Untitled Document
May 19, 2024 [GMT]
பீகாரில் கழுதை மீது ஏறிச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது வழக்கு!
[Thursday 2019-05-02 08:00]

பீகார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்துக்குட்பட்ட ஹுலாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் மணி பூஷன் ஷர்மா(44). ஜெஹனாபாத் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் போதெல்லாம் சமீபகாலமாக சுயேட்சை வேட்பாளராக இவர் போட்டியிட்டு வந்தார். அவ்வகையில், கடந்த திங்கட்கிழமை தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இவர் கழுதை மீது அமர்ந்து வந்தார். அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்களிக்கும் மக்களை கழுதைகளாக பார்ப்பதை சுட்டிக்காட்டவே இந்த கழுதை சவாரி என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.


‘செல்பி’ மோகத்தால் ஓடும் ரெயிலில் சிக்கி 3 வாலிபர்கள் உயிரிழப்பு!
[Thursday 2019-05-02 08:00]

‘செல்பி’ மோகம், புற்றுநோய் போல இளம்தலைமுறையினர் இடையே பரவி வருகிறது. ‘செல்பி’ படம் எடுக்க வேண்டும் என்றால் இவர்கள் இடம், காலம், சூழல் எதையும் பார்ப்பது இல்லை. அதுவும் இப்போது கடலில் இறங்கி குளித்துக்கொண்டே ‘செல்பி’ எடுப்பது, ஓடும் ரெயில் அல்லது பஸ் முன் ‘செல்பி’ எடுப்பது என ஆபத்தோடு கை குலுக்குவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை. இது சமயங்களில் உயிருக்கு உலை வைத்து விடுகிறது. இப்படி அரியானாவில் நடந்த ஒரு சம்பவம், நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. அங்கு பானிப்பட்டில் வசித்து வந்த சன்னி, சாமன், உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஷன், டெல்லியை சேர்ந்த தினேஷ் ஆகிய 4 பேரும் உறவினர்கள். 18 முதல் 20 வயது வரையிலானவர்கள். இவர்கள் கடந்த திங்கட்கிழமையன்று டெல்லி-அம்பாலா வழித்தடத்தில் உள்ள பூங்காவுக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். அந்த பூங்காவின் பின்புறம் இருந்த ரெயில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ படம் எடுக்கலாம் என அவர்களுக்கு ஆசை வந்தது.


கருக்கலைப்பின்போது பெண் மரணம்: போலி பெண் மருத்துவர் கைது!
[Wednesday 2019-05-01 16:00]

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவி அரிஜன காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி வனிதாமணி (37). இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். 5 மாத கர்ப்பமாக இருந்த அவர் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார். இதற்காக வடசித்தூரில் உள்ள யேகோவாநிஷி ஆயுர் வேதிக் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையை அணுகினார். இந்த மருத்துவமனையை முத்துலட்சுமி என்பவர் நடத்தி வந்தார். அவருக்கு துணையாக சித்தா மருத்துவம் படித்து வரும் முத்துலட்சுமியின் மகன் கார்த்திக் (27) இருந்து வந்தார். அங்கு சென்ற வனிதாமணிக்கு முத்துலட்சுமியும், கார்த்திக்கும் கருக்கலைப்பு ஊசி போட்டனர். இதில் வனிதாமணி உடல் நிலை மோசமானது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் முத்துலட்சுமி போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. அவர் ஆயுர் வேதம் தொடர்பாக எந்த படிப்பும் படிக்கவில்லை என்பதும், அவர் ஆயுர் வேதம் படித்ததாக கூறி சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.


3 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொடூரமாக கொன்ற வாலிபர்!
[Wednesday 2019-05-01 16:00]

தெலுங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த 25-ந்தேதி மாயமானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஊருக்கு வெளியே உள்ள பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடந்தார். விசாரணையில் மாணவியை அந்த கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி கற்பழித்து கொன்றது தெரிய வந்தது. ராவிர்யாரி கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சீனிவாச ரெட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17 வயது மாணவியையும், 2015-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவியையும் கற்பழித்து கொன்று உடலை பாழடைந்த கிணற்றுக்குள் புதைத்ததாக தெரிவித்தார்.


பெண்கள் துணியால் முகத்தை மூட தடை விதிக்குமாறு சிவசேனா கோரிக்கை!
[Wednesday 2019-05-01 16:00]

இலங்கையில் சமீபத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்ததை தொடர்ந்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களுக்கு பெண்கள் யாராக இருந்தாலும் தங்கள் முகத்தை துணியால் மூடியபடி அணிந்து வரக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்தியாவிலும் பெண்கள் துணியால் முகத்தை மூட தடை விதிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ராவணனின் இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ராமனின் அயோத்தியிலும் இந்த ஆபத்து உள்ளது. பிரதமர் மோடி இன்று அயோத்தி செல்கிறார். இந்த நேரத்தில் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்ப சிவசேனா விரும்புகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெண்கள் தங்கள் முகத்தை துணியால் மூடிய படி வெளியில் வருவது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் போலீசை எரித்து கொன்ற கான்ஸ்டபிள்!
[Wednesday 2019-05-01 16:00]

தெலுங்கானா மாநிலத்தில் ராமசந்திரபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணி புரிபவர் மந்தாகினி. இவர் கடந்த திங்கள் இரவு பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை சதானந்தம் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் சில மாதங்களுக்கு முன் சங்கரெட்டி காவல் நிலையத்தில் மந்தாகினியும், கான்ஸ்டபிளாக பணிப்புரிந்த பிரகாஷ் ராஜும் காதலித்து வந்துள்ளனர். பிரகாஷ் ராஜ் ஏற்கனவே திருமணமானவர். இவர்களுக்குள் இருந்த கள்ளக்காதல், இருவரும் ஹட்னூர் மற்றும் ராமசந்திரபுரம் காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்த பின்னரும் தொடர்ந்துள்ளது.


இலங்கையை சேர்ந்த 3 பேர் சென்னையில் சுற்றிவளைப்பு: இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களா என சந்தேகம்?
[Wednesday 2019-05-01 08:00]

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் மரணம் அடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இலங்கையிலேயோ அல்லது அண்டை நாடுகளிலேயோ பதுங்கி இருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு மிக அருகேயுள்ள தமிழகத்தில் இந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த யாரேனும் தங்கியுள்ளனரா? என்றும் கடந்த சில நாட்களாக சோதனை நடந்து வருகிறது. சந்தேகத்துக்கிடமானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் நெருங்கிய நண்பர் ஹசன் என்பவர் சென்னை மண்ணடிக்கு வந்து சென்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளிப்பு: கணவர் கைது!
[Wednesday 2019-05-01 08:00]

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஜீவா (வயது 28). வேன் டிரைவர். இவருக்கும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (23) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி, கணவர் வீட்டில் இருந்து வெளியில் ஓடி வந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆனாலும் அவரது உடல் 90 சதவீதம் கருகியது. பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு தப்பிய ஓடிய வட மாநில வாலிபர்!
[Wednesday 2019-05-01 08:00]

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செக்காணூரணியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகள் வெண்ணிலா(வயது 22). இவர் கப்பலூர் சிப்கோவில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அப்போது வெண்ணிலாவுக்கும், அங்கு வேலை பார்த்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜமால் அலி(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் நெருங்கி பழகினர். இதில் அந்த பெண் கர்ப்பமானார். உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். ஆனால் ஜமால் அலி அசாமுக்கு சென்று பெற்றோரிடம் சம்மதம் பெற்று விட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். மேலும் வெண்ணிலாவிடம் கூறாமல் அவர் அசாமுக்கு சென்று விட்டார்.


4 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மோடியின் முகம் சுருங்கி விட்டது: ராகுல் காந்தி!
[Wednesday 2019-05-01 08:00]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது. அவர் பேட்டிகளின் போது ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார்.


இளம்பெண்கள் பாலாத்காரம் செய்து படுகொலை - கிணற்றில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்!
[Tuesday 2019-04-30 17:00]

தெலங்கானாவின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமானார். அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் சிறுமியின் கைப்பை பாழடைந்த கிணறு ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றை ஆய்வு செய்தபோது, அதில் மாயமான சிறுமியின் உடல் கிடைத்துள்ளது.


பொள்ளாச்சி பாலியல் வழக்கை பெண் அதிகாரி விசாரிக்க கோரி வழக்கு!
[Tuesday 2019-04-30 17:00]

சென்னை ஐகோர்ட்டில் ராதிகா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:- பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புலன் விசாரணை நடத்தினர். பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சாதாரண உடையில் சென்று விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை.


பொதுத்தேர்வில் 99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மதிப்பெண் போட்ட ஆசிரியை பணிநீக்கம்!
[Tuesday 2019-04-30 17:00]

தெலுங்கானா மாநிலத்தில் இன்டர்மிடியேட் தேர்வு (11 மற்றும் 12-ம் வகுப்பு) பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடந்தது. இந்த தேர்வை மொத்தம் 9.47 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் மிகப்பெரிய குளறுபடி காணப்பட்டது. பாஸ் மதிப்பெண் பெற வேண்டிய 3.28 லட்சம் பேர் தோல்வி அடைந்ததாக தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் மறு மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு முடிவு காரணமாக 21 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதைதொடர்ந்து தெலுங்கானா பள்ளி கல்வித்துறை 3 பேர்கொண்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் மாணவி ஒருவருக்கு 99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் இருந்த விவரம் வெளியே தெரிய வந்து உள்ளது. கிரிஜா நவ்யா என்ற மாணவி தெலுங்கு பாடத்தில் 0 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.


திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய ஒப்பந்த பணியாளர்!
[Tuesday 2019-04-30 17:00]

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் அனீஷ். விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக ஒரு பெரிய கைப்பையை இன்று அவர் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சந்தேகப்பட்ட பாதுகாப்பு படையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். அவர்களை கண்டதும் கைப்பையை கீழே போட்டுவிட்டு அனீஷ் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர்.


சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை, ரூ.7½ லட்சம் கொள்ளை!
[Tuesday 2019-04-30 08:00]

சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் கிரண்ராவ். சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர். சென்னை அண்ணாசாலையில் கிரண்ராவுக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு விலை உயர்ந்த நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடையின் சார்பில் மதுரையில் நகை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சி முடிவடைந்ததும் மீதி நகைகளையும், நகை விற்ற பணத்தையும் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். நகைக்கடை பொதுமேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் 2 பேர் காரில் ரூ.11 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் நகை விற்பனையான தொகை ரூ.7½ லட்சத்தையும் ஒரு பெரிய பையில் வைத்து காரில் எடுத்து வந்தனர். நேற்று அதிகாலை காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு கார் ஒன்று வந்தது. அந்த காரில் வந்தவர்கள் நகைக்கடை ஊழியர்கள் வந்த காரை வழிமறித்தனர். அதில் இருந்து டிரைவர் உள்பட 7 பேர் இறங்கினர். அதில் 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்தனர். தங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறிய அவர்கள், அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தனர்.


அதிதீவிர புயலாக மாறும் 'ஃபானி' புயல்: மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்.
[Tuesday 2019-04-30 08:00]

சென்னைக்கு தென்கிழக்கே 870கிலோமீட்டர் தொலைவில் ஃபானி புயல் நிலைகொண்டுள்ளது என்றும் இந்த புயல் நாளை (செவ்வாய்கிழமை) அதிதீவிர புயலாக மாறுவதால், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபானி புயல் தொடர்ந்து தீவிர புயலாகவும், நாளை அதிதீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என்று குறிப்பிட்டார். கடல் நிலையை பொறுத்தவரையில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகவே ஏப்ரல் 30 தொடங்கி மே 2ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


உத்திரபிரதேசத்தில் சைக்கிளுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்தது!
[Tuesday 2019-04-30 08:00]

கன்னோஜ் தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அப்போது 2 வாக்குச்சாவடிகளில் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட்டால் விவிபாட் கருவியில் தாமரை சின்னத்தை காட்டியதாக புகார் எழுந்தது. அதோடு இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் பலருக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கிழிந்த காலணியை அணிந்து போட்டியில் ஓடியது ஏன்? - தங்கம் வென்ற கோமதி பேட்டி. Top News
[Tuesday 2019-04-30 08:00]

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கோமதியின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் கிராமம் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பல சோதனைகளை கடந்து ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் நேற்று அவரது சொந்த ஊரான முடிகண்டம் கிராமத்திற்கு வந்தார். அவருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவரை கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து, பாராட்டி வாழ்த்தினார்.


10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றது தெரியாமல் தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி!
[Monday 2019-04-29 17:00]

மதுராந்தகத்தை அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சந்தியா (15). இவர் மொரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் பொதுத்தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி அடிக்கடி பெற்றோர் மற்றும் தோழிகளிடம் கூறி வருத்தம் அடைந்தார். இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியிருந்த சந்தியா தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்தார். தேர்வு முடிவை பார்க்காத சந்தியா இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.


உணவை குறை சொன்ன பாதுகாப்பு படை வீரர் மோடியை எதிர்த்து போட்டி!
[Monday 2019-04-29 17:00]

பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்!
[Monday 2019-04-29 17:00]

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஆதிரா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியின் குழந்தை ஆதுஷா (1½). நேற்று காலை ஆதிரா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பதறியடித்துக் கொண்டு சென்றார். தனது குழந்தை மூச்சு திணறல் காரணமாக மயங்கி விழுந்துவிட்டதாக கூறிய அவர் உடனே சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார். அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.


பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை!
[Monday 2019-04-29 17:00]

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிகை விடுத்து உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


இலங்கை தம்பதிக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கு குழந்தை விற்பனை - வழக்கறிஞர் புகார்!
[Monday 2019-04-29 08:00]

ராசிபுரம் குழந்தை விற்பனைக் கும்பல், இலங்கை தம்பதிக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளதாக போலீசில் அளிக்கப்பட்டுள்ள புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தைச் சேர்ந்த நல்வினை விஸ்வராஜூ என்பவர் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் நிலவாரப்பட்டியைச் சேர்ந்த வடிவேல் – அமுதா தம்பதிக்கு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை மறுநாளே, செவிலியர் அமுதா மூலம் ஈரோட்டைச் சேர்ந்த கோமதி யுவராஜ் என்ற ஏஜெண்டுக்கு கைமாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்க உள்ள நிலையில் புகார் அளித்த பெண்ணை கொலை மிரட்டல் விடுத்த பார் நாகராஜ்!
[Monday 2019-04-29 08:00]

பொள்ளாச்சியைச் சேர்ந்த மோசடி தம்பதிக்கு ஆதரவாக, சூலூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை, பார் நாகராஜ் எனக் கூறிக்கொண்டு, நபர் ஒருவர் மிரட்டும், ஆடியோ வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த சம்பத் – கோகிலா தம்பதி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இவர்கள், கோயம்புத்தூர் சூலூரைச் சேர்ந்த ஜூலியன் என்பவரிடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 60 லட்ச ரூபாய் அளவிற்கு பணம் பெற்று, ஏமாற்றியதாக சூலூர் காவல்நிலையத்தில் முதலில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், வழக்குப் பதிவாகவில்லை. இதையடுத்து, கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூலூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவானது.


பல மாதங்களாக ஊதியம் தராத விரக்தியில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர் தற்கொலை!
[Monday 2019-04-29 08:00]

ஜெட் ஏர்வேசில் பணியாற்றி வந்த மும்பையை சேர்ந்த ஊழியர் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மும்பையை சேர்ந்த சைலேஷ் குமார் சிங் என்பவர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.


2-வது நாளாக ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு!
[Monday 2019-04-29 08:00]

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது. மேலும் அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய துணை நிறுவனங்களின் பயணிகள் விமானத்தையும் இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்தநிலையில் பயணிகள் சேவைக்கான கம்யூட்டர் சாப்ட்வேரில் நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டது.


கள்ள மருந்துகள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா!
[Sunday 2019-04-28 13:00]

இந்தியாவில் மருந்துகள் கள்ளத்தனமாக தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டு விலை மலிவான மருந்து தயாரிப்புக்கு எதிரான தாக்குதல் என்றும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் “ஸ்பெஷல் 301 ரிப்போர்ட்” (Special 301 Report) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிவுசார் சொத்துடமை பாதுகாப்பு தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வு செய்து வெளியிடப்படும் இந்த அறிக்கையில், அறிவுசார் சொத்துடைமை மீறலுக்காக கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டு உலகளவில் விற்பனையாகும் மருந்துகளுக்கு இந்தியாவும், சீனாவும் மூலாதாரமாக திகழ்வதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிராண்ட் பெயரிலான மருந்துகளை, காப்புரிமை விதிகளை மீறி, பொதுப்பெயர் அல்லது வேதிப்பெயரில் தயாரித்து இந்தியாவும் சீனாவும் உலக அளவில் விற்பனை செய்கின்றன என்ற அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா கூறியுள்ளது.


மனைவியை சந்திக்க விடாமல் அடித்து உதைத்ததால் வாலிபர் தற்கொலை!
[Sunday 2019-04-28 13:00]

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முருக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சசிகுமார் (வயது 26), சதீஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சசிகுமார் பி.எஸ்.சி. வேளாண்மை படித்து விட்டு சொந்தமாக விவசாய பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும்போது கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்த நரசிம்மன்-ஜோதி தம்பதியினரின் மகள் ஜெயபிரியா என்பவரை காதலித்தார். இந்த விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சசிகுமாரும், ஜெயபிரியாவும் வீட்டை விட்டு சென்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அப்போது காதல் ஜோடி 2 பேரும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டனர். பின்னர் இருகுடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி சசிகுமார் பெற்றோருடன் காதல் ஜோடி தம்பதியினரை அனுப்பிவைத்தனர். கடந்த 2 வருடங்களாக சந்தோசமாக சசிகுமாரும்- ஜெயபிரியாவும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் படித்த சான்றிதழை வீட்டில் இருந்து எடுத்துவருவதாக கூறிவிட்டு ஜெயபிரியா தனது தாயார் வீட்டிற்கு சென்றார்.

Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா