Untitled Document
May 16, 2024 [GMT]
இந்தியா பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்து வருகிறது: - பாஜக
[Thursday 2016-01-28 07:00]

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.மத்திய அரசின் செயல்பாடு குறித்து ஏபிபி நியூஸ் தொலைக்காட்சியும் நீல்சன் அமைப்பும் இணைந்து அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தின. இதில் மோடி அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக சிறப்பாக இருப்பதாக 46 சதவீதம் பேர் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. பிரதமராக மோடியின் செயல்பாடு மிகச் சிறப்பாக / சிறப்பாக இருப்பதாக 54 சதவீதம் பேர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து பாஜகவின் தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


சமூக விரோதிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்: - ராஜ்நாத் சிங்
[Thursday 2016-01-28 07:00]

போலீஸார், பாதுகாப்புப் படையினர் சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், போலீஸார்-பொதுமக்கள் நல்லுறவு தொடர்பான தேசிய மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது:போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு மேம்பட முதலில் மக்களின் நம்பிக்கையை போலீஸார் பெற பேண்டும். இப்போது போலீஸாருக்கு உள்ள சவால்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்னை மட்டுமல்லாது பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பயங்கரவாத இயக்கங்களால் ஏற்படும் நேரடி அச்சுறுத்தல்கள் மட்டுமல்லாது, இணையம் வழியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமும் மறைமுகமாக பயங்கரவாதம் பரவுகிறது.


இந்தியாவில் சட்டவிரோதமாக செயல்படும் வேட்டைக்காரர்களால் அழிக்கப்படும் காண்டாமிருகங்கள்!
[Wednesday 2016-01-27 22:00]

இந்தியாவின் தேசிய வனவிலங்கு சரணாலயம் ஒன்றில் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது காண்டாமிருகம் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே மிகவும் அதிகமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இந்தியாவிலேயே உள்ளன.இந்த மாதத்தில் நடைபெறும் மூன்றாவது செயல் இதுவென வனவிலங்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான அசாமில் இருக்கும் காசிராங்கா தேசியப் பூங்காவிலேயே சட்டவிரோதமாக செயல்படும் வேட்டைக்காரர்களால் இந்தக் காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன.பின்னர் அவற்றின் கொம்புகளை அந்த வேட்டைக்காரர்கள் நீக்கியுள்ளனர்.அந்தக் கொம்புகள் சீனா மற்றும் வியட்நாமில் பாரம்பரிய மருந்துகள் என அவர்கள் கூறுவதில் பயன்படுத்தப்படுவதால் அவை பெரும் தொகைக்கு விற்கப்படுகின்றன.


கோவையில் தனியார் பள்ளி மாணவன் கழிவறையில் சடலமாக மீட்பு!
[Wednesday 2016-01-27 19:00]

திருப்பூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவன், அங்குள்ள கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஷிவ்ராம் (6) என்ற சிறுவன், பள்ளிக்கு இன்று காலை வந்த பிறகு கழிவறைக்குச் சென்றுள்ளான். பிறகு அங்கு சென்ற அவனது வகுப்புத் தோழன், ஷிவ்ராம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து ஆசிரியர்களுக்குத் தகவல் அளிக்க, அவர்கள் காவல்துறைக்கு தெரிவித்து காவல்துறையினர் விரைந்து வந்தனர். உடனடியாக ஷிவ்ராம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். எனினும், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.


சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் நீக்கம்!
[Wednesday 2016-01-27 19:00]

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் நீக்கப்பட்டுள்ளார்.சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கரு. நாகராஜன் உள்ளிட்ட சிலர் டெல்லியில் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் சில நிர்வாகிகளை நீக்கி கட்சித்தலைவர் சரத்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும், சென்னையில் நாளை கட்சியின் அவசரக்கூட்டம் நடைபெறும் என்றும் சரத்குமார் அறிவித்துள்ளார்.


தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் இயற்கை வளங்களை பறிபோகச் செய்துவிட்டனர்: - வைகோ
[Wednesday 2016-01-27 08:00]

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.அவ்வாறு அமைந்தால், ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று, மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு, மதுரை அருகேயுள்ள யா.ஒத்தக்கடையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து வைகோ பேசியதாவது: தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் இயற்கை வளங்களை பறிபோகச் செய்துவிட்டனர். தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றால் பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இதுபற்றி அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறைகேட்டில் திமுகவுக்கும் பங்கு உள்ளது என்பதால், அதைப்பற்றி திமுக வாய் திறக்கவில்லை.மது இல்லாத தமிழகம், ஊழல் அற்ற ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம் என்ற செயல்திட்டங்களின் அடிப்படையில், மக்கள் நலக் கூட்டணி உருவாகியது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் முன்னேறி இருப்பதைக் கண்டு கட்சிகள் அச்சப்படுகின்றன.


ரெயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை: - பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்த போலீசார்!
[Wednesday 2016-01-27 08:00]

மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தையை, போலீசார் மீட்டு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். மீஞ்சூர் ரெயில் நிலைய நடைமேடையில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிறந்து 4 மாதங்களே ஆன அழகிய ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது.


வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்!
[Wednesday 2016-01-27 07:00]

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தில் அரசியல் உறுதியின்மை ஏற்பட்டதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக் கிழமை பரிந்துரை செய்திருந்த நிலையில், இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் வழங்கியிருந்தார். இந்தநிலையிலேயே அங்கு நேற்றுமுதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்துள்ளது.மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டத் துக்கு பின் உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தி யாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.


தஞ்சாவூர் அதிராம்பட்டினம் கல்லூரியில் படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
[Wednesday 2016-01-27 07:00]

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கித் தெருவைச் சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் சங்கர் மகள் சுலோச்சனா (19). இவர், இங்குள்ள அரசு உதவிபெறும், இருபாலர் பயிலும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியில் குடியரசு தின விழா நடந்தபோது, கல்லூரியின் ஓய்வறைக்குச் சென்ற சுலோச்சனா அங்குள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


இலங்கையிலுள்ள தமது 75 விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்!
[Wednesday 2016-01-27 07:00]

இலங்கையிலுள்ள தமது 75 விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரி தமிழகத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமது 75 விசைப்படகுகளை மீட்க மத்திய அரசை வலியுறுத்தியே, நாகை தலைமை தபால் நிலையம் முன்பாக நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் ஆகிய 6 மாவட்ட மீனவ கிராமங்கள் சார்பில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோயிலுக்கு நுழைய முயன்ற பெண்கள் கைது!
[Tuesday 2016-01-26 22:00]

மகராஷ்டிரம் மாநிலம் அகமத்நகரில் அமைந்துள்ள பழமையான சனிப் பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற350பெண்கள் கைது செய்யப்பட்டனர்.அகமதுநகர் மாவட்டம், சனி ஷிங்கனபூர் கிராமத்தில் உள்ளது சனி பகவான் கோயில். இங்கு ஐந்து அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன சனி பகவான் சிலை மேற்கூரையில்லாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலுக்குள் பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 'பூமாதா படை' என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு பெண்கள் அமைப்பு, கோயிலுக்குள் சென்று வழிபடுவது என தீர்மானித்தது.


ஜப்பானில் உள்ள அஸ்தி சுபாஷுடையதா என டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும்: - மகள் அனிதா போஸ் கோரிக்கை
[Tuesday 2016-01-26 19:00]

ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு புத்த ஆலயத்தில் உள்ள அஸ்தி சுபாஷ் சந்திரபோஸுடையதா என கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார். சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ் கூறுகையில், ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அஸ்தியை டிஎன்ஏ சோதனை செய்து, அது எனது தந்தையுடையதா என கண்டறிய வேண்டும் என்றார்.தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் அனிதா தொலைபேசி மூலம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.


டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் 67 ஆவது குடியரசு தினக் கொண்டாட்டங்கள்!
[Tuesday 2016-01-26 15:00]

இந்தியாவின் 67 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்கியது.காலை முதலே விழா நடைபெறும் இடத்திற்கு பல்வேறு பிரமுகர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் வருகை தந்தனர். அமர்ஜவான் ஜோதிக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு விழா நடைபெறும் இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.அவரை ராணுவ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வரவேற்று முப்படை வீரர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர், விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.இவரைத் தொடர்ந்து விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை பிரதமர் மோடி வரவேற்றார்.


மேகாலயாவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: - 10 பேர் பலி-பலர் காயம்!
[Tuesday 2016-01-26 15:00]

மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயிந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பஸ் இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தனியாருக்கு சொந்தமான இந்த பஸ், அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து மேகாலயா வழியாக ஹைலாகண்டிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். 4 பெண்கள் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலர் பஸ்சுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது என காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார்.


தெலுங்கானா மாநிலத்தில் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி!
[Tuesday 2016-01-26 14:00]

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், 17 வயது மாணவி ஒருவர் தன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குண்டலா பகுதியில் வசிக்கும் ஜூனியர் கல்லூரி மாணவியான ரேகா, நேற்று இரவு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்ததாகவும், வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.


ஆளே இல்லாத கட்சியில் இருந்து கொண்டு இளங்கோவன் ஆட்டம் போடுகிறார்: -விஜயதாரணி ஆவேசம்
[Tuesday 2016-01-26 09:00]

மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாரணி எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


50 ஆயிரம் கன்னட திருக்குறள் நூல்கள் விநியோகிக்கத் திட்டம்!
[Tuesday 2016-01-26 08:00]

கர்நாடகம் முழுவதும் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட 50 ஆயிரம் திருக்குறள் நூல்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும். மனித குலத்துக்கான நற்செய்தியாக திருக்குறளை திருவள்ளுவர் வழங்கியுள்ளார். 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த நூல் உயிர்ப்புடன் இருப்பதே அந் நூலின் பெருமையாகும். எனவே, திருக்குறளின் அருமை, பெருமைகளை கர்நாடகத்தில் வாழும் தமிழர், கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், மராத்தியர் உள்ளிட்ட அனைத்து மொழியினர் மத்தியிலும் பரப்ப முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 50 ஆயிரம் திருக்குறள் நூல்கள் கர்நாடகத்தின் மாவட்ட தலைநகரங்களில் திருவள்ளுவர் விழா நடத்தி விநியோகிக்கப்படும். திருவள்ளுவரின் தத்துவங்களை பரப்ப அனைவரும் கைகோக்க வேண்டும் என்றார்.


திருபாய் அம்பானிக்கான விருதினை மறு அர்ப்பணிப்பு செய்வதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறோம்: - முகேஷ் அம்பானி
[Tuesday 2016-01-26 08:00]

நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகள், ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது நேற்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது தந்தையும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனருமான மறைந்த திருபாய் அம்பானிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு அவரது மகனும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி நன்றி தெரிவித்தார்.


தனித்து வாழும் பெண்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும்: - மேனகா காந்தி தெரிவிப்பு
[Tuesday 2016-01-26 07:00]

தனித்து வாழும் பெண்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், அவர்களுக்கு வரிப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான சலுகைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, தனித்து வாழும் பெண்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என்று கூறினார்.


கூட்டணிக்கு வர விரும்புகின்ற கட்சிகளை உதறித் தள்ளமாட்டோம்: - கருணாநிதி
[Monday 2016-01-25 19:00]

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, திமுக தலைமையிலான கூட்டணி கதவுகள் திறந்திருக்கிறது. எந்த கட்சி வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி இன்று திருவாரூர் சென்றார்.அங்கு காட்டூரில் தாயார் அஞ்சுகத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரவிருக்கும் தேர்தலுக்கு திமுக சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை ஜனநயாக மையப்படுத்தி இருக்கும்.


விழுப்புரம் அருகே மருத்துவ மாணவிகள் இறந்த சம்பவம்: -தீவிர விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு
[Monday 2016-01-25 19:00]

விழுப்புரம் அருகே மருத்துவ மாணவிகள் இறந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இறந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கை:விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த திருவாரூர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா, காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா மற்றும் சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா ஆகிய மூன்று மாணவிகளின் சடலங்களும் கல்லூரியின் முன்புறமுள்ள ஒரு கிணற்றில் 23.1.2016 அன்று கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.


இறந்த மாணவிகளின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்படவேண்டும்: - விஜயகாந்த்
[Monday 2016-01-25 13:00]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மூன்று மாணவிகள், தாங்கள் படித்துவந்த விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்துபோனது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இறந்த மாணவிகளின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்படவேண்டும். அப்போதுதான் அதுகுறித்த உண்மைகள் வெளிவரும் என்பதை நான் திடமாக நம்புகிறேன். தமிழகத்தை சேர்ந்தவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சரியான உட்கட்டமைப்பு வசதியும், தேவையான அளவிற்கு அனுபவமிக்க பேராசிரியர்கள் இல்லாமலும் இக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாகவும், தமிழக அரசின் முறையான அனுமதியின்றி இக்கல்லூரி செயல்பட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


திமுகவைப் பற்றி சாதகமாக வந்தாலும்,பாதகமாக வந்தாலும் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்துவதில்லை: -மு.க.ஸ்டாலின்
[Monday 2016-01-25 13:00]

திமுகவைப் பற்றி சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்துவதில்லை என்றார் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழிலதிபர் வி.கே.என். இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை பராமரிக்காமல் சிதிலப்படுத்தியது, பாவேந்தேர் பாரதிதாசன் ஆய்வக நூலகத்தை முடக்கியது, மதுரையில் தமிழ்த்தாய் சிலையை அமைக்காதது, தொல்காப்பியர் பூங்காவை கிடப்பில் போட்டது உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து, தமிழ் வளர்ச்சிக்கு எதிராக ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவுக்கு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க செலுத்த அருகதை இல்லை.


தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் மூலம் நடக்கும் பிரசவம் அதிகம்: - ஆய்வில் தகவல்
[Monday 2016-01-25 08:00]

தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பு 2015-16-ம் ஆண்டுக்கான சுகாதார சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அரசு மருத்துவமனைகளை விட தனியார் ஆஸ்பத்திரிகளில் சிசேரியன் (ஆபரேஷன் மூலம் பிரசவம்) பிரசவம் 2 மடங்கு அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவர பட்டியலில், திரிபுராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 87.1 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 36.4. சதவீதமும் சிசேரியன் பிரசவம் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், பீகார் அரசு மருத்துவமனைகளில் 5 சதவீதமும், தனியாரில் 37.1 சதவீதமும், மேற்குவங்காளத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் 74.7 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 37.1 சதவீதமும் சிசேரியன் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் 36.1 சதவீதமும், தெலுங்கானாவில் 63.2 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடக்கிறது.


பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும், பிரான்ஸும் இணைந்து செயல்படும்: - இந்தியா-பிரான்ஸ் உறுதி
[Monday 2016-01-25 08:00]

சர்வதேச சவாலாக உருவெடுத்துள்ள பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும், பிரான்ஸும் இணைந்து செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தும் உறுதிபட தெரிவித்தனர்.குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக, 3 நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், இதுதொடர்பாக சண்டீகரில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி:பிரான்ஸிடம் இருந்து ரூ.60,000 கோடி மதிப்பில், 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான பேச்சுவார்த்தை சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறது.இதனால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையே தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு நீடிக்கும்.எனினும், சில நடைமுறைக் காரணங்களால் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு சிறிது காலமாகும்.


கருப்புப் பணத்தை மீட்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஸ்விட்சர்லாந்து ஒத்துழைப்பு அளிக்கிறது: - அருண் ஜேட்லி
[Monday 2016-01-25 07:00]

ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அரசு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.கருப்புப் பணம் குறித்த தகவல்களை தானியங்கி முறையில் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்வதற்கு ஏதுவாக ஸ்விட்சர்லாந்து அரசு சட்டம் இயற்றி வருவதாகவும், அது அடுத்த ஓராண்டுக்குள் அமலுக்கு வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு சென்றுள்ள ஜேட்லி, ஸ்விட்சர்லாந்து நாட்டின் நிதியமைச்சர் உயேலி மெளரரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவிகள் மூவர் சாவு! தமிழக அரசின் மெத்தனத்தால் நேர்ந்த கொடுமை! நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
[Sunday 2016-01-24 23:00]

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான "இயற்கை மருத்துவக் கல்லூரியில்" பயின்ற பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய மாணவிகள் மூவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. "கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை; முறையாகப் பாடங்கள் நடத்துவதில்லை; அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்; விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு நல்ல குடிநீர், நல்ல உணவு போன்றவை கிடைப்பதில்லை" என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாகவே அக்கல்லூரி மாணவர்கள் போராடி வந்துள்ளனர் என்றும், ஆனால், அரசு தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை ஏதுமில்லையென்றும் தெரியவருகிறது.


ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால்,மூட்டு தேயுமே தவிர ஓட்டு வராது: - நடிகை விந்தியா
[Sunday 2016-01-24 21:00]

ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால், மூட்டு தேயுமே தவிர ஓட்டு வராது என, கிருஷ்ணகிரியில் நடந்த அ.தி.மு.க., பொதுக் கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா கூறினார். கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே என அறிவித்து ஊர் சுற்றி வருகிறார்.பொதுமக்கள் தானாக கூடுவது மீட்டிங். தி.மு.க.,வினர் செய்து வருவது செட்டிங்.

Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா