Untitled Document
April 28, 2024 [GMT]
கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் ஐதேக!
[Monday 2019-01-14 08:00]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


மதுபோதையில் பினாயில் குடித்த பொலிஸ்காரர் மரணம்!
[Monday 2019-01-14 08:00]

மதுபோதையில் பினாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமானார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார். இடமாற்றம் பெற்றுச் செல்லும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளனர்.


வடக்கிற்கு பொலிஸ், சட்ட அதிகாரம் வழங்க விடமாட்டோம்!
[Monday 2019-01-14 08:00]

புதிய அர​சமைப்பினூடாக, வடக்கு மாகாணத்துக்கு, பொலிஸ், சட்ட அதிகாரம் வழங்குவதற்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி, ஊடகப் பேச்சாளர் விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்தார்.


தமிழ் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்!
[Sunday 2019-01-13 17:00]

அரசியல் நோக்கத்துடன் தமிழ்ப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் என்று வட மாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.


பிரபல நாட்டுக்கூத்து கலைஞர் மாரடைப்பால் மரணம்! Top News
[Sunday 2019-01-13 17:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், மாவீரர் மேஜர் பசீலனின் சகோதரனுமான நல்லையா கணேசலிங்கம் இன்று மாரடைப்பினால் மரணமானார். முல்லைத்தீவில் நூற்றுக்கு மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பண்டாரவன்னியன், கோவலன் கண்ணகி போன்ற வரலாற்று புகழ் கூறும் நாட்டுக்கூத்துக்களில் சிறந்த நடிகராக திகழ்ந்தவர் கணேஸ். கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.


பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து வந்த இளைஞன் கைது! Top News
[Sunday 2019-01-13 17:00]

யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பகுதியில் தனியாகச் செல்லும் பெண்களிடம், நகைகளைக் கொள்ளையடித்து வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ். அரியாலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுதர்சன் என்ற இளைஞரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


கால் தடுக்கி விழுந்து பெண் மரணம் - பஸ்ஸில் ஏற முற்பட்டபோது சம்பவம்!
[Sunday 2019-01-13 17:00]

மட்டக்களப்பு - வெருகல் பகுதியில் பஸ்சில் ஏறுவதற்காக ஓடிய போது கால் தடுக்கி விழுந்ததில் மயக்கமடைந்த பெண்ணொருவர் நேற்று வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கதிரவெளி


களை கட்டும் தைப்பொங்கல்! Top News
[Sunday 2019-01-13 17:00]

நாளை மறுநாள் தைப்பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் கடைகள், சந்தைகளில் இன்று விற்பனைக்கு வந்துள்ளன. மண்பானைகள், சட்டிகள், கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் இன்று கடைகளில் குவிக்கப்பட்டுள்ளன. நாளை பொங்கல் வியாபாரம் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காட்டுப்பகுதியில் மீனவரின் சடலம் மீட்பு!
[Sunday 2019-01-13 17:00]

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள, சம்புக்களப்பு காட்டுப் பகுதியில் இளம் குடும்பஸ்தரான மீனவர் ஒருவரின் சடலம் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகரை -அம்பந்தனாவெளி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி வசந்தராசா (வயது 36) என்பவரின் சடலமே காட்டு மரங்களுக்கிடையில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


20 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!
[Sunday 2019-01-13 17:00]

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் வகையில், மீனவர் பரிசோதனை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வத்தளையில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி!
[Sunday 2019-01-13 17:00]

வத்தளை


பெப்ரவரியில் இருந்து அனைவருக்கும் ஈ-ஹெல்த் அட்டை!
[Sunday 2019-01-13 17:00]

இலங்கையில் வாழும் 21 மில்லியன் மக்களுக்கும் ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 6 மாதங்களுக்குள் இந்த அட்டை அனைத்து மக்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது உணவகங்களைத் தாக்கிய நால்வர் கைது!
[Sunday 2019-01-13 17:00]

மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட போது, உணவகங்களைச் சேதப்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தில் நேற்று நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, சிலர் மட்டக்களப்பிலுள்ள உணவகங்களைத் தாக்கி சேதப்படுத்தியிருந்தனர்.


வீதியைக் கடந்த முதியவர் வாகனம் மோதி படுகாயம்!
[Sunday 2019-01-13 17:00]

வவுனியா- ஓமந்தையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தை நகரப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திவிட்டு வீதியை கடக்க முற்பட்ட முதியவரை வவுனியாவிலிருந்து சென்ற கெப் ரக வாகனம் ஒன்று மோதியது.


புதிய அரசமைப்பு தேவையில்லை - தடைபோடுகிறது அஸ்கிரிய பீடம்!
[Sunday 2019-01-13 08:00]

புதிய அர


ஐ.நாவின் முகத்தில் அறைந்துள்ளது இலங்கை!
[Sunday 2019-01-13 08:00]

கடந்த சில மாதங்களாக இலங்கையின் உச்சநீதிமன்றம் செயற்பட்டுள்ள விதத்தினை வைத்து இலங்கை நீதிமன்றங்களிற்கு அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்கும் திறன் உள்ளது என்ற முடிவிற்கு எவராவது வந்திருந்ததால் சவேந்திர சில்வாவின் நியமனம் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.


ஆசியாவில் காணக் கிடைக்காத தலைவர்
[Sunday 2019-01-13 08:00]

ஆசியாக் கண்டத்திலேயே, இரா.சம்பந்தனைப் போல் ஒரு தலை வரைப் பார்க்கக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்.


ஒன்பது லொறிகள் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் எங்கே?
[Sunday 2019-01-13 08:00]

கிளிநொச்சியில் வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் நிவாரண பனர்கள் கட்டிய ஒன்பது லொறிகளில், கொண்டு வரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பாக பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


தமிழர்களுக்கு சர்வதேச ஆதரவு - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் சுமந்திரன்!
[Sunday 2019-01-13 08:00]

போர்ச் சூழலில் இல்லாத ஆதரவு உலக அரங்கில் தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ளது.இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


11 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது!
[Sunday 2019-01-13 08:00]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் இரு படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று இரவு குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை, அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காரைநகர் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.


மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்!
[Sunday 2019-01-13 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில், 2015 ஜனவரி 8 ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குமாறு ஜனாதிபதியை முன்னாள் ஜனாதிபதி அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.


ராஜித - சங்கக்கார இரகசிய சந்திப்பு!
[Sunday 2019-01-13 08:00]

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர் அமைச்சர் ராஜித சேனாரத்னவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த 4ஆம் திகதி சுகாதார அமைச்சில் ராஜிதவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


சுமந்திரன் தான் உத்தியோகபூர்வமற்ற பிரதமர்!
[Sunday 2019-01-13 08:00]

புதிய அர


ராஜபக்ச ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர்!
[Sunday 2019-01-13 08:00]

ஐக்


சவேந்திர சில்வாவின் நியமனம் - சுயாதீன விசாரணையின் தேவையை வெளிப்படுத்தியுள்ளது!
[Saturday 2019-01-12 19:00]

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது எனசர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.


புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கையின் உள்ளடக்கம்!
[Saturday 2019-01-12 19:00]

பிரிக்கமுடியாத ஒன்றுபட்ட இலங்கையை- ஏக்கிய ராஜ்ய அல்லது ஒருமித்த நாடு என்றழைக்கலாம் என, நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட, புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது. அரசியலமைப்பு தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


திருகோணமலையில் பிரிட்டனின் கடற்படைத் தளம்?
[Saturday 2019-01-12 19:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியபிறகுதெற்காசியாவில் இராணுவத் தளங்களை அமைப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவ பிரிட்டன் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.


புதிய அரசியலமைப்பு நிறைவேறாது - சிவசக்தி ஆனந்தன்!
[Saturday 2019-01-12 19:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கை கிணற்றில் போடப்பட்ட கல் போல அசையாது உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார். வவுனியா வடக்கைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.

NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா