Untitled Document
May 3, 2024 [GMT]
'பிரதமர் நரேந்திர மோடி' பங்கேற்ற அரசு விழாவில் பெண் மந்திரியின் இடுப்பில் கைவைத்த சக மந்திரி!
[Wednesday 2019-02-13 08:00]

திரிபுரா மாநிலத்தில் முதல்-மந்திரி பிப்லாப் குமார்தேவ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அகர்தலா நகரில் உள்ள விவேகானந்தா மைதானத்தில் கடந்த 9-ந் தேதி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது, மேடையில் வைத்து மாநில விளையாட்டு மற்றும் உணவுப்பொருள் வினியோகத்துறை மந்திரியான மனோஜ் காந்தி தேவ், சக பெண் மந்திரியான சாந்தனா சாக்மாவின் இடுப்பில் கை போட்டார். இது தொடர்பான காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரச்சினை எழுப்பி உள்ளது. அநாகரிகமான முறையில் பெண் மந்திரியின் இடுப்பில் கைபோட்ட மந்திரி மனோஜ் காந்தி தேவ்வை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரியை வலியுறுத்தி வருகிறது.


"ரபேல் ஊழலுக்கும், ராகுல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை" - ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு!
[Wednesday 2019-02-13 08:00]

ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல், ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்கள் இடையேயானது. இது மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின் கீழான சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் திட்டங்கள் தொடர்பானது.


"இந்தியாவில் சைபர் மோசடி வழக்குகள் அதிகரிப்பு" - மத்திய அரசு தகவல்!
[Tuesday 2019-02-12 17:00]

இந்தியாவில் பல்வேறு விசாரணை முகமைகளால் பதிவு செய்யப்பட்ட சைபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2014-ல் இருந்து 2016 வரையில் கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் ஜி அகிர் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) அறிக்கையின்படி, 2016-ல் சைபர் மோசடி தொடர்பாக 2,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2015-ம் ஆண்டு 2,384 ஆகவும், 2014-ம் ஆண்டு 1,286 ஆகவும் இருந்துள்ளது.


ரபேல் போர் விமானம் தொடர்பான 'சி.ஏ.ஜி.' அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
[Tuesday 2019-02-12 17:00]

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய கணக்கு தணிக்கைத்துறையின் அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பில் காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் மத்திய கணக்கு தணிக்கைத்துறையின் கணக்காய்வு குழுவினர் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


'கழிப்பறைகளை காண சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் வரும்' - பிரதமர் மோடி நம்பிக்கை!
[Tuesday 2019-02-12 17:00]

பிரதமர் மோடி அரியானா மாநிலம், குருஷேத்ரா நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். தனது உரையினிடையே நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள ஆய்வுக்குழுவினரை குறிப்பிட்டுப் பேசிய மோடி,


"மோடியை கண்டித்து மீண்டும் தர்ணா" - மம்தா பானர்ஜி!
[Tuesday 2019-02-12 17:00]

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆக மறுத்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா சென்று அவரை கைது செய்ய முயன்றனர். சி.பி.ஐ.யின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். மத்திய அரசு தூண்டி விட்டதன் பேரில் சி.பி.ஐ. இப்படி நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார். கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி அவர் போராட்டம் மேற்கொண்டார். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு இதை ஏற்க மறுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ்குமார் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை கை விட்டார்.


மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு!
[Tuesday 2019-02-12 09:00]

செயல்பாட்டு காரணங்கள் மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் இண்டிகோ நிறுவனத்தின் 30 விமானங்கள் இன்று (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவையை மீண்டும் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


"மோடியை ஆட்சியை விட்டு விரட்டியடிப்பது தான் எனது முதல் வேலை" - பிரகாஷ்ராஜ் பேட்டி!
[Tuesday 2019-02-12 08:00]

பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திண்ணையில் அமர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மக்களை ஒன்றாக அமரவைத்து அவர்களிடம் பேசுகிறார். இது தவிர 8 ஆட்டோக்களில் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் பிரசாரமும் செய்கிறார். கட்சி சார்பற்ற முறையில் போட்டியிடும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பிரசாரத்தின்போது கூறுகிறார். மேலும் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:- நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.


"தமிழகத்தில் தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வரும் மோடி அரசு" - காரணம் என்ன?
[Tuesday 2019-02-12 08:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக ஒவ்வொரு முறையும் சமூக வலைதளங்களில் #GobackModi டிரெண்டாகிறது. ஆங்காங்கே கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெறுகின்றன. சமூக வலைதளங்களில் காணப்படும் எதிர்ப்பும் கறுப்புக் கொடி போராட்டங்களும் மக்களின் மனநிலையை உண்மையிலேயே பிரதிபலிக்கின்றனவா? பிப்ரவரி பத்தாம் தேதியன்று திருப்பூரில் பல்வேறு அரசுத் திட்டங்களைத் துவக்கிவைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்திற்கு வந்தபோது அவருக்கு எதிராக #gobackmodi ஹாஷ்டாக் உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க., திருப்பூரில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தையும் நடத்தியது. பிரதமரின் பேச்சுக்கும் அறிவிப்புகளுக்கும் தேசிய அளவில் கிடைத்த கவனத்தைவிட, இந்தப் போராட்டங்களுக்குக் கிடைத்த கவனம் அதிகமாகவே இருந்தது. இப்படி நடப்பது முதல் முறையல்ல. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று சென்னையில் பாதுகாப்புத் துறை தொடர்பான கண்காட்சியான 'டிஃபன்ஸ் எக்ஸ்போ - 2018' சென்னைக்கு அருகில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை முறைப்படி துவக்கிவைக்கவும் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் சில பிரிவுகளைத் துவக்கிவைக்கவும் பிரதமர் நரேந்திர மோதி சென்னைக்கு வருகைதந்தார்.


அறுவடை காலத்தின் நிறைவை காளை பந்தயத்துடன் கொண்டாடும் இந்திய மாநிலம்!
[Monday 2019-02-11 17:00]

வருடாந்த ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல் போன்ற வீரதீர போட்டிகளைப் போன்று தென்னிந்திய மங்களூரில் வருடாந்த கம்பாலா எனப்படும் எருமை மாடுகளை பிடித்துக்கொண்டு ஓடும் பந்தயம் இடம்பெற்று வருகின்றது. இந்த வருடத்தின் அறுவடைக் காலம் மிக லாபகரமாக இடம்பெற்றதை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேறு நிறைந்த பாதையில் எருமை மாடுகளை எந்தளவிற்கு கட்டுப்படுத்தி எவ்வளவு வேகமாக அவற்றுக்கு ஈடுகொடுத்து ஓட முடியும் என்பதை நிர்ணயிக்கும் வகையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வை பார்வையிட வந்திருந்த அமெரிக்கரான யூசெப் என்பவர் கூறுகையில்,


பிரதமர் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்? - 'காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்' குஷ்பு கேள்வி
[Monday 2019-02-11 17:00]

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் என்ற முறையில் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்?. அதை தான் நாங்கள் கேட்டு வருகிறோம். அதற்கு பதில் தரவில்லை என்பதால் தொடர்ந்து கேட்டு வருகிறோம். 2-ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி மட்டும் தான் 2014-ல் பேசினர். ஆனால் அதில் ஊழல் இல்லை என கோர்ட்டு கூறி விட்டது. 1,76,000 கோடியில் எத்தனை சைபர் இருக்கிறதோ அத்தனை போஸ்டர் அடித்து ஜெயித்திருக்கிறார்கள். இனியும் மக்கள் ஏமாற தயாராக இல்லை. தமிழகத்தில் நாங்கள் யாரும் கோஷ்டி பார்க்கவில்லை. காங்கிரசில் எல்லாருக்கும் ராகுல் காந்தி மட்டும் தான் தலைவர். இளம் தலைமுறையினருக்கு கட்சியில் உயர்பதவி அளித்தது நல்ல வி‌ஷயம்.


"மக்கள் பணத்தை திருடிய மோடி அதை அம்பானிக்கு கொடுத்து விட்டார்" - ராகுல் குற்றச்சாட்டு.
[Monday 2019-02-11 17:00]

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ ப்ரெயென், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர். அப்போது உண்ணாவிரதப் பந்தலில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,


300 கோடி குழந்தைகளின் பசியாற்றிய சாதனையை உணவு பரிமாறி கொண்டாடிய பிரதமர் மோடி!
[Monday 2019-02-11 17:00]

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் 'அக்‌ஷயா பாத்திரம்' என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவியர்களுக்கு இலவசமாக பகல் உணவு வழங்கி, நாட்டில் கல்வியறிவின் வளர்ச்சிக்காக சேவை புரிந்து வருகிறது. பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகள் கல்வியின் மீது கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதற்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் பலகோடி மாணவ-மாணவியருக்கு பகல் உணவு அளிக்கப்பட்டுள்ளது.


"பிரதமர் மோடியின் அரசியல் செயற்பாடுகள் நேர்மையானவை": ராஜ்நாத் சிங்!
[Monday 2019-02-11 08:00]

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் நேர்மையானதும் மக்களை கருத்திற்கொண்டதாகுமென உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் நிகழ்ச்சியொன்றில் நேற்று (சனிக்கிழமை) பங்கேற்றிய ராஜ்நாத் சிங் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,


'ரபேல் விவகாரம்': காங்கிரஸ் தலைவருக்கு ராகுலுக்கு சிவசேனா கட்சி ஆதரவு!
[Monday 2019-02-11 08:00]

ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து சிவசேனா தனது கட்சியின் அதிகாரப்பூர்வமான


"மனைவியை கைவிட்டவர் குடும்ப அமைப்பை எப்படி மதிப்பார்?" - மோடி மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!
[Monday 2019-02-11 08:00]

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரது மகனின் பெயரை சுட்டிக்காட்டி


இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு.
[Monday 2019-02-11 08:00]

நாட்டின் தலைநகரமான டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.), என்ற பெயரிலும், மேற்கு வங்காள மாநிலம் நாதியாவில் உயிரி ரசாயன கல்வி மானிய கமிஷன் என்ற பெயரிலும் 2 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி. கடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. போலீசில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8, டெல்லியில் 7, மேற்கு வங்காள மாநிலம், ஒடிசா மாநிலங்களில் தலா 2, பீகார், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.


'பிரதமர் மோதி மற்றும் சந்திரபாபு நாயுடு' - தனிநபர் விமர்சனத்தால் தீவிரமடைந்த மோதல்!
[Monday 2019-02-11 08:00]

ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடுத்த தனிப்பட்ட தாக்குதலையடுத்து, ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கும், அதன் முன்னாள் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான மோதல் மேலும் மோசமடைந்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவது மற்றும் அந்த மாநிலம் பிரிக்கப்படும்போது வழங்கப்பட்ட வேறு சில வாக்குறுதிகள் நிறைவேற்றம் ஆகியவற்றில் நரேந்திர மோதி அரசு தவறிவிட்டதாக திங்கள்கிழமையன்று டெல்லியில் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கவுள்ள நிலையில், இந்த மோதல் நடைபெற்றுள்ளது. தர்ம போராட்டம் என்ற பெயரில் நடக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட 22 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில், மத்திய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடனான தனது உறவை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக் கொண்ட பிறகு, முதல்முறையாக ஆந்திரப்பிரதேசத்துக்கு நரேந்திர மோதி வருகை புரிந்துள்ள நாளை 'மோசமான மற்றும் கறுப்பு நாள்' என்று வர்ணித்துள்ள சந்திரபாபு நாயுடு, மாநிலத்துக்கு எதிராக மத்திய அரசின் அநீதிகளை எதிர்த்து போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


"என்னை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டியே நடக்கிறது" - மோடி விமர்சனம்!
[Sunday 2019-02-10 05:00]

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மோடி, இன்று மாலை திரிபுரா மாநிலத்தின் தலநகரான அகர்தலா வந்தடைந்தார். மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் மானிக்யா பஹதூரின் முழு உருவச்சிலையை திறந்து வைத்த அவர், இங்கிருந்தவாறு கார்ஜீ-பெலோனியா இடையிலான புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மிகப்பெரிய


இந்திய நாடாளுமன்ற குழு முன் ஆஜராக
[Sunday 2019-02-10 05:00]

சமூக ஊடகங்களில் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற குழு விசாரணை ஒன்றை நடத்துகிறது. பாரதீய ஜனதா கட்சி எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான இந்தக்குழு கடந்த 7-ந் தேதி கூட இருந்தது. இதில் கலந்து கொள்வதற்கு


"பிரதமர் மோடியின் நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது" - ராஜ்நாத் சிங்.
[Sunday 2019-02-10 05:00]

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, அதற்கு இணையாக பிரதமர் அலுவலகமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ராணுவ அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆங்கில நாளேடு ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. இது மீண்டும் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி உள்ளது. இதை கூடுதல் ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். அதுவும் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குற்றவாளி என நேரடியாகவே ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜனதாவினர் மறுத்துள்ள நிலையில், உள்துறை மந்திரியும், மூத்த பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான ராஜ்நாத் சிங்கும் நேற்று மறுத்து உள்ளார்.


"குடியுரிமை சட்டமூலத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது": பிரதமர் மோடி!
[Saturday 2019-02-09 17:00]

குடியுரிமை சட்டமூலத்தால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரிதமர் மோடி அருணாச்சல்பிரதேஷிற்கு இன்று (சனிக்கிழமை) அவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின் போது இடாநகர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள பசுமை விமான நிலையத்துககான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


பிரதமர் மோடியின் வருகைக்கு அசாமில் எதிர்ப்பு!
[Saturday 2019-02-09 17:00]

அசாம் மாநிலத்துக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்றது. கவுகாத்தி விமான நிலையத்திலிருந்து, ராஜ்பவன் நோக்கி பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்றபோது, கவுகாத்தி பல்கலைக்கழக வாயில் பகுதியில் திரண்ட மாணவர் சங்கத்தினர், அவருக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், எம்.ஜி. சாலை பகுதியிலும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி திரும்பிச் செல்ல வேண்டும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். இதனால், அந்த பகுதிகளில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது.


மோடி அரசை எதிர்த்து மீண்டும் தர்ணாவில் இறங்கிய மம்தா!
[Saturday 2019-02-09 17:00]

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் மோசடியில் தொடர்புடைய போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்ததற்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு அரசியல் சட்டத்தை அழிப்பதாக கூறி அவர் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமார் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு மம்தா பானர்ஜி அதை ஏற்பதாக கூறினார். என்றாலும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரியும் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி அடுத்த வாரம் மம்தா பானர்ஜி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளார். அடுத்த வாரம் புதன்கிழமை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. அந்த சமயத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.


ஜம்முவில் நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டது!
[Saturday 2019-02-09 17:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகின்றது. இதையடுத்து காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட நாட்டின் பிற மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் ரம்பால் மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே சுமார் 12 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவை சரிசெய்யும் பணியில் இயந்திரங்களுடன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


குடும்ப தகராறில் உயர் மின் கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளி தற்கொலை!
[Saturday 2019-02-09 09:00]

ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது32) கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (28). இவர்களுக்கு கிரிஜா (8). ஆரியா (6). என 2 மகள்கள் உள்ளனர். சென்னையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஊருக்கு வந்த அவர் திரும்பவும் சென்னைக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரமேஷ் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நெல்வாய்பாளையம் என்ற இடத்திற்கு சென்று அங்கு பயன்பாட்டிற்கு வராத 100 அடி உயர மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரது மனைவி கீதாவிற்கும் களம்பூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் உறவினர்கள் ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ரமேஷ் கீழே இறங்க மறுத்து விட்டார்.


ஊழல்களின் தலைவர் பிரதமர் மோடி - மம்தா கடும் தாக்கு!
[Saturday 2019-02-09 08:00]

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. மாநாடு முடிந்ததும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு இந்தியாவை பற்றி தெரியாது. அவர் கோத்ரா மற்றும் பிற மோதல்களில் இருந்து வந்தவர். தேர்தலுக்கு முன்னால் அவரை சாய்வாலா என அழைத்தோம். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர் ரபேல் வாலா என அழைக்கப்பட உள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் இருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ரபேலின் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாஸ்டர். பிரதமர் மோடி ஊழல்களின் மாஸ்டராக விளங்குகிறார்.


"சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளை விடமாட்டேன்" : பிரதமர் மோடி உறுதி!
[Saturday 2019-02-09 08:00]

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சூராபந்தரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:- மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், அதே வன்முறை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். அதனால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த மோசடியாளர்களை பாதுகாக்க ஒரு முதல்-மந்திரி தர்ணா போராட்டம் நடத்தியது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த காவலாளி (மோடி), சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையோ, அவர்களை பாதுகாப்பவர்களையோ தப்ப விடமாட்டான். இவ்வாறு மோடி பேசினார்.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா