Untitled Document
May 20, 2024 [GMT]
மீனையும் பறித்து படகையும் சேதப்படுத்திய கடற்படை! Top News
[Tuesday 2019-08-13 16:00]

வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்று கரை திரும்பிக் கொண்டிருந்த மீன்பிடிப் படகை வழி மறித்து கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். படகை வழிமறித்து, மீனைப் பெற்றுக் கொண்ட கடற்படையினர் படகு மீது, தமது படகினால் மோதியுள்ளனர். இதனால் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்தது. சக மீனவர்களி்ன் உதவியுடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் .


சிறுவனுக்கு எமனான தாவணி! Top News
[Tuesday 2019-08-13 16:00]

வவுனியா, செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் சல்வார் தாவணியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுவன், கழுத்தில் தாவணி இறுக்கி உயிரிழந்தார். வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியை யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த துயர சம்பவம் நடந்தது.


அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்கள்!
[Tuesday 2019-08-13 16:00]

அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் 7.30 மணிக்கு ஆரம்பமான போது, ஐந்து அமைச்சர்கள் மாத்திரமே வந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை!
[Tuesday 2019-08-13 16:00]

திருகோணமலை - குச்சவெளி, மதுரங்குடா பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக 46 வயதான ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 8.15 அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்திய மீனவர்கள் நால்வர் கைது!
[Tuesday 2019-08-13 16:00]

நெடுந்தீவு கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் நேற்று இரவு காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


அமைச்சர்களை மதிக்காதவர் மக்களை மதிப்பாரா?
[Tuesday 2019-08-13 16:00]

பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, கோத்தாபய ராஜபக்ஷ அமைச்சர்களுடன் சிறந்த முறையில் செயற்பட்டிருக்கவில்லை, அவ்வாறான ஒரு நபர் பொதுமக்களுடன் சிறந்த முறையில் எவ்வாறு செயற்படுவார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம கேள்வி எழுப்பியுள்ளார்.


39 கிலோ கஞ்சாவுடன் மாட்டினார் ஒருவர்!
[Tuesday 2019-08-13 16:00]

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில், 39 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


கோத்தா ஜனாதிபதி; ரணில் பிரதமர்- இரகசிய பேரம்!
[Tuesday 2019-08-13 07:00]

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து, கோத்தபாய ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமானவர்களும் பேச்சுக்களை நடத்த ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்த முயற்சி ஆரம்பமாகி விட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


போர் நட்டங்களை ஈடுசெய்யவே கம்பெரலிய!
[Tuesday 2019-08-13 07:00]

போரினால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யவே அரசாங்கம் வடக்கு, கிழக்கில் கம்பெரலிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை, அராலி மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ஐ.நாவில் முக்கிய அறிக்கை!
[Tuesday 2019-08-13 07:00]

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி க்ரீப் தனது இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பரில் சமர்ப்பிக்கவுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி க்ரீப் தமது அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கவுள்ளார்.


குழு மோதலில் 2 இளைஞர்கள் படுகாயம்! Top News
[Tuesday 2019-08-13 07:00]

வவுனியா - குருமன்காட்டில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருமன்காடு பகுதியில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல்,வாள்,கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மங்களவின் கருத்து - நாமல் கொதிப்பு!
[Tuesday 2019-08-13 07:00]

அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


முதலில் மாகாணசபைத் தேர்தல்?
[Tuesday 2019-08-13 07:00]

மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் இதனைத் தெரிவித்தன.


60 எம்.பிக்களின் பதவிகளுக்கு ஆப்பு?
[Tuesday 2019-08-13 07:00]

மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட 60 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சேறு பூசக் கூடாது - எச்சரிக்கும் மஹிந்த!
[Tuesday 2019-08-13 07:00]

சமூக வலைத்தளங்கள் மூலம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேறு பூசும் நடவடிக்கை முன்னெடுக்கக் கூடாது என பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோத்தாவுடன் நின்றால் தான் தலைநிமிர முடியும்!
[Tuesday 2019-08-13 07:00]

கோத்தாபய நின்றால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தலைநிமிர செய்ய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


அத்துமீறி அறுவடை- ஊடகவியலாளரும் கைது!
[Tuesday 2019-08-13 07:00]

கிளிநொச்சி - முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் வயலுக்குள் அத்துமீறி அறுவடை மேற்கொண்ட சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக, குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் உட்பட ஏழு பேர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழ் மக்களின் பிரச்சினையை வன்னிக்குள் மட்டும் சுருக்க முடியாது - சிவசக்தி ஆனந்தன்!
[Monday 2019-08-12 20:00]

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டாவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய இனப்பிரச்சினை என்பது வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் அனைவரதும் பிரச்சினை. இதனை வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை என்று பிரித்துப்பார்க்க முடியாது. ஆனால் சிங்கள ஆளும் வர்க்கங்கள் அனைத்துமே தமிழ் மக்களைப் பல்வேறு கூறுகளாக்கி அவர்களை ஒற்றுமைப்படவிடாமல் தடுப்பதில் கைதேர்ந்தவை. எமது மத்தியிலும் அவர்களின் மகுடிக்கேற்ப தலையாட்டும் சக்திகள் காலத்திற்குக் காலம் உருவாகிவருவதையும் பார்க்க முடிகிறது. இந்தப் பின்னணியிலேயே மகிந்தராஜபக்ச தரப்பினரின் வன்னி மக்கள்மீதான கரிசனையை நோக்க வேண்டியுள்ளது. இறுதி யுத்தத்தின்போது பெருமளவில் பாதிக்கப்பட்டது வன்னி நிலப்பரப்பே. அப்பாதிப்பை முன்னின்று நடத்தியவர்களே அம்மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல் நடிப்பதுதான் வேடிக்கை.


கோத்தாவுக்கு சவால் விடும் சஜித்! Top News
[Monday 2019-08-12 18:00]

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு சவால் விடும் வகையிலும், ஐதேகவில் பலத்தை நிரூபிக்கும் வகையிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பதுளையில் இன்று பாரிய பொதுக்கூட்டம் இடம்பெற்று வருகிறது. அமைச்சர் ஹரின் பெர்னான்டோவின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.


இணைந்து செயற்படத் தயார்!
[Monday 2019-08-12 18:00]

தமிழ் மக்கள் நலனுக்காக அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி எப்போதும் தயாராக உள்ளது என்று தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


தமிழரின் ஆதரவின்றி கோத்தாவினால் வெல்ல முடியாது!
[Monday 2019-08-12 18:00]

தமிழ் மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவினால் வெற்றிபெற முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழர்கள் வாக்களிக்காது விட்டால் 51 வீதம் கிடைத்து விடும்!
[Monday 2019-08-12 18:00]

நாங்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விடுபட்டு இருந்தோமானால் குறைந்தளவு மக்கள் வாக்களித்து அதில் 51 சதவீதம் யாராவது ஒருவருக்கு கிடைக்கக் கூடும். என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தனித்துப் போட்டியிடுவோம்!
[Monday 2019-08-12 18:00]

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடும் சாத்தியம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


இப்போது தேவை யாப்பே;தேர்தல் அல்ல! Top News
[Monday 2019-08-12 18:00]

தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக இருப்பது, ஜனாதிபதி தேர்தல் அல்ல, ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் என ஐரோப்பிய ஒன்றிய குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


யார் வந்தாலும் போராட்டம் தொடரும்! Top News
[Monday 2019-08-12 18:00]

நாட்டில் கோத்தாபய ராஜபக்ச அல்ல, யார் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக ஆட்சிக்கு வந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடருமென, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் தலைவிகள் தெரிவித்தனர்.


கிணற்றில் வீழ்ந்து யானை மரணம்! Top News
[Monday 2019-08-12 18:00]

முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டான் சம­ளங்­கு­ளம் பகு­தி­யில் விவ­சா­யக் காணி­யிலுள்ள கிணற்றில் காட்­டு­ யானை ஒன்று விழுந்து உயி­ரி­ழந்­துள்­ளது. விவ­சா­ய கிணற்­றில் ஐந்து நாள்­க­ளுக்கு முன்­னர் யானை இறந்திருப்பது குறித்து சம்பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு முறை­யிட்­டும் எந்தவித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.


84 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! Top News
[Monday 2019-08-12 17:00]

காங்கேசன்துறை - கீரிமலை கடற்கரையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடற்படையினருடன் இணைந்து சுமார் 83.9 கிலோ கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர். இந்த கஞ்சாவின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தயாசிறிக்கு டிலான் பதிலடி!
[Monday 2019-08-12 17:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டத்தில் கலந்து கொண்ட தான் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் ஐதேகவுடன் அமர்ந்து கொண்ட சுதந்திரக் கட்சியினர் மீதே முதலில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா