Untitled Document
May 19, 2024 [GMT]
வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக் கொலை!
[Friday 2019-05-03 18:00]

வவுனியா - சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (32 வயது) என அழைக்கப்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வாள்வெட்டு குழுவில் ஈபிடிபி றீகனின் சகோதரர்! - விசாரணையில் சிக்கினார்
[Friday 2019-05-03 18:00]

யாழ்ப்பாண நகரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில், வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குழுவைச் சேர்ந்த ஒருவரை, யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர், தேடப்பட்டு வருகின்றனர்.


தெற்கிலிருந்து வடக்குக்கு வெடிப்பொருள்களுடன் 20 வாகனங்கள்: Top News
[Friday 2019-05-03 14:00]

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மோட்டார் சைக்கிள்கள், 2 வான்கள், 2 கெப் ரக வாகனங்கள், ஓட்டோ 1, டீமோ பட்டா லொறியொன்று, 2 கார்கள் இவ்வாறு வடக்குக்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போலி ஊடகவியலாளர் அடையாள அட்டையுடன் கைது?
[Friday 2019-05-03 09:00]

ஊடகவியலார்கள் அடையாள அட்டையுடன் இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் கைதான 03 பேரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இனமுறுகளை ஏற்படுத்தும் வகையிலும், ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவரின் பணியாளர்கள் மூவர் நேற்று இரவு கொழும்பு மத்திய அஞ்சலகத்தில் கைதாகினர்.


இந்தியாவிடம் உதவி கேட்கவில்லை இலங்கை!
[Friday 2019-05-03 09:00]

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, இலங்கை இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக ஒத்துழைப்புகள் எதையும் கோர வில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. அவ்வாறு கோரும் பட்சத்தில் முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவிஷ் குமார் தெரிவித்தார்.


அவசரகாலச்சட்ட விதிகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டமைப்பு!
[Friday 2019-05-03 09:00]

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்க முயாதென்றும், அதில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சவாலுக்குட்படுத்த நீதிமன்றத்தை விரைவில் நாடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


அஜந்தனை உடன் விடுவிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு சம்பந்தன் கடிதம்!
[Friday 2019-05-03 09:00]

வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கரையாக்கன்தீவைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்காமல் உரிய கட்டளைகளை மீளப் பெற்று விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது!
[Friday 2019-05-03 09:00]

தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு ரெலிகிராப் ஊடகத்தை தகவல் வெளியிட்டுள்ளது.


பாடசாலைக்குள் நுழைந்த ரொய்ட்டர் புகைப்படப் பிடிப்பாளருக்கு விளக்கமறியல்!
[Friday 2019-05-03 09:00]

கட்டான பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றினுள் நேற்று பகல் 12.30 மணியளவில் அனுமதியில்லாமல் நுழைய முற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஈராக் நாட்டவரான குறித்த நபர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆலயங்களில் மிருகபலி - ஜூலை 10இல் தீர்ப்பு!
[Friday 2019-05-03 09:00]

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.


பொய்யான தகவல்கள், படங்களை வெளியிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
[Friday 2019-05-03 09:00]

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


நள்ளிரவில் மரத்துடன் மோதி கவிழ்ந்தது டிப்பர்!
[Friday 2019-05-03 09:00]

கிளிநொச்சி நகரில், நீதிமன்றத்துக்கு அருகாமையில் ஏ9 வீதியில் நேற்று நள்ளிரவு கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் , மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்தனர் . காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். பளையிலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமே விபத்துக்குள்ளானது.


600 கடிதங்களுடன் மூவர் கைது!
[Friday 2019-05-03 09:00]

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.


குண்டுதாரிகளிடம் பெருமளவில் புழக்கத்தில் இருந்த 5000 ரூபா தாள்கள்!
[Friday 2019-05-03 09:00]

ஈஸ்டர் தினத்தில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் நெருங்கியவர்களிடம் பெருந்தொகையான பணம், புழக்கத்தில் இருந்ததுள்ளது. 5000 ரூபா நாணயத்தாள்கள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டுள்ளன.


புதிய பாதுகாப்பு எச்சரிக்கை - கத்தோலிக்க தேவாலயங்களின் ஞாயிறு ஆராதனை நிறுத்தம்!
[Thursday 2019-05-02 17:00]

புதிதாக விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கைகளை அடுத்து, கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை நடத்த வேண்டாம் என்றும், கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை திறக்க வேண்டாம் என்றும் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சஹ்ரானின் சகோதரர் வீட்டில் 4 தற்கொலை அங்கிகள் மீட்பு!
[Thursday 2019-05-02 17:00]

சஹ்ரான் ஹாசீமின் சகோதரரும், சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி உயிரிழந்தவருமான ரில்வானின் காத்தான்குடி வீட்டில் தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தும் நான்கு அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் நான்கு செல்லிடப்பேசிகள், இரண்டு ஏ.ரீ.எம். அட்டைகள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்டனவும் ரில்வானின் பிள்ளைகளது புகைப்படங்களும், தேசிய அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.


காணிக்குள் நுழைந்த யானையை துரத்த முயன்ற பெண் பலி - குழந்தை படுகாயம்!
[Thursday 2019-05-02 17:00]

கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாயார் உயிரிழந்தார். 3 வயது மகள் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் காணியில் இன்று காலை 7 மணியளவில் யானை ஒன்று நுழைந்து, தென்னங்கன்றுகளை தின்று கொண்டிருந்தது. அதனை துரத்த முற்பட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


வெறும் சோதனை நடவடிக்கைகளால் ஐ.எஸ் அமைப்பினை அழித்துவிட முடியாது! - சரத் பொன்சேகா
[Thursday 2019-05-02 17:00]

தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்தி நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை வெறும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் மாத்திரம் அழித்துவிட முடியாது. அதற்கு ஒரு முறையான திட்டமிடலுடன் செயற்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


ஈஸ்டர் படுகொலைகளுடன் இராணுவப் புலனாய்வாளர்கள் சிலருக்கு தொடர்பு! - சுமந்திரன்
[Thursday 2019-05-02 17:00]

ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகளுடன் இராணுவப் புலனாய்வாளர்களில் இருந்த சிலருக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ள நிலையில், அவை குறித்த உண்மைகள் மூடிமறைக்கப்படாது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


சீயோன் தேவாலய தாக்குதலில் படுகாயமடைந்திருந்த இளைஞன் மரணம்!
[Thursday 2019-05-02 17:00]

மட்டக்களப்பு -சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் இன்று காலை 9.50 மணியளவில் உயிரிழந்தார்.


மிருசுவிலில் குளவி கொட்டி ஒருவர் மரணம்!
[Thursday 2019-05-02 17:00]

யாழ். மிருசுவில் பகுதியில் நேற்று குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நபரே உயிரிழந்தவராவர். அவரது மனைவி ,மனைவியின் சகோதரி ஆகிய இருவரும் குளவிகொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மன்னாரில் ஜப்பான் தயாரிப்பு கைத்துப்பாக்கி! Top News
[Thursday 2019-05-02 17:00]

மன்னார் - மாந்தை சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அடம்பன் பாலப் பகுதியில் காணப்பட்ட மர்மப் பொதியில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றை படையினர் இன்று காலை மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான மர்மப் பொதி ஒன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அடம்பன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


சாவகச்சேரியில் பொலிஸ் பதிவு! - குடும்ப விபரங்களை கையளிக்க உத்தரவு
[Thursday 2019-05-02 17:00]

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே கிராம சேவையாளர்களிடம் பொலிசார் குடும்ப விபரங்களை கோரினார்கள்.


சாய்ந்தமருது குண்டுதாரிகள் 10 பேரின் சடலங்களும் அடக்கம்!
[Thursday 2019-05-02 17:00]

கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 10 பேரின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.


ஆயுதத்துடன் கைதானார் ஆவா உறுப்பினர்!
[Thursday 2019-05-02 17:00]

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது ஆவா குழுவைச் சேர்ந்த அசோக் என்றம் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது வீட்டில் வன்முறைகளில் ஈடுபடுவதற்காக தயார் செய்து வைத்திருந்த ஆயுதம் ஒன்று வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவகளில் தொடர்பு பட்டவர் ஆவர்.


இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!
[Thursday 2019-05-02 17:00]

பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் மெஹமூத் குரேசி இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்துள்ளார். பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் மெஹமூத் குரேசி நாளை இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் தற்போதைய நிலமையினை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.


புர்கா தடையை எதிர்க்கவில்லை!- மஹிந்த
[Thursday 2019-05-02 17:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புர்காவைத் தடை செய்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்ப்பு தெரிவிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பிரச்சாரங்கள் உண்மையில்லை என எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் 20 வாகனங்கள் வடக்கினுள் நுழைவு? - வவுனியாவில் தீவிர சோதனை Top News
[Thursday 2019-05-02 09:00]

வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வவுனியாவில் வீதித் தடைகள் போடப்பட்டு நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா