Untitled Document
May 13, 2024 [GMT]
மகிந்த - மைத்திரி தரப்புகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ள 'இரகசிய சந்திப்பு'!
[Sunday 2019-01-27 07:00]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிரதிநிதி ஒருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பிலேயே இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


பெருமெடுப்பில் 3 நாள் தேசிய மாநாடு - தயாராகிறது தமிழரசுக் கட்சி!
[Sunday 2019-01-27 07:00]

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23,24 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே தேசிய மாநாடு பற்றிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.காலத்தின் தேவைக்கேற்ப பெருமெடுப்பில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.


வல்வை வீட்டில் சிக்கிய கஞ்சா - கைதான மூவரும் இன்று நீதிமன்றில்!
[Sunday 2019-01-27 07:00]

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் 110 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் இன்று நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்படவுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடற்படையினரும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 110 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றியதுடன், மூவரை கைது செய்துள்ளனர்.


பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி சோதனை - அறிக்கை தயாராகிறது!
[Sunday 2019-01-27 07:00]

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் பெறப்பட்ட குரல் மாதிரி சம்பந்தமான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும்,அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


படைப்புழுவுக்கு அஞ்சி பின்வாங்கும் அரசு - சோளம் பயிரிடுவதற்குத் தடை!
[Sunday 2019-01-27 07:00]

மறு அறிவித்தல்வரை சிறுபோக சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறு விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் அறிவித்துள்ளார். சோளப் பயிர் செய்வோருக்கு இந்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


நாட்டைத் துண்டு துண்டாக உடைக்க முனைகிறது அரசாங்கம்! - மஹிந்த குற்றச்சாட்டு.
[Sunday 2019-01-27 07:00]

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார். நாரஹேன்பிட்ட அபயாராம விகாரைக்கு வந்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


பாதணிகளுக்குள் 'தூள்' கொண்டு வந்த எம்.பிக்கள் - விசாரணையில் கண்டுபிடிப்பு!
[Sunday 2019-01-27 07:00]

மஹிந்த தரப்பு எம்.பிக்களால் நாடாளுமன்றத்திற்குள் மிளகாய்த் தூள் கொண்டு வரப்பட்டது எப்படி என்று விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் பாதணிகளில் மறைத்து வைத்து மிளகாய் தூளை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு மக்கள் பெரும் போராட்டம்! Top News
[Saturday 2019-01-26 18:00]

இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டம் நடத்தி வரும் முல்லைத்தீவு


ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்! Top News
[Saturday 2019-01-26 18:00]

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தரராஜனின் 13ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று, ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி, யாழ்ப்பாணத்தில், ​இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


மன்னார் புதைகுழி எலும்புமாதிரிகள் அமெரிக்க ஆய்வகத்தில் ஒப்படைப்பு!
[Saturday 2019-01-26 18:00]

மன்னார் - மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவன ஆய்வகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான கார்பன் பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.


அநீதிகளை வெளிக்கொணர்ந்தவர்களே படுகொலை! - கஜேந்திரகுமார்
[Saturday 2019-01-26 18:00]

போர்க்காலத்தில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.


110 கிலோ கஞ்சாவுடன் வல்வெட்டித்துறையில் மூவர் கைது!
[Saturday 2019-01-26 18:00]

வல்வெட்டித்துறை கடற்கரையில் 110 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாதகல் கடற்பரப்பில் இருந்து வல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு நூறு கிலோ கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.


மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் நினைவேந்தல்! Top News
[Saturday 2019-01-26 18:00]

திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 13ஆவது நினைவு தினம், மட்டக்களப்பில் இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் உயிர் நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவுத்துபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


புதிய அரசியலமைப்பினால் நாட்டுக்கு ஆபத்து! - கோத்தா
[Saturday 2019-01-26 18:00]
புதிய அரசியலமைப்பு மாகாணசபைகளைப் பலப்படுத்தி, மத்திய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் என்றும் இதனால் நாடு ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படும் என்றும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் -

புலிகள் நடமாடுவதாக வவுனியாவில் தீவிர தேடுதலில் இராணுவம்!
[Saturday 2019-01-26 18:00]

விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக கூறி வவுனியாவில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியா, குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம், 3 பேர் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும், வீட்டிலுள்ளவர்கள் மறுப்புத் தெரிவித்தமையால் பலாத்காரமாக உணவை எடுத்துச் சாப்பிட்டு விட்டு, கிணற்றில் குளித்துவிட்டுச் சென்றதாகவும், படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.


கஞ்சா விற்றவரை பொலிசாருக்கு காட்டிக் கொடுத்த மாணவனுக்கு அச்சுறுத்தல்!
[Saturday 2019-01-26 18:00]

கிளிநொச்சி- கோணாவில் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர் பற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மாணவன் ஒருவர், பாடசாலைக்கு செல்ல முடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளார். கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு வார நிகழ்வுக்கு பொலிஸாரும் வருகை தந்திருந்தனர். இதன் போது தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் தனது வீட்டுச் சூழலில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனை இடம்பெறுவது தொடர்பான தகவலை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.


வடக்கில் 439 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! Top News
[Saturday 2019-01-26 18:00]

வடக்கு மாகாணத்தில், ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார். இதில் 439 ஆசிரியர் நியமனங்களும்,33 தொழில் நுட்ப உத்தியோகத்தர் நியமனங்களும் வழங்கப்பட்டன.


யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்! Top News
[Saturday 2019-01-26 18:00]

இந்தியாவின் 70ஆவது குடியரசு தின நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், இன்று காலை நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு, யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், நிகழ்வுகளும் இடம்பெற்றன.


மன்னாரில் கஞ்சாப் பொதியுடன் இருவர் கைது!
[Saturday 2019-01-26 18:00]

மன்னார் - பாலத்தில் கேரள கஞ்சாபொதியுடன் நேற்று இரவு இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து நேற்று இரவு மன்னார் பிரதான பாலத்தில் வைத்து ஹயஸ் ரக வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதி மீட்கப்பட்டது.


பிரித்தானியாவில் தேடப்படுவோர் பட்டியலில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ!
[Saturday 2019-01-26 09:00]

பிரித்தானியாவில் இலங்கை தூதரகப பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றின் நீதிவான் சோனியா ஹென்சலேவினால் , பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.


ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு - ஐதேகவும் களமிறங்கியது!
[Saturday 2019-01-26 09:00]

பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் மேற்படி தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கடிதங்கள் மூலம் கோரியிருந்ததாக அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.


மகிந்த வீட்டுத் திருமணத்தில் பங்கேற்காத பசில் - விரிசல்கள் அதிகரிப்பு?
[Saturday 2019-01-26 09:00]

மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் திருமணம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த திருமண விழாவில், மஹிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பிரச்சினை இருந்தாலும் குடும்ப நிகழ்வில் ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்வது வழமை. எனினும் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள தீவிர பதவி மோதலே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.


மட்டக்களப்பில் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு!
[Saturday 2019-01-26 09:00]

மட்டக்களப்பு- ஏறாவூர்,ஐயங்கேணி பகுதியில் ரி- 56 ரக துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று காலை ஜயங்கேணி பிரதேசத்திலுள்ள பற்றைக்குள் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று அதன் மகசீன் ஒன்று ஆகியவற்றை மீட்டனர். மீட்டகப்பட்ட துப்பாக்கி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கைப் படையினர் மீதான தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலர் கண்டனம்!
[Saturday 2019-01-26 09:00]

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக, மாலி சென்றுள்ள இலங்கைப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரிப்பதா? - அரசியலமைப்பு பேரவை மீது பாய்கிறது மகிந்த அணி!
[Saturday 2019-01-26 09:00]

ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் அரசியலமைப்புப் பேரவை செயற்படுவது, ஏற்புடையதல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசியல் ரீதியாகக் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அமையவே அரசியலமைப்புப் பேரவையின் ஊடாக நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


சிங்கப்பூரில் இருந்து திரும்பினார் ஜனாதிபதி!
[Saturday 2019-01-26 09:00]

இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இலங்கையை வந்தடைந்தனர்.


வீசா காலாவதியான 24 இந்தியர்கள் கைது!
[Saturday 2019-01-26 09:00]

வீசா காலாவதியான நிலையில், சட்டவிரோதமான முறையில், நாட்டில் தங்கியிருந்த 24 இந்தியப் பிரஜைகளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இங்கிரிய பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.


முச்சக்கர வண்டியை துரத்திச் சென்று தீக்கிரையாக்கிய இளைஞர்கள்!
[Saturday 2019-01-26 09:00]

வவுனியா, ஓமந்தை மருதங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் முச்சக்கர வண்டி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியினை ஓமந்தை பகுதியில் இரு இளைஞர்கள் வழிமறித்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர். சாரதி முச்சக்கர வண்டியினை அவ்விடத்திலிருந்து எடுத்துச் சென்ற போது குறித்த இளைஞர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா