Untitled Document
May 7, 2024 [GMT]
குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காவிடின் மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
[Sunday 2018-07-22 08:00]

சீனா


சைக்கிளில் சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்!
[Sunday 2018-07-22 08:00]

கோப்பாயில், துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வயோதிபர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் கோப்பாய் இருபாலை கிழக்கை சேர்ந்த சபாபதி அருளானந்தம் (வயது 68)என்ற வயோதிபர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த வயோதிபர் கோப்பாய் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது பேரப்பிள்ளையை ஏறுவதற்காக சென்றுள்ளார். அங்கு சென்று பேரப்பிள்ளையை ஏற்றிக்கொண்டு வீடு செல்லும் போது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.


பிரான்சில் இருந்து மானிப்பாய் வந்தவர் மயங்கி வீழ்ந்து மரணம்!
[Sunday 2018-07-22 08:00]

பிரான்


முள்ளியவளையில் பெண்கள் குழு தாக்கி ஆண்கள் மூவர் காயம்!
[Sunday 2018-07-22 08:00]

முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்தனர். முள்ளியவளை தண்ணீரூற்று சந்தைப் பகுதியில் ஆண்கள் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் அது குழு மோதலாக மாற்றமடைந்து பிரதான வீதிக்கு வந்துள்ளது.


ஒற்றுமையை விரும்பாதவர்களோடு ரெலோ ஒருபோதும் தொடர்ந்து பயணிக்காது!
[Saturday 2018-07-21 18:00]

ஒற்றுமையை விரும்பாதவர்களோடு ரெலோ ஒருபோதும் தொடர்ந்து பயணிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


எந்தத் தடை வந்தாலும் மரணதண்டனையை நிறைவேற்றுவேன்! - ஜனாதிபதி திட்டவட்டம்
[Saturday 2018-07-21 18:00]

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை வழங்குவதுதான் வடக்கில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி!
[Saturday 2018-07-21 18:00]

வடமாகாண சபைக்கு, சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும், வடக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட, இதுவே ஒரே வழி என்றும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறு்பபினருமான எம்.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.


முன்னாள் புலி உறுப்பினர்கள் மூவர் சுவிசில் கைது!
[Saturday 2018-07-21 18:00]

வதிவிட அனுமதியின்றி- சட்டத்துக்கு புறம்பான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள், மூவர் சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பாத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே கைது செய்யப்பட்டு சூரிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது. இவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கில் அபிவிருத்தி குறைவு! - கண்டுபிடித்தார் பிரதமர்
[Saturday 2018-07-21 18:00]

நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அபிவிருத்திகள் மிகவும் குறைவு என்று பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கறுப்பு ஜூலை 1983 - 35 வது ஆண்டு நினைவு! Top News
[Saturday 2018-07-21 18:00]

1983 ஜூலை 24 மற்றும் ஜூலை 29 ஆம் திகதிக்கு இடையில், கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழ்-விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன, இதனால் ஆயிரக்கணக்கானோரின் இறப்புகளும் எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்களின் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன.


இந்து சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் நம்பகரமான ஒரு பங்காளர்! - இலங்கையைப் பாராட்டிய மோடி Top News
[Saturday 2018-07-21 18:00]

இலங்கை வெறுமனே ஓர் அயல்நாடாக அன்றி தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் விசேடமான மற்றும் நம்பகரமான ஒரு பங்காளர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


கொடிகாமத்தில் இளைஞனுக்கு வாள்வெட்டு! - வீடு புகுந்து தாக்குதல்
[Saturday 2018-07-21 18:00]

கொடி


ஆசிரியையும், கிராம சேவகரும் மோதலில் காயம்!
[Saturday 2018-07-21 18:00]

வவுனியா - நெடுங்கேணிப் பகுதியில் அரச அலுவலர்களிற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி-ஒலுமடு பகுதியில் கிராம சேவகருக்கும், அப்பகுதியில் உள்ள காணியை துப்புரவாக்கி கொண்டிருந்த ஆசிரியைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது.


ஒட்டுசுட்டான் வெடிபொருள் வழக்கு - கைதான 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
[Saturday 2018-07-21 18:00]

முல்லைத்தீவு -ஒட்டுசுட்டானில் கடந்த மாதம் 22 ஆம் திகதி வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் உட்பட அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 09 பேர் மீதான வழக்கு நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.


மகிந்த தான் வேட்பாளர் என்கிறார் குமார வெல்கம!
[Saturday 2018-07-21 18:00]

எதிர்க்கட்சியில் இருக்கும் சிறந்த ஒருவரையே ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். அந்த வேட்பாளர் வேறு யாருமல்ல எனவும் அந்த வேட்பாளர் மகிந்த ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாயன்மார்கட்டில் மற்றொரு மனிதப் புதைகுழி?
[Saturday 2018-07-21 09:00]

யாழ்ப்பாணம், நல்லூர், நாயன்மார்கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போர்க் காலத்தில் இராணுவத்தினரின் முன்னரங்க காவலரண் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்தே நேற்று மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.


பகிரங்க விவாதம் நடத்த வருமாறு விக்னேஸ்வரனை அழைக்கிறார் தவராசா!
[Saturday 2018-07-21 09:00]

வடமாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக, பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.


வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் பொலிசாரால் விசாரணைக்கு அழைப்பு
[Saturday 2018-07-21 09:00]

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டை அடுத்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினை, சாவகச்சேரி பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.


இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னான்டோ!
[Saturday 2018-07-21 09:00]

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, நியமனமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனத்தைச் செய்துள்ளார். உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அனுமதி கிடைத்த பின்னர் இவர் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார்.


நான் தலையீடு செய்யவில்லை! - குற்றச்சாட்டுகளை சுமந்திரன் நிராகரிப்பு
[Saturday 2018-07-21 09:00]

நிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


உக்ரேன் எல்லையைக் கடக்க முயன்ற 5 இலங்கையர்கள் கைது!
[Saturday 2018-07-21 09:00]

சட்டவிரோதமாக உக்ரேன் நாட்டின் எல்லையைக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவர் உள்ளிட்ட 13 பேரை அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.


ஜனவரி 5இல் மாகாணசபைகளுக்குத் தேர்தல்?
[Saturday 2018-07-21 09:00]

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 5ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது என்பது குறித்து அடுத்த வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் கூடி முடிவெடுக்கவுள்ளனர்.


சம்பந்தனுக்கு அருகதையில்லை! - பசில் சீற்றம்
[Saturday 2018-07-21 09:00]

மகிந்த ராஜ


சீனாவுக்கு விற்கப்பட்ட இராணுவத்தின் காணி!
[Saturday 2018-07-21 09:00]

கொழும்பு, காலி முகத்திடலில் உள்ள இராணுவ தலைமையக காணி சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இரர்ணுவத் தலைமையக காணியின் ஒரு பகுதி சீனாவுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவின் ஷங்கிரிலா நிறுவனத்திற்கே இந்தக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இலவச அம்புலன்ஸ் சேவை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
[Saturday 2018-07-21 09:00]

சுவசரிய இலவச அம்புலன்ஸ் சேவை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுவசரிய சேவையை வட மாகாணத்திற்கு விஸ்தரிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாண மாநகர சபை திடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.


மாகாண சபைத் தேர்தலில் சகல தமிழ் கட்சிகளும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்!
[Friday 2018-07-20 18:00]

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட உள்ளன.


வவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடுவிக்குமாறு கோரிக்கை!
[Friday 2018-07-20 18:00]

வவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதி ஒன்றினை விடுவிக்குமாறு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்த சுதா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் வவுனியா, தச்சங்குளம் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி விமானப்படையினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது.


தந்தையின் இறுதிச் சடங்கில் சடங்கில் அரசியல் கைதி: - 13 வருடங்களின் பின் நடந்த நெகிழ்ச்சி
[Friday 2018-07-20 14:00]

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி இன்று தனது தந்தையின் மரண சடங்கில் கலந்துகொண்டார். கடந்த 18.07.2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒரு மணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா