Untitled Document
April 29, 2024 [GMT]
ஒடிசா மாநிலத்தில் முக கிரீம் டியூப்பை விழுங்கிய நல்லபாம்பு: - அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர்கள்
[Monday 2016-01-11 11:00]

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் வாடகை குடியிருப்பு உள்ளது. இங்கு புகுந்த ஒரு நல்ல பாம்பு முக கிரீம் டியூப்பை விழுங்கி விட்டது. வயிற்றுக்குள் சென்ற அந்த டியூப்பால் பாம்பால் ஊர்ந்து செல்ல முடியவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மெகா விவசாய பல்கலைக்கழக பேராசிரியர்களும் வந்தனர்.


உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களாக மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் தஞ்சை பெரிய கோவில் தேர்வு:
[Monday 2016-01-11 07:00]

உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு, மிகச் சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 52 சுற்றுலா தலங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்கள், கலாச்சார பெருமை வாய்ந்தவை என அதில் குறிப்பிடப்படுள்ளது.


துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ரித்திக்கிற்கு ரூ 4 லட்சம் ஊக்கத்தொகை: - ஜெயலலிதா அறிவிப்பு
[Monday 2016-01-11 07:00]

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற ரித்திக் என்ற மாணவனுக்கு ஊக்க தொகையை ரூ 4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 27.12.2015 அன்று இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான 10 மீட்டர் ஓபன் சைட் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த கேந்த்ரிய வித்யாலாய பள்ளி மாணவர் செல்வன் ரித்திக் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். செல்வன் ரித்திக்கிற்கு, எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், செல்வன் ரித்திக்கிற்கு ஊக்கத் தொகையாக ரூ 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளார்.


மகள், மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: உடுமலையில் பரிதாப சம்பவம்!
[Monday 2016-01-11 07:00]

உடுமலையில் காது கேட்பதில் குறைபாடு இருந்ததால் தனது மகள், மகனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் ரோட்டில் இந்திரா நகர் அருகே உள்ள ஆமந்தகடவுக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டத்தில், விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி (34). இவர்களுடைய மூத்த மகள் கவிபிரபா (12). உடுமலை அருகே தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை வெளியிட்ட பிரிட்டன் இணையதளம்!
[Sunday 2016-01-10 09:00]

தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை பிரிட்டன் இணையதளம் இன்று வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை சந்தித்த நாளில் (18-8-1945) நேதாஜியின் பயணங்கள் பற்றிய ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.


திமுக, அதிமுக ஆட்சியில் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை: - ஜி.ராமகிருஷ்ணன்
[Sunday 2016-01-10 08:00]

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களின் மனதை மாற்றிவிட முடியாது என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டு கால திமுக, அதிமுக ஆட்சியில் மக்களின் பிரச்னைகளை அவர்கள் தீர்க்கவில்லை.


ரூ.45 ஆயிரம் கோடி சுருட்டியதாக பியர்ல்ஸ் குழு நிறுவன தலைவர் உட்பட 4 பேருக்கு சி.பி.ஐ. காவல்!
[Sunday 2016-01-10 00:00]

மிகக் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி நாடு முழுவதும் 5 கோடி முதலீட்டாளர்களிடம் 45 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியதாக பியர்ல்ஸ் குழு நிறுவன தலைவர் நிர்மல் சிங் பாங்னு, அதன் துணை நிறுவனங்களின் அதிகாரிகள் சுக்தேவ் சிங், குர்மித் சிங், சுப்ரதா பட்டாச்சாரியா ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் அழைத்து விசாரித்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். இந்த நால்வரும் நேற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல்,


கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஐதராபாத் மாணவர் தற்கொலை!
[Saturday 2016-01-09 23:00]

ஐதராபாத் மாநிலத்தில் ஐஐடி படிப்பில் முதலிடம் பெற்ற ஷிவா கரன் (25) என்ற மாணவர் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், முதுகலை படிப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், தனது அறையில் துக்கிலிட்டு ஷிவா கரண் தற்கொலை செய்துகொண்டதாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் செம்ஸ்டர் தேர்வில் தான் பெற்ற கிரேடால் மிகவும் மன அழுத்தத்தில் ஷிவா கரண் இருந்ததாக கூறப்படுகிறது. ஷிவ கிரண் அறையில் அவரை தவிர்த்து மேற்கொண்டு 2 சீன மாணவர்கள் தங்கியிருந்ததுள்ளனர்.


மும்பையில் கடல் பகுதியில் செல்ஃபி எடுத்த இளம்பெண்ணை கடலடித்து சென்றது! -
[Saturday 2016-01-09 23:00]

மும்பையில் கடல் அருகே செல்ஃபி எடுக்கும்போது இளம்பெண் ஒருவரை கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் அவரை மீட்க கடலில் குதித்த இளைஞர் உள்பட இருவரையும் கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பை பாண்ட்ஸ்டாண்ட் புரொமெனேட் என்னும் கடல்வழிப் பாலம் அருகே கடலோரம் நின்றபடி இளம்பெண் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டு இருந்தார் அப்போது, கடலில் இருந்து வந்த பெரிய அலை அந்த பெண்னை கடலுக்கு இழுத்துச்சென்றது. இதைப்பார்த்த உடனிருந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை காப்பற்ற கடலில் குதித்தார். ஆனால் அவரையும் கடல் அலை இழுத்துச்சென்றது.


தேமுதிக தொடண்டர்களையும், பொதுமக்களையும் மட்டுமே நம்பி உள்ளது: - விஜயகாந்த்
[Saturday 2016-01-09 22:00]

அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பண நலத்தை நம்பி உள்ளது. ஆனால், தேமுதிக தொடண்டர்களையும், பொதுமக்களையும் மட்டுமே நம்பி உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: விஜயகாந்த் முதல்வராக வேண்டுமென விரும்பும் நிர்வாகிகள் பூத் கமிட்டி பட்டியல்களை பார்வையிட வேண்டும். நான் முதல்வராக வேண்டும் என்றால், கட்சி தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியற்ற வேண்டும். அப்போது தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதிமுக ஆட்சியில், தேமுதிக நிர்வாகிகளை கைது செய்வதே தொடர்கதையாக உள்ளது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பண நலத்தை நம்பி உள்ளது. ஆனால், தேமுதிக தொடண்டர்களையும், பொதுமக்களையும் மட்டுமே நம்பி உள்ளது.


தமிழகத்தில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை: தே.மு.தி.க.நிர்வாகிகள்
[Saturday 2016-01-09 17:00]

பெரம்பலூரில் நடைபெற்று வரும் தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக 2 பேருக்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. இதில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் அ.தி.மு.க. வுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கேற்றவாறு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்கள் பேசும் போது, தமிழகத்தில் 4


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை மீது நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவிகள்!
[Saturday 2016-01-09 17:00]

சேலம் குளூனி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 55


ஊழல்,மது இல்லாத,வெளிப்படையான அரசை நாங்கள் கொடுப்போம்- வைகோ
[Saturday 2016-01-09 16:00]

ஊழல், மது இல்லாத அரசை மக்கள் நலக் கூட்டணி கொடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'தமிழக அரசியலில் இதுவரை இல்லாத புதிய பரிமாணம் அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி உடன்பாடு அடிப்படையில்தான் கூட்டணி ஏற்படும். இந்த முறை குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, 6 மாதங்களுக்கு முன்பு மக்கள் முன் வைத்து, இந்த மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டுமானால், ஊழலில் ஈடுபடாத கட்சிகள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத கட்சிகள் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும்.


மும்பை பாந்த்ரா கடற்கரையில் செல்ஃபி எடுத்த ஜோடி கால் தவறி கடலில் விழுந்த பரிதாபம்!
[Saturday 2016-01-09 16:00]

மும்பை பாந்த்ரா கடற்கரையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இரண்டு பேர் கால் தவறி கடலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்ஃபி மோகத்தால் ஏராளமானோர் அசம்பாவிதங்களில் சிக்கி காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர்கதையாக இருக்கும் நிலையில், இன்று மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது: - கவிஞர் வைரமுத்து
[Saturday 2016-01-09 16:00]

தமிழகத்தில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியும் கலாசார நிகழ்வுமான ஜல்லிக்கட்டை, சில நிபந்தனைகளுடன் நடத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழியேற்பட்டுள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஆதரவு!
[Saturday 2016-01-09 08:00]

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புக்கால் நவாப் எம்.எல்.சி., ஆவார். இதுபற்றி நேற்று அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,


கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விவசாயி!
[Saturday 2016-01-09 08:00]

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் விவசாயி வெற்றிவேல் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூரை அடுத்த செறுமுள்ளி கிராமம், முக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெற்றிவேல். இவரது மகள் பாரதி. 11ம் வகுப்பு படிக்கும் பாரதியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்த தோழி நித்யா, வீட்டின் கதவில் நூலால் கட்டி தொங்க விடப்பட்டிருந்த காகிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், உள்ளே அனைவரும் இறந்து விட்டனர். போலீசை அழைக்கவும். யாரும் உயிருடன் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.


ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான அனுமதி,அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி: - பொன் ராதாகிருஷ்ணன்
[Saturday 2016-01-09 08:00]

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதற்கு அனைவரின் கூட்டு முயற்சியே காரணம் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட இருந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவு மூலம் அது காக்கப்பட்டு இருக்கிறது. எனவே, பொங்கல் பண்டிகையையும், ஜல்லிக்கட்டையும் தமிழர்கள் பிரதமர் மோடியின் பெயரில் கொண்டாட வேண்டும். விலங்கின ஆர்வலர்களுக்கு அறிவுரை:


தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி!
[Saturday 2016-01-09 08:00]

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜக கட்சியினர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே துவங்கிவிட்டனர்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
[Friday 2016-01-08 19:00]

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இந்திய உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டில் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். இதனை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையும், ஏனைய தடைகளும் நீக்கப்பட்டன. இதற்கு எதிராக கர்நாடகா அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை அடுத்த மாதம் 2ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்:
[Friday 2016-01-08 07:00]

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வைத்திருந்தவர்கள் மட்டுமின்றி மாடு பிடி வீரர்கள் மற்றும் பலவேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் தடையை நீக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்தபோது இன்று அனுமதி அளிக்கப்பட்ட செய்தி வெளியானதும் புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். புதுக்கோட்டையில் காளைகளுக்கு இனிப்ப வழங்கி பட்டாவு வெடித்து கொண்டாடினார்கள்.


காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த காதல் ஜோடி: - போலீசார் விசாரணை
[Friday 2016-01-08 07:00]

தமிழ் நபடு - புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனியப்பன் மகன் பிரகாஷ். பொறியியல் பட்டதாரியான இவர் நாகப்பட்டிணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் ஆலங்குடி அருகில் உள்ள பாச்சிக்கோட்டை முருகேசன் மகள் கனகாவும் (19) காதலித்து வந்த நிலையில், கனகாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் காதலனுடன் நாகபட்டிணம் மாவட்டம், திருக்கவளை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 4ந் தேதி நண்பர்கள் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் கனகாவை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை என்ற நிலையில் குளமங்கலம் வடக்கு பிரகாஷ் கடத்திச் சென்றுவிட்டதாக ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என அறிவியல் மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரை!
[Thursday 2016-01-07 22:00]

இந்திய அறிவியல் மாநாட்டில், இந்துக் கடவுளான சிவன் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல்வாதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று தெரிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில்,


காஷ்மீர மாநிலத்தின் முதலாவது பெண் முதல்வராக பதவியேற்கிறார் மெகபூபா முஃப்தி!
[Thursday 2016-01-07 14:00]

ஜம்மு காஷ்மீர முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானதைத் தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மெகபூபா பதவியேற்றால் ஜம்மு காஷ்மீரத்தின் முதலாவது பெண் முதல்வராவார். ஜம்மு காஷ்மீரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று முப்தி முகமது சயீத் காலமானார்.


காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்!
[Thursday 2016-01-07 14:00]

காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 24 ஆம் தேதி முஃப்தி முகமது சயீத்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் இருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டுவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை!
[Thursday 2016-01-07 13:00]

போராட்டத்தில் ஈடுபட்ட புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள அரசு திரைப்பட கல்லூரியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நடிகர் கஜேந்திர சவுகான் மற்றும் சில உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி முதல் திரைப்பட கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 139 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.


சரக்கு மற்றும் சேவை வரி மசோதா: சோனியா காந்தியுடன் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆலோசனை!
[Thursday 2016-01-07 12:00]

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் மசோதாக்கள் நிறைவேற முடியாமல் போனது. இந்த நிலையில் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி மாதம் கூட இருக்கிறது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


பிகார் சிறைகளின் மோசமான நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
[Thursday 2016-01-07 08:00]

பிகார் சிறைச்சாலைகளின் மோசமான நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியும், பிகார் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைமை நிர்வாகியுமான வி.என்.சின்ஹா, மாநிலத்தில் உள்ள 58 சிறைச்சாலைகளையும் பார்வையிட்டு அங்குள்ள வாழ்வாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சமூக ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான ஸ்மிதா சக்ரவர்த்தியை கேட்டுக் கொண்டார். அதன்பேரில் சிறைச்சாலைகளில் உள்ள 30,070 கைதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து "பிகார் சிறைச்சாலைகளின் நிலை- 2015' என்ற தலைப்பிலான அறிக்கையை ஸ்மிதா தயார் செய்து கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டார்.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா