Untitled Document
May 16, 2024 [GMT]
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!
[Wednesday 2018-09-12 09:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சுமார் 80 அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் 6 பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.


வலி. தெற்கு பிர
[Wednesday 2018-09-12 09:00]

தமிழ் அர


வாளை மறைத்து வைத்திருந்த இளைஞனுக்கு 6 மாத சிறைத்தண்டனை!
[Wednesday 2018-09-12 08:00]

வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்கு இளைஞன் ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் தொடுத்த வழக்கிலேயே இந்தத் தண்டனைத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.


பெற்ற கடன்களுக்காக பாலியல் ரீதியாக சுரண்டப்படும் பெண்கள்! - ஐ.நா நிபுணர் திடுக்கிடும் தகவல்
[Tuesday 2018-09-11 18:00]

இலங்கையில் பெண்கள் கடனை மீள திருப்பிச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகின்றனர் என இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, ஐநாவின் வெளிநாட்டு கடன் மற்றும் மனித மனித உரிமைகளிற்கான சுயாதீன நிபுணர் யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.


போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தினரை ஐ.நா விடுவிக்க வேண்டும்! - என்கிறார் திஸ்ஸ விதாரண
[Tuesday 2018-09-11 18:00]

போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தினரை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுக்கவுள்ள கோரிக்கையை ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.


நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்பை மைத்திரிக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்!
[Tuesday 2018-09-11 18:00]

நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்றைய தினம் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.


ஒரு தொகுதி அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா!
[Tuesday 2018-09-11 18:00]

இலங்கையை சேர்ந்த ஒரு தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கார்டியன் தெரிவித்துள்ளது. விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானமொன்று இலங்கையை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பேர்த்திலிருந்து இலங்கை சென்றுள்ளது.


இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தமாட்டோம்! - ரணில் விக்கிரமசிங்க
[Tuesday 2018-09-11 18:00]

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால், இந்து சமுத்திரத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலே இதனைத் தெரிவித்துள்ளார்.


தமிழக அமைச்சரவையின் மனிதாபிமானத் தீர்மானத்திற்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பாராட்டு!
[Tuesday 2018-09-11 18:00]

1991ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்த போது, சிறிபெரும்புத்தூரில் குண்டுத்தாக்குதலால் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். பல வருடங்களாக முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்த இந்த வழக்கிற்கு ஒரு முடிவைக் கொண்டு வரும் முகமாக மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.


அலம்பிலில் உயிருடன் கரையொதுங்கிய இராட்சத திமிங்கலச் சுறா! Top News
[Tuesday 2018-09-11 18:00]

முல்லைத்தீவு- அலம்பில் கடற்கரையில் நேற்று சுமார் 9 மீற்றர் நீளமுடைய திமிங்கலச் சுறா ஒன்று உயிருடன் கரையொதுங்கியது. சுமார் 9000 கிலோ எடை கொண்ட இந்த திமிங்கலச் சுறா, கடற்படையினர் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் துணையுடன், மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. அழிந்து வரும் மீனினங்களில் ஒன்றான, திமிங்கலச் சுறாவைப் பிடிப்பது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.


கோவில்களில் மிருக பலிக்குத் தடை! - அமைச்சரவை அனுமதி
[Tuesday 2018-09-11 18:00]

இந்துக் கோவில்களில் மிருகங்கள் பலியிடுவதைத் தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு,அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தலைமையில் இன்று நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.


மகாகவி பாரதியின் 130 ஆவது பிறந்த தின விழா! Top News
[Tuesday 2018-09-11 18:00]

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 130 ஆவது பிறந்த தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் - நல்லூர், அரசடியில் அமைந்துள்ள பாரதியாரின் உருவச்சிலைக்கு முன்னால், இன்று காலை இடம்பெற்றன.


வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற 88 பேர் நீர்கொழும்பு கடலில் படகுடன் கைது! Top News
[Tuesday 2018-09-11 18:00]

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு முயன்ற, 88 பேர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனார்.நீர்கொழும்பு மேற்கு கடலில், படகொன்றில் ​பயணித்து கொண்டிருந்த போதே, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே படகில் இருந்து கைது செய்யப்பட்டனர்.


சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞன் கைது!
[Tuesday 2018-09-11 18:00]

வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞனை நேற்று பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை, குறித்த இளைஞன் பலாத்காரமாக அழைத்துச் சென்று அனுராதபுரம் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.


மாட்டிறைச்சிக் கடைகளுக்கு நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் தடை!
[Tuesday 2018-09-11 18:00]

நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில், இன்று நடைபெற்றது. இதன்போது, ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.மதுசுதன் முன்வைத்த யோசனை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


[Tuesday 2018-09-11 09:00]

எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள சர்வ கட்சி எம்.பிக்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தது. இதன்போதே சம்பந்தனிடம் மோடி மேற்கண்டவாறு கூறினார்.


வடக்கு, கிழக்கு படை முகாம்கள் பலப்படுத்தப்படும்! -ருவன் விஜயவர்தன
[Tuesday 2018-09-11 09:00]

வடக்கு, கிழக்கில் மூலோபாய ரீதியில் முக்கியமான இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் -


தமிழ் மக்கள் கௌரவமாக, அரசியல் உரிமைகளுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்! - மோடியிடம் கோரிய டக்ளஸ்
[Tuesday 2018-09-11 09:00]

தமிழ் மக்கள் பாதுகாப்புடனும் அரசியல் உரிமைகளுடனும் கௌரவமாக வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அனைத்துக் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே நேற்று டில்லியில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின்போதே மேற்கண்டவாறு டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.


இந்தியா சென்றார் மஹிந்த - ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்க மறுப்பு! Top News
[Tuesday 2018-09-11 09:00]

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளமை குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட மறுத்துள்ளார்.


இராணுவத்தை தண்டிக்க விபரம் திரட்டவில்லை! - சாலிய பீரிஸ்
[Tuesday 2018-09-11 09:00]

ஜெனிவா அழுத்தங்களை சமாளிக்கவோ அல்லது ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்கவோ இராணுவத்தை தண்டிக்கும் பாதையை உருவாக்கவோ காணாமல் போனோர் குறித்த தகவல்களை திரட்டவில்லை. உண்மைகளை கண்டறிந்து உரிய மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை எமக்கு உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.


வடக்கு, கிழக்கில் பொதுவாக்கெடுப்பு கோரும் தீர்மானம் இன்று!
[Tuesday 2018-09-11 09:00]

தமிழ் மக்


இந்தியப் பயணத்தை நிராகரித்தது ஏன்? - தினேஸ் குணவர்த்தன
[Tuesday 2018-09-11 09:00]

பாராளுமன்றத்தில் 70 அங்கத்தவர்களைக் கொண்டு இரண்டாவது பெரும்பான்மையை கொண்டுள்ள பொது எதிரணிக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்காமையினாலேயே சபாநாயகர் தலைமையிலான சர்வகட்சி பாராளுமன்ற குழுவின் இந்திய பயணத்தை நிராகரித்ததாக கூட்டு எதிர்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


சீன மொழியைக் கற்க பீஜிங் சென்றுள்ள பொலிஸ் குழு!
[Tuesday 2018-09-11 09:00]

சீனாவின் மண்டரின் மொழியைக் கற்பதற்காக இலங்கை பொலிஸ் குழு ஒன்று சீனா சென்றுள்ளது.கடந்த வியாழக்கிழமை சீனா சென்றுள்ள குறித்த பொலிஸ் குழு, இம்மாத இறுதிப் பகுதியில் நாடு திரும்பவுள்ளது. உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி சீன ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.


வவுனியாவில் கஞ்சாவுடன் மாட்டினார் ஒருவர்!
[Tuesday 2018-09-11 09:00]

யாழ்ப்பாணத்திலிருந்து மிகிந்தலை நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 9.30 மணியளவில் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் - மிகிந்தலை பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அதில் பயணித்த சந்தேக நபர் 2 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
[Tuesday 2018-09-11 09:00]

வவுனியா குருக்கள்புதுக்குளம், பூவரசங்குளம் பகுதியில் இன்று கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நிலைமாறுகால நீதியை நடைமுறைப்படுத்துவதில் நத்தை வேகம்! - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டனம்
[Monday 2018-09-10 18:00]

இலங்கையில், நிலைமாறுகால நீதியை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் விடயத்தில், அதிகாரிகள் மெதுவாக நகர்வதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கேல் பெசேல்ட் (Michelle Bachelet) தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39 வது அமர்வு இன்று ஆரம்பமாகிய நிலையில் தனது தொடக்க உரையில், ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


'விக்கி'க்கு 'கொக்கி' போடுகிறார் திஸ்ஸ விதாரண!
[Monday 2018-09-10 18:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்திருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களுக்கு சேவையாற்ற லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார், லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண.


போர்க்குற்ற விவகாரத்தில் விட்டுக் கொடுக்காது கூட்டமைப்பு!
[Monday 2018-09-10 18:00]

போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் குறித்த நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளுடனும் இராஜ தந்திர தரப்புக்களுடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா