Untitled Document
April 26, 2024 [GMT]
19 இன் பாதிப்பு ஜனாதிபதிக்கு இப்போதாவது தெரிந்தது! - மஹிந்த
[Monday 2019-06-24 18:00]

19ஆவது திருத்தச்சட்டத்தின் பாதிப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போதாவது தெரிந்து கொண்டுள்ளார் என்றும், அதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ,தெரிவித்துள்ளார்.


ஊடகங்களை வெளியேற்றிய ஆளுநர்! Top News
[Monday 2019-06-24 18:00]

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இருந்து தனியார் ஊடகங்களை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வெளியேற்றினார். அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் குழப்ப நிலமை ஏற்பட்டது .


பதவி இழந்தார் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்!
[Monday 2019-06-24 18:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு, சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு விகிதாசார முறையில் தெரிவான பெண் ஒருவர் மூன்று சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத காரணத்தால் பதவி இழந்துள்ளார் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செ.பிறேமகாந் தெரிவித்துள்ளார்.


முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!
[Monday 2019-06-24 18:00]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர், உத்தரவிட்டுள்ளார். இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


6 மில்லியன் மக்களுக்கு செய்யும் துரோகம்! - ஐதேக
[Monday 2019-06-24 17:00]

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமென, ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு செய்யும் துரோகம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.


பொலிஸ் மா அதிபரின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்!
[Monday 2019-06-24 17:00]

தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு ஜூலை 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


குச்சவெளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி!
[Monday 2019-06-24 07:00]

திருகோணமலை- புல்மோட்டை பிரதான வீதியில், புடவைக்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். குச்சவெளி செந்தூர்-மதுரங்குடா பகுதியைச் சேர்ந்த கே சுகந்தன் (18 வயது) மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த ஆர். நிரோசன் (28 வயது) ஆகியோரே உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


விக்கியின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது! - சுமந்திரன்
[Monday 2019-06-24 07:00]

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


18 ஆம், 19ஆம் திருத்தங்கள் தான் இழுபறிகளுக்குக் காரணம்!- ஜனாதிபதி
[Monday 2019-06-24 07:00]

நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும். நாட்டின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இந்த இரண்டு அரசியலமைப்பு திருத்தங்களுமே காரணமாகியுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


மொட்டுக்குத் தலைமையேற்கிறார் மஹிந்த!
[Monday 2019-06-24 07:00]

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக கட்சியின் தேசிய மாநாட்டில் நியமிக்கப்படவுள்ளார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சுகததாஸ உள்ள விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழர்களின் பொறுமை கிழக்கில் முடிவுக்கு வந்து விட்டது! - மனோ கணேசன்
[Monday 2019-06-24 07:00]

தமிழர்களின் பொறுமையும் நல்லெண்ணமும் கிழக்கில் முடிவுக்கு வந்து விட்டதாக உணர்வதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கல்முனை விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


வளர்ப்பு நாய் கடித்தால் உரிமையாளருக்கு 6 மாத சிறைத்தண்டனை!
[Monday 2019-06-24 07:00]

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்து ஏற்றாத வளர்ப்பு நாய் யாரையாவது கடித்து பாதிப்பை ஏற்படுத்தினால், உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபா தண்டம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தனியாகப் பயணித்தால் வேகமாகச் செல்லலாம்!- என்கிறார் ரணில்
[Monday 2019-06-24 07:00]

வாகனமொன்றில் ஒருவரை அழைத்துச் செல்லும் போது, வேகமாகச் செல்ல ​வேண்டாம். அங்கே திருப்பு, இங்கே திருப்பாதே என்பார்கள். ஆனால் தனியாக பயணித்தால், எம்மால் வேகமாகப் பயணிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் ​போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


செட்டிக்குளத்தில் வெங்காய வெடி மூலம் மனைவியைக் கொலை செய்தவர் கைது!
[Monday 2019-06-24 07:00]

வவுனியா- செட்டிக்குளம் பகுதியில் வெங்காய வெடியை வெடிக்க வைத்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான 43 வயதுடைய து.ரவிச்சந்திரன் என்பரே செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் இருவர் மட்டுமே போட்டி! - மகாநாயக்கர் ஆலோசனை
[Monday 2019-06-24 07:00]

எமது நாட்டை வெளிநாட்டின் அடிமையாக மாற்றுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என மல்வத்து பீட மகாநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.


19 ஆண்டுகள் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதி மரணம்!
[Sunday 2019-06-23 20:00]

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி முத்தையா சகாதேவன் இன்று உயிரிழந்துள்ளார். லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கொழும்பு - தெமட்டகொட பகுதியை சேர்ந்த 61 வயதுடைய மு.சகாதேவன் சுகவீனம் காரணமாக நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கல்முனை உண்ணாவிரதம் கைவிடப்பட்டது! Top News
[Sunday 2019-06-23 20:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் இறங்குவோமென்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளோம்!- இராணுவத் தளபதி
[Sunday 2019-06-23 19:00]

புலனாய்வு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மாதுருஒயா இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவுக்கு முழுப் பொறுப்பு இருக்க வேண்டும்! - செல்வம் எம்.பி
[Sunday 2019-06-23 19:00]

இனப்பிரச்சினை தீர்வுக்கான முழுமையான பொறுப்புகூறலை இந்தியா வழங்க வேண்டும் என குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


கல்முனைக்கு ஆதரவாக யாழ்.நகரில் போராட்டம்! Top News
[Sunday 2019-06-23 18:00]

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


அங்கஜனுடன் இணைந்தார் வியாழேந்திரன்- பதவி விலகத் தயாராம்!
[Sunday 2019-06-23 18:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்துக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகத் தயாராகவுள்ளதாக எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கல்முனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதத்தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் சென்று விக்கியைச் சந்தித்தார் ஆறுமுகன்! Top News
[Sunday 2019-06-23 18:00]

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர், முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசினார்.


'கல்முனை' போராட்டத்துக்கு ஆதரவாக திருக்கோவிலில் பேரணி! Top News
[Sunday 2019-06-23 17:00]

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரும், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வலுசேர்க்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் இன்று பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது,


யாழ். மாநகரசபைக்கு தமிழ் காங்கிரஸ் சார்பில் இரு புதிய உறுப்பினர்கள்!
[Sunday 2019-06-23 17:00]

யாழ்ப்பாண மாநகர சபைக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் இரண்டு புதிய உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்.மாநகர சபைக்கு தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிகரன் ஆகிய உறுப்பினர்கள் கடந்த மே மாதம் சுயவிருப்பின் அடிப்படையில் பதவி விலகினர்.


வவுனியாவில் 'புளொட்'டின் பேராளர் மாநாடு! Top News
[Sunday 2019-06-23 17:00]

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 9 ஆவது பேராளர் மாநாடு வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் வடக்கு கிழக்குப் பகுதியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தெரிவுக்குழுவுக்கு ரணிலை அழைக்கும் தீர்மானம் இல்லை!
[Sunday 2019-06-23 17:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் விசாரணைகளுக்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று, தெரிவுக்குழு உறுப்பினரான அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேவை​யேற்படின் குறித்த தெரிவுக்குழுவுக்கு வருமாறு, பிரதமரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


89 கடற்படை அதிகாரிகளுக்கு அதிகாரமளித்த ஜனாதிபதி! Top News
[Sunday 2019-06-23 17:00]

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவு செய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு நேற்று அதிகாரமளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.


கல்முனைப் போராட்டக் களத்துக்கு செல்கிறார் விக்கி!
[Sunday 2019-06-23 07:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், போராட்டக் களத்திற்கு இன்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவுள்ளார்.

Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா