Untitled Document
May 8, 2024 [GMT]
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தார் சரத் பொன்சேகா! Top News
[Wednesday 2016-02-03 20:00]

ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொண்டார். இந்த நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது ஜனநாயக கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. ஜனநாயக கட்சியின் சார்பில் சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரணில் விக்ரமசிங்கவும் இதில் கைச்சாத்திட்டனர்.


புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுத்து வைப்பது சட்டரீதியானதே! - அவுஸ்ரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு
[Wednesday 2016-02-03 20:00]

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கை சட்டரீதியானது என அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்துவைப்பது சட்டவிரோதமானது என தெரிவித்து பெண்ணொருவர் தொடுத்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து 37 குழந்கைகள் உட்பட250 பேர் நவ்றுவில் உள்ள முகாமிற்கு அனுப்பப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.


பதவி விலகுகிறார் வடமாகாண ஆளுநர் பளிஹக்கார!
[Wednesday 2016-02-03 19:00]

வடக்கு மாகாண ஆளுநர் எம்.எம்.ஜி.எஸ். பளிஹக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகவுள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி பளிஹக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதேவேளை வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


35 வெளிநாட்டுத் தூதுவர்கள் யாழ். நோக்கிப் படையெடுப்பு! Top News
[Wednesday 2016-02-03 19:00]

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் இன்று யாழ். குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர். இந்தக் குழுவினர் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் போருக்கு பின்னான நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துரையாடினர்.


சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன்- சுமந்திரன் பங்கேற்பர்?
[Wednesday 2016-02-03 19:00]

நாளை காலிமுகத் திடலில் இடம்பெறவுள்ள இலங்கையின் 68ஆவது சுதந்திர தினவிழா நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்பர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இடது- வலது என்பதற்கு அப்பால் உத்தரவிடத் தெரிந்தவரா பொன்சேகா? - கேட்கிறார் கோத்தா
[Wednesday 2016-02-03 19:00]

இடது - வலது என கூறி ஆணையிட்டதற்கு மேலாக வேறெதும் திறமை இருப்பதாலா முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளது என்று கோத்தபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். கோத்தபய ராஜபக்ஷவுக்கு முடிந்தது வலது - இடது என கூறி இராணுவத்துக்கு ஆணையிடுவது மட்டுமே எனவும், அரசியல் கண்ணோட்டம் இல்லை எனவும், இந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டது தொடர்பில் கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


லலித், குகன் காணாமற்போன வழக்கு - யாழ்.நீதிமன்றில் ரம்புக்வெல ஆஜர்! Top News
[Wednesday 2016-02-03 19:00]

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி இரவு, காணாமல் போன, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் தொடர்பிலான வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இன்றைய வழக்கு விசாரணையின் போது தொடர்பாடல், மற்றும் மொழி பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பணப்பையைக் களவாடிய இன்ஸ்பெக்டர் வசமாக மாட்டினார்! - காட்டிக் கொடுத்தது சிசிடிவி
[Wednesday 2016-02-03 19:00]

மட்டக்களப்பில் வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவரின் பணப் பையை திருடிய, காங்கேசன்துறையில் கடமையாற்றும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் கந்தையா ஜீவன்குமார் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, எரகம பிரதேசத்தைச் சேர்ந்த தாஜுதீன் ரபாய்தீன் என்பவர், தனியார் வங்கி ஒன்றில் வைத்து தனது பணப்பை காணாமல்போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


கைவிடப்பட்ட கட்டடத்தில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு! Top News
[Wednesday 2016-02-03 19:00]

மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் ஊறணி பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மலசலகூட அறையொன்றில் உருக்குலைந்த நிலையில் இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தச் சடலம் அடையாளம் காணப்படவில்லை. சடலம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நபர் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


திருநெல்வேலியில் முச்சக்கர வண்டி மீது மோதியது மினி பஸ்! - சிறுவன் உள்ளிட்ட மூவர் படுகாயம் Top News
[Wednesday 2016-02-03 19:00]

மினி பஸ், முச்சக்கரவண்டி விபத்தினால் 10 வயது பாடசாலை சிறுவன் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவனின் தாயார் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகியோரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று மதியம் பலாலி வீதி திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றது.


தென்மாகாண முதலமைச்சரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
[Wednesday 2016-02-03 19:00]

தென் மாகாண முதலமைச்சரை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, அவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையினாலேயே, அவரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுரங்களை பிரசுரித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, தென் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் வலியுறுத்துவோம்! - மாவை சேனாதிராசா
[Wednesday 2016-02-03 07:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி, இலங்கை வரவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் நேரில் வலியுறுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்காது சுதந்திரக் கட்சி! - மகிந்த சமரசிங்க
[Wednesday 2016-02-03 07:00]

யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் அமைவான விசாரணை நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு வேண்டியதில்லை. இதற்கு ஒரு போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பங்களிப்பு வழங்காது என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.


தமிழர் மரபு விழா - கருத்தரங்கமும்இ நாட்டார் இசைமாலையும்:
[Wednesday 2016-02-03 07:00]

-கருத்தரங்கம்


அப்பாவி வேஷம் போடுவதனால் குற்றங்களை மறைக்க முடியாது! - ராஜித சேனாரத்ன
[Wednesday 2016-02-03 07:00]

அப்பாவிகள் போன்று வேஷம் போடுவதனால் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. ராஜபக் ஷமார் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமல்ல கடந்த ஆட்சியில் நடந்த அனைத்து மோசடிகளையும் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


ஐதேகவுடன் இன்று பங்காளி ஒப்பந்தம் செய்து கொள்கிறார் சரத் பொன்சேகா!
[Wednesday 2016-02-03 07:00]

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் பங்காளிக்கட்சியாக இணைந்து கொள்ளவுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று அலரிமாளிகையில் கையெழுத்திடப்படும். ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இதன்போது பல இணக்கப்பாடுகள் எட்டபட்டதோடு அவர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியாக இணைந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.


சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார் கம்மன்பில! - நிமால் சிறிபால டி சில்வா குற்றச்சாட்டு
[Wednesday 2016-02-03 07:00]

ஐக்கிய தேசியக் கட்சியுடன் டீல் ஒன்றை செய்து கொண்டு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சியில் உதய கம்மன்பில ஈடுபட்டுள்ளார். அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் உபதலைவரும் போக்குவரத்து அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.


எமக்கு சர்வதேச விமான நிலையம் வேண்டாம்! - வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர்
[Wednesday 2016-02-03 07:00]

உயிரை கொடுத்தாலும் கொடுப்போம் ஆனால் எம் மண்ணை விட்டுக்கொடுக்கமாட்டோம் என வலி.வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசதுறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதற்காக அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தனியார் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.


சுதந்திர தின விழாவுக்கு மகிந்தவுக்கு அழைப்பில்லை!
[Wednesday 2016-02-03 07:00]

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்பு வெளியிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவை திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாட முயற்சிப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.


அனுமதி பெறாத யோசிதவின் வெளிநாட்டுப் பயணங்கள்! - பாதுகாப்பு அமைச்சு விசாரணை
[Wednesday 2016-02-03 07:00]

தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் பணியாற்றிய காலத்தில், கடற்படை விதிமுறைகளை மீறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டமை தொடர்பில் தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு, கடற்படை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள்! - வர்த்தமானியை வெளியிட்டார் மைத்திரி
[Wednesday 2016-02-03 06:00]

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளை சோதனைக்கு உட்படுத்துவதற்கு அவ்வாணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.


கிளிநொச்சியில் கிணற்றில் தவறி வீழ்ந்த இளைஞர் மரணம்!
[Wednesday 2016-02-03 06:00]

கண்டாவளையில் நேற்றிரவு கிணற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு 8 மணியளவில் குறித்த இளைஞன் கிணற்றடிக்கு சென்றிருந்தார். அவரை நீண்ட நேரமாக காணாமையினால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடிய போது கிணற்றினுள் விழுந்திருப்பதை கண்டுபிடித்து, மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட போதே அவர் இறந்து விட்டதாக தெரியவருகிறது.


அரசாங்கத்தின் அறிவிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றம்! - கஜேந்திரகுமார்
[Tuesday 2016-02-02 19:00]

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச பங்களிப்போ, ஒத்துழைப்போ, தலையீடோ இருக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர்களும் தெரிவித்து வருவதானது, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


இராணுவ ஒத்திகையால் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்! Top News
[Tuesday 2016-02-02 19:00]

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை முதல் காலிமுகத்திடலில் அதற்கான ஒத்திகைகள் இடம்பெற்றன. இதன் காரணமாக காலி முகத்திடலுக்குச் செல்லும் வீதி மூடப்பட்டது. குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழிகளை பயன்படுத்தியமையால், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் பாரிய வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


10வது மாடியில் இருந்து குதித்த இராணுவத் தாதி!
[Tuesday 2016-02-02 19:00]

கொழும்பு நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் 10 வது மாடியில் இருந்து குதித்த இராணுவ தாதி ஒருவர் மரணமானார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த 23 வயதுடைய எம்.கே.டி.இராயரத்தின என்ற தாதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


கொழும்பில் இருந்து பதுளை வந்த நீராவி ரயில்! - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி Top News
[Tuesday 2016-02-02 19:00]

பழைமை வாய்ந்த நீராவி ரயில் பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து இன்று பதுளை வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஹட்டன் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதனை புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தமையை காணக் கூடியதாக இருந்தது.


சம்பூர் சிறுவன் கொலை தொடர்பாக 15 வயதுச் சிறுவன் கைது!
[Tuesday 2016-02-02 19:00]

திருகோணமலை, சம்பூரில் கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான். சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 6) கடந்த வாரம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தான்.


தமிழில் தேசிய கீதம் பாடினால் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை! - கம்மன்பில எச்சரிக்கை
[Tuesday 2016-02-02 19:00]

68வது சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியிலும் தேசியகீதம் பாடுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு விரோதமானது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வரமுடியும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா