Untitled Document
April 29, 2024 [GMT]
ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்பர்! - செல்வம் அடைக்கலநாதன்
[Saturday 2018-08-25 09:00]

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கொழும்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.


நாயாறு மீனவர் பிரச்சினையை வைத்து இனவாதத்தைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம்! - மனோ கணேசன்
[Saturday 2018-08-25 09:00]

நாட்டில் இன வாதத்துக்குத் தூபமிடும் யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்றும், நாயாறு மீனவர் பிரச்சினையை வைத்து எவரும் மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடாது! - சபாநாயகர்
[Saturday 2018-08-25 09:00]

எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தினார். மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காததை அடுத்து, பாராளுமன்ற குழு நிலைக் கூட்டத்தில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.


வியட்நாமுக்குச் சென்றார் ரணில்!
[Saturday 2018-08-25 09:00]

இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் கலந்து கொள்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தின் போது பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் அறிக்கை! - மாவை காட்டம்
[Saturday 2018-08-25 09:00]

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியே மாகாண சபைக்கான எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்ப்பதாயின் யாருடைய நலனுக்காக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும்தமிழ், முஸ்லிம் சமூகங்கள், மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை ஒடுக்கும் வகையில் இந்த எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.


காங்கேசன்துறையில் கடற்படைச் சிப்பாயைக் காணவில்லை! - மோட்டார் சைக்கிள் அனாதரவான நிலையில் மீட்பு
[Saturday 2018-08-25 09:00]

காங்


புல்லுமலையில் மண் அகழ்ந்தவர்களுக்கு காவல் காத்தவர் யானை தாக்கி மரணம்!
[Saturday 2018-08-25 09:00]

மட்டக்களப்பு - பதுளை வீதியில், புல்லுமலை பிரதேசத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார். மண் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு காவல் காத்தவரையே நேற்று இரவு 8.30 மணியளவில் யானை தாக்கியுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 45 வயதுடைய மயிலம்பாவளியை சேர்தவர் என முதற் கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசரணைகளை கரடியாறு பொலிஸரர் மேற்கொண்டுள்ளனர்.


நடத்துனர் மீது பயணிகள் கொலை வெறித் தாக்குதல்! - மூவர் கைது
[Saturday 2018-08-25 09:00]

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தனியார் பஸ் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கியின் உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கொக்குவிலில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு விளக்கமறியல்!
[Saturday 2018-08-25 09:00]

கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.


மாகாண சபை தொகுதிகள் எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றில் தோல்வி!
[Friday 2018-08-24 19:00]

மாகாண சபை தொகுதிகள் எல்லை நிர்ணய அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது. மாகாண சபை தொகுதிகள் எல்லை நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன் போது, அறிக்கைக்கு ஆதரவாக வாக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை. அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது.


நாயாறு விவகாரம் குறித்து சபையில் பொய்களைக் கக்கிய வீரவன்ச! - சிவமோகன் பதிலடி
[Friday 2018-08-24 19:00]

முல்லைத்தீவு- நாயாறு மீனவர் பிரச்சினை தொடர்பில் விமல் வீரவன்சவுக்கும் சிவமோகன் எம்.பிக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நல்லிணக்க முறையில் இருவரையும் சமாதானப்படுத்தினார் அமைச்சர் மனோ கணேசன்.


வடக்கில் காணிகள் விடுவிப்பை இராணுவமே தீர்மானிக்கும்! - ருவன் விஜேவர்தன
[Friday 2018-08-24 19:00]

தேசிய பாதுகாப்பை கவனத்திற் கொண்டும், இராணுவத்தினரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுமே, வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். வெஹேரகல ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற, சமய நிகழ்வுகளின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இரண்டு மாதங்களில் 38 'ஆவா'க்கள் கைது!
[Friday 2018-08-24 19:00]

வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்த்திய உரைக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல்! Top News
[Friday 2018-08-24 19:00]

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage கப்பல், இன்று (திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 900க்கும் அதிகமான அமெரிக்கக் கடற்படையினருடன் வந்துள்ள இந்தக் கப்பல், வரும் செவ்வாய்க்கிழமை வரை இங்கு தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்பது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமசந்திரன்
[Friday 2018-08-24 19:00]

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது அர்த்தமற்றது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் முன்னாள் போராளிகள்!
[Friday 2018-08-24 19:00]

நாட்


மகிந்த மீண்டும் போட்டியிடுவது மக்களின் கருத்துக்கு முரண்! - சரத் பொன்சேகா
[Friday 2018-08-24 19:00]

மகிந்த ராஜபக்ச அரசியல் இடைவெளிக்குள் புகுந்து வர முயற்சிக்கும் நபர் என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


வாள்களுடன் அட்டகாசம் செய்த இளைஞர் கைது!
[Friday 2018-08-24 19:00]

கொக்


விசேட நீதிமன்றில் கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
[Friday 2018-08-24 19:00]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றில், இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீரக்கெட்டிய- மெதமுலன, டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி நிர்மாணப் பணியின் போது, 3 கோடி ரூபாய்க்கு மேலான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, விசேட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் இரண்டாவது வழக்கென்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா டொலர் 162.11 ரூபாவாக எகிறியது! -ரூபாவின் மதிப்பு சரிவு
[Friday 2018-08-24 19:00]

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் முதல் தடவையாக 162.11 ரூபாவாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 162.11 ஆகவும், விற்பனை விலை 158.11 ஆகவும் பதிவாகியுள்ளது.


விக்னேஸ்வரனின் கோரிக்கை கூட்டமைப்பினால் நிராகரிப்பு!
[Friday 2018-08-24 09:00]

வட-கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நிராகரித்துள்ளது.


எல்லை நிர்ணய அறிக்கையைத் தோற்கடிப்பதில் ஐதேக, கூட்டு எதிரணி கைகோர்ப்பு!
[Friday 2018-08-24 09:00]

மாகாணசபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கையைத் தோற்கடிக்க, ஐக்கிய தேசியக் கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும் தீர்மானித்துள்ளன.அதேநேரம் இன்றையதினம் எல்லைநிர்ணய அறிக்கை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதா? அல்லது விவாதத்தை நடத்தி பிறிதொரு தினத்தில் வாக்கெடுப்பு நடத்துவதா? என கட்சித் தலைவர்கள் இன்று காலையே முடிவெடுக்கவுள்ளனர்.


கப்பலை கையேற்றப் போய் வெறும் கையுடன் திரும்பிய பாதுகாப்புச் செயலர்!
[Friday 2018-08-24 09:00]

அமெரிக்க கடலோரக் காவல்படையிடம் இருந்து


முல்லைத்தீவில் இரண்டு தலைகளுடன் பிறந்த பசுக் கன்று! Top News
[Friday 2018-08-24 09:00]

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்று பிறந்துள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள பசுமாடு ஒன்றே இந்த அதிசய கன்றை ஈன்றுள்ளது. கன்றும் தாய்ப் பசுவும் நலமாக இருப்பதாக குறித்த மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.இந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


மூன்றில் இரண்டு கிடைக்காவிடின் மாற்று வழியில் நிறைவேற்றுவோம்! - சுதந்திரக் கட்சி விடாப்பிடி
[Friday 2018-08-24 09:00]

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கைக்கு இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அதனை மாற்று வழியில் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.


ஜப்பானியர்களால் அழிக்கப்பட்ட எண்ணெய்க் குதங்களைப் பார்வையிட்ட ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்!
[Friday 2018-08-24 09:00]

திருகோணமலைக்கு நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியர்களால் குண்டு வீசித் தகர்க்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களை பார்வையிட்டார்.


மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்!
[Friday 2018-08-24 09:00]

முல்லைத்தீவு- உடையார்கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிடிவிறாந்து பிரதியை இன்டபோல் ஊடாக கோரிய அர்ஜுன் மகேந்திரன்!
[Friday 2018-08-24 09:00]

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்படி பிடிவிறாந்து பிரதி உள்ளிட்ட பல ஆவணங்களை அவர் இன்டர்போலின் ஊடாக கேட்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா