Untitled Document
May 19, 2024 [GMT]
ஐ.நா மனித உரிமை ஆணையாளரை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு!
[Monday 2016-02-08 19:00]

இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரை நாளை காலை கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின் போது அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு, ஜெனீவா பிரேரணையின் முழுமையான அமுலாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஐ.நா ஆணையாளரோடு பேச்சு நடத்தப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


சரத் பொன்சேகாவுக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவி! - ஐதேக செயற்குழு முடிவு
[Monday 2016-02-08 19:00]

மறைந்த அமைச்சர் எம்.கே.டீ.எஸ்.குணவர்த்தனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று மாலை சிறிகொதவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட செயற்குழு கூட்டத்தில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இராணுவத்தினரை போர்க்குற்றவாளிகளாக்குவதற்கு அனுமதிக்க முடியாது! - பந்துல குணவர்த்தன Top News
[Monday 2016-02-08 19:00]

தீவிரவாதத்தை ஒழித்து மக்களுக்கு சுதந்திரத்தை வென்று கொடுத்த இராணுவ வீரர்களை யுத்தக் குற்றவாளிகளாக்க இடமளிக்க முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயித் ராஅத் அல் ஹூ​சைனின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐ.நா கொழும்பு அலுவலகத்தில், இன்று கடிதம் ஒன்றை கையளிக்க வந்த வேளை, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


வித்தியா கொலை சந்தேகநபரை யாழ். சிறைக்கு மாற்ற நீதிவான் மறுப்பு!
[Monday 2016-02-08 19:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களில் ஒருவரை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, இன்று பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.


போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இலங்கை! - ஹுசேனின் வருகையால் அரசுக்குள் முரண்பாடு
[Monday 2016-02-08 09:00]

ஜெனீவா தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் ராத் அல் ஹூசேனின் கொழும்பு விஜயத்தின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் நல்லாட்சி அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு மகிந்த அணி கடும் எதிர்ப்பு!
[Monday 2016-02-08 09:00]

காணாமல்போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகமவின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போர் தொடர்பில் விசாரணை நடத்தும் நீதிமன்ற செயன்முறையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பினை ஏற்றக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


போர்க்குற்ற விசாரணையில் இருந்து படையினரைக் காப்பாற்றக் கோரி 10 இலட்சம் கையொப்பங்கள்!
[Monday 2016-02-08 09:00]

போர்க்குற்ற விசாரணையில் இருந்து படையினரைப் பாதுகாக்கும் நோக்கில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மகஜரில் முதலாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று கையொப்பமிடவுள்ளார் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


என்னைச் சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை! - என்கிறார் கோத்தா
[Monday 2016-02-08 09:00]

நாட்டுக்காக கடின உழைப்பினை வழங்கிய தம்மை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டுக்காகவும் படைவீரர்களுக்காகவும் பாரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றியிருந்தார். பாரிய அர்ப்பணிப்புடன் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது படைவீரர்களை சிறையில் அடைத்து, சிறையில் உள்ளவர்கள் விடுதலையாகின்றனர்.


பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக சில இராணுவ முகாம்கள் மூடப்படும்! - பாதுகாப்புச் செயலாளர்
[Monday 2016-02-08 09:00]

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். நேற்று வியன்கொட பண்டாரநாயக்க பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பாதுகாப்பு நிலவரம் திருப்தியாக உள்ளது.


திருட்டுத் தேங்காய்யை உடைத்து அளிக்கும் சாபம் பலிக்காது! - மஹிந்த அணிக்கு ரணில் கிண்டல்
[Monday 2016-02-08 09:00]

திருட்டு தேங்காயினை கொண்டு இறைவனை நாடுவதில் பயனில்லை. தேசிய அரசாங்கத்தினூடாக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தினை முடக்குவதற்கு நாம் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.குருநாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


யோஷித மீது ஐந்து பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க நடவடிக்கை!
[Monday 2016-02-08 09:00]

பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று வெளியிட்டுள்ளார். யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிர்வாகத்தினர் பணச்சலவை போன்ற குற்றங்களில் மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. போலி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி, பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம், சுங்க விதிகள் மீறல் உள்ளிட்ட குற்றங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


சிங்க லே அமைப்பைக் கட்டுப்படுத்தக் கோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்!
[Monday 2016-02-08 09:00]

மக்கள் மத்தியில் துவேசத்தை விதைத்து இன மத ரீதியிலான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் "சிங்ஹ லே" வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


சிங்க லே அமைப்பின் பேரணி, கூட்டத்துக்கு நீதிமன்றம் தடை!
[Monday 2016-02-08 09:00]

சிங்க லே தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணி மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு பதுளை நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எம்.பி.சீ. ரத்நாயக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி வாகனப் பேரணியில் வந்து நேற்று மாலை முதியங்கன ரஜமகா விகாரையில் கூட்டமொன்றை நடாத்த சிங்க லே அமைப்பு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலை வைத்து பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.


தானும் கைது செய்யப்படலாம் என்கிறார் நாமல்!
[Monday 2016-02-08 09:00]

அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கைவிரிப்பு! Top News
[Sunday 2016-02-07 19:00]

அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக இருக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.


வடக்கு முதல்வர், ஆளுனர், பாதிக்கப்பட்டோரைச் சந்தித்தார் அல் ஹுசேய்ன்! Top News
[Sunday 2016-02-07 19:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசெய்ன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர், வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இடம்பெயர்ந்தவர்கள் , மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியவர்களின் ஐந்து பிரதிநிதிகளை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.


நல்லூர் கந்தனையும் தரிசித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்! Top News
[Sunday 2016-02-07 19:00]

இன்று யாழ்ப்பாணம் வந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசெய்ன் வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். இன்று காலை 10 மணிக்கு யாழ்.வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் பளிஹக்கார ஆகியோரை சந்தித்த பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்தார்.


மன்னாரில் கோடரி வெட்டுக்கு இளைஞர் படுகாயம்!
[Sunday 2016-02-07 19:00]

மன்னார் - உயிலங்குளம் பகுதியில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞன், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழு நியமனம்!
[Sunday 2016-02-07 19:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தும் நோக்கில் 11 பேர் கொண்ட விசேட ஆலோசனை செயலணி ஒன்றை அரசாங்கம் நியமிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கி இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இடம்பெயர்ந்தோர் முகாமில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்! Top News
[Sunday 2016-02-07 19:00]

எமக்கு துறைமுகம் வேண்டாம். விமான நிலையம் வேண்டாம். எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள் நாங்கள் நின்மதியாக வாழ விரும்புகிறோம் என்று மருதனார் மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலைய மக்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹுசேனிடம் தெரிவித்தனர்.


குருநாகல் விகாரையில் மகிந்த - பெருமளவில் கூடிய ஆதரவாளர்கள்! Top News
[Sunday 2016-02-07 19:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று குருநாகல் யாபஹுவ பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டார். தனது இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஸ கைது செய்யப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலும் கொழும்பை விட்டு வெளியில் செல்லவில்லை. இந்த நிலையில், இன்று காலை அவர் யாபஹுவையிலுள்ள விகாரையொன்றுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களை அம்பலப்படுத்தப் போகிறார் சரத் பொன்சேகா!
[Sunday 2016-02-07 19:00]

சரத் பொன்சேகா எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான ஊழல், மோசடிகள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான இதுவரை வெளிவராத பல தகவல்களை நாடாளுமன்ற உரையில் வெளியிட உள்ளதாக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.


கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்குகிறது தமிழரசுக் கட்சி! - சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
[Sunday 2016-02-07 19:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் செயற்பட்டு வருவது நாகரிகமான விடயம் அல்ல என ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டார்.


கிழக்கு முதலமைச்சரை சந்தித்தார் அல் ஹுசைன்! Top News
[Sunday 2016-02-07 19:00]

கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று மாலை திருகோணமலையில், கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.


அஞ்சலோட்டப் போட்டிக்குத் தயாரான மாணவி மயங்கி வீழ்ந்து மரணம்!
[Sunday 2016-02-07 19:00]

பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்த மாணவி, வைத்தியசாலையில் உயிரிழந்தார். குடத்தனை பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார். சக மாணவிகளுடன் அஞ்சல் ஒட்டப்போட்டிக்கு தனது இல்லம் சார்பாக ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவி, திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.


பிரகீத் எக்னெலிகொட கடத்தல் - மற்றொரு இராணுவ அதிகாரி கைது!
[Sunday 2016-02-07 19:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன விடயம் தொடர்பில், கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இன்று, குற்றப் புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபர் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இன்று இவரை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கலப்பு நீதிமன்ற விசாரணையை அரசிடம் வலியுறுத்தியுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!
[Sunday 2016-02-07 08:00]

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் மூலமே, போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். கூடிய விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.


இன்று யாழ்ப்பாணம் செல்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!
[Sunday 2016-02-07 08:00]

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பல அதிகாரிகளை முதலமைச்சர் காரியாலத்தில் சந்திக்கவுள்ளதோடு, வடக்கு ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார்.

Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா