Untitled Document
April 26, 2024 [GMT]
பூஸ்டர் டோஸ் பெறாதவர்களுக்கு ஜெர்மனி அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
[Tuesday 2022-01-25 16:00]

ஜேர்மனியில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில், அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும் ஒருவரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில், அவர் பூஸ்டர் டோஸ் பெறாதவராக இருந்தால், இதுவரை அரசு அத்தகையோருக்கு வழங்கி வந்த இழப்பீடு இனி அவருக்கு கிடைக்காது.


நடுவானில் பற்றி எரிந்த ஏர் பிரான்ஸ் விமானம்: நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்!
[Tuesday 2022-01-25 16:00]

ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். பாரீஸிலிருந்து, பிரான்சின் Perpignan என்ற இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது. இது நடந்தது ஜனவரி 21 அன்று. அப்போது, திடீரென அதன் எஞ்சின்களில் ஒன்று வெடித்திருக்கிறது. சுமார் இரண்டு மீற்றர் உயரத்திற்கு இறக்கையின் அடியிலிருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு திகிலில் உறைந்திருக்கிறார்கள் பயணிகள்.


கோவிட் கட்டுப்பாடுகளை நீட்டித்த ஜேர்மனி அரசு!
[Tuesday 2022-01-25 16:00]

ஜேர்மனி அதன் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தீவிரமாக பரவும் ஓமிக்ரான் வைரஸால் கடும் நெருக்கடி ஏற்படும் என அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்ததை தொடரந்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.


சுவிஸில் பொதுமக்களை அச்சுறுத்தும் நவீன மோசடி: போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை!
[Tuesday 2022-01-25 16:00]

தற்போது அதிகரித்து வரும் நவீனக்கால மோசடி ஒன்று போலீசாரையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மோசடிக்கும்பல் ஒருசில குறிப்பிட்ட நபர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு செல்போனில் அழைக்கின்றனர். அப்போது, மோசடி கும்பலைச் சேர்ந்தவர் பேசுகையில், தான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும், நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டீர்கள், அல்லது உங்கள் உறவினர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார். ஆகவே, நீங்கள் அபராதம் செலுத்தவேண்டும் என்று தொலைபேசியில் கூறுவார்.


வாட்டும் பஞ்சம்: உணவுக்காக சிறுநீரகங்களை விற்கும் ஆப்கான் மக்கள்!
[Tuesday 2022-01-25 16:00]

கடந்த வருடம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.


விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து 11 மணி நேரம் பயணித்து நெதர்லாந்து சென்ற நபர்: பரபரப்பு சம்பவம்!
[Tuesday 2022-01-25 08:00]

தென்னாபிரிக்காவில் இருந்து விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து நீண்ட 11 மணி நேர பயணத்திற்கு பின்னர் ஒருவர் நெதர்லாந்துக்கு சென்று சேர்ந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த நபர் உயிர் தப்பியதே அதிசயமாக பார்க்கப்படும் நிலையில், அவரது உடல் நலனே தற்போதைய சூழலில் முக்கியம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.


பிரான்ஸ் பிரதமர் மீதான சுமார் 20,000 வழக்குகளை ரத்து செய்த நீதிமன்றம்!
[Tuesday 2022-01-25 08:00]

பிரான்சில் பிரதமர் Jean Castex மற்றும் சில அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த 20,000 வரையான வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்குகள் 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் 31ம் திகதி வரையில் பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டவையாகும்.


ரஷ்ய- உக்ரைன் விவகாரம்: போருக்கு தயாராகும் அமெரிக்க படைகள்!
[Tuesday 2022-01-25 08:00]

ரஷ்ய- உக்ரைன் விவகாரம் இறுகிவரும் நிலையில், போருக்கு தயாரான சுமார் 8,500 அமரிக்கப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டளை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில் இவர்கள் புறப்பட தயாராவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது. உக்ரைன் மீது எந்த இராணுவ நடவடிக்கைக்கும் ரஷ்யா தயாரில்லை என புடின் நிர்வாகம் மறுத்துள்ள நிலையிலேயே, அமெரிக்க இராணுவம் உஷார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆயுள் தண்டனையை எதிர்நோக்கும் கனேடிய சிறுவன்!
[Monday 2022-01-24 16:00]

கனடாவின் கிழக்கு யொர்க்கில் 15 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் 13 வயது சிறுவன் மீது வழக்குப் பதிந்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த 13 வயது சிறுவன் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதால், நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் நேரடியாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.


ஒமிக்ரானின் புதிய அறிகுறி: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
[Monday 2022-01-24 16:00]

Omicron தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி குறித்து அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து omicron என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.


பிரான்சில் பரபரப்பு: இளம்பெண்ணின் அனுமதியின்றி மருத்துவர் செய்த செயல்!
[Monday 2022-01-24 16:00]

ஒரு நோயாளியின் ஒப்புதல் இல்லாமல் அவர் குறித்த விடயங்கள் எதையும் மூன்றாம் தரப்பினருக்கு வெளியிடக்கூடாது என்ற விதி நடைமுறையிலிருக்கும் நிலையில், கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஒரு பெண்ணின் எக்ஸ் ரேயை, ஒன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளார் பிரெஞ்சு மருத்துவர் ஒருவர். இந்த விடயம் பிரான்சில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு தூதரக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா உத்தரவு!
[Monday 2022-01-24 16:00]

ஐரோப்பிய நாடான உக்ரைனில் உள்ள தூதரக ஊழியர்களின் குடும்பத்தினர் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால் அமெரிக்கா இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற தூதரக ஊழியர்களும் மற்றும் அமெரிக்க குடிமக்களும் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


லண்டனை கலக்கி வரும் தமிழக பெண்!
[Monday 2022-01-24 16:00]

'லண்டன் தமிழச்சி' என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சுபி சார்ல்ஸ். விதவிதமான உணவு வகைகள், பிரமாண்ட லண்டன் வீதிகள், அங்குள்ள குக்கிராமங்கள், தன் வாழ்க்கை அனுபவங்கள், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பற்றின விவரங்கள், தன்னம்பிக்கை பேச்சுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து, இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் பல ஆயிரக்கணக்கில் குவிகின்றன.


கொரோனா கட்டுப்பாடுகளை ஏற்க மறுக்கும் பெல்ஜியம் மக்கள்: வலுக்கும் போராட்டம்!
[Monday 2022-01-24 07:00]

உலகம் முழூவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரசை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் கொரோனா மற்றும் ஒமைரான் பரவலை கருத்தில் கொண்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


சுவிஸ் செல்ல இனி கொரோனா சோதனை எடுக்க தேவையில்லை!
[Monday 2022-01-24 07:00]

சுவிட்சர்லாந்து அரசு சர்வதேசப் பயணிகளுக்கான புறப்படுவதற்கு முன் எடுக்கவேண்டிய கோவிட்-19 சோதனைத் தேவைகளை நீக்கியுள்ளது. சுவிட்சர்லாந்து சமீபத்தில் அதன் நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் தேவைகளை குறைத்து, சர்வதேச பயணத்தை எளிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


சர்ச்சைக்குரிய சாலை விதிகளை அமுல்படுத்தும் பிரித்தானியா!
[Monday 2022-01-24 07:00]

பிரித்தானியாவில் அடுத்த வாரம் சர்ச்சைக்குரிய சில சாலை விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. பிரித்தானியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்துடன் வரும் ஜனவரி 29-ஆம் திகதி முதல் புதிய சாலை விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. அதாவது சில நெடுஞ்சாலை குறியீடு மாற்றங்கள் அறிமுகமாகின்றன.


மூளை பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க தவறிய கனேடிய பெற்றோருக்கு கிடைக்கவிருக்கும் தண்டனை!
[Sunday 2022-01-23 16:00]

கனடாவில் பிறப்பிலேயே மூளை பாதிக்கப்பட்டு நிரந்தர மருத்துவ உதவி தேவைப்படும் சொந்த மகனை கவனிக்கத் தவறிய குற்றத்திற்காக பெற்றோருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. கனடாவின் கல்கரியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெற்றோரால் பாதிக்கப்பட்ட அந்த மகன் தற்போது காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு, உடல் நிலை தேறிவருவதாக தெரிய வந்துள்ளது.


டிரோன்களை தடை செய்தது ஐக்கிய அரபு அமீரகம்!
[Sunday 2022-01-23 16:00]

ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபு தாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கனடாவில் மகளுடன் காணாமல் போன தந்தை: பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!
[Sunday 2022-01-23 16:00]

கனடாவில் காணாமல் போன தந்தை மற்றும் மகள் வழக்கில் தந்தை மீது கடத்தல் பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் கைதாவதை தவிர்க்க உதவி செய்பவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பாயும் என Saskatchewan பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தனது திருமணத்தை திடீரென ரத்து செய்த நியூசிலாந்து பிரதமர்!
[Sunday 2022-01-23 16:00]

நியூசிலாந்தில் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் சமூக பரவலை கட்டுப்படுத்த நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அவரது திருமணத்தை ரத்து செய்துள்ளார். நியூசிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் முகக்கவசம் விதிகள் அமுலுக்கு வரும் மற்றும் மக்கள் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்.


மெக்ஸிக்கோவில் சுட்டுக்கொல்லப்பட்ட கனேடியர்கள்!
[Sunday 2022-01-23 16:00]

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மெக்ஸிக்கோவின் கரீபியன் கரையோரப் பகுதியான Quintana Roo மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.


ஒமிக்ரான் தொடர்பில் கனேடிய மக்களை எச்சரித்த உயர்மட்ட சுகாதார அதிகாரி!
[Sunday 2022-01-23 08:00]

வேகமாகப் பரவும் Omicron வகை கொரோனா வைரஸ் நாட்டில் உச்சத்தை எட்டியிருக்கலாம் என்று கனடாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் Theresa Tam வெளியிட்ட அறிக்கையில், முன்னதாகவே தேசிய அளவில் 'தினசரி தொற்று எண்ணிக்கை, சோதனை நேர்மறை, Rt (வைரஸ் இனப்பெருக்க எண்) மற்றும் கழிவு நீர் பிரச்சினை' என Omicron-ன் தீவிரம் தொடர்பான ஆரம்ப அறிகுறிகள் கிடைத்தன.


90 நாடுகளை 'அதிக ஆபத்தான பகுதிகள்' பட்டியலில் சேர்த்த ஜேர்மனி!
[Sunday 2022-01-23 08:00]

ஜேர்மனி கடந்த 2 வாரங்களில் மொத்தம் 90 நாடுகளை அதன் 'அதிக ஆபத்தான பகுதிகள்' பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஜேர்மனி 90 நாடுகளை அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பட்டியலில் (High Risk Areas ) சேர்த்துள்ளது, இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது.


சுவிஸில் மனிதர்களை வேட்டையாட முயற்சித்த ஓநாய் சுட்டு கொலை!
[Sunday 2022-01-23 08:00]

சுவிட்சர்லாந்தில் மனிதர்களை வேட்டையாட முயற்சித்த ஓநாயை முன் அனுமதியின்றி நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு மாநிலமான கிராபண்டனில் (Graubünden) ஓநாயின் நடமாட்டம் அதிகரித்ததால், மக்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியது.


கனேடிய எல்லையில் பலியான இந்திய குடும்பம்: பிரதமர் ட்ரூடோ இரங்கல்!
[Saturday 2022-01-22 16:00]

கனடாவில் உள்ள மேனிடோபா மாகாணத்தில், அமெரிக்க-கனடா எல்லையில் உள்ள எமா்சன் என்ற இடத்தில் 4 பேரின் சடலங்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. அவா்கள் ஒரே குடும்பத்தைச் சோந்த இந்தியா்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு உரிய ஆவணங்களின்றி அழைத்துச் செல்லும் கும்பலின் உதவியுடன் இவா்கள் எல்லையைக் கடக்க முயன்றபோது கடுங்குளிரில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு!
[Saturday 2022-01-22 16:00]

கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொவிட் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது. ஒமைக்ரொன் என்று பெயரிடப்பட்ட அந்த வைரஸ் ஏனைய உருமாறிய வைரஸ்களைவிட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்றும் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுவன்: கண்டுபிடிக்க திணறும் போலீசார்!
[Saturday 2022-01-22 16:00]

கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல்போனதாக கூறப்படும் நிலையில் பொலிசார் சிறுவனை தேடி வருகிறார்கள். கிழக்கு க்வில்லிம்பரி நகரத்தில் 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் குறித்த சிறுவர் காணாமல்போயுள்ளார். இந்நிலையில் , யோர்க் பிராந்திய காவல்துறையினர் தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.


குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த ஜேர்மன் அரசாங்கம் முடிவு!
[Saturday 2022-01-22 16:00]

ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது, எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் ஜேர்மனியில் ஒரு மணிநேரத்திற்கான ஊதியம் 12 யூரோக்களாக உயர்த்த முடிவுசெய்துள்ளதாக ஜேர்மன் தொழிலாளர் அமைச்சர் Hubertus Heil தெரிவித்துள்ளார்.

Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா