Untitled Document
May 8, 2024 [GMT]
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு இல்லையாம்! - ஜனாதிபதி கூறுகிறார்
[Saturday 2016-01-30 19:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அல்​ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.


நட்டாங்கண்டலில் கத்திக் குத்துக்கு ஒருவர் பலி, மற்றொருவர் காயம்! Top News
[Saturday 2016-01-30 19:00]

மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 50 வீட்டுத்திட்டம் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சந்திரபாலன் சந்திரகுமார் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.


ஆயுதக் கும்பல்களுக்கு அடிபணிய மாட்டேன்! - ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விஜயகலா
[Saturday 2016-01-30 19:00]

கடந்த காலத்தில் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்ட சில பிரதேச செயலர்கள், ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்துக்கு அராஜகமான முறையாக அழைப்பு விடுக்கின்றனர். நான் எந்த ஒரு ஆயுதக் கும்பல்களுக்கும் அடிபணிய மாட்டேன். இந்த இடத்திலேயே உயிரை விட தயாராகத் தான் வந்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.


பழைய கடதாசியில் கண்கவர் உருவங்கள்! யாழ். வர்த்தக கண்காட்சியில் அசத்தும் படைப்புகள் Top News
[Saturday 2016-01-30 19:00]

பழைய கடதாசிகளைக் கொண்டு கைவினைப் பொருட்களை தயாரித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் நவாலி நட்சத்திரப் பெண்கள் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் வர்த்தகக் கண்காட்சி யாழ்.மாநகர சபை மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. இந்தக் கண்காட்சிக்குச் சென்ற போது, நவாலி நட்சத்திரப் பெண்கள் குழுவின் காட்சியறையொன்று இருந்தது.


வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் நெருக்கடி!
[Saturday 2016-01-30 07:00]

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.


ரவிராஜ் கொலை வழக்கில் கருணாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சி?
[Saturday 2016-01-30 07:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரச தரப்பு சாட்சி பொய்யான சாட்சியம் அளித்துள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரச தரப்பு சாட்சியாக சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிதிவிராஜ் என்பவர், பொய்யான சாட்சியமளித்துள்ளார் என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள், நேற்று கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் தெரிவித்தனர்.


தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு! - எச்சரிக்கிறார் கம்மன்பில
[Saturday 2016-01-30 07:00]

தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்று உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் அரச கரும மொழி தமிழாக இருந்த போதிலும் அங்குள்ள மக்கள் வங்காள மொழி தேசிய கீதத்தையே பாடுகின்றனர். அதேபோன்று இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க முடியாது.


ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவில்லை என்கிறார் ரணில்!
[Saturday 2016-01-30 07:00]

நான் எந்தவொரு ஊடகவியலாளரையும் அச்சுறுத்தவில்லை. பெயரை மாத்திரமே கூறினேன். ஊடகங்கள் எம்.பி.க்களின் பெயர்களை சுட்டிக்காட்ட முடியுமென்றால் ஏன் எமக்கு ஊடகவியலாளர்களின் பெயரை சுட்டிக்காட்ட முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.


ஞானசார தேரரை சந்திக்க கட்டுப்பாடு!
[Saturday 2016-01-30 07:00]

வெலிக்கடை சிறைச்சாலையில்விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விருந்தினர்கள் சந்திப்பது வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் ஞானசார தேரர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதி பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டும் ஞானசார தேரரை சந்திக்க அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.


சட்டமா அதிபர் நியமன விவகாரம் - நாடாளுமன்றில் வெடித்த சர்ச்சை!
[Saturday 2016-01-30 07:00]

சட்டமா அதிபர் வெற்றிடத்துக்கு மூப்புரிமை அடிப்படையில் தற்போதைய பதில் சட்டமா அதிபரை நியமிக்காமல் வேறொருவரை வெளியிலிருந்து நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே தினேஷ் குணவர்த்தன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.


ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வேண்டி தலதா மாளிகை முன் சத்தியாக்கிரகம்!
[Saturday 2016-01-30 07:00]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கும் படையினருக்கும் பாதுகாப்பு வேண்டி இன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரகம் நடத்த இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. நாளாந்தம் மத ஸ்தலங்களுக்கு சென்று நாட்டின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை நடத்துமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது. பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.


பேரவையின் தீர்வுத் திட்ட வெளியீட்டு நிகழ்வு கைலாசபதி அரங்கில் இருந்து மாற்றம்!
[Saturday 2016-01-30 07:00]

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு வெளியீட்டு நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. எனினும் திட்டமிட்டபடி நாளை பிற்பகல் 3 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசியல் தீர்வு திட்ட வரைபு வெளியீடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இரு பிக்குகளுக்கு பிடியாணை!
[Saturday 2016-01-30 07:00]

ஹோமகம நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் இரண்டு பிக்குகளுக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹோமகம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினுள் அத்துமீறி நுழைந்து நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை மேற்கொண்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு விளக்கமறியல் தண்டனை விதிக்கப்பட்ட தினத்தில் அதற்கு எதிராக பெருந்தொகையான பிக்குகளும், பொதுமக்களும் ஹோமகம நீதிமன்ற வளாகத்தின் அருகில் கலகம் விளைவித்திருந்தனர்.


கேரதீவு விபத்தில் டிராக்டர் சாரதி பலி!
[Saturday 2016-01-30 07:00]

பூநகரி- சங்குப்பிட்டிக்கு அருகாமையில் உள்ள கேரதீவில் தனியார் பேருந்தும், டிராக்டரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிராக்டரின் சாரதியான சிதம்பரப்பிள்ளை கந்தசாமி (வயது 49) என்பவரே உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தயாராகும் அரசியல் கைதிகள்!
[Friday 2016-01-29 19:00]

சுதந்திர தினத்திற்குள் தம்மை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பிரதமர் அபாண்டமான பொய்யைக் கூறியுள்ளார். அதாவது தமிழ் அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை என்று கூறியுள்ளார்.


ஞானசார தேரரின் காவி உடையை களைந்து பிக்கு அந்தஸ்து நீக்க வேண்டும்! - தம்பர அமில தேரர்
[Friday 2016-01-29 19:00]

காவியுடை அணிந்து சட்டம், நீதித்துறைக்கு சவால் விடுப்பதுடன், அரசாங்கம் மற்றும் பிரதமரை சங்கடத்துக்குள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஞானசார தேரரின் காவியுடை களையப்பட்டு, பிக்கு அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் என ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான வண.தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.


சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக வவுனியா இளைஞன் ஸ்ரீ.கேசவன்!
[Friday 2016-01-29 19:00]

சார்ஜாவின் 7வது சாரணர் ஒன்றுகூடல் எதிர்வரும் மாசி மாதம் 01ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேற்படி ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக சாரணர் சங்கத்தின் புலைமைப்பரிசில் பெற்று வவுனியாவைச் சேர்ந்த ஸ்ரீகரன் கேசவன் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக பங்குபெறும் சாரணன் ஸ்ரீகரன் கேசவன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட மாணவனும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும் என்பதுடன் 2013ம் ஆண்டு சிரேஷ்ட மாணவத் தலைவனாக செயலாற்றியதுடன் 2012ம் ஆண்டு இலங்கையின் சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளதுடன் தொடர்ந்து சாரணர் வளர்ச்சியில் அரும்பாடுபடும் ஓர் இளைஞன் என்பதுடன் வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளராகவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளராகவும் சமூக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கறுப்பு ஜூலைக்காக வெட்கப்பட்டாரா ரணில்? - பொதுபல சேனா கேள்வி
[Friday 2016-01-29 19:00]

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் ஏற்பட்ட போதும், ரோஹண விஜயவீர படுகொலை செய்யப்பட்ட போதும் ரணில் விக்கிரமசிங்க பௌத்தன் என்ற வகையில் வெட்கப்பட்டாரா என்று பொதுபல சேனா கேள்வி எழுப்பியுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.


ஐ.எஸ் அமைப்புடைய தொடர்புடைய இலங்கையரின் வீடுகள் அவுஸ்ரேலியாவில் சோதனை!
[Friday 2016-01-29 19:00]

ஐஎஸ் அமைப்பின் பிரச்சார வீடியோவில் காணப்பட்ட இலங்கையர் ஓருவரின் வீடுகளை அவுஸ்திரேலிய பொலிஸார் சோதனையிட்டனர். கடந்த வருடம் 41 வயது இலங்கையரான முகமது உனைஸ் முகமது அமீன் என்ற இலங்கையர் ஐஎஸ் அமைப்பின் பிராச்சார வீடியோவில் தோன்றி அந்த அமைப்பின் சுகாதார சேவைக்கு ஆதரவை கோரியிருந்தார். 2014 இல் சிரியாவிற்கு தப்பியோடியுள்ள அமீன் அங்கு ஜஎஸ் அமைப்பில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இதனை அவரே வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.


சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் எம்.பியாக நியமனம்!
[Friday 2016-01-29 19:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது சரத் பொன்சேகா பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தனவின் மறைவு காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.


நான்கு பேரின் இணைத்தலைமையுடன் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்! Top News
[Friday 2016-01-29 19:00]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை பத்து மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.


மீசாலை விபத்தில் பெண் பலி!
[Friday 2016-01-29 19:00]

சாவகச்சேரி, மீசாலையில், ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மீசாலைச் சந்தியிலுள்ள மஞ்சள் கோட்டுக்குக் கடவையை வயோதிபர் கடக்க முற்பட்டபோது வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மீசாலை மேற்கு மீசாலையைச் சேர்ந்த சின்னையா வள்ளிப்பிள்ளை (62) எனத் தெரிவிக்கப்படுகிறது.


புதிய அரசியலமைப்புக் குறித்து கருத்துக்களை பதிவு செய்த 229 பேரில் இருவரே தமிழர்!
[Friday 2016-01-29 19:00]

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிவதற்காகக் கொழும்பில் இடம்பெற்ற முதற்கட்ட அமர்வில், தமிழர்கள் இருவர் மாத்திரமே கருத்துரைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு, பெரும்பான்மையின மக்களே அதிக ஆர்வத்துடன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் இடம்பெற்ற அமர்வில், தமிழ்மொழி பேசுவோர், ஆர்வம் காட்டவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன.


யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்! Top News
[Friday 2016-01-29 19:00]

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, இன்று யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகியது. எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், இந்தியா மற்றும் இலங்கை கைத்தொழில், சேவைகள் தொடர்பான சுமார் 300 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடை, விவசாயம், தொழில்நுட்பம், வாகனம் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கல்வி, தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.


பீகொக் மாளிகை நீச்சல் தடாகத்தில் இருந்து மண் அகற்றப்பட்டது! Top News
[Friday 2016-01-29 19:00]

வர்த்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள பீகொக் மாளிகையில் அமைந்துள்ள மூடப்பட்ட நீச்சல் தடாகத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இன்று இடம்பெற்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, இந்த பீகொக் மாளிகையை மஹிந்த ராஜபக்ஷ தங்குவதற்கு வழங்க லியனகே தயாராகியிருந்த போதும் பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது.


எதிரெதிரே வந்த ரயில்கள் பாரிய விபத்தில் இருந்து தப்பின! Top News
[Friday 2016-01-29 19:00]

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் ரஜரட்ட ரெஜின ரயிலும் மாத்தறை இலக்கம் 872 ரயிலும் ஜிந்தோட்டை தர்மபால வித்தியாலயத்துக்கு அருகில், ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணித்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் சாரதிகளின் முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, ரயில்களுக்கு இடையில் சுமார் 10 அடி தூர இடைவெளி மாத்திரமே இருக்கையில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.


சிறுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு!
[Friday 2016-01-29 19:00]

சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று மீட்கப்பட்டதாக அச்சுவேலி குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த அப்பாக்குட்டி இராசதுரை (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள வீடொன்றில், சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அச்சுவேலி பொலிஸார், குறித்த பகுதியினைச் சுற்றி குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தியுள்ளனர்.


இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க கோரிக்கை!
[Friday 2016-01-29 07:00]

இலங்கையின் 68வது சுதந்திரதினத்தை தமிழ்மொழி பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும்

Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா