Untitled Document
May 3, 2024 [GMT]
நிலக்சனின் 12 ஆவது நினைவேந்தல்! Top News
[Thursday 2019-08-01 18:00]

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவன் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12வது நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


மஹிந்தவின் கையில் 5 வேட்பாளர்கள்!
[Thursday 2019-08-01 18:00]

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை. எமது பட்டியலில் தற்போது ஐவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


கருவே அமெரிக்காவின் தெரிவு!
[Thursday 2019-08-01 17:00]

ஜனாதிபதி தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. எனவே, அவர் ஏதோவொரு வழியில் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். இது குறித்து நாம் குழப்பமோ அல்லது அச்சமோ அடையவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


செப்ரெம்பர் 2இல் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்!
[Thursday 2019-08-01 17:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை செப்ரெம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர கட்சி சம்மேளனத்தில் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடந்த விஷேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


ரயில் மோதி ஒருவர் மரணம்!
[Thursday 2019-08-01 17:00]

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் ரயில் மோதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையை சேர்ந்த தம்பையா மகேந்திரன் (65) என்பவரே உயிரிழந்தார்.


இரண்டுபட்டது ஐதேக செயற்குழு!
[Thursday 2019-08-01 17:00]

புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பான பிரேரணை இன்று நடந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.


மாதகலில் 112 கிலோ கஞ்சா பொதிகள்!
[Thursday 2019-08-01 17:00]

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் நேற்று இரவு 112 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருளைக் கடத்தி வந்ததாகச் சந்தேகப்படும் சந்தேகநபர்கள், அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும்​ கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி, 22.4 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக்க பத்திராஜ தெரிவித்தார்.


கிளிநொச்சி கொலைகள் - சந்தேக நபருக்கு விளக்கமறியல்!
[Thursday 2019-08-01 17:00]

கிளிநொச்சி - ஜெயந்திநகர் பகுதியில், தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேநபரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டது.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதிலடி!
[Thursday 2019-08-01 07:00]

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில் நேரடியாக தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான் இங்கு சஹரான் தாக்குதல் நடத்தியுள்ளார். கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதலை நடத்தினர் என்ற ஆதாரங்கள் ஒளிப்பதிவுகள் உள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.


பௌத்தமயமாக்கலுக்கு எதிராக போராட்டம்!
[Thursday 2019-08-01 07:00]

இந்து ஆலய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெறவுள்ளது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் அமைதியான முறையில் இடம்பெறவுள்ளது.


சிவில் சமூகம் வியூகம் வகுக்க வேண்டும்!
[Thursday 2019-08-01 07:00]

ஜனாதிபதி தோ்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய கடந்தகால தவறுகளை திருத்திக் கொண்டு, சகல தமிழ் தரப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சாா்பில் எமது நிலைப்பாட்டை தீா்மானமாக எடுத்து, அதனை சா்வதேச சமூகத்திற்கு வழங்க வேண்டும். அதற்கு இணங்கும் தரப்புக்களையே ஆதாிக்க வேண்டும் என ஈ.பி.ஆா்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.


கோத்தா பதுங்குவது ஏன்?
[Thursday 2019-08-01 07:00]

கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை உண்மையில் ரத்து செய்யப்பட்டிருக்குமானால் அதனை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியாகுவதற்காக அமெரிக்க குடியுரிமையை இழக்க முடியாது என்று அவர் எண்ணுவாராக இருந்தால் வேறொரு ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.


அவசரகாலச் சட்டத்துக்கு 2 எம்.பிக்களே எதிர்ப்பு!
[Thursday 2019-08-01 07:00]

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை நேற்று 40 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பிகர்கள் சபையில் இருக்கவில்லை.


ஆயுதமேந்துவதை விரும்புகிறீர்களா?
[Thursday 2019-08-01 07:00]

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் தேவையில்லாமல் உரசிப் பார்த்து வருகின்றனர். அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.


பாலியல் குற்றச்சாட்டு - விளக்கமளிக்கும் கனடிய தமிழ் பெண் மருத்துவர்!
[Thursday 2019-08-01 07:00]

சிகிச்சைக்கு வந்த நோயாளி தன்னை மிரட்டி பாலியல் உறவு கொள்ள வைத்தார் என, கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கருவை நிறுத்த ஐதேகவில் இணக்கம்!
[Thursday 2019-08-01 07:00]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன், பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்தில் பொது இணக்க நிலை ஏற்பட்டிப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.


வீதியில் வீசப்பட்டுக் கிடந்த பெண் சிசு! Top News
[Thursday 2019-08-01 07:00]

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் பிறந்து நான்கு நாளே ஆன பெண் சிசு ஒன்று வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்துக்கு மற்றொரு ரயில்!
[Thursday 2019-08-01 07:00]

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும். இதேபோன்று 4087 இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும்.


மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்க்கமாட்டார்கள்!
[Wednesday 2019-07-31 18:00]

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களின் ஒரே குரலாகவே, தமிழ் மக்கள் பேரவையினால் 'எழுக தமிழ்' பேரணி நடத்தப்படவுள்ளது. இந்த பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் யாரும் இதனை எதிர்க்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


அவசரகாலச் சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்போம்!
[Wednesday 2019-07-31 18:00]

பயங்கரவாதத் தடைச்சட்டமும் அவசரகாலச் சட்டமும் தமிழர்களை ஒடுக்கும் நோக்கிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறதரன் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுவரும் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


இராணுவத்துக்குத் தெரியாது!
[Wednesday 2019-07-31 18:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே வெளியாகியிருந்த புலனாய்வு தகவல்கள் தொடர்பாக இராணுவத்திற்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கையின் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.


தெரிவுக்குழு முன் சாட்சியம்!
[Wednesday 2019-07-31 18:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார்.


இரட்டைக்கொலை - தடயப் பொருட்களுடன் கொலையாளி கைது! Top News
[Wednesday 2019-07-31 18:00]

கிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலைகளின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, தாமே கொலைகளை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


ஆடி அமாவாசையை குழப்ப பிக்குகள் சூழ்ச்சி பூசை! Top News
[Wednesday 2019-07-31 17:00]

ஆடி அமாவாசை விரதமான இன்று திருகோணமலை -கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.


சுதந்திரக் கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டை!
[Wednesday 2019-07-31 17:00]

டிலான் பெரேரா ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­ன­ராக இருக்­கின்ற போதிலும் பொது­ஜன பெர­முன சார்­பி­லேயே செயற்­ப­டு­கின்றார். சுதந்திரக் கட்­சியில் இருந்து கொண்டு அதற்கு எதி­ராக செயற்­பட்டால் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யேற்­படும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.


பகலில் மைத்திரிக்கு ஆதரவு, இரவில் சஜித்துக்கு ஆதரவு!
[Wednesday 2019-07-31 17:00]

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மென கூறி­வ­ரு­கின்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் மறு­புறம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்­பி­டிக்­கின்­றனர் . பகலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வேண்டும் என்று கூறு­ப­வர்கள் இரவில் சஜித்­திற்கு ஆத­ரவு வழங்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­கின்­றனர் என்று அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.


தமிழர்களின் ஆதரவுடன் மொட்டு ஆட்சி மலருமாம்!
[Wednesday 2019-07-31 17:00]

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆட்சி விரைவில் மலரும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தரமான - தகுதியான வேட்பாளர்களே போட்டியிடுவார்கள். இரண்டு தேர்தல்களிலும் எமது கட்சியே வெற்றி பெறும். அது இப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.


அதுரலியே தேரருக்கு அசாத் சாலி சவால்!
[Wednesday 2019-07-31 17:00]

அத்துரலியே ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசாங்கத்தை வீழ்த்தினால் தான் அரசியலில் இருந்து விலகிக் கொள்வேன் என மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி சவால் விடுத்துள்ளார்.அவர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா