Untitled Document
April 29, 2024 [GMT]
வடக்கில் வெள்ளத்தினால் 86, 551 பேர் பாதிப்பு!
[Thursday 2018-12-27 19:00]

வடமாகாணத்தில் வெள்ளத்தினால் 27ஆயிரத்து 668 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்காக நேற்று கொழும்பில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.


கிளிநொச்சிக்கு அவசர எச்சரிக்கை!
[Thursday 2018-12-27 19:00]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.


இலங்கை கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகள் தடை!
[Thursday 2018-12-27 19:00]

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இருப்பதால், இலங்கையில் இருந்து கறிவேப்பிலை கொண்டு வருவதற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்துள்ளன. இத்தாலி, சைப்பிரஸ், கிரேக்கம் மற்றும் மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கை கறிவேப்பிலையை கொண்டுவர வேண்டாமென பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


நல்லிணக்க நடவடிக்கைகளை பலப்படுத்த ஆதரவு!
[Thursday 2018-12-27 19:00]

இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க தயார் என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லான்ட் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்


மஹிந்தவை சந்தித்த சீனத் தூதுவர்!
[Thursday 2018-12-27 19:00]

இலங்கைக்கான சீன தூதுவர் ஷெங் சுயுவோன் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்வை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பு இன்று விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்தவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கின் புதுவருட வாழ்த்து செய்தியை தூதுவர் கையளித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்பு குறித்து அந்நாட்டு ஜனாதிபதி கௌரவத்துடன் நினைவுப்படுத்தியதாக இந்த சந்திப்பின் போது தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.


மத்திய கிழக்கிற்கான கடவுச்சீட்டு இனி இல்லை!
[Thursday 2018-12-27 19:00]

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படமாட்டது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


முள்பள்ளி ஆசிரியர்களை நீக்க ஆளுநர் தடை! Top News
[Thursday 2018-12-27 19:00]

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ், முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களை மறுஅறிவித்தல் வரை பணியிலிருந்து நீக்குவதை நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.


கட்சித் தலைமையத்தை மூடவில்லையாம்!
[Thursday 2018-12-27 19:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் சேவையாற்றும் பணியாளர்களுக்கு வருடாந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பணிக்கு திரும்பியதும் ஜனவரி முதலாம் திகதி சுப நேரத்தில் கட்சியின் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனங்கள் - 3 பேர் படுகாயம்! Top News
[Thursday 2018-12-27 19:00]

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை இரண்டு டிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாரதிகள் உட்பட மூவர் காயமடைந்தனர். கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.


புத்தாண்டுக்கு முன் உயர்தரப் பரீட்சை முடிவுகள்!
[Thursday 2018-12-27 19:00]

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் இந்தமாத இறுதி அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெறுகிறது.பெரும்பாலும் இந்த மாத இறுதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


சண்.குகவரதனுக்குப் பிணை - வெளிநாடு செல்லத் தடை!
[Thursday 2018-12-27 19:00]

நிதி மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக, குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண் .குகவரதனை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட குகவரதனும் அவரது மனைவியையும் தலா 25 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு கல்கிஸ்ஸ நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.


தேடுவாரின்றி வடக்கு அபிவிருத்தி அமைச்சு!
[Thursday 2018-12-27 09:00]

வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஐக்கிய தேசிய கட்சியினால், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


விரைவில் மக்களுடன் சந்திப்பு ! Top News
[Thursday 2018-12-27 09:00]

இயற்கையின் சீற்றம் மீண்டும் எம் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்திருப்பது மிகவும் மன வேதனை அளிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மயில்வாகனபுரம் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று வெள்ளநிவாரணம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் குடியுரிமையை கைவிட முடிவு!
[Thursday 2018-12-27 09:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இரட்டை குடியுரிமையை அவர்கள் கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.


கூட்டமைப்பில் நிழல் அமைச்சர்களா?
[Thursday 2018-12-27 09:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என்று ரெலோ அமைப்பின் அரசியல் தலைவரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.


கற்பித்த ஆசிரியர் வீட்டில் கன்னம் வைத்த மாணவர்கள்!
[Thursday 2018-12-27 09:00]

ஆசிரியரின் வீட்டில் திருடினார்கள் என்ற குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நகரப்பகுதியில் உள்ள மிகப் பிரபலமான பாடசாலையில் கல்வி பயிலும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சுமந்திரனின் கடிதத்தினால் சர்வதேச தலையீடு!
[Thursday 2018-12-27 09:00]

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளவேண்டாம் என, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா சபையிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளதன் மூலம், நாடாளுமன்ற செயற்பாடுகளிலும் சர்வதேசம் தலையிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


நாளை கிளிநொச்சி வருகிறார் ரணில்!
[Thursday 2018-12-27 09:00]

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிவாரணத்துக்கு தடை ஏற்படுத்தியவர்களுக்கு விளக்கமறியல்!
[Thursday 2018-12-27 09:00]

கிளிநொச்சி - கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச் சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தி அசௌகரியம் விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பரந்தன் விபத்தில் முதியவர் படுகாயம்!
[Thursday 2018-12-27 09:00]

கிளிநொச்சி, பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியில், கோரக்கன்கட்டுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிரே வந்த துவிச் சக்கரவண்டியுடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாமடைந்தவர் உடனடியாகவே அம்பியூலன்ஷ் வண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சுனாமி நினைவேந்தல் - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! Top News
[Wednesday 2018-12-26 19:00]

இலங்கையில் 35 ஆயிரம் பேரின் உயிர்களை ஒரே நேரத்தில் காவுகொண்ட சுனாமி அனர்த்தத்தின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல், இன்று வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவின் பல்வேறு இடங்களிலும், உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


மீண்டும் திறந்து விடப்பட்ட இரணைமடு வான்கதவுகள்!
[Wednesday 2018-12-26 19:00]

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக இரணைமடுக் குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 9 வான்கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக வரத்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


வடக்கில் மீண்டும் மிரட்டும் மழை! Top News
[Wednesday 2018-12-26 19:00]

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று மீண்டும் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பெரிதும் சிரமங்களைச் சந்தித்துள்ளனர். ஏற்கனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் வடியத் தொடங்கியதை அடுத்து, வீடுகளுக்குத் திரும்பிய மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.


சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு பூட்டுப் போட்டார் மைத்திரி!
[Wednesday 2018-12-26 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய கொழும்பிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. தாய்லாந்திற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு செல்லும் ஜனாதிபதி, அங்கு ஒருவார காலம் தங்கியிருப்பார். அவர் மீண்டும் நாடு திரும்பும்வரை சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை மூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.


சவால் விடுகிறார் வியாழேந்திரன்!
[Wednesday 2018-12-26 19:00]

மஹிந்தவுடன் இணைந்து கொள்ளவதற்காக பணம் பெற்றுக்கொண்டதாக போலி பிரசாரங்களை செய்வதை தவிர்த்து, முடியுமாயின் அதனை நிரூபித்து காட்டுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி மைத்திரி கௌரவமாக ஒதுங்க முடிவு!
[Wednesday 2018-12-26 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்து விட்டு இரண்டாவது முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறியுள்ளன.


வெள்ளத்தின் விளைவு - நோய்த்தொற்றுக்கு சிறுமி பலி!
[Wednesday 2018-12-26 19:00]

வெள்ளத்தால் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். முல்லைத்தீவு ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரபாலன் தானுயா (வயது 09) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். சிறுமியின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


கஞ்சாவுடன் சிக்கினார் கடற்படைச் சிப்பாய்!
[Wednesday 2018-12-26 19:00]

கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 27 கிராம் 7 மில்லிகிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா