பார்க்கலாம்.


நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்தை மீடியா பக்கமே காட்டாமல் இருந்தது ஏன்?
[Friday 2024-02-16 06:00]

தமிழ் சினிமா ரசிகர்கள் முக்கியமாக கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. நகைச்சுவை காட்சிகளில் வெறும் சிரிக்க வைக்கும் வசனங்களை மட்டும் வைக்காமல் முற்போக்கு கருத்துக்களும் இருக்கும். அவருக்கு அடுத்து வந்த எல்லா காமெடி நடிகர்களுக்கும் அவரின் டச் கண்டிப்பாக இருக்கும்.


31 வயது நடிகையுடன் ஜோடி போடும் அஜித்!
[Thursday 2024-02-15 18:00]

அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸாகும் என்று தேவுடு காத்த கதையாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனாலும் அவரது அடுத்த படம் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.


கமலால் ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி கிடந்த இயக்குனர்!
[Thursday 2024-02-15 18:00]

உயிரோட இருக்கும் போது சிலரின் அருமை தெரியாது. அது திரைக்காவியங்களுக்கும் பொருந்தும். பொதுவாக சில படங்கள் ஆடியன்ஸ் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். ஆனால் அப்படிப்பட்ட தரமான படைப்புகளுக்கு விமர்சன ரீதியாக பாராட்டு கிடைத்தாலும் கமர்சியல் ரீதியாக வெற்றி கிடைக்காது.


இறந்துபோய் இரண்டு நாட்களுக்கு பின் சடலமாக கண்டெக்கப்பட்ட பிரபல இயக்குனர்!
[Thursday 2024-02-15 18:00]

கடந்த 1987ஆம் ஆண்டு வெளிவந்த மிழிஇதழில் கண்ணீருமாய் எனும் திரைப்படத்தில் மூலம் மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரகாஷ் கொலேரி. கேரள மாநிலம் வயநாட்டில் தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.


15 வருடங்கள் முன்பே அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்!
[Thursday 2024-02-15 06:00]

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார். காமெடி கலந்த நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் அவர் கவர்ந்து வருகிறார்.


காதலர் தினத்தையொட்டி தர்ஷா குப்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்! Top News
[Thursday 2024-02-15 06:00]

காதலர் தின ஸ்பெஷலாக நடிகை தர்ஷா குப்தா ரெட் ஹாட் சேலையில் போட்டோஷூட் எடுத்திருக்கிறார். கவர்ச்சி புகைப்படங்கள் இதோ...

Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா