Untitled Document
April 26, 2024 [GMT]
ஈபிடிபி ஜெகனின் பதவியைப் பறிக்கக் கோரும் வழக்கு நாளை விசாரணை!
[Tuesday 2018-07-10 17:00]

ஈபிடிபியைச் சேர்ந்த யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெகன் என அழைக்கப்படும் வேலும்மயிலும் குகேந்திரனுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


மேலும் இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி! Top News
[Tuesday 2018-07-10 17:00]

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். ஜே.சி. அலவத்துவல உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும், லக்கி ஜயவர்தன நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.


மாடு கடத்த உதவிய பொலிஸ் அதிகாரி வசமாக மாட்டினார்!
[Tuesday 2018-07-10 17:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெலிஓயா ஊடாக திருகோணமலைக்கு, சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்டவர்களுக்கு உதவிய பொலிஸ் அதிகாரி ஒருவரை, முள்ளியவளை பொலிஸார், நேற்று இரவு கைது செய்துள்ளனர்.


நவாலிப் படுகொலை நினைவு நாள் - நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி! Top News
[Tuesday 2018-07-10 07:00]

நவாலி- சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் புக்காரா விமானங்களின் தாக்குதலில் 150இற்கும் அதிகமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 23 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்றுமாலை அனுட்டிக்கப்பட்டது.நேற்று மாலை அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


விஜயகலாவின் கூற்றை நியாயப்படுத்தும் கோத்தா!
[Tuesday 2018-07-10 07:00]

மைத்ரி


கிளிநொச்சியில் ஒரு கோடி ரூபா பெறுமதியாள வலம்புரிச் சங்குடன் இருவர் கைது!
[Tuesday 2018-07-10 07:00]

கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் நேற்று இரவு இருவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் செய்த பொழுது டொல்பின் ரக வாகனத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


கிருஷ்ணா கொலைக்கு போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு! - பொலிஸ் சந்தேகம்
[Tuesday 2018-07-10 07:00]

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ண பிள்ளை கிருபானந்தனின் கொலை, போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.


வெளிநாடு செல்ல முன் விஜயகலா மீது நடவடிக்கை எடுங்கள்! - பிவித்துரு ஹெல உறுமய
[Tuesday 2018-07-10 07:00]

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.


மகிந்தவுக்கு சவால் விடுக்கிறார் அகிலவிராஜ்!
[Tuesday 2018-07-10 07:00]

சீன நிறுவனத்திடமிருந்து சட்டவிரோதமான முறையில் பணம் பெற்றிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முடிந்தால் நாடாளுமன்றில் பதில் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு தாம் சவால் விடுப்பதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


விஜயகலா கூறியது தவறு! - என்கிறார் சிவாஜிலிங்கம்
[Tuesday 2018-07-10 07:00]

இராஜாங்க அமைச்சர் என்ற பொறுப்பிலிருந்தவாறு மீண்டும் புலிகள் இயக்கம் உருவாக வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பது தவறு என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்


4000 தமிழ் அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவுள்ளது இந்தியா!
[Tuesday 2018-07-10 07:00]

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி, இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


கப்பலில் போதைப் பொருள் வைத்திருந்த இலங்கையர் மொரிசியசில் கைது!
[Tuesday 2018-07-10 07:00]

மொரிசியஸ் கப்பல் ஒன்றில் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட குறித்த கப்பல், மொரிஸியஸூக்கும் மடகஸ்காருக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வருகிறது.


மன்னாரில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித எலும்பு எச்சங்கள்! Top News
[Monday 2018-07-09 19:00]

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்கள் அகழ்வு பணி இன்று 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை தாங்கினார்.


கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் படுகொலை!
[Monday 2018-07-09 19:00]

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே.கிருஷ்ணா இன்று காலை கொழும்பு செட்டியார் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே கிருஷ்ணா மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.


விஜயகலா பேசியதில் என்ன தவறு? - சிங்களவர்களின் வாயை அடைத்த சுமந்திரன்
[Monday 2018-07-09 19:00]

விடுதலைப் புலிகளை பற்றி விஜயகலா மகேஸ்வரன் பேசியதில் என்ன தவறுள்ளது? அவர் மீது நீங்கள் கோபப்படுவதில் நியாயமில்லை. அவரை அப்படி பேசத் தூண்டியவர்களின் மீது தான் நீங்கள் கோபப்பட வேண்டும்.


இராணுவத்துக்கும் வன்முறைகளுக்கும் தொடர்பில்லை! - யாழ். படைத் தளபதி
[Monday 2018-07-09 19:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


விஜயகலாவுக்கு அமைச்சர் பதவி! - சிபாரிசு செய்யப் போகிறாராம் சங்கரி
[Monday 2018-07-09 19:00]

இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக> விஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள த.வி கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்-


சர்வாதிகார ஆட்சி அமைத்தால் நாமல் மலேசியாவுக்கு ஓட நேரிடும்! - குமார வெல்கம
[Monday 2018-07-09 19:00]

சர்வாதிகார பாணியிலான ஆட்சியாளரை தான் எந்த வகையிலும் அங்கீகரிக்க போவதில்லை என்றும், அதற்கு எதிரான கொள்கையில் எந்த மாற்றங்களும் இல்லை என்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.


வவுனியாவில் ஒரே இரவில் வாள்வெட்டு, குழு மோதல்களில் 7 பேர் காயம்! - 10 பேர் கைது
[Monday 2018-07-09 19:00]

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில், நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல்களில் 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பொன்சேகாவையும், வீரவன்சவையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்! - இன்பராசா
[Monday 2018-07-09 19:00]

முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களை முதலில் கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.


லண்டனுக்குச் செல்கிறார் விஜயகலா!
[Monday 2018-07-09 19:00]

விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி, இராஜாங்க அமைச்சர் பதவியை விட்டு விலகிய விஜயகலா மகேஸ்வரன் லண்டனுக்கு பயணமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டே லண்டன் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


போலி கடவுச்சீட்டுடன் சிக்கிய இரு இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை!
[Monday 2018-07-09 18:00]

போலி கடவுச்சீட்டு வைத்திருந்த இரு இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கப்பூரில் எட்டு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததார்கள் என்று இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் குடிவரவு சோதனை பணியகம் தெரிவித்துள்ளது.


மாணவனைத் தாக்கிய அதிபருக்கு 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை!
[Monday 2018-07-09 18:00]

மாணவன் ஒருவனை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், பொல்பிதிகம தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருக்கு 3 வருடகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மேல் நீதிமன்ற நீதிவான், மேனகா விஜேசுந்தர இன்று இந்த தீர்ப்பை வழங்கினார்.


மைத்திரிக்கும் சீனாவின் நிதி! - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
[Monday 2018-07-09 06:00]

2015 ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


இரத்த வங்கி முடங்கும் ஆபத்து!
[Monday 2018-07-09 06:00]

வரலாற்றில் முதல் தடவையாக தேசிய இரத்த வங்கிப் பணிகள் இன்று முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய இரத்த பரிமாற்ற சேவை பணிப்பாளருக்கும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலே இதற்கான காரணமாகும்.


முகாம்களுக்குள் நுழையத் தடை! - இராணுவத் தளபதியின் உத்தரவு
[Monday 2018-07-09 06:00]

நல்லிணக்கப் பொறிமுறையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை இராணுவ முகாம்களுக்குள் நுழைவதற்கு தடைவிதித்து, உத்தரவிட்டுள்ளார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க. இது தொடர்பில் அவர் இராணுவ முகாம்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


விமானப் பயணங்களில் 22 இலட்சம் ரூபாவைக் கரைத்த வடக்கு முதல்வர்!
[Monday 2018-07-09 06:00]

கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 48 விமான பய


கொட்டாஞ்சேனையில்இருவர் சுட்டுக் கொலை! - இருவர் படுகாயம்
[Monday 2018-07-09 06:00]

கொழும்பு, கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் நேற்றுமாலை இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இருவர் உயிரிழந்தனர். 58 வயதுடைய செல்லையா செல்வராஜ் என்பவரும் 50 வயதுடைய எலிசபத் பெரேரா என்பவருமே உயிரிழந்தனர்.

 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா