Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ரிலீஸுக்கு முன்பே 300 கோடிக்கு மேல் வசூல் - சாதித்தார் கமல்!
[Friday 2013-01-11 09:00]

இது யாருமே எதிர்பார்க்காத உலக சாதனை. நிகழ்த்தியவர் வேறு யாருமில்லை நம் உலக நாயகன் தான். ஏர்டெல் நிறுவனம் மட்டும் நேற்று 30 லட்சம் முன்பதிவைத் தொட்டிருப்பதாய் தெரிவித்திருக்கிறது, விஸ்வரூபத்திற்காக. அதாவது 30 லட்சம் x 1000 = 300 கோடிகள். இதில் பாதிப்பேர் தமிழுக்கு புக்கிங், தமிழுக்கு 500 என்று வைத்துக்கொண்டாலும் 200 கோடிகளை தாண்டுகிறது. இது வெறும் ஏர்டெல் கணக்கு. இன்னும் 6 dth நிறுவனங்களும் இருக்கு. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் ரிலீஸுக்கு முன்பே 500 முதல் 1000 கோடியை வசூல் பண்ணலாம் விஸ்வரூபம். இது இதுவரை உலக அளவிலேயே எந்த திரைப்படமும் செய்திராத சாதனையாய் இருக்கும்.


கதாநாயகர்களோடு கடலை போடும் ஹன்சிகா..
[Thursday 2013-01-10 20:00]

மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்களில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே மற்றவர்களிடம் பழகுவதிலும், பேசுவதிலும் ஒரு இடைவெளி வைத்தே செயல்பட்டு வந்தார் ஹன்சிகா. ஆனால் அதுவே அவரது சினிமா மார்க்கெட்டுக்கு ஆப்பு வைக்கும் செயலாகி விட்டது. அதனால் பின்னர் படப்பிடிப்பு தளங்களில் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு அருகில் அமர்ந்து கடலை போடும் நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டார் ஹன்சிகா. இப்படி திடுதிப்பென்று பிழைக்கத் தெரிந்த நடிகையாகி விட்டதால் அதன்பிறகு இளவட்ட ஹீரோக்களுக்கு ஹன்சிகா மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்பட்டது. திரைக்குப்பின்னால் தீவிரமாக சிபாரிசு செய்யவும் தொடங்கினார்கள்.


சினிமாவிலும் அரசியல்.. விஜய் படத்திலிருந்து நாசர் நீக்கம்!
[Thursday 2013-01-10 20:00]

விஜய் நடிக்கும் படத்துக்கு நீண்ட மூக்கு வில்லன் நடிகர்தான் முதலில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் கொடுக்கப்பட்டிருந்ததாம். அந்த நடிகரின் மனைவி தயாரிப்பாளர் சங்கத்தில் கில்லி நடிகரின் தந்தைக்கு எதிர் அணியில் தீவிரமாக செயல்படுகிறவர். இதனால் ஆத்திரம் அடைந்த கில்லி நடிகரின் தந்தை விஜயமான இயக்குனருக்கு போன் போட்டு அந்த நடிகரை என் மகன் படத்திலிருந்து உடனே நீக்குங்கள். இல்லாவிட்டால் என் மகன் உங்கள் படத்தில் நடிக்க மாட்டான் என்று சவுண்ட் விட பயந்து போன இயக்குனர் தந்தைகுலத்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு. அடுத்த நிமிடமே வில்லன் நடிகருக்கு போன்போட்டு அவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷயத்தை கமுக்கமாக முடித்தாராம்.


வித்யாபாலன் பாணியில் அதிரடி கிளாமர் கதைகளில் ப்ரியாமணி..
[Thursday 2013-01-10 20:00]

சாருலதா படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்தார் ப்ரியாமணி. எந்த நடிகைகளும் செய்யத்துணியாத வேடம் என்பதால், அந்த படத்திற்கு பிறகு தன்னைத்தேடி சவாலான வேடங்கள் வரும் என்று எதிர்பார்த்திருந்தார் நடிகை. ஆனால், அந்த படத்திற்கு பிறகு ப்ரியாமணியின் மார்க்கெட்டே டல்லடித்து விட்டது. இதனால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உள்ள தனது அபிமானிகளை சந்தித்து சான்ஸ் கேட்டு பலன் அளிக்காததால் இப்போது கன்னட சினிமாவை தஞ்சமடைந்து விட்டார்.


த்ரிஷா, சமந்தா, அனுஷ்காவை பவர்ஸ்டாருக்கு பிடிக்கவே இல்லையாம்!
[Thursday 2013-01-10 20:00]

தமிழ் சினிமாவில் பவர்ஸ்டார் எனும் பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் டாக்டர் சீனிவாசன். லத்திகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சீனிவாசன், இப்போது ஆனந்த தொ‌ல்லை, கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஐ, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் இவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா பொங்கல் விருந்தாக வர இருக்கிறது. சந்தானம், பவர்ஸ்டார், சேது ஆகி‌ய மூவரும் விஷாகா சிங்கை விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். கடைசியில் விஷாகா யா‌ருடைய காதலை ஏற்றுக்கொண்டார் என்பதை முழுக்க முழுக்க ‌காமெடியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் மணிகண்டன்.


சென்னை எக்ஸ்பிரஸில் ராமேஸ்வரம் பெண்ணாக நடிக்கும் தீபிகா..
[Thursday 2013-01-10 13:00]

பாலிவுட் நடிகர் ஷாரூக் கானுக்கு, தமிழ் கலாசாரத்தின் மீது, அப்படி என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. தன்னுடைய படங்களில், தமிழ் வாசம் வீசும் வகையிலான காட்சிகளை அமைப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில், தமிழ் நடிகர்களை போல் நடித்திருந்தார். இதன்பின், ரா ஒன் படத்திலும், தென் மாநிலத்துக்காரராக நடித்திருந்தார். இப்போது, தீபிகா படுகோனேயுடன் நடிக்கும், சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும், தமிழ் கலாசாரத்தை தொட்டிருக்கிறார். இதில் அவர், வடமாநிலத்தை சேர்ந்தவராகவும், ஹீரோயின் தீபிகா, ராமேஸ்வரத்தை சேர்ந்த பெண்ணாகவும் நடித்துள்ளனராம். ராமேஸ்வரத்திலிருந்து, மும்பைக்கு வரும் தீபிகா, ஷாருக் கானை சந்திப்பதும், இதற்கு பின், இருவருக்கும் ஏற்படும் காதலும் தான், படத்தின் கதையாம்.


ஜனவரி 25ம் திகதி திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியீடு! - அப்போ டி.டி.எச். இல்..
[Thursday 2013-01-10 13:00]

ஒரு வழியாக விஸ்வரூபம் பிரச்சினை முடிவுக்கு வந்தது. கமல்-தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகிற ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்துள்ளார். கமல் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. எப்பவும் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் விரும்பும் கமல் இந்த படத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியுள்ளா‌ர். மேலும் இப்படத்தை டி.டி.எச்.,இல் வெளியிடும் புதிய தொழில்யுக்தியை கையாண்டுள்ளார்.


மாபியா கும்பலின் கதையில் அதிரடி நாயகனாக ஜெயம் ரவி
[Wednesday 2013-01-09 20:00]

அமீர் தனது கதை பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஆக்ஷ்ன் களத்திற்கு அடி எடுத்து வைத்துள்ள படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்துள்ள இப்படத்தில் ரவி கிட்டத்தட்ட 5 ரோலில் நடித்து இருக்கிறார். பல‌ கெட்-அப் மாற்றங்கள் செய்து ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜெயம் ரவியிடம் கேட்டபோது, ஆதிபகவன் படம் தொடங்கியபோது அமீர் அண்ணன் ஸ்டைலுக்கும் நமக்கும் ஒத்து போகல. அமீரிடம், அண்ணா எனக்கு சரியா வருமா என்று பலமுறை பயந்து கேட்டு இருக்கேன். அமீர் அண்ணன் தான், என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்குல, தைரியமா நடி என்று எனக்கு சப்போர்ட் பண்ணி நடிக்க வைத்தார்.


கவர்ச்சி வேடத்தை விட, வில்லி வேடத்தை விரும்பி நடிக்கும் லட்சுமி ராய்
[Wednesday 2013-01-09 20:00]

குத்துப் பாடல்களுக்கு ஆடிவந்த லட்சுமி ராய்க்கு, 'மங்காத்தா படம்', திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திலும், அவருக்கு குத்துப் பாடல் உண்டு என்றாலும், நெகடிவ் ரோலில், அசத்தியிருந்தார். பாராட்டுக்களும் குவிந்தன. இதனால், கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை விட, வில்லித் தனமான ரோல்களில் நடித்து, பெயர் வாங்குவதில், கவனம் செலுத்த துவங்கியுள்ளாராம், அவர். தற்போது, மலையாளத்தில், மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் எல்லாம், அவருக்கு சவாலான கேரக்டர்கள் தானாம். தமிழிலும், அதுபோன்ற சவாலான வேடங்களைத் தான், அவர் பெரிதும் எதிர்பார்க்கிறாராம்.


இசை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த பிரகாஷ்ராஜ், திடீரென விலகினார்: - காரணமும் சொன்னார்
[Wednesday 2013-01-09 00:00]

எஸ்.ஜே.சூர்யா இயக்கி வரும் இசை படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியுள்ளார். குஷி, வாலி, நியூ போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இடையில் சிறிதுகாலம் நடிகராகவும் வலம் வந்தார். இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இசை என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும், கூடுதலாக அப்படத்தின் இசையமைப்பாளராகவும் அவதரித்து இருக்கிறார். இப்படத்தில் சூர்யா ஜோடியாக சாவித்திரி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இசை படத்தின் கதை, இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையேயான மோதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் அந்த இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவின் லெஜெண்ட் என்று சொல்லப்படும் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காமெடிப் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா..!
[Wednesday 2013-01-09 00:00]

"ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தையடுத்து கிளாமரை குறைத்து, காமெடி மற்றும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான படங்களில், நடிப்பதில், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. அந்த வகையில், ஆர்யாவுடன் நடித்து வரும் சேட்டை படத்திலேயே, காமெடி களத்தில் இறங்கியுள்ள அவர், அடுத்ததாக, சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்திலும், காமெடி வேடத்தில் வெளுத்துக் கட்டுகிறாராம்.


இன்று போய் நாளை வா என்னுடைய கதை - அதை விற்பதற்கான உரிமையை பாலச்சந்தர் மகளுக்கு யார் கொடுத்தது?
[Wednesday 2013-01-09 00:00]

இன்று போய் நாளை வா என்னுடைய கதை, எனது படைப்பு என்பது தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே கிடையாது. அப்படி இருந்தும் என் கதையை தனக்கு சொந்தமானது என பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றிருப்பதை என்னவென்பது, என்கிறார் வேதனையுடன் இயக்குநர் கே பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்றும் இயக்குநர் திலகம் என்று புகழப்படும் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் இன்று போய் நாளை வா. இந்தப் படத்தின் கதையை பாக்யராஜுக்கே தெரியாமல் விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளார் புஷ்பா கந்தசாமி.


அஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ 1.5 கோடி சம்பளம்!
[Wednesday 2013-01-09 00:00]

அஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடிக்கிறாராம் தமன்னா. 2010-2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் கோடம்பாக்கத்தைக் கலக்கியவர் தமன்னா. ஆண்டு முழுவதும் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. ஆனால் ஒரு காதல் பிரச்சினை அவரை அப்படியே கவிழ்த்துவிட்டது.


நடிகைகளுடன் இணைத்து தொடர் கிசுகிசுக்கள் - ஆர்யா வருத்தம் தெரிவிப்பு!
[Tuesday 2013-01-08 00:00]

நடிகர் ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. அவருடன் ஜோடியாக நடித்த பல நடிகைகளோடு இணைத்து பேசப்பட்டார். தற்போது நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவி உள்ளது.இருவரும் ஏற்கனவே "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது இன்னொரு படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளனர். ஆர்யா தான் சிபாரிசு செய்து நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கியதாக கூறப்பட்டது. சமீபத்தில் நயன்தாராவுக்கு அவர் விருந்து அளித்ததாகவும் செய்திகள் வந்தன. இது குறித்து ஆர்யாவிடம் ஊடகமொன்று கேட்டபோது அவர் அதை மறுத்தார். நடிகைகளுடன் இணைத்து தன்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன என்றும் அவர் வருத்தப்பட்டார்.


ஆஸ்கர் ரேஸில் ரூ.700 கோடி வசூலித்து சாதனை படைத்தது ஜேம்ஸ் பாண்ட் படம்!
[Tuesday 2013-01-08 00:00]

ஜேம்ஸ் பாண்ட் நடித்த ஸ்கைபால் ஆலிவுட் படம் ரூ.700 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் நடித்த ஸ்கைபால் என்ற ஆங்கில படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை ரூ.700 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது தவிர சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருது பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் லின்கோலின் மற்றும் ஈரான் ஸ்பை டிராமா அக்ரோ ஆகிய படங்களும் ஆஸ்கார் விருது பட்டியலில் உள்ளன.


ஆண்கள் உலகில் இப்படியொரு பெண்ணை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை தந்து உள்ளது: - அமிதாப்பச்சன் பாராட்டிய பெண்
[Monday 2013-01-07 23:00]

பெண்கள் வலிமையானவர்கள், ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பல கோடிகளை சம்பாதித்து வந்தனர். தற்போது முதல் முறையாக பெண் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் ரூ.5 கோடி பரிசை தட்டி சென்று உள்ளார். 37 வயதான சன்மீத் கவுர் சாவ்னே என்ற அந்த பெண் 12வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள போதிலும், தனது அறிவால் சாதனை படைத்து உள்ளார். இதற்கு இந்தி மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


தனுஷூடன் நடிக்க ஆசைப்படும் மூத்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா!
[Monday 2013-01-07 23:00]

கொலைவெறி பாடல் புகழ் - நடிகர் தனுஷ் உடன் நடிக்க ஆசைப்படுவதாக மூத்த நடிகை வெண்ணிறஆடை நிர்மலா கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக சிதம்பரம் வந்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரத நாட்டியம் ஆடுவதால் உடல்வலிமை, உற்சாகமும் இருக்கும். இதை மறந்தவிட்டு, நம்மிடையே மேற்கத்திய நடன கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இக்காலக்கட்டத்திலும், பரத நாட்டியத்தை முறைப்படியாக கற்றுக்கொள்ள இளம் தலைமுறைகள் சிலர் வருகின்றனர்.


எனக்கு காதல் திருமணம்தான் நடக்கும் - கிசுகிசுக்களுக்கு பதில் தந்த த்ரிஷா!
[Monday 2013-01-07 22:00]

எனக்கு பிடித்தமானவரை பார்த்ததும் கல்யாணம் செய்து கொள்வேன். என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். த்ரிஷாவின் சமர் படம் பொங்கலுக்கு வருகிறது. இதில் முதல் தடவையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதையடுத்து ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தனர்.


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்: Top News
[Sunday 2013-01-06 23:00]

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கீ போர்டு வாசிப்பவராக வாழ்க்கையைத் துவங்கி பின்னர் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பெரிய இசையமைப்பாளர் ஆனார். அவர் கோல்வுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு உட்களில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


ரஜினி, கமல் உட்பட தமிழ் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்
[Sunday 2013-01-06 20:00]

சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரையுலகினரின் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகையர் உள்பட தமிழ்த் திரையுலகின் அத்தனைப் பிரிவினரும் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். வள்ளுவர் கோட்டம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெறும். உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரதத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர், நடிகையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் தொலைக்காட்சி துறை தொழிலாளர்களுக்கும் 12.3 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டது.


பிரசன்னாவிற்கு அதிஸ்டத்தை கொடுக்கும் 2013
[Sunday 2013-01-06 20:00]

2012 எல்லா வகையிலும் பிரசன்னாவுக்கு முக்கியமானது. பல‌ரின் வயற்றெ‌ரிச்சலுடன் இந்த வருடத்தில் அவர் சினேகாவை மனைவியாக்கினார். தொடர்ந்து ஜோடியாக அரை டஜன் விளம்பர வாய்ப்புகள். 2013 இதைவிட சிறப்பாக அமையும் அடையாளங்களுடன் தொடங்கியுள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா – இது வேறு பிரசன்னா – இயக்கத்தில் 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் லேகா வாஷிங்டன்னுடன் நடித்து வருகிறார். 'அச்சமுண்டு அச்சமுண்டு' அருண் வைத்தியநாதன் தயா‌ரிக்கும் படம் இது. இதையடுத்து தெலுங்கில் ஒரு படம். ஹீரோ நாகார்ஜுனா. கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மா‌ரிமுத்து இயக்கத்தில் ஒன்று, அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் ஒன்று, முரண் இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கத்தில் இன்னொன்று.


விஜய் நடிக்கும் அடுத்த படம் 'தளபதி'
[Sunday 2013-01-06 20:00]

ர‌ஜினியின் தங்கமகன் படத்தின் பெயரை விஜய்யின் படத்துக்கு வைத்தார்கள் என்றும் இதனால் ர‌ஜினி ரசிகர்கள் கோபப்பட்டார்கள் என்றும் சில வாரங்கள் முன்பு செய்தி வெளியானது நினைவிருக்கலாம். கண்ணன், கிருஷ்ணன், சிவா, லட்சுமி, பார்வதி என்று கடவுளின் பெயரையே மனிதனுக்கு வைக்கும் போது ஒரு நடிக‌ரின் படத்தின் பெயரை இன்னொரு நடிகர் பயன்படுத்தினால் லூஸுத்தனமாக ஏன் எதிர்க்கிறார்கள் என்றுதான் தெ‌ரியவில்லை. நடிகர்கள் விஷயத்தில் நமக்கிருக்கும் இந்த சொரணை சமூக விஷயங்களில் மட்டும் இல்லாதது ஏன்?


இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக் ஆகிறது - ரஜினி, கமல்,ஸ்ரீபிரியா வேடங்களில் தனுஷ், சிம்பு, ஸ்ருதிஹாசன்
[Sunday 2013-01-06 20:00]

ரஜினி, கமல் இணைந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் ரீமேக் ஆகிறது. 1978-ல் இப்படம் ரிலீசானது. நாயகிகளாக ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா நடித்தனர். ஸ்ரீதர் இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். ரூ.68 லட்சத்தில் இப்படத்தை எடுத்தனர். இதில் இடம் பெற்ற கிண்ணத்தில் தேன் வடித்து, என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி, ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது, தண்ணி கருத்திருக்கு போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின. படமும் வெற்றிகரமாக ஓடியது. இதன் ரீமேக்கில் தனுஷ், சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ரஜினி வேடத்துக்கு தனுசும், கமல் கேரக்டருக்கு சிம்புவும் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசனிடம் பேசுகிறார்கள்.


சூப்பர் ஸ்டாரை சந்திக்க ஜப்பானிலிருந்து வந்த ரசிகை
[Sunday 2013-01-06 19:00]

தன்னைப் பார்க்க ஜப்பானிலிருந்து வந்த க்யோகா என்ற ரசிகையைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. தங்கள் தலைவர் ரஜினியை ஒரே ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும். முடிந்தால் அவருடன் கைகுலுக்கி ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் தலையாய கனவு என்றால் மிகையல்ல. இதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எத்தனை தூரத்தையும் கடந்து வரத் தயாராக உள்ளனர்.


அந்தமானில் டூயட் போடும் 'எதிர்நீச்சல்' படக்குழு
[Sunday 2013-01-06 19:00]

சிவகார்த்திகேயன், ப்‌ரியா ஆனந்த் நடிக்கும் எதிர்நீச்சல் படத்தின் டூயட் அந்தமானில் படமாக்கப்படுகிறது. தனுஷ் தயா‌ரிக்கும் எதிர்நீச்சல் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. நடிகராக அவரது வளர்ச்சியைவிட இந்த தயா‌ரிப்பு வேகம் அதிகமாகயிருப்பதாக அபிப்ராயப்படுகிறார்கள். நயன்தாராவுடன் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடி படத்தின் மார்க்கெட் வேல்யூவையும் கன்னா பின்னாவென்று உயர்த்தியிருக்கிறார். வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்கிவரும் இந்தப் படத்தில் நிஜக்காதலர்களைவிட நெருக்கமாக நடித்து வருகிறார்கள் சிவ கா‌ர்த்திகேயனும், ப்‌ரியா ஆனந்தும்.


'தீயா வேலை செய்யணும் குமாரு' சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த் - ஹன்சிகா நடிக்கும் படத்தின் பெயர்
[Saturday 2013-01-05 19:00]

சமீபகாலமாக தமிழ் சினிமாக்களில் தலைப்புக்கு ரொம்ப பஞ்சமாகிவிட்டது. இதனால் பழைய பட தலைப்புகள் மீண்டும் இப்போது உருவாகி வரும் படங்களுக்கு வைக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வித்தியாசமான தலைப்புகளை அதிகமாக வைக்க தொடங்கிவிட்டனர். அந்தவகையில் அட்டகத்தி, யாருடா மகேஷ், கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஹாய் டா உள்ளிட்ட பட தலைப்புகளின் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருக்கும் தலைப்புதான் 'தீயா வேலை செய்யணும் குமாரு...' சுந்தர்.சி தான் இப்படியொரு தலைப்பை தனது படத்திற்கு வைத்திருக்கிறார். கலகலப்பு படத்தை தொடர்ந்து தற்போது விஷாலை வைத்து இயக்கி வரும் மத கஜ ராஜா படத்தை அடுத்து இயக்க போகும் புதிய படத்தின் தலைப்பு தான் இது. இப்படத்தில் பாய்ஸ் நாயகன் சித்தார்த் ஹீரோவாகவும், ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.


தமது பிரச்சினையை தாமே படமாக தயாரிக்கும் நாகப்பட்டின மீனவர்கள்
[Saturday 2013-01-05 19:00]

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கே.டி.முருகன். இவர் தனது மீனவ நண்பர்களுடன் இணைந்து நாகை பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு பட நிறுவனத்தை துவங்கி 'வங்கக்கரை' என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார். அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். ஜோதிஷா, சைனு என்ற சிறுபட்ஜெட் பட நாயகிகள்தான் ஹீரோயின். 'தினமும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருப்பன் நாகை மீனவன். எதிர் கரையில் சிங்கள துப்பாக்கி, இக் கரையில் நம்ம போலீஸ் துப்பாக்கி, நடுக்கடலில் சுறா, திமிங்கிலம் இத்தனைக்கும் இடையில் வாழும் மீனவர்களின் கதை. எங்கள் கதையை யாரும் ஒழுங்காக சொல்லவில்லை. அதனால் நாங்களே படம் எடுக்க வந்துவிட்டோம்' என்கிறார் கே.டி.முருகன்.


இந்தியில் 'சி.எம்' எனும் படத்தில் நடிக்கிறார் அர்ஜுன்
[Saturday 2013-01-05 18:00]

தன் மகள் ஐஸ்வர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கும் அர்ஜுன். தன்னை இந்திக்கு கொடுக்கப்போகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்த அர்ஜுன் இந்திப் படங்களின் பக்கம் சென்றதே இல்லை. பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் இந்திக்குள் நுழைந்து விடலாம் என்று கணக்குப்போட்டார். அந்த கணக்கு தப்பாகிவிட்டது. அந்தப் படம் சில பிரச்னைகள் காரணமாக தமிழில் மட்டும் வெளிவந்தது. இந்தியில் வெளியாகவில்லை. இந்தியில் வெளியாகி இருந்தால் அர்ஜுனுக்கும், அதில் ஹீரோயினாக நடித்த காஜல் அகர்வாலுக்கும் பெரிய பிரேக் கிடைத்திருக்கும். எப்படியாவது இந்தியில் நடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அர்ஜுன் தானே ஒரு படத்தை இந்தியில் தயாரித்து நடிப்பது என்ற முடிவு செய்தார்.

Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா