Untitled Document
May 6, 2024 [GMT]
நீர்கொழும்பு தேவாலயத்தில் 60 பேரின் இறுதிச்சடங்குகள்! Top News
[Tuesday 2019-04-23 18:00]

நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மரணமடைந்த 60 பேரின் இறுதிச்சடங்கு இன்று காலை கட்டுவபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்றது.


தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையுடன் மஹிந்தவுக்கு நெருக்கம்!
[Tuesday 2019-04-23 18:00]

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரேன்ட் ஹொட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய இரண்டு பேரின் தந்தையான,கைது செய்யப்பட்டுள்ள செல்வந்த வர்த்தகரான 65 வயதான அல்ஹாஜ் யூசுப் மொஹமட் இப்ராஹிம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என தெரியவந்துள்ளது.


ஆனையிறவில் மீண்டும் தொடங்கியது சோதனை!
[Tuesday 2019-04-23 18:00]

ஏ-9 வீதி ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் சோதனையிடப்பட்டு வருகின்றன. பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளை இறக்கியும் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் , பஸ்களும் சோதனையிடப்படுகின்றது. குண்டுவெடிப்புகளை அடுத்து இந்த சோதனை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.


யாழ்ப்பாணத்தில் நைஜீரியர்கள் உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை!
[Tuesday 2019-04-23 18:00]

நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது பேர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ் நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்கள், இன்று மதியம் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.


பர்தாவுக்குத் தடை?
[Tuesday 2019-04-23 18:00]

இஸ்லாமியப் பெண்கள், முகத்தை முழுமையாக மூடும் வகையில் அணியும் பர்தாவைத் தடை செய்வது தொடர்பில், இஸ்லாமிய மத அமைப்புகள், எதிர்வரும் நாட்களில் அறிவிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.


குண்டுவெடித்த தேவாலயத்தில் ஜனாதிபதி! Top News
[Tuesday 2019-04-23 18:00]

குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று முற்பகல், அங்கு சென்றிருந்தார். அங்கு, அருட்தந்தை ஸ்ரீலால் பொன்சேகா அடிகளாரைச் சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் கிறிஸ்தவ மக்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.


தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு தொடர்பில்லை!- மறுக்கிறார் ஹிஸ்புல்லா
[Tuesday 2019-04-23 18:00]

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா மறுத்துள்ளார். தாக்குதலுக்குடன் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை என மலேசிய ஊடகம் ஒன்றிடம் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.


இரவு 9 மணி முதல் ஊரடங்கு!
[Tuesday 2019-04-23 18:00]

நாடுமுழுவதும், இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் கடந்த 2 நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஐஎஸ் குறித்து எச்சரித்த போது சாபமிட்டவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்!
[Tuesday 2019-04-23 18:00]

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தொடர்குண்டுவெடிப்புகள் - வெளிச்சத்துக்கு வரும் சூத்திரதாரிகளின் இரகசியங்கள்!
[Tuesday 2019-04-23 08:00]

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து இதுவரை 55 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைகளில் 26 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.


உயிர் நீத்தோருக்காக 3 நிமிடங்கள் மௌன அஞ்சலி!
[Tuesday 2019-04-23 08:00]

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று தேசிய துக்க தினமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலேயே மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.


ரணிலுடன் ட்ரம்ப், மைத்திரியுடன் மோடி தொலைபேசியில் ஆறுதல்!
[Tuesday 2019-04-23 08:00]

இலங்கையில் இடம்பெற்ற துரதிரஷ்டவசமான குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அமெரிக்கா வன்மையாக கண்டிப்பதுடன், இத்தருணத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.


குண்டுடன் வந்துள்ளதாக கூறி விட்டுச் சென்ற நீர்கொழும்பு தற்கொலைக் குண்டுதாரி!
[Tuesday 2019-04-23 08:00]

நீர்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் குண்டுடன் வெடித்தவரை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.


தாயாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி விட்டு மாண்ட தற்கொலைக் குண்டுதாரி!
[Tuesday 2019-04-23 08:00]

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் அந்த நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.


மேலதிக அதிகாரங்களைக் கோருகிறார் இராணுவத் தளபதி!
[Tuesday 2019-04-23 08:00]

நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தேவையான சட்ட அங்கீகாரத்தை இராணுவத்திற்கு வழங்குமாறு பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் வேண்டுகோளை முன்வைத்ததாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.


அவசரகாலச்சட்டம் பிரகடனம் - வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி!
[Tuesday 2019-04-23 08:00]

நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு வௌியிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


அமைச்சர் கபீர் ஹாசிம் அதிர்ச்சித் தகவல்!
[Tuesday 2019-04-23 08:00]

புத்தளம் - வனாத்தவில்லு பிரதேசத்தில் 100 கிலோ வெடிபொருட்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படையினரால் வீடு முற்றுகை- முஸ்லிம் இளைஞனுக்கு வலைவீச்சு! Top News
[Tuesday 2019-04-23 08:00]

யாழ்ப்பாணம்- ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞன் ஒருவர் தொடர்பில் நேற்று இரவு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.இதனால் யாழ்ப்பாணம் - அராலி வீதிக்கும், நாவாந்துறை வீதிக்கும் இடையே பொலிஸ் தடை போடப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


பாராளுமன்றத்தில் இன்று விசேட அமர்வு!
[Tuesday 2019-04-23 08:00]

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த விசேட அமர்வு குறித்த, அரசியல் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. வெடிப்புச் சம்பவங்களால் விளைந்த துரதிஷ்டவசமான நிலைமை குறித்து மக்கள் பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்தார்கள். இது பற்றியும் எதிர்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது.


மீண்டும் அவசரகாலச் சட்டம்! - அடையாளம் காண முடியாத நிலையில் 90 சடலங்கள்.
[Monday 2019-04-22 19:00]

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம், இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கொச்சிக்கடையில் மீண்டும் வெடித்த குண்டு! - கொழும்பில் பதற்றம் Top News
[Monday 2019-04-22 19:00]

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் குண்டுகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அதனை விசேட அதிரடிப்படையினர் வெடிக்க வைத்தனர். இதனால் பதற்றநிலை ஏற்பட்டது.


தற்கொலைக் குண்டுதாரியின் பெயரை வெளியிட்ட பொலிசார்!
[Monday 2019-04-22 19:00]

ஷங்ரிலா நட்சத்திர ஹொட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், அவிஸ்ஸாவெல்ல – வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள தொழிற்சாலையின் உரிமையாளர் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.


மட்டக்களப்பில் துக்கம் - உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைப்பு! Top News
[Monday 2019-04-22 19:00]

மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த 28 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கறுப்பு, வெள்ளைக் கொடிகளும் பதாகைகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.


தாக்குதல் அச்சுறுத்தல் பிரதமருக்குத் தெரியாது! - ராஜித பரபரப்புத் தகவல்
[Monday 2019-04-22 19:00]

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்று தெரிவித்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களை உள்ளடக்கி தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


நாளை தேசிய துக்கதினம்!
[Monday 2019-04-22 19:00]

நாளை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அரசாங்கத்தின் மீது மஹிந்த, வீரவன்ச பாய்ச்சல்!
[Monday 2019-04-22 19:00]

யுத்தக் காலத்தில் கூட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இலங்கையின் எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ , ஆனால் இன்று இந்த அரசாங்கம் எந்தவொரு முறையும் இல்லாமல் வெடிக்காத பிரதேசங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை 24 மணிநேரம் அமுல்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.


மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!
[Monday 2019-04-22 19:00]

இன்று இரவு 8 மணி முதல் நாளைஅதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக நேற்றுமாலை முதல் இன்று காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மீள நிகழாமையை உறுதிப்படுத்துமாறு ஆனந்தன் எம்.பி கோரிக்கை!
[Monday 2019-04-22 19:00]

தேவாலயங்கள் உட்பட முக்கிய விடுதிகளில் தாக்குதல் நடத்திய ஈனச்செயல் கண்டத்துக்குரியது என தெரிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் படுகொலைச் சதியின் பின்னணியில் உள்ள அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா