Untitled Document
January 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
திருக்கார்த்திகை தினமான நாளை செவ்வாய்க்கிழமையும் நாளை மறுநாள் புதன்கிழமையும் இந்துக்களின் புனித தினமாகும்.
[Monday 2012-11-26 12:00]

இந்நாட்களில் இந்துக்கள் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபமேற்றி இறைவனை வழிபடும் நன்நாள் ஏனெனில் முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாள் இந்நாளில் கதிர்காம முருகன் ஆலயத்தில் கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது முருகப் பெருமானுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் இதனாலேயே வந்தது என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் மாவட்ட இராணுவ கட்டளையிடும் அதிகாரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (டீஐஜி) ஆகியோருக்கு மகஜர் ஒன்றை வழங்கியுள்ளார்.


ஈழத் தேசிய மாவீரர் தினத்தை பக்தியுடனும் பயனுடனும் அனுட்டிப்போம்:
[Monday 2012-11-26 12:00]

அன்பான ஈழத்தின் உடன்பிறப்புக்களே சகோதர சகோதரிகளே
ஈழத் தமிழர் எங்கிருந்தாலும் ஒன்றாக ஒருங்கிணைந்து உலகளாவிய ரீதியில் அனுசரிக்கும் ஓர் தேசிய தினமாக மாவீரர் நாள் வளர்ந்து விட்டது. அன்றைய தினத்தை ஓர் புனித நாளாகக் கணி;த்து முதலில் ஆண்டவனை வழிபடுவோம். அவனின்றி அணுவும் அசையாது. எம்மை ஈழத்தமிழராக அந்த இடத்தில் இனாமான கொடைகள் - மொழி கலை கலாச்சாரம் - கொடுத்து இருத்தியவர் அவரே. கடந்த ஆறு தசாப்தங்களாக அனுபவித்த சகலத்தையும் முழுமையாக அறிந்தவரும் அவரே. ஆகையினால் எமது தாகத்தையும் சோகத்தையும் எமது இன்றைய முயற்சிகளையும் அவன் பாதத்திலே வைப்போம்.


இரு பஸ்கள் மோதி விபத்து 60 பேர் காயம் - 14பேர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி:
[Monday 2012-11-26 11:00]

கிரிந்திவெல, தித்தபத்தர பகுதியில் இரு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களை ஏற்றிக்கொண்டுவந்த இரண்டு பஸ்களே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தமிழர்களின் புனித மாதத்தில் தென்னிலங்கை மிரட்டல்கட்கு அஞ்ச வேண்டாம்! - வட-கிழக்கு வெகு ஜன அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு
[Monday 2012-11-26 11:00]

எமது தாயக மண் மீட்பு போரில் இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக இன்று வரை எம் வட-கிழக்கு தாயக மண் பட்டு வரும் இன்னல்கள் எத்தனை என்பதனை எம்மால் இந் நிமிடம் வரை உணரக் கூடியதாக உள்ளது.இருப்பினும் அநீதியை எதித்து களமாடி எம் சுதந்திரத்திக்காக தம் உயிர்களை தியாகம் செய்த எம் உறவுகளை நினைப்பதற்கு தென்னிலங்கையின் சக்திகள் செய்யும் அநீதிகள் எண்ணிலடங்காதவை.


இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று மாவீரர் தினத்தில் உறுதியேற்போம்: - நாம் தமிழர் கட்சி
[Monday 2012-11-26 11:00]

மானுடத்தின் மூத்த இனம், நாகரீகத்திற்கும், தொன்மைக்கும் சான்றாக உலக வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய இனமான தமிழினம், காலனி ஆதிக்கத்தினாலும், அயலவர் ஊடுறுவலினாலும் தனது தனித்தன்மையையும், தன்னாட்சியையும் இழந்து அடிமையுற்ற நிலையில், நம்மினம் வாழ்ந்த நிலப்பகுதிகள் அரசியல் ரீதியாக விடுதலைப் பெற்றும் அடிமை வாழ்வாகவே தொடர்ந்த நிலையில்தான், இலங்கையில் மேலாதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடி நிலைக்கு வீழ்த்தப்பட்டது.


ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அமர்வுக்கு முன்னதாக கூட்டமைப்புடன் அமெரிக்கா பேச்சு!
[Monday 2012-11-26 10:00]

அமெரிக்கா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகளுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எவ்வாறு இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது என்பதனை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாலியல் துஸ்பிரயோக குற்றவாளி இலங்கையில் தஞ்சம்!
[Monday 2012-11-26 10:00]

அவுஸ்ரேலியாவில் நூற்றுக்கணக்கான பாலியல் துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் கத்தோலிக்க அருட்சகோதரர் ஒருவர் நியூசிலாந்தில் இருந்து இலங்கைக்குத் தப்பிச் சென்றுள்ளார். இவர், 1970 மற்றும் 1980 காலப்பகுதிகளில் நியுசவுத்வேல்சில் தேவாலயம் நடத்தும் நிறுவனங்களின் டசின் கணக்கிலான சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், நியூசிலாந்து சிறையில் இரண்டு ஆண்டுகள் கழித்த முன்னாள் அருட்சகோதரர் பேனாட் கெவின் மக்கிராத் மீது, நியூகாசில் நீதிமன்றத்தில் 252 குற்றச்சாட்டுகள் உள்ளன.


சுற்றாடல் அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள வடக்கில் அணுக்கதிர்வீச்சு பாதுகாப்பு கட்டமைப்பு!
[Monday 2012-11-26 10:00]

வட மாகாணத்தில் அணுக்கதிர்வீச்சு பாதுகாப்பு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அணு உலைகளின் கதிர் வீச்சுக்களினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய சுற்றாடல் அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் நோக்கில் வட மாகாணத்தின் நான்கு இடங்களில் இந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. கல்பிட்டி, தலைமன்னார், நெடுந்தீவு மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களில் முதல் கட்டாமாக இந்த கட்டமைப்புக்கள் அமைக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டத்தில் கொழும்பு, திருகோணமலை, காலி, கண்டி போன்ற இடங்களில் மேலும் இவ்வாறான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. அணுக் கதிர்வீச்சு தாக்கங்களை கண்டறியும் வகையிலான கருவிகள் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தீர்வு இன்றேல் சாகும்வரை உண்ணாவிரதம்: - செல்வம் அடைக்கலநாதன்
[Monday 2012-11-26 10:00]

தமிழர் தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி!
[Monday 2012-11-26 10:00]

நாட்டின் பல பிரதேசங்களிலும் எற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை எட்டுப் போர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கம் மற்றும் குடியிருப்புகளின் மேல் மண் சரிந்து வீழ்ந்த காரணங்களினால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவ் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை காசல்ரீ மற்றும் விமலசுரேந்திர நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக களனி கங்கையை அண்டிய மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த ஹட்டன் - நுவரெலியா பிரதான பாதை இன்று காலை 7 மணி முதல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு ஆபாயம் ஏற்பட்டதன் காரணமாக இப்பாதை கடந்த சில தினங்களாக மூடப்பட்டிருந்தது.


யாழ். பல்கலை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ள மாவீரர்தின சுவரொட்டிகள்! Top News
[Monday 2012-11-26 09:00]

யாழ் பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் நேற்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. பல்கலை வளாகத்தில் கலைப்பீடம், விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பீடங்களிலும்,மாணவர் ஒன்று கூடும் இடம், சிற்றுண்டிச்சாலை, அறிவித்தல் பலகைகள், என பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.அந்த சுவரொட்டிகளில் பின்வருமாறு வாசகங்கள் காணப்படுகின்றது.


எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடையவில்லை: எல்லாளன் படையின் அறிக்கை.
[Monday 2012-11-26 08:00]

எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்து இருந்தால் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சம பல நிலையில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இலங்கை பேரினவாத அரசு பல உலக நாடுகளின் துணை கொண்டு எமது விடுதலைப் போரை இவ்வாறான இன்றைய சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபை நீதி வழங்க வேண்டும்! ஒரு கோடி கையெழுத்து இயக்கம்! - பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை
[Monday 2012-11-26 08:00]

தமிழீழத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இனப் படுகொலையால் தினமும் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், கவுரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திர தமிழீழமே தீர்வாக அமையும். இதனைத் தமிழீழ மக்கள் 1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் மூலமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்கள் மூலமும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்கள்.


மீண்டும் இனப்பிரச்சினைகளை உருவாக்க விமல் வீரவன்ச முயற்சி: ஆளும் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு!
[Monday 2012-11-26 08:00]

நாட்டில் மீண்டும் இனப்பிரச்சினைகளை ஏற்படுத்த அமைச்சர் விமல் வீரவன்ச முயற்சித்து வருவதாக மத்திய மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் உஜித் அனுராத தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டில் மீண்டும் போர் மூழக் கூடிய அபாயம் காணப்படுகின்றது. இவ்வாறு மாகாணசபை முறைமையை ரத்து செய்யுமாறு கோரி வரும் விமல் வீரவன்ச போன்ற தரப்பினருக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்கின்றது. மாகாணசபை முறைமைய விமர்சனம் செய்யும் தரப்பினர், மாகாண சபை முறைமையின் சகல நலன்களையும் அனுபவித்து வருகின்றனர். நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. வேலை செய்ய முடியாத சில அரசியல்வாதிகள் மாகாணசபை முறைமயை குறை சொல்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
[Monday 2012-11-26 08:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் அவதூறு ஏற்படும் வகையில் பிரசாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சியில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 109 தமிழ் பெண்களில் மூவரை படையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு போலியான பிரசாரத்தில் ஈடுபட்டு படையினருக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து மக்களையும் அரசு பழிவாங்குமா? :சபையில் அரியநேத்திரன் கேள்வி.
[Sunday 2012-11-25 20:00]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த பட்டதாரி பயிலுனர்கள் நிரந்தர நியமனத்தில் அரசியல் பழிவாக்கப்படுவதைப் போன்று கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து மக்களையும் பழிவாங்க முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலுள்ளவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; 2013 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டைப் பார்க்கின்றபோது குறிப்பாக பொருளாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.


தமிழர்கள் விரும்பாத திட்டத்தை திணிப்பதற்கு துணை போகப் போகிறீர்களா? :சபையில் சுமந்திரன் கேள்வி
[Sunday 2012-11-25 20:00]

"வடமாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் விரும்பாத "திவிநெகும' சட்டத்தை அந்த மக்கள் மீது பலவந்தமாக திணிக்க சிறுபான்மை இன அமைச்சர்கள் துணைபோகப் போகின்றீர்களா?'' இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் அவர் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது: 'திவிநெகும' சட்ட வரைவை சட்டமாக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை அரசு பெறவேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தச் சட்டவரைவுக்கு வடக்கு மாகாண மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.


சந்திரிக்காவின் ஆட்சி கவிழ்ந்தது போல், விரைவில் மஹிந்தவின் ஆட்சியும் கவிழும்: ரவி கருணாநாயக்க
[Sunday 2012-11-25 20:00]

"முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க தானே ஆட்சியில் நீடித்து நிலைப்பேன் என்ற மமதையுடன் பேசினார். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதே போன்றுதான் இந்த அரசும் அதி விரைவில் கவிழும்" என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க கூறினார். நாடாளுமன்றம் நேற்று சனிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெற்றது. ரவி கருணாநாயக்க விவாதத்தை ஆரம்பித்து பேசும் போது மேலும் கூறியதாவது:


மலேசிய தமிழர்களின் எதிர்ப்பால் ரத்தான மகிந்தவின் மலேசிய விஜயம்!
[Sunday 2012-11-25 19:00]

மலேசியாவில் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தினால், மகிந்த ராஜபக்ஷ இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளதாகவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மலேசியாவில் நடைபெறவுள்ள இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


13 மைனஸ் மற்றும் பிளஸ் என்ற தீர்வே அவசியப்படுகிறது: சம்பிக்க ரணவக்க
[Sunday 2012-11-25 19:00]

சர்ச்சைக்குரிய 13 வது அரசியல் திருத்தத்துக்கு மேலே சென்று, அதிகாரப் பகிர்வினை வழங்கும் பொருட்டு, சர்வதேசத்தின் அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மத்துகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அது குறித்த சூழ்ச்சி தொடர்பில் அறிந்திருந்தும் மௌனமாக இருந்தால், அடுத்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து, 13ம் திருத்தச் சட்டத்தின் அதிகார பகிர்வுகளை அமுலாக்க வேண்டும் என்ற கட்டாய அழுத்தங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..


இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசு இழுத்தடித்தால் சர்வதேச சக்திகள் மூலம் அழுத்தம் கொடுப்போம்: கூட்டமைப்பு
[Sunday 2012-11-25 19:00]

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசியல் தந்திரோபாயங்களைக் கையாள உள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். இதன் ஓர் கட்டமாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணுமாறு இலங்கையை வலியுறுத்தக்கூடிய அன்றேல் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க்கூடிய நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொள்வதே கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.


மாவீரன் பரிதி அவர்களுக்கு உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் வீரவணக்கம்.
[Sunday 2012-11-25 19:00]

பரிதி அண்ணா அவர்களுக்கு உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் வீரவணக்கம் உலகளாவிய தமிழ் இளையோர் அவை புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இணைந்து தமிழீழ தேசிய பணியாளரான பரிதி என்றழைக்கப்படும் திரு. மதிந்திரன் நடராஜா அவர்களை நாமும் இவ்வளையில் நினைவுகூருவதுடன் அவருக்கான தனது மரியாதையையும் செலுத்திக்கொள்கின்றது. கடந்த நவம்பர் 8, 2012 அன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகவிருந்த பரிதி அண்ணா அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்துக்கு முன்னால் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட இந்தக் கோழைத்தனமான செயலை உலகளாவிய தமிழ் இளையோர் அவையானது வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழ் மக்கள் அனைவருடனும் இணைந்து இக்கொலைக்கான விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி வழங்க வேண்டுமென பிரான்ஸ் அரசினையும் அதன் காவற்துறையினரையும் வலியுறுத்துகின்றது.


ஷிராணியை பதவியிலிருந்து நீக்கும் அரசின் முயற்சிக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் கண்டனம்.
[Sunday 2012-11-25 19:00]

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவியிலிருந்து நீக்கும் ஆளும் கட்சியின் முயற்சி குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் கண்டனம் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை மீதான குற்றவியல் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் தெளிவாக இல்லை. நிர்வாகம், சட்டத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் தனித்தனியாக இயங்க வேண்டியவை. இவ்வாறு தனித்துவம் மிக்க துறைகளில் ஒன்றான நீதித்துறையின் சுதந்திரம் அரசின் அண்மைய நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை கண்டிக்கப்பட வேண்டியது.


தமிழ்கூறும் நல்உலகம் தலைசிறந்த தமிழ் அறிஞரை இழந்து விட்டது!
[Sunday 2012-11-25 11:00]

தமிழ்கூறும் நல்உலகம் தலைசிறந்த தமிழ் அறிஞர், தனித்தமிழ் ஆர்வலர், இலக்கியச்செம்மல் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களை இழந்துவிட்டது. புலவர் இறைக்குவனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மாளாத் துயரில் மூழ்கியுள்ளோம். அவரது மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்இனத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனித்தமிழ் அறிஞரும் மிகச்சிறந்த புலமையாளருமான திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு சென்னை திரும்பும்பொழுது தஞ்சையில் இயற்கை எய்தினார். புலவர்மணி அவர்கள் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் மருமகன் ஆவார். அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். தென்மொழி வெளியீட்டிலும் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களது பிற நூல்கள் வெளிவருவதிலும் தொடர்ந்து பாடுபட்டவர்.


இலங்கையின் முதலாவது செய்மதியில் தேசியக்கொடியை பறக்கவிடுவதற்கு அனுமதி மறுப்பு!
[Sunday 2012-11-25 09:00]

சீனாவில் இருந்து ஏவப்படவுள்ளதாக கூறப்படும் இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் சட் 1 இல், இலங்கையின் தேசியக்கொடி பறக்கவிடப்பட வேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும், தேசிய தொடர்பாடல் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்தக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? என்று நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றுவன் விஜயவர்த்தன இந்தக்கேள்வியை எழுப்பினார். இலங்கையர் என்ற ரீதியில் செய்மதி ஒன்று அனுப்பப்படுவதை தாம் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர் எனினும் அது அனுப்பப்படும் விதம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சு கலக்கப்பட்டமை கண்டுபிடிப்பு: பொலிஸார் விசாரணை!
[Sunday 2012-11-25 09:00]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொஹில கிழங்கு கறியில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தமை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ம் திகதி நாடாளுமன்ற உணவகத்தில் சமைக்கப்பட்ட கொஹில கிழங்கு, பருப்பு சேர்க்கப்பட்ட உணவு வழங்கப்பட்டன. அதில் கொஹில கிழங்கு கறி வழமைக்கு மாறாக சிவப்பு நிறத்தில் இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத மரக்கறிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க சபாநாயகரால் உத்தரவிடப்பட்டது.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றன: - அசோக் கே. காந்தா
[Sunday 2012-11-25 09:00]

இந்தியா எப்போதும் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும். அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ நாம் ஒருபோதும், செயற்படவில்லை என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா நேற்றுத் தெரிவித்துள்ளார்.


துன்புறுத்தல் தாங்க முடியாமல் இராணுவத்திலிருந்து 6 தமிழ் பெண்கள் விலகினர்..! Top News
[Sunday 2012-11-25 09:00]

இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். அதேவேளை, அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார். முன்னதாக, இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார்.

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா