Untitled Document
May 13, 2024 [GMT]
கனகாம்பிகைக்குளத்தில் ஆணின் சடலம்!
[Monday 2018-10-01 09:00]

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் கனகாம்பிகை குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பொலிசார் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அமெரிக்காவில் வாகன நெரிசலில் சிக்கித் தவித்த ஜனாதிபதி மைத்திரி!
[Monday 2018-10-01 09:00]

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகன நெரிசலில் சிக்கித் தவித்த சம்பவம் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.ஐ.நா பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி தனது குழுவினருடன் நியூயோர்க் சென்றிருந்தார்.இதன்போது ஐ.நா தலைமையகத்தில் போதைப்பொருளில் இருந்து உலகை காப்பாற்றிக் கொள்வது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.


கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்திய இலங்கைப் படைகள்! - விளக்கமளிக்கக் கோருகிறார் யஸ்மின் சூக்கா
[Sunday 2018-09-30 18:00]

போர் நடந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா.


புதிய முன்னணியில் போட்டியிடுவேன்! - விக்னேஸ்வரன்
[Sunday 2018-09-30 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்


இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் திட்டத்தை கூட்டமைப்பு எதிர்க்கும்! - சுமந்திரன்
[Sunday 2018-09-30 18:00]

அரசியல் கைதிகளையும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தினரையும், சமமாக கணித்து பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஏற்கப் போவதில்லை. இது குறித்த திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்தால் அதனை நாம் நிராகரிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி!
[Sunday 2018-09-30 18:00]

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2019ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக 306.1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.


விளக்கமறியலில் உள்ள இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர்! - என்கிறார் சகோதரர்
[Sunday 2018-09-30 18:00]

ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரைக் கொலை செய்யும் சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மார்செலி தோமஸ் என்ற இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது சகோதரர் பின்னி தோமஸ் தெரிவித்துள்ளார்.


அவசரமாக நாடு திரும்பிய பசில் - ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தம்!
[Sunday 2018-09-30 18:00]

அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதை அடுத்து, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார் செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார். அவர் நாடு திரும்புவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த தினத்திற்கு முன்னரே, நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார்.


எட்டு மாதங்களில் 1890 பேரைப் பலியெடுத்த விபத்துகள்!
[Sunday 2018-09-30 18:00]

இலங்கையில் கடந்த 8 மாதங்களில், 1890 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், 570 பாதசாரிகளும், 638 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் அடங்கியுள்ளனனர். மோட்டார் வாகனங்களில் பயணித்த 123 பேரும் சாரதிகள் 151 பேரும் பயணிகள் 259 பேரும் சைக்கிளில் பயணித்த 144 பேரும் மரணமானதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.


வடக்கு மாகாணசபைக்கு புதிய முதலமைச்சர் வேட்பாளர்! - சுமந்திரன்
[Sunday 2018-09-30 18:00]

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,


கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்! Top News
[Sunday 2018-09-30 17:00]

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதானப் பணிகளில் வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மானிப்பாயில் வாள்வெட்டில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் கைது!
[Sunday 2018-09-30 17:00]

மானிப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் வட்டுக்கோட்டையில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


கொமாண்டோ பயிற்சி அளிக்க கோரினாராம் நாலக சில்வா!
[Sunday 2018-09-30 17:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் ராஜபக்ஷவினரைப் படுகொலை செய்யும் சூழ்ச்சி குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைகளில் இருந்து நாளாந்தம் திடுக்கிடும் தகவல்கள் வௌிவந்து கொண்டிருக்கின்றன. இதன்படி தற்போது நாலக டி சில்வா கொமாண்டோ பயிற்சியளிக்க கோரியமை தொடர்பான தகவல்கள் வௌிவந்துள்ளன.


அதிரடி முடிவுகளை எடுப்பார் ஜனாதிபதி?
[Sunday 2018-09-30 17:00]

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியதை அடுத்து, அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆர்ப்பாட்டங்களுக்குப் பயந்து பொலிஸ் மா அதிபரின் ஸ்கொட்லாந்து பயணம் ரத்து!
[Sunday 2018-09-30 09:00]

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஸ்கொட்லாந்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதற்கு எதிராக, பொலிஸ்மா அதிபரின் பயணத்தின் போது ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைத் தேடி அலைந்த தந்தை மரணம்!
[Sunday 2018-09-30 09:00]

காணாமல் போன தனது பிள்ளையை தேடி அலைந்த தந்தையொருவர் கிளிநொச்சியில் நேற்று மரணமானார். 56 வயதுடைய சி.யோகராசா என்பவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடிவந்த யோகராசா, தனது பிறந்த தினமான நேற்று உயிரிழந்துள்ளார்.இவர் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் இணைப்பாளராக யோ.கலாரஞ்சினி என்பவரின் கணவராவார்.


பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்படுவார்?
[Sunday 2018-09-30 09:00]

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்படலாம் என கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக நாலக டி சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அடுத்தடுத்து மயங்கி வீ்ழ்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள்!
[Sunday 2018-09-30 09:00]

இலங்கையின் பிரபல தனியார் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும் இரு பெண்கள், செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்துள்ளனர் முழுமையாக மூடப்பட்டுள்ள அறைக்குள் காற்று சீரமைப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


நாடு திரும்பினார் ஜனாதிபதி!
[Sunday 2018-09-30 09:00]

ஐக்கிய நாடுகளின் 73 வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


உரும்பிராயில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
[Sunday 2018-09-30 06:00]

யாழ்ப்பாணம், உரும்பிராயில் இரண்டு வீடுகள் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரும்பிராய் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரு வீடுகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர்! - வியூகம் வகுக்கும் அமைச்சர்கள்
[Sunday 2018-09-30 06:00]

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் போட்டியிடவுள்ளார் எனக் கூறப்படுகிறது. நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்க2 முக்கிய அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Sunday 2018-09-30 06:00]

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்றிரவு 9.30 மணியளவில் கைது செய்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் - கதிர்காமம் பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த மொனராகலையை சேர்ந்த விஜித வண்டார என்ற 34 வயதுடைய நபரை 2 கிலோ கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆவா குழுவின் வாள்வெட்டில் மேசன் வேலைக்கு சென்றிருந்தவர் படுகாயம்!
[Sunday 2018-09-30 06:00]

மானிப்பாயில் நேற்று நண்பகல் வாள்வெட்டுக் கும்பல் வீட்டுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மூடிக் கொண்டு வந்த 9 பேர் கொண்ட கும்பலே மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டுக்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.


வாகனத்தையும் கஞ்சா பொதிகளையும் கைவிட்டு ஓட்டம்!
[Sunday 2018-09-30 06:00]

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில், சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவினரால் ஒரு தொகை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. பிரதேச மக்கள் வழங்கிய விசேட தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ அளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொட்டும் மழைக்கு மத்தியில் யாழ். நகரில் போராட்டம்! Top News
[Saturday 2018-09-29 18:00]

அர


இராணுவம் எந்தப் பிழையும் செய்யவில்லை என ஜனாதிபதி தெரிவித்தது கசப்பானது! - தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்
[Saturday 2018-09-29 18:00]

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இராணுவத்திற்கு எதிராக பல வழக்குகள் நடைபெற்று வருகிறது. கடத்தல், கொலை செய்தல் தொடர்பில் இவ்வாறு வழக்குகள் நடைபெறுகின்ற போதும் இராணுவம் எந்தப் பிழையும் செய்யவில்லை என ஜனாதிபதி தெரிவித்த விடயம் மிகவும் கசப்பானது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன் தெரிவித்தார்.


கொழும்பைத் தாக்கும் புலிகளின் திட்டம் பற்றி கேள்விப்பட்டதேயில்லை! - என்கிறார் கோத்தா
[Saturday 2018-09-29 18:00]

சென்னை ஊடாக, கொழும்பின் மீது தாக்குதலை மேற்கொள்ள விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர் என இதுவரையில் நான் கேள்விப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


கோணேஸ்வரர் ஆலய முன்னாள் குருக்களுக்கு மரணதண்டனை உறுதி!
[Saturday 2018-09-29 18:00]

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான திருகோணமலை - கோணேஸ்வரர் ஆலய முன்னாள் பிரதம அர்ச்சகரான சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றின் சிறப்பு அமர்வு உறுதி செய்தது.

Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா