Untitled Document
May 2, 2024 [GMT]
5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம்! - மாவை சேனாதிராசா
[Sunday 2018-10-21 08:00]

விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


பலாலி, மட்டக்களப்புக்கு தென்னிந்தியாவில் இருந்து விமான சேவை!
[Sunday 2018-10-21 08:00]

தென்-இந்தியாவிலிருந்து பலாலி மற்றும் மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, இந்தியாவின் உள்துறைள் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


இனப்பரம்பல் மாற்றத்தை தடுக்க முடியாமல் போனதே ஆயுதப் போராட்டத்துக்குக் காரணம்! - சுமந்திரன்
[Sunday 2018-10-21 08:00]

70 ஆண்டுகளுக்கு தொடர்ந்த இனப் பரம்பல் மாற்றத்தை பேச்சுக்கள் ஒப்பந்தங்கள் மூலம் தடுக்க முடியாமல் போனதாலேயே இறுதியில் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அந்த போராட்டமும் தோல்வியிலேயே முடிந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


சிறைச்சாலைக் கூரையில் 400 கைதிகள் போராட்டம்!
[Sunday 2018-10-21 08:00]

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இன்று அதிகாலை தொடக்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். சிறைச்சாலை கூரை மீதேறி சுமார் 400 கைதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையின் சில நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 1200 கைதிகளை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


காங்கேசன்துறை, மட்டக்களப்பு ரயில்களில் மோதி யானைகள் பலி!
[Sunday 2018-10-21 08:00]

இருவேறு ரயில் விபத்துக்களில் இரண்டு யானைகள் உயிரிழந்தன. மேலும் ஒரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் ரயிலுடன், அம்பன்பொல பகுதியில் இரண்டு யானைகள் மோதியுள்ளன. அதில் ஒரு யானை உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு யானை பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.


எமது ஆட்சி இருந்திருந்தால் ஐ.நாவுக்கு பதிலடி கொடுத்திருப்போம்! - கோத்தா
[Sunday 2018-10-21 08:00]

எமது ஆட்


டெனீஸ்வரனின் அதிகாரத்தை முதலமைச்சர் துஷ்பிரயோகம்?
[Sunday 2018-10-21 08:00]

வடக்கு மாகாண போக்


2 ரூபா சம்பளத்துக்கு கோழிக்கூடு சுத்தம் செய்யும் வேலை செய்த ஜனாதிபதி!
[Sunday 2018-10-21 08:00]

இரண்டு ரூபா சம்பளத்திற்காக 4 மணித்தியாலங்கள் கோழிக்கூடு சுத்தம் செய்யும் வேலையைச் செய்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் கண்டி பொல்கொல்ல கூட்டுறவு நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.


போதை வில்லைகளுடன் மாட்டிய யாழ்ப்பாண இளைஞர்கள்!
[Sunday 2018-10-21 08:00]

வவுனியா- ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின் போது நேற்று மாலை 2600 போதை வில்லைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று மாலை 5.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை ஓமந்தைப் பகுதியில் வழிமறித்த பொலிசார் சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதை வில்லைகளை மறைத்து கொண்டு சென்ற 23, 32 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.


இந்தியப் பிரதமருடன் ரணில் முக்கிய பேச்சு! Top News
[Saturday 2018-10-20 19:00]

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று பிற்பகல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சு நடத்தியதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தமிழ்க் கட்சிகளின் பிளவுகளால் வட மாகாண சபையை ஐதேகவும் சுதந்திரக் கட்சியும் கைப்பற்றும் ஆபத்து!
[Saturday 2018-10-20 19:00]

நாங்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே தென்னிலங்கை கட்சிகளிற்கு சவாலாக இருக்க முடியும். இல்லையேல், ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து வட மாகாணசபையை கைப்பற்றும் அபாயம் உள்ளது என்று ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


ஐ.நா திருப்பி அனுப்பிய இராணுவ அதிகாரி குற்றமற்றவர்! - என்கிறார் இராணுவப் பேச்சாளர்
[Saturday 2018-10-20 19:00]

இலங்கை இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் மனித உரிமைகளை மீறவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார். மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவத்தினருக்கு கட்டளை வழங்கும் அதிகாரியை திருப்பி அழைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


றோ மீதான குற்றச்சாட்டுக்குப் பின்னால் மஹிந்த? - சந்தேகம் கிளப்பும் இந்திய ஊடகம்
[Saturday 2018-10-20 19:00]

தன்னை கொல்வதற்கான சதி முயற்சியில் றோ ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என்ற வதந்தி பரவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரணமாக இருக்கலாம் என இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி எகனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


தமிழ்த் தலைமைகளின் தவறுகளை இனிமேலும் விடக் கூடாது என்பதில் திடமாக உள்ளேன்! - விக்னேஸ்வரன்
[Saturday 2018-10-20 19:00]

தமிழ்த் தலைமைத்துவங்களின் தவறுகளை நாம் இனிமேலும் விடக் கூடாது என்பதில் நான் திடமாக உள்ளேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கலாநிதி க.சர்வேஸ்வரனால் எழுதப்பட்ட நூலின் அறிமுக நிகழ்வு நல்லூரில் நேற்று நடைபெற்றிருந்தது.அங்கு உரையாற்றிய முதலமைச்சர் -


173 ரூபாவைத் தொடுகிறது அமெரிக்க டொலர்!
[Saturday 2018-10-20 19:00]

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 173 ரூபாவை நெருங்கியுள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்தற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 172.99 ரூபாவாக, அதிகரித்துள்ளது.


திலீபனுக்கு தூக்குக்காவடி எடுத்தவருக்கு ரிஐடி அழைப்பாணை!
[Saturday 2018-10-20 19:00]

தியாக தீபம் திலீ


சாவகச்சேரியில் பெண்களைத் தாக்கிய கும்பல் - உதவச் சென்றவர்கள் மீதும் தாக்குதல்!
[Saturday 2018-10-20 19:00]

தென்மராட்சி- சாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அபயகுரல் கேட்டு காப்பாற்ற சென்ற அயலவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.


வெளிநாட்டில் இருந்த வந்த நபரை தொலைபேசியில் மடக்கி கொள்ளையடித்த பெண்!
[Saturday 2018-10-20 19:00]

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண் ஒருவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதிவான் நளினி சுபாகரன் நேற்று முன்தினம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


மூதூரில் ஒல்லாந்தர் கால நாணயம் கண்டுபிடிப்பு! Top News
[Saturday 2018-10-20 19:00]

திருகோணமலை - மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயில் முன்னால் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளார். மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில், ஒல்லாந்தர்களின் முதலாவது கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. VOC என்பது ஒல்லாந்தர் கால "கிழக்கிந்திய கம்பனி" எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1750 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி - பிரதமர் முரண்பாட்டினால் மக்கள் வெறுப்பு - மனோ கணேசன்
[Saturday 2018-10-20 19:00]

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால், மக்கள் வெறுப்படைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வெறுப்படைந்துள்ள மக்களை தவறான பாதைக்கு தள்ளிவிட வேண்டாம் என்று அவர் இரு தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம். இந்த அரசாங்கம் தொடர வேண்டும். இந்த அரசாங்கத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டில் அன்று இருக்காத சுதந்திரம் இன்று இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


மட்டக்களப்பில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!
[Saturday 2018-10-20 19:00]

மட்டக்களப்பு- கரடியனாறு, மாவடியோடையில் வயல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி மரணமானார். இன்று தமது வயலில் விதைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்கியதால், அவர் உயிரிழந்தார். சத்துருக்கொண்டான் பிரதேசத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனோகரன் (60) என்பவரே உயிரிழந்தவராவார். மின்னல் தாக்கிய நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மரணம் ஏற்பட்டிருக்கிறது.


மாலியில் இருந்து இலங்கை அதிகாரியை திருப்பி அனுப்பும் ஐ.நா! - மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு விஸ்வரூபம்
[Saturday 2018-10-20 09:00]

மேற்கு ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இடம்பெற்றுள்ள, இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரை மீள திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம், ஐ.நா கோரியுள்ளது.


விக்கியின் மேன்முறையீட்டு மனு - மீண்டும் ஒத்திவைப்பு!
[Saturday 2018-10-20 09:00]

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனு, ஈவா வனசுந்தர, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.ரீ.பீ.தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணா? - உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கும்
[Saturday 2018-10-20 09:00]

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்று உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பாக சட்ட மா அதிபரின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.


கொக்குவிலில் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்ட புத்தளம் வாசிகள் இருவர் கைது!
[Saturday 2018-10-20 09:00]

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


டிஐஜி நாலக சில்வாவிடம் நேற்றும் 9 மணிநேர விசாரணை!
[Saturday 2018-10-20 09:00]

ஜனாதிபதி கொலைச் சதி விவ


ஞானசாரர் விடுதலைக்கு மியான்மாரின் தலையீட்டைக் கோருகிறது பொது பலசேனா!
[Saturday 2018-10-20 09:00]

பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலைக்கு உதவுமாறு மியன்மார் அரசாங்கத்திடம், பொது பலசேனா அமைப்பு உதவி கோரியுள்ளது. இது தொடர்பாக, இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதம் ஒன்றையும் பொது பலசேனா வழங்கியுள்ளது.


வவுனியா விபத்தில் மூவர் படுகாயம்!
[Saturday 2018-10-20 09:00]

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்தனர். வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியூடாக பயணித்த வான் மீது நெல்லி ஸ்டார் ஹோட்டலுக்கு அருகே காணப்படும் நாற்சந்தியில் சூசைப்பிள்ளையார் குளம் வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளாளது.

 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா