Untitled Document
April 29, 2024 [GMT]
டிப்பர் மோதி கல்வி அதிகாரி பலி!
[Friday 2024-04-12 16:00]

யாழ்ப்பாணத்தில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் (வயது 56) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.


ராஜபக்ச கூட்டணியின் அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!- ஐக்கிய மக்கள் சக்தி சூளுரை.
[Friday 2024-04-12 16:00]

எதிர்வரும் தேர்தல்களில் ராஜபக்ச கூட்டணியின் அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


பரந்தனில் நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணின் சடலம்!
[Friday 2024-04-12 16:00]

கிளிநொச்சி-பெரிய பரந்தன் பகுதியில் இன்று நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் எனும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சுதந்திரக் கட்சியை ஐதேகவுடன் இணைக்க அனுமதியோம்!
[Friday 2024-04-12 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத்தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது.அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் சுதந்திர கட்சியை இணைப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்க இடமளிக்கப்படாது என சு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை!
[Friday 2024-04-12 16:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


எந்த கொள்கையின் அடிப்படையில் சிங்கள வேட்பாளரை தமிழர்கள் ஆதரிக்க முடியும்?
[Friday 2024-04-12 06:00]

தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம் என கூறும் தமிழர்கள் எந்த பெரும்பான்மை இன வேட்பாளரை என்ன கொள்கையில் ஆதரிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை குறித்து நேரில் ஆராய்ந்த அலன் கீனன்! - விரிவான அறிக்கையை வெளியிடுவார்.
[Friday 2024-04-12 06:00]

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்ததாகவும், அதுபற்றிய அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.


வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் நிச்சயம் இருக்கும்!- வேட்பாளர் ரணிலாகவும் இருக்கலாம்.
[Friday 2024-04-12 06:00]

பெயர் எதுவாக இருந்தாலும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னம் நிச்சயம் காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.


கூரிய ஆயுதங்கள், போதைப் பொருளுடன் மன்னாரில் இருவர் கைது!
[Friday 2024-04-12 06:00]

மன்னார், கரிசல் பிரதேசத்தில் குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுமந்திரனை அவமதித்து விட்டது ஜேவிபி!- டக்ளஸ் கொதிப்பு.
[Friday 2024-04-12 06:00]

ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.


உயர் தொழில்நுட்ப ஸ்கான் இயந்திரங்களை வழங்கியது ஜப்பான்!
[Friday 2024-04-12 06:00]

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கான் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.


வவுனியா விபத்தில் ஒருவர் படுகாயம்!
[Friday 2024-04-12 06:00]

வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


புத்தாண்டு காலத்தில் சீரான எரிபொருள் விநியோகத்துக்கு நடவடிக்கை!
[Friday 2024-04-12 06:00]

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


சுதந்திரக் கட்சி குறித்து ஆராய கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு!
[Friday 2024-04-12 06:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் தற்போது யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது எனத் தெரியவருகின்றது.


இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
[Friday 2024-04-12 06:00]

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50,537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


சிங்கள வேட்பாளர்கள் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டும்!
[Thursday 2024-04-11 16:00]

பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


எழுத்தாளர் தீபச்செல்வனிடம் ரிஐடி விசாரணை!
[Thursday 2024-04-11 16:00]

எழுத்தாளர் தீபச்செல்வன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


தாய்நிலத்தை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டும்!
[Thursday 2024-04-11 16:00]

எமது தாய்நிலத்தை ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.


முதலீடு செய்வதற்கு வெளிப்படையான சூழல் அவசியம்!- தினேசிடம் சீன ஜனாதிபதி வலியுறுத்தல்.
[Thursday 2024-04-11 16:00]

சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிப்படையான நியாயமான சூழல் அவசியம் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிற்கு தெரிவித்துள்ளார்.


மொட்டு எம்.பிக்களுக்கு வாய்ப்பூட்டு!
[Thursday 2024-04-11 16:00]

ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பில் முறையான முடிவு எடுக்கப்படும் வரை பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக் கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து மரணம்!
[Thursday 2024-04-11 16:00]

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். கைதடி பகுதியில் இந்தச் சம்பவம் இடம் இடம்பெற்றுள்ளது.


உதயனுக்குள் நுழைந்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது!
[Thursday 2024-04-11 16:00]

யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் பணிமனைக்குள் நேற்று இரவு அத்துமீறி நுழைந்து, கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கத் தயார்! - இந்தியா அறிவிப்பு.
[Thursday 2024-04-11 16:00]

இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு, நவீன ஆயுதங்களை வழங்க புதுடில்லி தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.


2023 ஜனவரிக்குப் பின்னர் 8000 படையினர் தப்பியோட்டம்!
[Thursday 2024-04-11 16:00]

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட சுமார் 8000 பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மருதானையில் சிக்கிய ஆயுதங்கள்!
[Thursday 2024-04-11 16:00]

மருதானை, லொக்கேட்லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சர்வதேச நியமங்களை மீறி போராட்டங்களை அடக்கும் அரசாங்கம்! - சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு.
[Thursday 2024-04-11 06:00]

இலங்கையில் 2022 - 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு தவறுவது அடக்குமுறையின் குறியீடாகும் எனத் தெரிவித்துள்ளது.


தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பின்னால் ராஜபக்சக்கள்? - சந்தேகம் கிளப்புகிறார் சுமந்திரன்.
[Thursday 2024-04-11 06:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முன்மொழிவுக்குப் பின்னால் ராஜபக்சக்கள் இருக்கின்றார்களா? தீவிரவாத - இனவாத சிங்கள சக்திகள் இருக்கின்றார்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


4 முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்! - டலஸ் கோரிக்கை.
[Thursday 2024-04-11 06:00]

நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் தமது சொந்த நலனுக்காகவும், மக்களுக்காகவும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா