Untitled Document
May 4, 2024 [GMT]
ஜுஸ் கொடுத்து மயக்கி விட்டு தகாதபடி நடந்து கொண்ட அமைச்சர்: - பரபரப்பு பேட்டி
[Wednesday 2018-10-24 13:00]

சிந்து என்ற பெண்ணை தனியாக அழைத்து ஜுஸ் கொடுத்து மயக்கி விட்டு தகாதபடி நடந்து கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் சிந்துவும், அவரது அம்மாவும் ஒரு பிரச்சனைக்காக ஜெயக்குமார் அலுவலகத்தில் அவரை சந்தித்துள்ளனர். போலீஸ் அதிகாரி சம்மந்தப்பட்ட ஒரு விசயம்.


பாலியல் புகாரில் சிக்கித் தவிக்கும் வைரமுத்துவிடம் பேச மறுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்: - வெளியான தகவல்
[Tuesday 2018-10-23 23:00]

பாலியல் புகாரில் சிக்கித் தவிக்கும் வைரமுத்துவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் பேச மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வைரமுத்து மீதான புகார்களை கேட்டு அதிர்ச்சியில் இருந்தாராம் ஏ.ஆர்.ரஹ்மான், இதுகுறித்து அவரது சகோதரியும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். பெண்கள் பலரையும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறியே வைரமுத்து இச்செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மற்றவர்களைப்போல் எனது அரசியல் இருக்காது: - ரஜினிகாந்த்
[Tuesday 2018-10-23 15:00]

`ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அரசியலுக்கு வந்துள்ளோம்'' என மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.


உடல் பருமனால் ஒதுக்கப்பட்டவர் இன்று பொடி பில்டிங்கில் மிஸ் வேர்ல்டு!
[Tuesday 2018-10-23 15:00]

கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 நாடுகள் கலந்துகிட்ட பாடி பில்டிங் போட்டியில் ரூபி


பாலுணர்வுடன் பார்த்தால் உள்ளுணர்வு இரும்பாக மாறும்: - தமிழிசை சவுந்தரராஜன்
[Tuesday 2018-10-23 15:00]

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் நலத்திட்டம் குறித்த விளக்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசின் எரிவாயு, சாலை, வங்கி கடன் உள்பட பல திட்டங்களை விளக்கி பேசினார்.


மணமகள் காதலனுடன் ஓடியதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!
[Tuesday 2018-10-23 15:00]

தருமபுரி நெசவாளர் காலனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திடீரென்று அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது திருமணத்துக்கு முதல் நாள் மதியம் மணமகள் தனது காதலனுடன் சென்று விட்டதால் திருமணத்தை நிறுத்தி விட்டதாக தெரிவித்தனர்.


பெண்கள் மீதான பாலியல் தொல்லை 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் மடங்கு அதிகரிப்பு: - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
[Tuesday 2018-10-23 15:00]

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதாக நாளுக்கு நாள் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா உள்ளதாக சர்வதேச அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்து ஆய்வு மேற்கொண்டது.


ராணுவ வீரருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி!
[Tuesday 2018-10-23 15:00]

மேற்கு வங்காளம் மெத்னிப்பூரை சேர்ந்தவர் மந்துப்பத்ரா. இவர் ஒரிசா மாநிலம் தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அருணா. இவர் சமூக வலைதளம் மூலம் பலருடன் நட்பு வைத்திருந்தார். பேஸ்புக்கில் சஞ்சய்குமார் என்ற எல்லை பாதுகாப்புபடை வீரர் அருணாவுக்கு அறிமுகமானார்.


திருமணமான 5 மாதத்தில் கொலை செய்யப்பட்ட வாலிபர்: - பழிக்குப்பழி தீர்த்தது அம்பலம்
[Tuesday 2018-10-23 07:00]

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான 5 மாதத்தில் விஜீஸ் என்பவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டார். பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் விஜீசின் நண்பர் நெல்சன் என்பவர் பொலிசாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தான் தான் விஜீசைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.


குடித்துவிட்டு தகராறு செய்த கணவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி!
[Monday 2018-10-22 17:00]

அரக்கோணத்தில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்த மனைவி போலீஸாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு, இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிரபு, தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவார்.


நிலத்தகராறில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த உறவினர்!
[Monday 2018-10-22 17:00]

நிலத்தகராறில் உறவினரே ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஜால்பைகுரி என்ற மாவட்டத்தில் உள்ள நிரஞ்சன் பார் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் உறவினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு நிலத்தகராறு தொடர்பாகப் பேச வேண்டும் என அந்தப் பெண்ணை அழைத்துள்ளார் உறவினர்.


பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்குத் தர்ம அடி கொடுத்த மாணவியின் உறவினர்கள்!
[Monday 2018-10-22 17:00]

திருவண்ணாமலை அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர் மாணவியின் உறவினர்கள். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் இயங்குகிறது அரசினர் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் கண்ணன் என்பவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஒரு மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். இதை அந்த மாணவி வீட்டில் சொல்ல அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் கண்ணனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.


கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இளம்பெண்: - தாய் இல்லாமல் தவிக்கும் 6 வயது மகன்
[Monday 2018-10-22 17:00]

அரக்கோணத்தில் கணவனை இழந்த இளம்பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தாயை இழந்த அவரின் 6 வயது மகன் அநாதையாக நிற்கிறார். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த குருவராஜப்பேட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி. இவரின் கணவர் இறந்துவிட்டார். இதனால் 6 வயது மகனுடன் தனியாக செல்வி வசித்துவந்தார். இவர், ஆடை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.


ரயில் விபத்தின்போது தூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைக் பாய்ந்து காப்பாற்றிய பெண்: -நெகிழ்ச்சி சம்பவம்
[Monday 2018-10-22 16:00]

தசரா ரயில் விபத்தின்போது தூக்கிவீசப்பட்ட 10 மாத குழந்தையைக் காப்பாற்றி நெகிழவைத்துள்ளார் நேபாள பெண் ஒருவர். கடந்த 19-ம் தேதி இரவு தசரா கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, ஜோடா பதாக் பகுதி மக்கள். ரயில்வே டிராக் ஓரத்தில் நடந்த ராம் லீலா விழாவில் ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தினர். இதில் பலர் ரயில்வே டிராக்கில் இருந்து பார்த்தால் நிகழ்ச்சி நன்றாகத் தெரியும் என்பதற்காகத் தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சியைக் கவனித்த பலர், ரயில் வருவதைக் கவனிக்க தவறிவிட்டனர்.


கார் விபத்தில் இளம் தம்பதியினர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலி: - அனாதையான பிஞ்சுக்குழந்தை
[Sunday 2018-10-21 14:00]

திண்டிவனம் அருகே நடந்த கார் விபத்தில் இளம்தம்பதியினர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜயகுமார் (29), தொடர் விடுமுறை காரணமாக தன்னுடைய 8 மாத குழந்தைக்கு மொட்டையடிக்க தேனியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.


60 வயது பாட்டியுடன் 15 வயது சிறுவனுக்கு திருமணம்: - அதிர்ச்சி சம்பவம்
[Sunday 2018-10-21 14:00]

இந்தியாவில் தவறான செல்போன் எண்ணில் பேசிய குரலால் ஈர்க்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு 60 வயது மூதாட்டியைத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் 15 வயது சிறுவன் வசித்து வருகிறான். ஒரு மாதத்துக்கு முன்னர் சிறுவன் தனது நண்பனுடன் போனில் பேச நினைத்தான்.


காயம்பட்ட இதயங்கள் குணமாக நான் துணை நிற்கிறேன்: - சின்மயி
[Sunday 2018-10-21 14:00]

காயம்பட்ட இதயங்கள் குணமாக நான் துணை நிற்கிறேன் என மீ டூ மூலம் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடகி சின்மயி தனது ட்விட்டரில் நீண்ட பதிவை பகிர்ந்திருக்கிறார். கடந்த வாரம் முழுவதும் என்னை சில கேள்விகள் துளைத்து எடுத்தன. அதிகாரத்தில் இருப்பவர்கள், சமூக வெளிச்சத்தில் இருப்பவர்கள், கேமராவின் முன்னால், கேமராவின் பின்னால் என பல வழிகளிலும் கேள்விகள் வந்தன.


சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானாவுக்கு நேர்ந்த கதி!
[Sunday 2018-10-21 14:00]

சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் ரெஹானா பாத்திமா என்ற இஸ்லாமிய பெண் கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு செல்ல முயன்றார்.


சின்மயி வானத்தை பார்த்துக்கொண்டு எச்சியை துப்புகிறார்: - இசையமைப்பாளர் இனியவன்
[Sunday 2018-10-21 08:00]

சின்மயி வானத்தை பார்த்துக்கொண்டு எச்சியை துப்புகிறார், இதில் அவருக்கு தான் ஆபத்து, வைரமுத்துவுக்கு இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என சுவிட்சர்லாந்தில் நிகழ்ச்சிக்கு சின்மயியியை அழைத்து சென்ற இசையமைப்பாளர் இனியவன் கூறியுள்ளார். இசையமைப்பாளர் இனியவன் கூறியதாவது, சுவிட்சர்லாந்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்காத போது, சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆச்சரியமாக உள்ளது.


ஜெயலலிதாவின் இறுதிச்சடங்குக்கு 1 கோடி செலவு: - ஆர்.டி.ஐ பரபரப்பு தகவல்
[Sunday 2018-10-21 08:00]

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு தமிழக அரசு சுமார் 1 கோடி வரை செலவு செய்ததாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் மதுரையை சேர்ந்த சையது தமீம் என்பவர் தகவல்களை பெற்றார்.

அவர் கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஐ யில் 4 கேள்விகள் கேட்டிருந்தேன்.


டிசம்பர் 12ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு இல்லை: - ரஜினிகாந்த்
[Saturday 2018-10-20 17:00]

தமது பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். பேட்ட திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முன்கூட்டியே நிறைவு செய்து விட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிசம்பர் 12ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு இல்லை எனவும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


70 வயது நபரை கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: - போலீசில் வினோத புகார்
[Saturday 2018-10-20 16:00]

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி, மதுரா, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வீடு, கடைகளுக்குள் கூட்டமாக நுழையும் குரங்குகள் பொருட்களை நாசப்படுத்துவதுடன், திண்பண்டங்களையும் சில வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளையும் தூக்கிச் சென்று விடுவதுண்டு.


சபரிமலைக்கு சென்ற பாத்திமா பின்னணியில் மாவோயிஸ்டு ஆதரவு அமைப்புகள்: - உளவுத்துறை எச்சரிக்கை
[Saturday 2018-10-20 09:00]

சபரிமலைக்கு 300 போலீசார் பாதுகாப்புடன் சென்ற பாத்திமா தன்னை பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவரது செயல்பாடுகள் அனைத்தும் சபரிமலை புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாத்திமா இருமுடி கட்டி வந்து இருப்பதாக போலீசாரை ஏமாற்றி இருந்தார். அந்த இருமுடி கட்டை தேவ சம்போர்டு ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அந்த இருமுடி கட்டுக்குள் நெய் தேங்காய் உள்பட அய்யப்பனை வழிபடுவதற்குரிய எந்த பொருட்களும் இல்லையாம்.


பஞ்சாப் ரெயில் விபத்தில் ராவணனான நடித்த வாலிபரும் உயிரிழப்பு!
[Saturday 2018-10-20 09:00]

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டிருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!
[Saturday 2018-10-20 08:00]

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர். அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.


ஆசியாவில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த முதல் பெண்!
[Friday 2018-10-19 15:00]

ஆசியாவிலேயே முதல்முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த முதல் பெண் என்ற பெருமையை குஜராத்தை சேர்ந்த பெண் பெற்றுள்ளார். குஜராத்தை சேர்ந்த மீனாட்சி என்பவர் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தார். இதனையடுத்து புனேவில் உள்ள மருத்துவமனையில் மீனாட்சி சிசிச்சை பெற்று வந்த நிலையில், அவரது தாயிடம் இருந்து கருப்பப்பை எடுக்கப்பட்டு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் அறுவை சிகிக்கை செய்த பிறகு செயற்கை கருவூட்டல் சிகிச்சை செய்யப்பட்டது.


எங்களை மன்னித்து விடுங்கள்: - போலீஸாரிடம் கெஞ்சிய தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர்
[Friday 2018-10-19 15:00]

சென்னை திருவான்மியூரில் ஓசியில் பீடி தராத பிளாட்பாரத்தில் தங்கியிருந்தவரைத் தாக்கிய சம்பவத்தை தட்டிக்கேட்ட கட்டடத் தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டடத் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தியை எரித்து கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் மற்றும் அவரின் நண்பர்


சபரிமலையை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு!
[Friday 2018-10-19 15:00]

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தீர்ப்பை சுட்டிக் காட்டி குறிப்பிட்ட வயது பெண்களும் கோவிலுக்கு செல்வதற்கு முயற்சித்தனர். ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா