Untitled Document
May 19, 2024 [GMT]
விடுவிக்கப்பட்ட அத்தனை புலிகளையும் மீண்டும் கைது செய்யக் கோருவோம்! - என்கிறார் சம்பிக்க
[Sunday 2016-02-14 20:00]

யுத்தகுற்ற விசாரணைகள் இடம்பெறும்பட்சத்தில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட 12,000 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் மீண்டும் கைது செய்யுமாறு அரசாங்கத்தை கோருவோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார பத்திரிகையொன்றிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.


அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து புதிய சட்டமா அதிபருடன் அடுத்தவாரம் பேச்சு! - சுமந்திரன்
[Sunday 2016-02-14 20:00]

புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அவருடன் பேச்சு நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


ஒழுக்காற்று நடவடிக்கை என்று சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க முயற்சி! - மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு Top News
[Sunday 2016-02-14 20:00]

ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலரை கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பு, கொச்சிக்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரன்வெல் ஹோட்டலில் இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


வடமாகாண ஆளுநராகப் பதவியேற்றார் ரெஜினோல்ட் குரே! Top News
[Sunday 2016-02-14 20:00]

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். வடமாகாணத்தின் ஆளுநராகவிருந்த எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியதையடுத்து, ரெஜினோல்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.


மஹிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை?
[Sunday 2016-02-14 20:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு, 30 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.கட்சியில் எவ்வாறான பதவி வகித்தாலும் ஒழுக்க விதிகளை மீறினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது.


மீனவர்கள் மீதான தாக்குதல்! - கடற்படை மீது நடவடிக்கை எடுக்கக் கோருகிறார் செல்வம் எம்.பி
[Sunday 2016-02-14 20:00]

மன்னார், பள்ளிமுனை கிராமத்தில் இருந்து நேற்றுக்காலை, கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமானது கண்டிக்கத்தக்கது. எனவே இச்சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


காதலர் தினத்தில் கன்னித்தன்மையை இழக்கும் பத்தாயிரம் இலங்கை யுவதிகள்!
[Sunday 2016-02-14 19:00]

இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். அத்துடன் அத்தினத்தில் 4500 ரூபாவுக்குட்பட்ட அறைகளில் 80 சதவீதம் காதல் ஜோடிகளுக்காக முன்பதிவு செய்துகொள்ளப்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.


ஆங்கிலேயர் ஒப்படைத்த தமிழர்களின் நாட்டை சிங்களவர்கள் திருப்பித் தர வேண்டும்! - இரா.சம்பந்தன்
[Sunday 2016-02-14 09:00]

ஆங்கிலேயர்களால், சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழர்களின் நாடு மீண்டும் தமிழர்களுக்கே கையளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திவயின சிங்கள வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மகிந்தவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றி விட்டேன்! - என்கிறார் மைத்திரி
[Sunday 2016-02-14 08:00]

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனாலேயே முன்னர் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்லப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பொலன்னறுவை, வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.


கடற்பாதுகாப்பில் இலங்கை அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும்! - பிரசாத் காரியவசம்
[Sunday 2016-02-14 08:00]

கடற்பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், கடல் வழிகள் மற்றும் கடற்பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளும். இந்து சமுத்திர வலயத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள கடற்பாதுகாப்பு சக்திகளுடன் இணைந்து கடமையாற்ற இலங்கை விரும்புகிறது.


மஹிந்த அணியனருக்கு சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளர் துமிந்த திசநாயக்க எச்சரிக்கை!
[Sunday 2016-02-14 08:00]

புதிய கட்சியை உருவாக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய கட்சியில் இணைந்து கொள்ளும் தரப்பினர் தராதரம் பாராது கட்சியிலிருந்து நீக்கப்படுவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு நாங்கள்தான் உண்மையான சுதந்திரக் கட்சிக்காரர்கள் என கூறிக்கொண்டு கட்சியை பலவீனப்படுத்த தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இந்த சிறு குழுவினரின் ஏதேச்சாதிகார தீர்மானங்களினால் கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும்.


ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத தினேஸ் குணவர்த்தனவுக்கு கூட்டு எதிரணியின் தலைவர் பதவி?
[Sunday 2016-02-14 08:00]

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆரம்பிக்க உள்ள புதிய கட்சியின் தலைவர் பதவிக்கு நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, கோத்தபாய ராஜபக்ஸ, மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


எந்த இனத்தையும், மதத்தையும் அவமதிக்க இடமளிக்கமுடியாது! - பிரதமர் ரணில்
[Sunday 2016-02-14 08:00]

இனிவரும் காலத்தில் எந்தவொரு மதத்திற்கும் இனத்திற்கும் அவமரியாதை செய்யும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பதுளையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களில் வெளிவரும் அவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதில் ஊடகங்களுக்கும் பாரிய பங்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


காணாமற்போனோர் விவகாரத்தில் அரசுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இணக்கம்!
[Sunday 2016-02-14 08:00]

காணாமல்போனோர் குறித்து இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்வந்துள்ளது. இவ்வாறு இணைந்து செயற்படுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


போர்க்குற்றவாளிக்கு நாடாளுமன்ற ஆசனம்! - இராணுவ ஆட்சிக்கு முயற்சி என சாடுகிறார் சிவாஜிலிங்கம்
[Sunday 2016-02-14 08:00]

போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற பதவியைக் கொடுத்து, யுத்தக்குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை மாத்திரமன்றி இலங்கை அசராங்கத்தினையும் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


நிதி மோடி விசாரணைப் பிரிவை கலைப்பதில்லை! - அரசாங்கம் முடிவு
[Sunday 2016-02-14 08:00]

பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களை விசாரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட, நிதி மோசடி விசாரணைப் பிரிவை கலைப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த நாட்களில் இடம்பெற்ற அரசாங்கத்தின் முக்கிய உயர் மட்டக் கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரிவை நீக்கினால், தற்பொழுது முன்னெடுத்து வரும் சகல விசாரணைகளையும் இடைநிறுத்த வேண்டி வரும் என்பதனால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


மஹிந்த ஆட்சிக்கால வேலைத் திட்டங்கள் குறித்து கணக்காய்வு செய்கிறது சர்வதேச நாணய நிதியம்!
[Sunday 2016-02-14 08:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 250 பில்லியன் டொலர் பெறுமதியான வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கணக்காய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் சட்ட ஆய்வு மற்றும் கணக்காய்வு அதிகாரிகள் கொண்ட விசேட குழு அடுத்தவாரமளவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


மாவீரர்களை நினைவுகூரும் உரிமையை வழங்க வேண்டும்! - அரசியலமைப்பு கருத்தறியும் அமர்வில் முல்லை. மக்கள் கருத்து Top News
[Saturday 2016-02-13 20:00]

மாவீரர்களை நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும் என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.


பிரபாகரனே வடக்கிலுள்ள மக்களின் கதாநாயகன்! - கோத்தபாய
[Saturday 2016-02-13 20:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


பின்புறம் பார்த்தபடி அலுவலகத்தை திறந்து வைத்த மஹிந்த! - சோதிடக் காய்ச்சல் தீரவில்லை Top News
[Saturday 2016-02-13 20:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது புதிய அலுவலகத்தை பின்புறம் திரும்பிக் கொண்டு திறந்து வைத்தது குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதிய அரசியல் அலுவலகம் நேற்று பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான சுபநேரத்தை அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச உள்ளிட்டோர் குறித்துக் கொடுத்திருந்தனர். எனினும் சோதிடர்கள் குறித்துக் கொடுத்த சுபநேரத்திற்கு உகந்த திசையானது அலுவலக நுழைவாயிலின் எதிர்த்திசையில் அமைந்திருந்தது.


சம்பூர் கடற்படை முகாம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும்! - அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல
[Saturday 2016-02-13 20:00]

திருகோணமலை சம்பூரில் உள்ள விதுர கடற்படை முகாம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் அறிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மரூப்பினால் திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுதல் தொடர்பான தனிநபர் பிரேரணையை ஒன்று நேற்று சபையில் முன்வைக்கப்பட்டது.இந்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, சபை முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அடுத்துவரும் நாட்களில் கைது செய்யப்படுகிறார் மஹிந்தவின் அடுத்த மகன்!
[Saturday 2016-02-13 20:00]

நாமல் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக, பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது. தாஜுடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


இலங்கையிலும் பரவுகிறது ஐ.எஸ் தீவிரவாதம்! - ஐ.நா பொதுச்செயலர் அறிக்கை
[Saturday 2016-02-13 20:00]

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதம் வேகமாக பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை நேற்று பான் கீ மூன் வெளியிட்டார். குறித்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுத் தளம் வேகமாக வியாபித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


யார்க்கரு விபத்தில் இளைஞர் பலி!
[Saturday 2016-02-13 20:00]

வடமராட்சி - யார்க்கருச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யார்க்கரு சந்தியில் நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் குடவத்தை துன்னாலையை சேர்ந்த செல்லத்தம்பி செல்வராஜா (வயது - 28) என்ற இளைஞரே உயிரிழந்தார்.


சின்னக்கதிர்காமத்தில் இன்று மீண்டும் தேங்காய் உடைத்தது மஹிந்த அணி!
[Saturday 2016-02-13 20:00]

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்தும், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் ஒருவருட நிறைவிற்கு எதிராகவும் கூட்டு எதிரணியினர் இன்று மீண்டும் தேங்காய் உடைத்து சாபமிடும் நிகழ்வினை முன்னெடுத்தனர். இந்த நிகழ்வானது கொடகவல


எம்.பிக்களின் குடியிருப்பு தொகுதியில் வீட்டுத் தோட்டம் செய்யும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க! Top News
[Saturday 2016-02-13 20:00]

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தான் வசித்து வரும் மாதிவலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு தொகுதியில் உள்ள காணியில் காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். இங்கு அவர் கோவா, கத்தரி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பயிரிட்டுள்ளதுடன், ஓய்வுநேரத்தில் தானே இந்த தோட்டத்தை பராமரித்து வருவதாகவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். பிரபல சிங்கள திரைப்பட நடிகரான இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இரட்டைக் குழந்தைகளுடன் சென்று தெற்காசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற இலங்கை வீராங்கனை! Top News
[Saturday 2016-02-13 20:00]

அண்மையில் பிரசவித்த தனது இரட்டைக் குழந்தைகளுடன் தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு சென்று வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார் இலங்கை வீராங்கனை. உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனைதெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.


மஹிந்தவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை! - என்கிறார் ருவான் விஜேவர்த்தன
[Saturday 2016-02-13 20:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கைப் படையினர் கைது செய்வது குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா