Untitled Document
May 3, 2024 [GMT]
84 வது கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்று சாதனை படைத்த 92 வயது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
[Thursday 2018-06-21 18:00]

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன். வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான இவர் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். 84 வது கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். 92 வயதான இவர் ஐ.டி.எம். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் விருது வழங்கப்பட்டது.


வீதியில் வழிவிடாத ஆட்டோ டிரைவரை துப்பாக்கியால் சுட்ட பெண்: - அதிர்ச்சி சம்பவம்!
[Thursday 2018-06-21 18:00]

டெல்லியில் பைக்கில் சென்ற பெண் ஒருவர், சாலையில் வழிவிடாத ஆட்டோ டிரைவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே பவானி என்கிளேவ் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது பைக்கில் அங்கு வந்த சப்னா என்ற பெண் வழிவிடக்கோரி ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


மோடியை கிண்டல் செய்வதற்காக பக்கோட கடை போட்டவரின் வாழ்க்கையே மாறிப்போனது!
[Thursday 2018-06-21 06:00]

பிரதமர் மோடியை கிண்டல் செய்வதற்காக பக்கோட கடை போட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினரின் வாழ்க்கை மாறிப்போயுள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நரேந்திர மோடி பக்கோட கடை போட்டால் கூட ஒருநாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்கலாம் என பேட்டியளித்தார்.


கல்லீரல் ரூ.60 லட்சம்.. இதயம் ரூ.40 லட்சம்.. சிறுநீரகம் ரூ.10 லட்சம்..: - தமிழகத்தை அச்சுறுத்தும் ஆர்கன் மாஃபியா!
[Wednesday 2018-06-20 17:00]

உடலுறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தச் சாதனையை நிகழ்த்தி ஹாட்ரிக் அடித்திருக்கிறது தமிழகம். விழிப்புஉணர்வு பெருகியிருப்பதுதான் இந்தச் சாதனைக்குக் காரணம் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு செய்தி.


தொழு நோய் அறிகுறியுடன் விரல்கள் வெட்டப்பட்டு வந்த கணவன்: - அதிர்ச்சியில் மனைவி
[Wednesday 2018-06-20 16:00]

தமிழகத்தில் காணாமல் போன கணவன் தொழு நோய் அறிகுறியுடன் விரல்கள் அகற்றப்பட்டு வந்ததால், அதைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். தேனி அல்லிநகரம் அழகர்சாமி காலனியை சேர்ந்தவர் கருப்பையா(32). இவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த 15-ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.


ஆடம்பர வாழ்க்கை...காதலிகள்...: - சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை!
[Wednesday 2018-06-20 16:00]

சென்னையில் இரண்டு கார்களைத் திருடிய ஆறு பேர் செய்த குற்றப் பின்னணியைக் கேட்டு போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மாங்காடு சிக்கராயபுரம் லீலாவதி நகரைச் சேர்ந்தவர் செல்வம். கார் டிரைவரான இவர், 12.06.2018 அதிகாலை 4.45 மணியளவில் மாங்காடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பரணி புத்தூர் கோவூர் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்தினார். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் செல்வத்தைக் கத்தியைக் காட்டி மிரட்டி காரைப் பறித்துச் சென்றது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்வம் தகவல் கொடுத்தார்.


இளைஞருடன் பைக்கில் சென்ற மனைவி: - கொலை செய்ய நண்பர்களுடன் வந்த கணவர் கைது
[Wednesday 2018-06-20 08:00]

தமிழகத்தில் மனைவி வேறொரு இளைஞருடன் பைக்கில் சென்றதால், அவரை கொலை செய்ய நண்பர்களுடன் வந்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் வசித்து வருபவர் ரேவதி. இவருக்கும் அதே நகரின் வஉசி தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன்(30) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.


எஸ்.வி. சேகரை கைது செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: - பாரதிராஜா
[Wednesday 2018-06-20 08:00]

மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தற்போது தமிழகம் தினமும் பிரச்சனைகள், போராட்டங்கள் என்று ஒரு போர்க்களமாகவே மாறியிருக்கிறது. நம் தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்வதால் தான் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


நிமோனியாவில் அவதிப்பட்ட 6 மாத குழந்தைக்கு காச்சிய இரும்பால் சூடு வைத்த பெற்றோர்!
[Wednesday 2018-06-20 08:00]

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் நிமோனியாவில் அவதிப்பட்டு வந்த 6 மாத குழந்தைக்கு காச்சிய இரும்பால் பெற்றோர் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் ஹூடிகுடா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. 6 மாத குழந்தை ஒன்று நிமோனியா நோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளது.


மிஸ் இந்தியாவாக தமிழக மங்கை தேர்வு!
[Wednesday 2018-06-20 08:00]

மிஸ் இந்தியாவாக தமிழக மங்கையான அனுகீர்த்தி வாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற போட்டியில் மிஸ் இந்தியாவாக அனு முடி சூட்டப்பட்டுள்ளார். மிஸ் இந்தியாவாக தேர்வான அனு, உலக அழகிப்போட்டியில் பங்கேற்கிறார். 2ம் இடத்தில் ஹரியானாவின் மீனாட்சி, 3ம் இடத்தில் ஆந்திராவின் ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த கணவனை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மனைவி!
[Tuesday 2018-06-19 19:00]

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த கணவனை மனைவியே மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனைக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.


மனைவியின் முகத்தில் தாடி இருப்பதாக கூறி விவகாரத்து கேட்ட கணவர்!
[Tuesday 2018-06-19 18:00]

விவாகரத்து இந்த காலக்கட்டத்தில் சாதாரணமான ஒன்றாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், விவாகரத்து செய்து விடுகின்றனர். விவாகரத்திற்கான காரணங்கள் ஒவ்வொரு வழக்கிலும் வேறுபடும்.


மனைவியை எரித்துக் கொன்ற கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை!
[Tuesday 2018-06-19 07:00]

மனைவியை எரித்துக் கொன்ற கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது (39). கூலித்தொழிலாளியான இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், 2 குழந்தைகளுன் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


காவல்துறை மூலம் மிரட்டுவதை அதிமுக அரசு நிறுத்த வேண்டும்: - ஸ்டாலின்
[Tuesday 2018-06-19 07:00]

காவல்துறை மூலம் மக்களையும், விவசாயிகளையும் மிரட்டுவதை அதிமுக அரசு நிறுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயகத்தை பலியிட்டு இட்லர் பாணி பயங்கரத்துக்கு உயிரூட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இனியும் போலீஸ் மூலம் அச்சுறுத்துவது தொடர்ந்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.


எவரெஸ்ட் சிகரத்தில் குவியும் குப்பைகள்: - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மாசு கட்டுப்பாட்டு குழு
[Tuesday 2018-06-19 07:00]

இமயமலைத்தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையை பெற்ற இதன் உச்சியில் கால்பதிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் சிகரத்தில் ஏறி வருகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: - திகைத்து நின்ற மணமகன்
[Tuesday 2018-06-19 07:00]

சிவகங்கை மாவட்டத்தில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவகோட்டை பூர்வீகமாக கொண்ட சென்னை தி.நகர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணுக்கும், வேந்தன்பட்டியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடக்க இருந்தது


காதலர்களைப் பார்க்க காப்பகத்திலிருந்து தப்பிய சிறுமிகள்: - மடக்கிப்பிடித்த போலீஸார்
[Monday 2018-06-18 17:00]

சென்னை கெல்லீஸ் பகுதியில் உள்ள அரசுக் காப்பகத்திலிருந்து தப்பிய நான்கு சிறுமிகள், ஓட்டேரி சுடுகாட்டில் பதுங்கியிருந்தனர். அவர்களைப் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். சென்னையில் உள்ள அரசுக் காப்பகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு குறைவானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அடிக்கடி சிறுவர், சிறுமிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடப்பதுண்டு. நேற்று மாலை, ஓட்டேரி சுடுகாடு பகுதியில் நான்கு சிறுமிகள் நிற்பதாகத் தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்குத் தகவல் கிடைத்தது.


நாங்கள் தான் கொலை செய்தோம்: - சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்
[Monday 2018-06-18 17:00]

தமிழகத்தில் காணாமல் போன 15 வயது சிறுவனை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர். சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள சித்ரா அப்பார்ட்மெண்ட் அருகே நடைபாதையில் வசிப்பவர் பெருமாள். பழைய புத்தகங்களை விற்கும் கடை ஒன்றை நடத்தி வரும் இவருக்கு ராஜேஷ் என்ற 15 வயது மகன் இருந்தார்.


இரண்டு வயது குழந்தையை தூக்கி தரையில் வீசிய கொடூர தந்தை!
[Monday 2018-06-18 16:00]

தமிழகத்தில் இரண்டு வயது குழந்தையை தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும், அவந்திகா என்ற 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.


துப்பாக்கியால் சுட்ட குழந்தை: - உயிருக்கு போராடி வரும் தாய்
[Monday 2018-06-18 16:00]

இந்தியாவில் பொம்மை துப்பாக்கி என நினைத்து குழந்தை சுட்டத்தில், அதன் தாய் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில், ஆரம்பாக் அருகே உள்ள கிராமம் கானக்கோல் கிராமத்தைச் சேர்ந்த பெண் காகோலி ஜனா. இவர், தனது வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு தோட்டத்தில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, கீழே துப்பாக்கி ஒன்றை கண்டுள்ளார்.


ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப போவதில்லை: - ரஜினி
[Monday 2018-06-18 16:00]

ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி அங்குள்ள செய்தியாளர்களிடம், காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது.


புதிதாக திருமணமான இளம் பெண்ணை பலாத்காரம் செய்த கணவனின் நண்பன்!
[Monday 2018-06-18 16:00]
ஒடிசாவில் புதிதாக திருமணமான இளம்பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திவ்யா என்ற பெண் தனது கணவன் திலக்குடன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உணவகளை தயார் செய்து அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார்.


7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு! - தம்பிதுரை
[Sunday 2018-06-17 19:00]

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை முடிவாகும். அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது:


நடிகர் மன்சூர் அலிகான் அதிகாலையில் அதிரடியாக கைது!
[Sunday 2018-06-17 19:00]

சென்னை - சேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில், சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் இன்று அதிகாலை அவரைக் கைது செய்துள்ளனர்.


கேலி செய்ததால் ஆத்திரத்தில் ஆணுறுப்பை அறுத்து வீசிய சாமியார்!
[Sunday 2018-06-17 19:00]

பாலியல் பலாத்காரம் செய்து சிறையில் இருக்கும் போலிச்சாமியார்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதால், ஆத்திரமடைந்த சாமியார் ஒருவர் தனது ஆண் உறுப்பை அறுத்து வீசி எறிந்து தான் உண்மையான துறவி என்பதை நிரூபித்தார். ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், மந்தன் கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் புரோஹித்(வயது41). துறவியான அனில் புரோஹித் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு சேவாவள்ளி தாம் ஆஸ்ரம் தொடங்கி நடத்தி வந்தார். மக்களுக்கு அவ்வப்போது பிரசங்கம், அறிவுரைகள் கூறிவந்தார்.


கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 45 பேர் பலி:
[Sunday 2018-06-17 08:00]

இந்தியாவின், கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 45 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களுள் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. அதனால், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கிணற்றில் குளித்ததற்காக கடுமையாகத் தாக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் : - கொந்தளித்த வைரமுத்து
[Friday 2018-06-15 19:00]

மகாராஷ்ட்ராவில் கிணற்றில் குளித்ததற்காக இரண்டு சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள வகாதி என்னும் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வகாதி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். ஒரு சிறுவனுக்கு வயது 14 மற்றொரு சிறுவனுக்கு வயது 8. அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வர் ஜோஷி மற்றும் லோஹர் என்பவர்கள் கிணற்றில் குளித்ததற்காக அந்த இரண்டு சிறுவர்களின் ஆடைகளைக் கழட்டி, கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.


ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல்: - பெண் சுட்டுக் கொலை
[Friday 2018-06-15 19:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம் இடாவா மாவட்டத்தில் உள்ள பர்சாவ்னா கிராமத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா