Untitled Document
May 2, 2024 [GMT]
படகு மூலம் நாடு திரும்பிய மூவர் கைது! Top News
[Thursday 2019-06-27 17:00]

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு குவிந்தகாடு கடற்பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு வந்த போது, கைது செய்யப்பட்ட மூன்று பேரும் வவுனியா பிரதேசத்தைச் ​சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை மேலதிக விசாரணைக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


பல்கலைக்கழக மாணவர்கள் கொலை - வழக்கை யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்த உத்தரவு!
[Thursday 2019-06-27 17:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தண்டனை சட்டக் கோவை நடைமுறை 296ஆம் பிரிவின் கீழான குற்றஞ்சாட்டில் நீதிமன்றம் திருப்தி கொள்ளும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ. எஸ். பீற்றர் போல் கட்டளை வழங்கினார்.


கச்சதீவு அருகே இந்திய மீனவர்கள் நால்வர் கைது! Top News
[Thursday 2019-06-27 17:00]

கச்சதீவு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரும் காங்கேசன்துறை கடற்படையினரால் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


அமெரிக்க நீதிமன்றில் கோத்தாவுக்கு எதிராக 10 பேர் வழக்கு!
[Thursday 2019-06-27 08:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் அமெரிக்க நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.


மரணதண்டனை விவகாரத்தில் இலங்கைக்கு பிரித்தானியா எச்சரிக்கை!
[Thursday 2019-06-27 07:00]

மரண தண்டனையை அமுல்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது உள்ளிட்ட சட்ட அமுலாக்கப் பிரச்சினைகளில் இலங்கையுடன் பிரித்தானியா ஒத்துழைப்பதை தவிர்க்க முடியாமல் மிகவும் கடினமாக்கும் என்று பிரித்தானியா எச்சரித்துள்ளது.


எங்களுக்காக யாரும் போராட வரவில்லை! - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
[Thursday 2019-06-27 07:00]

எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் அக்கறையுடன் கலந்து கொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.


அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரை கைது செய்யக் கோரி முறைப்பாடுகள்!
[Thursday 2019-06-27 07:00]

முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அண்மையில் வெளியிட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் இரு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்துக்கு எதிராக, அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்விரு முறைப்பாடுகளும் பொலிஸ் தலைமையகத்தால் பொலிஸ் சட்டப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.


கல்லெறிந்து கொல்ல வேண்டுமென கூறினாரா அஸ்கிரிய மகாநாயக்கர்?
[Thursday 2019-06-27 07:00]

வைத்தியர் ஷாபியின் நடவடிக்கைக்கு, அவரை கல்லெறிந்து கொலை செய்யவேண்டும் என அதிகமானவர்கள் தெரிவிக்கின்றனர் என்றே அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அந்த கருத்தை மகாநாயக்க தேரர் தெரிவிக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு!
[Thursday 2019-06-27 07:00]

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.


மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்!
[Thursday 2019-06-27 07:00]

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான தில்லைநாதன் நேற்று காலமானார். பத்திரிகைத்துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சு ஊடகத்துறைக்குத் திரும்பி கோலோச்சிய சிவம் பாக்கியம் தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் நேற்று மாலை காலமானார். இவர்உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.


சந்திவெளி விபத்தில் இளைஞன் பலி, மற்றொருவர் படுகாயம்!
[Thursday 2019-06-27 07:00]

மட்டக்களப்பு- ஏறாவூர், சந்திவெளி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். திருகோணமலையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.


6 இராணுவத்தினர் பலியான விபத்து- விசேட விசாரணைகள் ஆரம்பம்!
[Thursday 2019-06-27 07:00]

கிளிநொச்சியில் இராணுவ ட்ரக் வண்டி ஒன்று யாழ்தேவி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் 2 விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இனியும் தாக்குதல் நடக்கலாம்- இராணுவத் தளபதி சாட்சியம்! Top News
[Wednesday 2019-06-26 18:00]

தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதனாலோ அல்லது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனாலோ, பயங்கரவாத செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூற முடியாது. இனியும் தாக்குதல் நடக்கலாம், ஏனெனில் நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனேயே யுத்தம் செய்து கொண்டுள்ளோம் என இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.


தெரிவுக்குழு முன் ஆஜராகமாட்டேன்!- ஜனாதிபதி
[Wednesday 2019-06-26 18:00]

நாட்டில் அரசியல் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்மைக்கு 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமு காரணம் என்றும், இதன் காரணமாக நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.


கட்டுநாயக்க வரும் தென்னாபிரிக்க ஜனாதிபதி- சந்திக்க விரைகிறார் ரணில்!
[Wednesday 2019-06-26 18:00]

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா இன்றிரவு குறுகிய நேர பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கியிருக்கும் அவரை வரவேற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விமான நிலையம் செல்ல உள்ளார்.


தெரிவுக்குழுவுக்கு வராவிடின் ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை!
[Wednesday 2019-06-26 18:00]

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு - இறுதிக்கட்டத்தில் விசாரணை!
[Wednesday 2019-06-26 18:00]

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, கப்பம் பெற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக சிஐடியினர் இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தனர்.


தூக்கில் போடுவதை நிறுத்தக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபை!
[Wednesday 2019-06-26 18:00]

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.


நான்கு பேரைத் தூக்கில் போட ஜனாதிபதி உத்தரவு!
[Wednesday 2019-06-26 18:00]

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நால்வருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான கட்டளையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார். தண்டனையை நிறைவேற்றுவதற்கான நாளும் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக, ஜனாதிபதி இன்று காலை ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.


ரணில் எங்களை நம்பவில்லை, முஸ்லிம்களையே நம்புகிறார்!
[Wednesday 2019-06-26 18:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எங்களை நம்புவதை விட முஸ்லிம் அமைச்சர்களையும், எம்.பிக்களையும் தான் நம்புகினறார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா பாலமோட்டையில் சனசமூக நிலைய கட்டிடத்தினை திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


நீதிமன்றில் சஹ்ரானின் மனைவி!
[Wednesday 2019-06-26 18:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை, பிரதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தினார். சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய தினம் சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.


சதொச வாகனம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படவில்லை- தெரிவுக்குழுவில் சாட்சியம்!
[Wednesday 2019-06-26 18:00]

பயங்கரவாத சம்பவத்துக்கு சதொச நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சின் மேலதிக செயலாளரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.


ரிஷாத்திடம் விசாரணை ஒத்திவைப்பு!
[Wednesday 2019-06-26 18:00]

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாட்சியம் வழங்குவதற்காக இன்று, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, ஆஜராகிய போதும், அவரிடம் விசாரணை நடத்தாமல் அமர்வை ஒத்திவைப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதன்படி எதிர்வரும் 28ம் திகதி 2.30 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


படுகாயமுற்ற மற்றொரு சிப்பாயும் மரணம்!
[Wednesday 2019-06-26 18:00]

கிளிநொச்சி-பாரதிபுரம் சந்தி பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் நேற்று மாலை இராணுவ வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் காயமடைந்திருந்த மற்றொரு இராணுவ சிப்பாயும் மரணமானார்.


இராணுவத் தளபதியை தடுக்கிறது மஹிந்த அணி!
[Wednesday 2019-06-26 06:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகி சாட்சியம் வழங்கவேண்டாம் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவிடம் மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.


26 படையினர் கொலை - 3 அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்!
[Wednesday 2019-06-26 06:00]

விடுதலைப் புலிகளிடம் கைதிகளாக இருந்த 26 அரச படையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகள் நேற்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணன் தலைமையில் ஆரம்பமாகின.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை!
[Wednesday 2019-06-26 06:00]

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்குக் காரணம் என்ன, யார் பொறுப்புக்கூற வேண்டும் என்ற கேள்விகளுக்கு இதுவரையில் விடை கிடைக்கவில்லை என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


ரெக்சியன் கொலை - கமல், அனிதாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
[Wednesday 2019-06-26 06:00]

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளராக இருந்த ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் கமலேந்திரனை கொலை செய்த குற்றச்சாட்டில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மற்றும் ரெக்சியனின் மனைவி அனிதா ஆகிய இருவருக்கும் எதிராக யாழ். மேல்நீதிமன்றில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா