Untitled Document
May 8, 2024 [GMT]
ஐதேக திண்டாட்டம் - மஹிந்த கொண்டாட்டம்!
[Sunday 2019-08-04 08:00]

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நிறுத்துவதா அல்லது கரு ஜயசூரியவை நிறுத்துவதா என்று தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் திண்டாடுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


புதிய கூட்டமைப்பு - இன்னமும் முடிவு இல்லை!
[Sunday 2019-08-04 08:00]

புதிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் கலந்துரையாடல் மட்டத்திலே உள்ளதாகவும் இன்னும் அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


முதல் செய்மதிப் படத்தை அனுப்பியது ராவணா! Top News
[Sunday 2019-08-04 08:00]

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா-1 முதலாவது ஒளிப்படத்தை அனுப்பி வைத்துள்ளது. ஆர்தர் சி கிளார்க் நிலையத்தைச் சேர்ந்த, இலங்கை ஆய்வு விஞ்ஞானிகளான தரிந்து தயாரத்ன, துலானி சமிக்கா ஆகியோரால், ஜப்பானின் கையூஷூ தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த செய்மதி, வடிவமைக்கப்பட்டது.


கருவுடன் மைத்திரி இரகசிய பேச்சு!
[Sunday 2019-08-04 08:00]

சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்தத் தொலைபேசி உரையாடலை ஜனாதிபதி நடத்தியுள்ளார்.


இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை!
[Sunday 2019-08-04 08:00]

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30ற்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள், 2995 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.


பௌத்தத்துக்கு முன்னுரிமையை ஏற்கமுடியாது! Top News
[Saturday 2019-08-03 18:00]

பௌத்த மதம் முதன்மையானது என்று நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். பௌத்தமயமாக்கலுக்கு எதிராக இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நல்லை ஆதீன முன்றலில் இன்று இடம்பெற்ற,போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.


ஈஸ்டர் தாக்குதல்கள் - ஐ.நா பாதுகாப்புச் சபையில் அறிக்கை!
[Saturday 2019-08-03 17:00]

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்த போதிலும், உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போர்க்குற்றவாளிகளை தண்டிக்கவே மாட்டோம்!
[Saturday 2019-08-03 17:00]

மீண்டும் ஆட்சிபீடம் ஏறியதும் அரசியல் தீர்வு உட்பட வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றுவோம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில் எவரையும் தண்டிக்கவே மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.


பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கைத் தமிழர்!
[Saturday 2019-08-03 17:00]

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா என்ற இலங்கைத் தமிழர் நியமிக்கப்படவுள்ளார். வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் சேவைகள் சபை அறிவித்துள்ளது.


வாள்வெட்டில் 2 இளைஞர்கள் காயம்!
[Saturday 2019-08-03 17:00]

யாழ்ப்பாணம் -கொழும்புத்துறையில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், படுகாயமடைந்த இளைஞர்கள் இருவர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், மற்றொருவர் குருநகர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுகாதார வைத்திய அதிகாரி மயங்கி வீழ்ந்து மரணம்!
[Saturday 2019-08-03 17:00]

நெஞ்சு வலியால், திடீரென மயங்கி வீழ்ந்த சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் க.தயாளன் என்பவரே உயிரிழந்தவர் ஆவார். மாரடைப்பினால் அவர் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழ்.பேருந்து நிலைய மோதலில் இருவர் காயம்!
[Saturday 2019-08-03 17:00]

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் இரு தரப்பினருக்கு இடையில் நடந்த மோதலில் நடத்துநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.


எதிர்ப்புக்குப் பணிந்தார் ரணில்!
[Saturday 2019-08-03 17:00]

எதிர்வரும் 5ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவிருந்த, தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, கட்சியின் உயர்பீடத்தின் தீர்மானத்துக்கமைய ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டத்தில் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றதால் கட்சியின் உயர்பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.


பக்தர்களுக்கு 'சோதனை'! - கூடங்கள் தயார் Top News
[Saturday 2019-08-03 17:00]

யாழ். நல்லூர் கந்தன் திருவிழா காலத்தில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, அதற்கான சோதனைக் கூடங்களை யாழ்ப்பாணம் மாநகரசபை அமைத்துக் கொடுத்துள்ளது.


போரை முடித்து வைத்த எனது ஆயுதங்கள்!
[Saturday 2019-08-03 16:00]

நாம் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்திருந்த யுத்தத்தையே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போரை முடித்து வைத்தது. அதற்கான அனைத்து ஆயுதங்களும் தன்னுடைய அரசாங்கமே கொண்டு வந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


மொட்டில் இணைந்த ஈரோஸ்!
[Saturday 2019-08-03 16:00]

ஈரோஸ் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டணியில் இருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியுடன் இணைந்துள்ளது. கடந்த உள்ளூராட்சி தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.


திடீரென பதவி விலகினார் மைத்ரி!
[Saturday 2019-08-03 16:00]

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். மைத்ரி குணரத்ன மத்திய மாகாண ஆளுநராக 2019 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி பதவியேற்றுக் கொண்டார்.


வட-கிழக்கின் நிலை பரிதாபமாகும் ஆபத்து!
[Saturday 2019-08-03 07:00]

வடக்கு, கிழக்கில் தேசியக் கட்சிகளும் அவற்றைச் சார்ந்த கட்சிகளும் தலையெடுத்தால் எமது நிலை தற்போதைய நிலையிலும் பார்க்க மிகவும் பரிதாபகரமான நிலையை அடையும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இந்துக்களுடன் முரண்பாடுகளை உருவாக்கும் பிக்குகள்!
[Saturday 2019-08-03 07:00]

இந்துக்களுக்கு எதிராக ஒரு சில பெளத்த பிக்குகள் செய்யும் அடாத்தான செயற்பாடுகள் பெளத்த மதத்தின் நிலைப்பாடு அல்ல என்றும், இவ்வாறு அடாத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் உண்மையான பௌத்த பிக்குகளா என்ற சந்தேகமும் எழுவதாகவும், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.


மாரப்பன- ஜெய்சங்கர் பாங்கொக்கில் சந்திப்பு!
[Saturday 2019-08-03 07:00]

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, பாங்கொக்கில் சந்தித்து பேச்சு நடத்தினார். தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்று வரும் ஆசியான் பாதுகாப்புப் பேரவை மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள வேளையிலேயயே இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.


அமெரிக்காவுடன் மல்லுக் கட்டும் பசில்!
[Saturday 2019-08-03 07:00]

அமெரிக்காவுடன் அக்சா, சோபா உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைந்தால், அமெரிக்காவுடன் அக்சா, சோபா உடன்பாடுகள் தொடர்பான நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.


ரஷ்ய - இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு!
[Saturday 2019-08-03 07:00]

ரஷ்ய கடற்படைத் தளபதியின் அழைப்பிற்கு இணங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, ஜூலை 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ரஷ்யாவில் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டார்.


சஜித் வேட்பாளர் இல்லை!
[Saturday 2019-08-03 07:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடமாட்டார். கட்சியின் மத்திய செயற்குழு அவருக்கு அனுமதி வழங்கவே இல்லை. எமது வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.


சஹ்ரானை விட ஆபத்தானவர் ஹிஸ்புல்லா!
[Saturday 2019-08-03 07:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் போன்று முழு நாட்டையும் பொதுவான ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வரக் கூடிய ஒரு தலைவர் இந்த நாட்டுக்குத் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.


வங்கக்கடல் தாழமுக்கம் - வட-கிழக்கிற்கு எச்சரிக்கை!
[Saturday 2019-08-03 07:00]

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுக்கு செல்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அறிவித்தது.


ஓமந்தை விபத்தில் இருவர் படுகாயம்! Top News
[Saturday 2019-08-03 07:00]

வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். நேற்று மாலை மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


முதலில் கூட்டணி, பின்னரே வேட்பாளர்!
[Saturday 2019-08-03 07:00]

ஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.


கனடாவில் பாலியல் புகாரில் சிக்கிய யாழ் பெண் வைத்தியர் தீபா வாக்குமூலம்:
[Friday 2019-08-02 19:00]

தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தன்னை மிரட்டி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மருத்துவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த தீபா சுந்தரலிங்கம் என்னும் பெண் வைத்தியரே கனடாவில் மருத்துவ பட்டம் பெற்று, ரொறொன்ரோ மருத்துவமனையில் கடமையாற்றியிருந்தார். இந்நிலையில் தன்னிடம் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா