Untitled Document
April 27, 2024 [GMT]
கொழும்பு துறைமுக நகரத்துக்கான மணல் நிரப்பும் பணிகள் நிறைவு!
[Wednesday 2019-01-16 18:00]

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக கடலை மணலால் நிரப்பும் நடவடிக்கைகளிள் ஒரு கட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது. சுமார் 269 ஹெக்டயர் கடற்பரப்பு மணலால் நிரப்பப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பணிகள் நிறைவு நிகழ்வு இன்று காலை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சேய்ன் சுயேங், போர்ட் சிட்டி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பியேங் ஹவுலியேங் தலைமையில் இடம்பெற்றது.


படுகொலைச் சதித் திட்டம் - நாமல் ராஜபக்ஷவை சிஐடி விசாரணைக்கு அழைப்பு!
[Wednesday 2019-01-16 18:00]

அரசியல் பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தல் தொடர்பிலான வாக்குமூலம் அளிக்க வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் சசி வீரவன்ச ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மதத் தலைவர்களுடன் வடக்கு ஆளுநர் சந்திப்பு! Top News
[Wednesday 2019-01-16 18:00]

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் யாழ்ப்பாணத்தில் உள்ள மதத்தலைவர்களை நேற்றும் இன்றும் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மன் கோவில்களுக்கும் சென்று அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.


சிறைக் கைதிகள் மீது மோசமான தாக்குதல் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு! Top News
[Wednesday 2019-01-16 18:00]

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி, தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சில இன்று வௌியிடப்பட்டுள்ளன. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வௌியிடப்பட்டன.


கேபிள் இணைப்புகளை அகற்றிய யாழ்.மேயருக்கு எதிராக விசாரணை!
[Wednesday 2019-01-16 18:00]

யாழ். மாநகர சபை பகுதிகளில் கேபிள் இணைப்புக்களை அகற்றியமை தொடர்பாக யாழ். மாநகர மேயர் இ.ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்னர் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கேபிள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர மேயரால் அகற்றப்பட்டிருந்தன.


வடக்கில் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா - அமைச்சரவை அனுமதி!
[Wednesday 2019-01-16 07:00]

வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்படி யோசனையை முன்வைத்தார்.


வல்வை பட்டத் திருவிழா - பறக்கும் சமையலறைக்கு முதல் பரிசு! Top News
[Wednesday 2019-01-16 07:00]

தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஆண்டு தோறும் நடக்கும் பட்டத்திருவிழா நேற்றுமாலை இடம்பெற்றது. இதில் விதமான, வண்ணமயமான 84 பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. அதில் பறக்கும் நவீன சமையலறை முதல் பரிசைப் பெற்றது. இந்த பட்டத்திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதனை காட்சிப்படுத்துவதில் ஆர்வம் காட்டினர்.


1956ல் மொழியுரிமையை கொடுத்திருந்தால் போர் வெடித்திருக்காது!
[Wednesday 2019-01-16 07:00]

1956ல் தமிழ் மக்கள் மொழியுரிமையை தருமாறு கேட்டிருந்தனர். அதனை வழங்கியிருந்தால் கொடூரமான யுத்தத்தை நோக்கி நாடு சென்றிருக்காது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் தெரிவித்தார்.


சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றியவர் ரணில்!
[Wednesday 2019-01-16 07:00]

எக்காலத்திலும் நாட்டை இரண்டாக பிளவுபடுவதற்கு, ஐக்கிய தேசிய கட்சி இடமளிக்காது என்று அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கள்ள மண் ஏற்றிய ட்ராக்டர் மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்!
[Wednesday 2019-01-16 07:00]

தென்மராட்சி- கொடி


பாதாளக் குழுக்களிடம் புலிகளின் ஆயுதங்கள்!
[Wednesday 2019-01-16 07:00]

புலிகளின் ஆயுதங்கள் போருக்குப் பின்னர் இப்போது, பாதாள குழுக்களின் கைகளில் உள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று கண்டி அஸ்கிரிய மல்வத்து தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


ரணிலும் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்!
[Wednesday 2019-01-16 07:00]

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.


சித்தாண்டி விபத்தில் ஒருவர் பலி!
[Wednesday 2019-01-16 07:00]

மட்டக்களப்பு


பல்கலைக்கழகத்துக்கு தகுதிபெறும் தமிழ் மாணவர்களின் தொகை வீழ்ச்சி!
[Wednesday 2019-01-16 07:00]

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியத்தின் தலைவர் என். நிராஜ் தலைமையில் வெள்ளி விழா காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


அமெரிக்காவின் பாதுகாப்பு உடன்பாட்டு யோசனையை நிராகரித்தது இலங்கை!
[Tuesday 2019-01-15 18:00]

இலங்கையுடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்றை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது, பாதுகாப்பு அமைச்சுடன் இந்த உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டிருந்தது. இதற்காக சமர்ப்பித்திருந்த வரைவில், இருதரப்பு பாதுகாப்பு வசதிகளை உருவாக்குதல், பயிற்சிகள், விநியோகங்கள், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.


அமெரிக்கா வந்த பிள்ளைகளை மீட்டுத் தர வேண்டும்! Top News
[Tuesday 2019-01-15 18:00]

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தர அமெரிக்கா வரவேண்டும் என்று கோரி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியாவில், 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினாலேயே இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


புதூர் ஆயுதப் பொதி விவகாரம் - இதுவரை 7 பேர் கைது!
[Tuesday 2019-01-15 18:00]

வவுனியா- புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பாக, தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிசாரால், இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சிவில் உடையில் நான்கு பொலிசார் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பொதியை தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓடிச் சென்றார்.


அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துள்ள ஜப்பானிய கப்பல்!
[Tuesday 2019-01-15 18:00]

இலங்கைக்கு வந்துள்ள ஜப்பான் கடல்சார்ந்த பாதுகாப்பு படை கப்பலான


கோவிலுக்கு வந்தவர்கள் மீது பட்டப்பகலில் வாள்வெட்டு! Top News
[Tuesday 2019-01-15 18:00]

யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலில், இன்று காலை, பூஜை வழிபாடுகளில் ஈடுபட வந்த இளைஞர்கள் மீது, வாள்வெட்டுக் குழு தாக்குதல் மேற்கொண்டது. தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது, கோவிலுக்கு அருகில் சில இளைஞர்கள் கூடி நின்றபோது, அப்பகுதிக்கு வந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.


பிலிப்பைன்ஸ் பயணமானார் ஜனாதிபதி!
[Tuesday 2019-01-15 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஐந்து நாட்கள் பயணத்தை மேற்கொண்டு பிலிப்பைன்ஸிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பிலிப்பைன்ஸில் நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி உத்தியோபூர்வமாக வரவேற்கவுள்ளார். இதன்பேது இருநாட்டு தலைவர்களுக்குமிடையில் விசேட பேச்சுக்களும் இடம்பெறவுள்ளது.


மன்னார் புதைகுழி விவகாரம் பிரிட்டன் எம்.பிக்களிடம் கலந்தாய்வு! Top News
[Tuesday 2019-01-15 18:00]

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) நிறுத்துவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகின்றனர்.


வவுனியாவில் குளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!
[Tuesday 2019-01-15 18:00]

வவுனியா - ஈரப்பெரியகுளம் குளத்தில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் இன்று மதியம் நடந்தது. தைப்பொங்கலை முன்னிட்டு குளத்தில் நீராடச் சென்ற இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்தனர் .


வடக்கு அரச அலுவலகங்களில் பெண்களுக்கு 50 வீத இடம்! Top News
[Tuesday 2019-01-15 18:00]

வடக்கிலுள்ள அரச அலுவலகங்களில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்று நடைபெற்ற தைப்பொங்கல் நிக​விலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கணவன் மரணம் - பொலிசாரால் மனைவி கைது!
[Tuesday 2019-01-15 18:00]

மட்டக்களப்பு


கைதடியில் கொள்ளையிட வந்தவருக்கு அசிட் வீச்சு!
[Tuesday 2019-01-15 18:00]

யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் பணத்தைக் கொள்ளையிட முயன்றவர் மீது அசிட் விசிறினார் வர்த்தகர். அசிட் வீச்சுக்கு இலக்கான நாவற்குளியைச் சேர்ந்த நபர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வர்த்தகரும் அசிட் வீச்சினால் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்புடன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


கற்கோவளம் இளைஞன் கொலை - சந்தேக நபர்களான இருவர் கைது!
[Tuesday 2019-01-15 18:00]

பருத்தித்துறை - கற்கோவளத்தில் நேற்றுமுன்தினம் இரவு இளைஞன் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேரை, பருத்தித்துறை பொலிஸார், நேற்று இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், தந்தையும் மகனும் என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


வீட்டுக்குள் புகுந்து மர்மக் கும்பல் அடாவடித்தனம்!
[Tuesday 2019-01-15 18:00]

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்றிரவு 9 மணியளவில் , நுழைந்த இனந்தெரியாத கும்பல், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பலொன்றே, இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


நாயாறில் பொங்கலைத் தடுக்க முயன்ற பிக்குகளால் பதற்றம்! Top News
[Monday 2019-01-14 18:00]

முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொதுமக்கள் இன்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட போது, அங்கு வந்த பௌத்த பிக்குகள் அதனை தடுக்க முற்பட்டமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.

Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா